நமது நாட்டில் வசதிக்காகவும் சொகுசான வாழ்க்கைக்காகவும் திருடுகிறார்கள். பெரும்பாலும் தங்க நகைகள், பணம் போன்றவைதான் அவர்களின் இலக்கு.
ஆனால் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பெண்களின் கூந்தலை திருடுகிறார்கள். வெனிசுலாவில் நீளமான கூந்தல் கொண்ட பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. மேலும் நீளமான கூந்தல் கொண்டவர்கள்தான் அழகானவர்கள் என்று அங்குள்ள ஆண்கள் கருதுகிறார்கள்.
இதனால் கூந்தலை நீளமாக வளர்ப்பது அங்குள்ள பெண்களுக்கு பிடித்தமான விஷயம். அதுபோல நீளமாக வளர்க்க முடியாத பெண்கள் சவுரிமுடியை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட கூந்தல் அங்குள்ள கடைகளில் ரூ.2,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதுவே இயற்கையான கூந்தல் என்றால் அதன் தரத்தை பொறுத்து ரூ.50 ஆயிரம் வரை விலை போகிறது. இதனால் அங்குள்ள திருடர்கள் தனியாக செல்லும் பெண்களை பிடித்து அவர்களது கூந்தலில் ஒரு கிளிப்பை போட்டு மொத்த கூந்தலையும் கத்தரித்து எடுத்துச்சென்று விடுகிறார்கள்.
வெனிசுலாவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு என்பது கிடையாது. ஆனால் நீளமான தலைமுடியுடன் இருப்பதுதான் அவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. ஆண்கள் மட்டுமின்றி அவர்களுடன் பெண்களும் கூட்டணி சேர்ந்து கூந்தலை திருடும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
இந்த கூந்தல் திருட்டு தொடர்பாக ஏராளமான புகார்கள் அங்குள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் பலன் இல்லை. இதனால் தற்போது நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் தனியாக எங்கும் செல்வதில்லை. அப்படி சென்றாலும் உடன் ஒரு பட்டாளமே இருக்கும்.

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் திருடர்களை கண்காணிப்பதற்கென்று தனி காவலர்கள் பணியாற்றி வந்தனர்.
வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள நவீன சந்தையில் தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது
திரிஷா புதுப்படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். அடுத்த வருடம் துவக்கத்தில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா 2002ல் சினிமாவில் அறிமுகமானார். பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது அவருக்கு 30 வயது கடந்துள்ளது.
தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள சச்சின், பயிற்சி பெறும் விதமாக ரஞ்சி கிண்ண போட்டியில் விளையாட உள்ளார்.
பிரபல பாடசாலைகள் என்பதை தவிர்த்து நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகளை உருவாக்குவதே அரசின் வேலைத்திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதின்ம வயதினர் தங்கள் கருத்துகளை வெளியிட விதித்திருந்த கட்டுப்பாடுகளை பேஸ்புக் இணையதளம் நீக்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் பார்க்கும் வகையில் பதின்ம வயதினர் கருத்துகளை வெளியிட முடியும்.
இந்தியாவின் ராஜஸ்தானில் மனைவியை கோடரியால் கொடூரமாக தாக்கி கொன்று விட்டு எதுவும் நடக்காதது போல் தூங்கச் சென்றுள்ளார் ஒருவர்.
வவுனியா, கோவில்குளம் கமநலகேந்திர நிலையத்தில் விவசாயிகளுக்கான பயிர்ச் சிகிச்சை முகாம் கடந்த 17ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. பெருமளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தாம் பயிர்ச் செய்கையில் எதிர்நோக்கும் நோய்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் சார் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
தமிழகத்தில் சுமார் 20 கிலோ நிறையுடைய ஆட்டை விழுங்கியதால் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நகர முடியாதபடி அதே இடத்தில் உள்ளது.
திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, சிங்கம், வேங்கை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக் ஆகியோருடன் சேர்ந்து நடித்தவர் ஜெயமணி. இவர் காமெடியனாக இருந்தாலும் தன்னுடைய மகனை கதாநாயகனாக உருவாக்கியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை சேர்ந்தவர் இலியாஸ் அஸ்கார் (84). இவர் பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமியை இங்கிலாந்துக்கு கடத்தி வந்தார். அவள் ஊனமுற்றவள். காது கேளாத, வாய் பேச முடியாதவள். அவளை தனது வீட்டில் பாதாள அறையில் அடைத்து வைத்தார்.
சமீபத்தில் ஒரு பட விழாவில் பேசிய இயக்குனர் சங்க தலைவர் கேயார் நடிகை குஷ்புவை வெகுவாக பாராட்டினார்.
விசா காலம் முடிந்து ஓராண்டாக பொலிஸார் கண்ணில் படாமல் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடியில் இருந்து கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற போது அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
