உங்கள் கூகிள் குரோம் உலாவி பாவனையால் மிகப்பெரிய ஆபத்து..!

நீங்கள் கூகிள் குரோம் பயன்படுத்துபவரா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள். இன்றைய உலாவியில்(Browser) கூகிள் குரோம் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன்படுத்தும் இதில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.இந்த நவீன வசதிகளைக் கொண்ட குரோமில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம்.

அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் இணைய நிலையங்களை(Browsing Center) தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றோம்.நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே நீங்கள்தான் அவதானமாக இருக்கவேண்டும் அதுவும் குறிப்பாக பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச் சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குரோமில் உள்ளது என்பது உங்களிற்கு தெரியுமா?

நீங்கள் மிகவும் கவனமாக வெளியேறிவிடுவீர்கள்.ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிற்கு தெரியாது. நீங்கள் முக்கியமானவர்களிற்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்கலாம், அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்கலாம். இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதைவிட உங்கள் நண்பர்களிற்கு அல்லது முக்கியமானவர்களிற்கு தவறாக மெயில் அனுப்பலாம். அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்களை தவறாக நினைக்கக் கூடும். இனிமேல் உங்களிற்கு அந்தப் பிரச்சினை இல்லை. நாம் சொல்வது போல் செய்தால் போதும்.

எங்கு சென்று குரோமை பயன்படுத்தினாலும் அதன் “setting option” என்பதை சொடுக்குங்கள்(கிளிக்).அதில் “basic” என்பதற்கு கீழ் இருக்கும் “personal setuff” என்பதை சொடுக்கி “password” என்பதை தெரிவு செய்து “never save passwords”என்பதை தெரிவு செய்யுங்கள்.இறுதியாக உங்கள் வேலைகளை முடித்தபின் “history” கிளிக் செய்து “clear all browsing data” என்பதை தெரிவு செய்யுங்கள்.

இவ்வாறு செய்தால் உங்கள் தகவல்களை இலகுவாக பாதுகாக்க முடியும்.

பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் காலமானார்

8-முறை இந்திய தேசிய விருது வென்ற பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் தனது 49வயதில் மாரடைப்பால் காலமானார்.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த ரிதுபர்னோ கோஸ் தனது பெற்ரோரின் வழியில் தானும் சினிமா துறையில் மோகம் கொண்டவர். ஆரம்ப காலங்களில் விளம்பர படங்கள்மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி, 1994ம் ஆண்டு ஹைரர் அங்தி என்ற பெங்காலி திரைப்படம் மூலம் இயக்குனராக அவதரித்தார்.

தொடர்ந்து இவர் இயக்கிய உன்சி ஏப்ரல், தகான், உட்சாப், ரெயின்கோட், தோசர், தி லாஸ்ட் லீயர், அபோகோமென் ஆகிய திரைப்படங்கள் மாற்றுத் திரைப்பட ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. இதுவரை 19 திரைப்படங்களை இயக்கியுள்ள ரிதுபர்னோ அவற்றில் 8 திரைப்படங்களுக்காக தேசிய விருது வென்றிருக்கிறார்.

இவர் இயக்கிய எந்த திரைப்படமும் ஏதோ ஒரு துறையில் தேசிய விருது பெற்றுவிடும் என்பதற்காகவே இவரை தேசிய விருது இயக்குனர் என கொல்கத்தா ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இந்நிலையில் ரிதுபர்னோவின் திடீர் மரணம் பெங்காலி திரைத்துறையினருக்கு தாங்க முடியாத பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைகளுக்கான சிறப்பான படங்களை இயக்கி பெரும் புகழ் அடைந்தவர் ரிதுபர்னோ. குறிப்பாக 1994ம் ஆண்டு அங்க்டி திரைப்படமும், 1995ம் ஆண்டு உனிஷே ஏப்ரல் திரைப்படமும் சர்வதேச ரீதியில் வரவேற்பை பெற்ற இவரது திரைப்படங்களாகும்.

