சிறுவயதில் காணாமல் போய் கமாண்டோ படை வீரர் ஆனவர் 25 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
இந்தியாவின் மராட்டிய மாநிலம் தானே நகர பொலிஸ் கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருபவர் கணேஷ் ரகுநாத் தாங்குடே(31). விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள இவர் முதலில் தானே நகர பொலிஸ் படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்து படிப்படியாக விளையாட்டு திறமையால் கமாண்டோ படைக்கு முன்னேறினார்.
கமாண்டோ படை வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பணியாற்றுவது வழக்கம். ஒரு குழுவிற்கு அதிகாரி ஒருவர் தலைமை வகிப்பார். கணேஷ் ரகுநாத் தாங்குடே குழுவிற்கு ஷோன்டே என்பவர் பொறுப்பு அதிகாரி ஆவார். ஷோன்டே தன்னுடைய குழுவில் உள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரத்தை கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒவ்வொரு வீரர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய பெயர் விவரங்களை தெரிவித்தனர். அப்போது கணேஷ் ரகுநாத் தாங்குடேவிடம் கேட்டபோது எனக்கு யாரும் இல்லை. நான் ஒரு அனாதை என்று சோகத்துடன் தெரிவித்தார்.
ஆனால் கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் வலது கையில் மந்தா ஆர்.தாங்குடே என்று மராத்தி மொழியில் பச்சை குத்தியிருந்தது.
இதனை பார்த்ததும் ஷோன்டேவிற்கு கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கும் பெற்றோர் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அடி மனதில் வேரூன்றியது.
உடனே மந்தா என்ற பெண் தொடர்பான விவரங்களை பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்கள் மூலமாக தேடத்தொடங்கினார். மேலும் கணேஷ் ரகுநாத்திடம் பெற்றோரை கண்டுபிடித்து தருவதாகவும், விரைவில் பெற்றோரை தேடி பிடித்துவிடலாம் என்றும் கமாண்டோ படை அதிகாரி ஷோன்டே மற்றும் சக வீரர்கள் ஆறுதல் கூறினர்.
இதனையடுத்து தன்னுடைய பெற்றோரை எப்படியாவது தேடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தோன்றியது. உடனே தானே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக சேகரித்தார்.
அதில் துரதிருஷ்டவசமாக கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் பெயர் விவரம் இல்லை. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.
கணேஷ் ரகுநாத் தாங்குடே பாலர் பருவத்தில் ஒர்லியில் உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்து 7ம் வகுப்பு வரையிலும் படித்தார்.
அந்த அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்கு பல வருடங்களாக சமையல்காரராக பணியாற்றி வரும் சம்ருதீன் என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் சில தகவலகளை தெரிவித்தார். மேலும் முதியவர் ஒருவர் மந்தா என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மாமா பாஞ்சா மசூதி அருகில் வசித்து வருவதாக கணேஷ் ரகுநாத்திடம் தெரிவித்தார்.
கடந்த 4ம் திகதியன்று பல்வேறு தேடல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதியவர் கூறிய வீட்டிற்கு கணேஷ் ரகுநாத் சென்றார். அங்கு இருந்த பெண்ணிடம் நாங்கள் பொலிஸ் உங்கள் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போயிருக்கிறதா என்று கேட்டார்.
அதற்கு ஆமாம் என்று கூறிய அந்த பெண் தன்னுடைய மகன் கையில் என்னுடைய பெயர் மந்தா ஆர்.தாங்குடே என்று பச்சை குத்தியிருக்கும் என்றார்.
உடனே, அவர் தன்னுடைய அம்மாதான் என்று கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தெரிந்ததும் நான்தான் உங்களுடைய மகன் என்று கூறி தன்னுடைய கையில் பச்சை குத்தியிருந்ததையும் காண்பித்தார். இதனையடுத்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓட இருவரும் கட்டித்தழுவினர்.


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கடத்தி மூன்று நாட்களாக சிறுவன் ஒருவன் உள்ளிட்ட ஐவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, உலக அளவில் சுமார் மூன்று கோடி பேர் இன்னும் கொத்தடிமை நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது.
உக்ரைன் நாட்டில் த்ரில் அனுபவத்துக்காக புகையிரதப் பாதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி மீது புகையிரதம் மோதியது. ஜபோரோசி என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. காதலனுக்கு வயது 41. காதலிக்கு வயது 30. சம்பவத்தின்போது இருவரும் குடிவெறியில் இருந்தனர்.
வவுனியா – அட்டமஸ்கட பிரதேசத்தில் விஹாரையில் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையில் 13 முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டில் நிலவும் சமாதான சூழலுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிந்திப்பது தவறானது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொழும்பில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மாகன்சிங் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கொழும்புக்கு அனுப்பப்படலாம் என்றும் ரைம்ஸ் ஒவ் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் முன் பாய்ந்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பண்டாரவளை ரயில் நிலையத்தில் இருந்து தியத்தலாவ திசையில் 300 மீற்றர் தூரத்தில் இச்சம்பவம் இன்று காலை 08.10 அளவில் இடம்பெற்றுள்ளது.