இதில் தாயினதும், மகளனதும் உறவைச்சொல்லும் உனிஷே ஏப்ரல் திரைப்படத்திற்கு அந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதில் நடித்த தேபாஷிரீ ரோய் அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இவர் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆகவும் திகழ்கிறார்.

2003ம் ஆண்டு வெளிவந்த சோகர் பாலி திரைப்படத்தில் பாலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்ததும், 2004ம் ஆண்டு வெளிவந்த ரெயின்கோட் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்ததும் ரிதுபர்னோ கோஷின் அபாரத்திறமையினால் ஈர்க்கப்பட்டதனால் ஆகும்.

அவரது தீவிர ரசிகர்களும், அவர் படித்தில் நடித்த நடிகர்களும், ‘இவ்வளவு சிறியவயதில் ரிதுபர்னோ இந்த உலகை விட்டுச் செல்வார் என ஒரு போதும் நினைக்கவில்லை’ என்கின்றனர். இவரது இறுதி திரைப்படம் சித்ராங்கதா. 2012 இல் வெளிவந்தது.

இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த ரிதுபர்னோவின் மரணம் இந்திய திரைப்பட உலகுக்கே பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

மிர்ச்சி சிவாவை காப்பாற்ற வருகிறார் சந்தானம்

கடந்த 1980ம் ஆண்டுகளில் கே.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினியின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப் படம் தில்லு முல்லு.இப்படம் இப்போது மீண்டும் அதே பெயரில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில் ரஜினி கதாபாத்திரத்தில் சென்னை 600028 சிவா நடிக்க, நாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார்.

இப்படத்தில், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் கோவை சரளா நடிக்கிறார்.

பிரபல கொமடி நடிகர் பிரமானந்தம் முக்கிய வேடமேற்றுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா இருவரும் முதன் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள்.

வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இயக்க, வேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ படத்தின் இறுதி காட்சியில் கமல் நடித்து இருப்பார்.

ஆகவே தற்போது ரீமேக்காகி இருக்கும் படத்தில் கமல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினி மாட்டிக் கொண்ட போது கமல் தனது வழக்கறிஞர் படையுடன் வந்து ரஜினியை காப்பாற்றுவார்.

அவ்வாறு மிர்ச்சி சிவாவை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்து இருக்கிறாராம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜெனிவாவில் யூன் 1ம் திகதி நடைபெற இருக்கிறது. படத்தை யூன் 14ம் திகதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

சென்னையில் படமாக்கப்படும் ஜில்லா

கொலிவுட்டில் தலைவா படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார் விஜய்.விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைப்பில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடந்து முடிந்தது.

14 நாட்கள் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடக்கவிருக்கிறது.

இதில் விஜய் மற்றும் மோகன்லால் சம்பந்தபட்ட காட்சிகளை படமாக்க இருக்கின்றனர். பெரும்பாலான காட்சிகளை சென்னையில் படமாக்கி விட்டு வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதற்காக சென்னை ஸ்டுடியோவில் மதுரையைப் போன்று பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்துள்ளனர்.

அநேகமாக யூன் முதல் வாரத்தில் ஜில்லாவின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னணி இளம் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன்: கெளதம் கார்த்திக்

கெளதம் கார்த்திக் அறிமுகமான, கடல் படம் சரியாக ஓடாவிட்டாலும், அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

“சிலம்பாட்டம்” படத்தை இயக்கிய சரவணன் “சிப்பாய்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கவுதம் கார்த்திக் தான் கதாநாயகன்.

இவருக்கு ஜோடியாக நடிப்பது, லட்சுமி மேனன். அடுத்ததாக ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் காதல் கலந்த கொமடி படமான, வை ராஜா வை படத்திலும் கவுதம் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதில், இவருடன் ஜோடி சேர்ந்திருப்பது பிரியா ஆனந்த். இதை தொடர்ந்து, தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, “ஆல மொடலின்டி” என்ற படத்தின், தமிழ் ரீமேக் படத்திலும் கவுதம் கார்த்திக் நடிக்கிறார்.

இதனால், முன்னணி இளம் நடிகர்களின் பட்டியலில், இடம் பிடித்து விடுவேன் என உற்சாகமாக கூறி வருகிறார் கெளதம்.

விஜய்க்கு புதிய தொண்டர் படை உருவாக்கம்

நடிகர் விஜய் அவ்வப் போது சமூக சேவைகளில் இறங்கிவருவது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் கூட இரண்டுமுறை இலவச திருமணம் நடத்திவைத்தார்.

ஆனால், அந்த நிகழ்ச்சிகள் நடந்த போது சரியான பாதுகாப்பு இல்லாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அந்நிகழ்ச்சியில் இருந்து விஜய்யே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது தலைவா படத்தில் நடித்து வரும் விஜய், அப்படத்தின் ஆடியோ விழாவை யூன் மாதம் 22ம் திகதி காலை நடத்துகிறார்கள்.

அன்று விஜய்யின் 39வது பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் மாலையில், மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் 3900 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப் போகிறாராம் விஜய்.

இந்த விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்கிறார்களாம். மேலும், இதுவரை விஜய் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தபோது சரியான பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.

ஆனால். இனிமேல் நடக்கும் விழாக்களில் அவர் ரசிகர்களே தொண்டர் படை அமைக்கப் போகிறார்களாம்.

விழாக்களில் எப்படி எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது பற்றிய பயிற்சிகள் அவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

விஜய்யின் பாராட்டு மழையில் இயக்குனர் வின்சென்ட் செல்வா

கொலிவுட்டில் விஜய் நடித்த ப்ரியமுடன், யூத் போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா.
இவர் தற்போது துள்ளி விளையாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யுவராஜ் கதாநாயகனாவும், தீப்தி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், பரோட்டா சூரி உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ஆர்.பி.ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

தற்போது முழு படப்பிடிப்பு முடிவடைந்து வெளியிட தயாராகியுள்ள இப்படத்தினை நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாக போட்டு காட்டினார் செல்வா.

படத்தை பார்த்து விட்டு நடிகர் விஜய், வின்சென்ட் செல்வாவை மிகவும் பாராட்டியுள்ளார்.

புதுமுகங்கள் நடித்திருந்தாலும், சினிமாவில் ரொம்ப அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் டக் ஆஃப் வாரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என்று கூறியுள்ளார்.

முடிவுக்கு வந்தது பெப்சி வேலை நிறுத்தம்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெப்சி தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) நிர்வாகிகள் சிலருக்கும், சினிமா டிரைவர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே, சில தினங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது.

பெப்சி அமைப்பினர் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை, படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

இதையொட்டி, கடந்த 2 நாட்களாக சினிமா படப்பிடிப்புகளும், தொலைக்காட்சி தொடர்களும் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர், இத்துறையின் கூடுதல் கமிஷனர் மற்றும் பெப்சி நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்பு, பெப்சி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிர்ச்சியில் ஹன்சிகா

லட்சுமி மேனன் வேகமாக வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளாராம் ஹன்சிகா.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

இருப்பினும் கேரளத்து பெண்ணான லட்சுமி மேனனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.

எனவே லட்சுமி மேனன் குறித்த தகவல்களை தனது உதவியாளர்கள் மூலம் சேகரித்து வருகிறாராம்.

லட்சுமி மேனன் ஹன்சிகா போன்று கவர்ச்சியாக நடிக்காவிட்டாலும் அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது என்று உதவியாளர்கள் ஹன்சியிடம் தெரிவித்துள்ளார்களாம்.

லட்சுமியின் கைவசம் சித்தார்த், விமல், சசிகுமார், கௌதம் கார்த்திக் படங்கள் உள்ளன.

சேட்டை போன்று தான் நடித்து வரும் படங்களும் சரியாக ஓடாததால் தனது மார்க்கெட் படுத்துவிடும் என்று பயப்படுகிறாராம்.

இதனால் தமிழோடு சேர்த்து தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த முடிவு செய்து ஆந்திரக் கரையோரம் வாய்ப்பு தேடியும் வருகிறாராம்.

சம்பளத்தை உயர்த்தினார் ப்ரியா ஆனந்த்

முன்னணி நடிகைகள் சம்பளத்தை உயர்த்தியதை அடுத்து, இளம் நடிகைகளும் சம்பளத்தை உயர்த்தி உள்ளனர்.
கொலிவுட், டோலிவுட் என இருமொழிகளில் நடிக்கும் த்ரிஷா, நயன்தாரா, இலியானா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்றவர்கள் தங்கள் சம்பளத்தை கோடிகளில் கேட்கத் தொடங்கி உள்ளனர்.

அதை தருவதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்நிலையில் இளம் நடிகைகள் ஹன்சிகா, அமலா பால், அஞ்சலி போன்றவர்களும் சம்பளம் உயர்த்தி உள்ளனர்.

இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருக்கிறார் பிரியா ஆனந்த்.

தமிழில் வாமனன் படத்தில் நடித்தவர் பின்னர் சித்தார்த்துடன் நூற்றெண்பது படத்திலும், ஸ்ரீதேவியுடன் இங்லிஷ் விங்லிஷ் படத்திலும் நடித்தார்.

சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த், தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.

வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டாராம்.

படத்துக்கு மட்டுமல்ல வர்த்தக நிறுவனங்கள் திறப்பு விழாவுக்கு வருவதற்கும் நடிகைகள் குறிப்பிட்ட தொகை வாங்குகின்றனர். அதற்கான கட்டணத்தையும் பிரியா ஆனந்த் உயர்த்திவிட்டாராம்.

அனுஷ்காவின் வேதனை

இலியானா, தமன்னாவை போன்று பாலிவுட்டிலும் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறார் அனுஷ்கா.
தெலுங்கு படங்களில் நடித்தால் தான் பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், தெலுங்கில், முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

நான் ஈ படத்தை இயக்கிய, தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி, தன் கனவு படமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தான், படத்தின் நாயகன். தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் ராஜமவுலி.

தெலுங்கு, தமிழில் அனுஷ்கா தான் நாயகி என முடிவாகி விட்டது. இதன் இந்தி பதிப்பிலும் தானே நாயகியாக நடிக்க வேண்டும் என தீவிர முயற்சி செய்து வந்தார் அனுஷ்கா.

ஆனால் இந்தி பதிப்பில் அனுஷ்கா நடிப்பதை விட, சோனாக்ஷி சின்கா நடித்தால் தான் நன்றாக இருக்கும் என ராஜமவுலி நினைக்கிறாராம்.

இதனால் பாலிவுட் வாய்ப்பு, கை நழுவி போய் விடுமோ என புலம்புகிறாராம் அனுஷ்கா.

Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியானது பல கோடி  பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதில் தற்போது 7GB வரையிலான இடவசதி தரப்படுகின்ற போதிலும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் .edu என்று முடிவடையும் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதன் மூலம் Sky Drive வசதியை பயன்படுத்த முனையும் மாணவர்களுக்கு மேலதிகமாக 3GB வசதி தரப்படவுள்ளது.

அதாவது மொத்தமாக 10GB சேமிப்பு வசதியை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் இந்த மேலதிக சேமிப்பு வசதியானது ஒரு வருட காலத்திற்கே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர் தரம்வாய்ந்த YouTube வீடியோக்களை தரவிறக்கம் செய்ய மென்பொருள்

முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது Visual Youtube Downloader எனும் ஒரு புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.

இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் விரைவான செயற்பாட்டினைக் கொண்ட இம்மென்பொருளானது உயர் தரம் வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதனால் ஏனைய மென்பொருட்களிளை விடவும் சிறந்ததாக இருக்கின்றது.

தரவிறக்கச் சுட்டி

8வது பிறந்த தினத்தில் YouTube தளம்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பிரம்மாண்டமான வீடியோ பகிரும் தளமாகவும், முன்னணியிலுள்ள தளமாகவும் காணப்படும் YouTube தளமானது 8வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.

2005ம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்தளமானது முதன் முதலாக 20 செக்கன்கள் ஓடக்கூடிய வீடியோவினை தரவேற்றம் செய்து தனது பயணத்தை ஆரம்பித்தது. தற்போது மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் 1 பில்லியன் வரையான பயனர்களையும் கொண்டுள்ளது.

அத்துடன் தற்போது நிமிடம் ஒன்றிற்கு 100 மணித்தியாலங்கள் வரை நீளம் கொண்ட வீடியோ கோப்புக்கள் உலகெங்கிலுமிருந்து பகிரப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற

நாம் பேஸ்புக்(Facebook) தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா?

அவ்வாறு பயன்படுத்திய பின் வெளியேற(Log Out) மறந்து விட்டால் அல்லது திடீர் என்று துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது முகப்புத்தக  பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் செய்ய வேண்டியது ..

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் முகப்புத்தக கணக்கினுள் நுழையுங்கள். பின் Account Settings ——>Security எனும் பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள்.

இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் முகப்புத்தக கணக்கை   பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில் நீங்கள் வெளியேற(Log Out) மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை சுட்டுங்கள்.

 

பேஸ்புக்கில் கருத்துக்களை சுயமாகவே எழுத புதிய வைரஸ்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கருத்துக்களை(Comment) எழுதும்வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.

நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் கணக்குகளில் மட்டுமே, தற்போதைக்கு,இயங்குகிறது. மற்றநாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும்வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது கூகிள் குரோம் மற்றும் பயர்பொக்ஸ் இணைய உலாவி(Browser) மென்பொருள் என்றபோர்வையில் கணனியின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கணணியை பயன்படுத்துபவர்,பேஸ்புக்கில் உள் நுழைந்துள்ளாரா (LogIn) எனக் கவனிக்கிறது. உள்நுளைந்துள்ள பட்சத்தில், தான்அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கணணி கோப்பு(File) ஒன்றை இறக்கிக் கொள்கிறது.

இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கானஇணைப்பு(Link) அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை(Comment) பகிர்தல் , நண்பர்கள் பக்கத்தில்கருத்துக்களை(Comment) எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கருத்துக்களை அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு(Friend Request) அனுப்புதல் எனப்பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை புதுப்பித்துக் (Update) கொண்டு செயல்படுகிறது.மைக்ரோசொப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினை தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது.

தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது.பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத மென்பொருட்களை(Softwares) தரவிறக்கம்(Download) செய்ய வேண்டாம் என மைக்ரோசொப்ட் மற்றும் பிரபல வைரஸ் எதிர்ப்புநிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்தியபின்னர், அதிலிருந்து கட்டாயமாக வெளியேறிட(Log Out) செய்திட வேண்டும்எனவும் மைக்ரோசொப்ட்அறிவுறுத்தியுள்ளது.

கேன்ஸ் விழாவில் கோச்சடையான் டிரைலர் வெளியாகாதது ஏன்?

 

இளைய மகள் சவுந்தர்யாவின் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள முதல் 3டி படம் கோச்சடையான்.

Kochadaiyaan

இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா, ருக்மணி என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடி்ப்பு எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்த‌ின் டிரைலரை சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக ரஜினி உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர் கேன்ஸ் பட விழாவுக்கு செல்லவிருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.

ரஜினியின் உடல்நிலை சரியில்லாததால் கேன்ஸ் பட விழாவை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இதனை படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் மறுத்துள்ளதுடன், டிரைலர் ரிலீஸ் ஆகாததற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறிகையில், கோச்சடையான் படத்தின் டிரைலரை பார்த்த ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டவர்கள் டிரைலரை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்யலாம் என்று கூறினார்கள்.

அவசர ‌கோலத்தில் சரியாக செய்யாமல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக, அற்புதமாக செய்யலாம் என்று ரஜினி கூறியதால் கடைசி நேரத்தில் கேன்ஸ் படவிழாவை ரத்து செய்துவிட்டோம்.

இன்னும் சில தினங்களில் கோச்சடையான் படத்தின் மெருகூட்டப்பட்ட டிரைலர் வெளியாகிவிடும்.

கேன்ஸ் தவிர இன்னும் எத்தனையோ சர்வதேச பட விழாக்கள் இருக்கின்றன. அதில் டிரைலரை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.