யாழ். பல்கலைக் கழக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!

2

யாழ். பல்கலைகழகத்தில் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் நேற்று காலை 8 மணி முதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் யாழ். பல்கலைக்கழக பதிவாளர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் இன்று மாலை 5 மணியுடன் கைவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் இவர்களது பிரச்சினை தொடர்பில் பேசப்படும் எனவும் நியாயமான தீர்வு முன்வைக்கப்படும் எனவும் பதிவாளர் கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

இவ் ஊழியர்களது பெயர் விபரம் உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பதிவாளர் வாக்குறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் 26ம் திகதி தமக்கான தீர்வு முன்வைக்கப்படாவிடில் உண்ணாவிரத போராட்டத்தை தொடரவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

வவுனியா முல்லியடியில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு!!

bulletsவவுனியா – முல்லியடி பிரதேசத்திலிருந்து துப்பாக்கி மற்றும் ஒரு தொகுதி ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியவையாக இருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

இவற்றில் ரீ 56 ரக துப்பாக்கி, 7.62 மில்லிமீற்றர் ரக 171 ரவைகள், 5.56 மில்லிமீற்றர் ரக ரவைகள் 54 என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 17 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்!!

யாழ். பல்கலைகழகத்தில் அமைய அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் இன்று காலை 8 மணிமுதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் தமக்கு நியாயம் கிடைக்கும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1. திடீர் வேலைநிறுத்தத்தினால் நிர்கதியான எமக்கு உரிய தீர்வினை வழங்குங்கள்.

2. எமது வேலையினை தொடர்ந்து மேற்கொள்ளுவதற்கு தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுங்கள்.

3. இதுவரை காலமும் பல்கலைகழகத்திற்கு விசுவாசமாக உழைத்த எங்களை இடைநிறுத்தி வீதிக்கு அனுப்பியதுதான் தங்கள் நிர்வாகத்தினால் எமக்கு வழங்கப்பட்ட வெகுமதியா?

4. பல்கலை கழக நிர்வாகமே எமது நிலைமைக்கு உரிய தீர்வினை வழங்குங்கள்.

5. தொழிலாளி வெற்றிடத்திற்கு புதிய வெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்பின் போது கடந்த 10 மாதகாலமாக இங்கு பணிபுரிந்த நாங்கள் புறக்கணிப்பது நியாயமானதா ?

6. புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பின்போது எமது பெயர் பட்டியலை சம்பந்தபட்ட அமைச்சிடம் வழங்காமல் நிர்வாகம் எம்மை புறக்கணித்தமை நியாயமா ?

போன்ற ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்த அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்..

கடந்த 10.07.2013. அன்று எந்தவித முன்னறிவித்தலும் இல்லாது தீடிரென தனிப்பட்ட ரீதியில் புதிய ஆட்கள் வரவழைக்கப்பட்டு நேர்முக தேர்வு நடாத்தப்பட்டது. அதன் பின்னர் வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கபட்ட நிலையில் அவர்களுக்கான நியமனங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 7ம் திகதி முதல் புதிய கல்விசார ஊழியர்கள் இங்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் அதுவரை காலமும் பணியாற்றி வந்த நாங்கள் நியாயமற்ற முறையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டோம்.

யாழ். பல்கலைகழக நிர்வாகத்தினால் மூடி மறைக்கப்பட்ட எமது நிலைமையினை வெளிக்கொணர்ந்து தெரியப்படுத்தி எமக்குரிய நியாயமான தீர்வினை பெற்று கொள்வதற்காகவே அகிம்சாவழியில் இந்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

1

2

திட்டமிடலின் போது மக்­களின் கருத்­துக்கள் உள்­வாங்­கப்படும் : வவுனியாவில் அமைச்சர் ப.சத்­தி­ய­லிங்கம்!!

வட­மா­கா­ணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்ட­மி­ட­லின்­போது பொது­மக்­களின் கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­டு­மென்று வட­மா­காண சுகா­தார அமைச்சர் வைத்­தியக் கலா­நிதி பத்­ம­நாதன் சத்­தி­ய­லிங்கம் தெரி­வித்தார்.

வவு­னியா – கோவில்­குஞ்­சுக்­குளம் பகு­தியில் பொது­மக்­களால் ஏற்­பாடுசெய்­யப்­பட்ட வர­வேற்பு நிகழ்வில் கலந்­து­கொணடு பேசிய­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த அவர்..

வவு­னியா மாவட்­டத்தின் வடக்கு பிர­தேசம் மற்றும் பால­மோட்டை பகு­திகள் கடந்­த­கால யுத்­தத்­தினால் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டன. அத்­துடன், சுகா­தாரம் உட்­பட ஏனைய அடிப்­ப­டைத் ­தே­வைகளை உட­ன­டி­யாக பூர்த்­தி­செய்­ய­ வேண்­டி­யுள்­ளது.

எனவே மக்­க­ளுக்­கான சுகா­தார அபி­வி­ருத்தி தொடர்­பான திட்­ட­மி­ட­லா­னது அவ­சர, இடைக்­கால மற்றும் நீண்ட கால நோக்கில் மூன்று கட்­டங்­க­ளாக மேற்­கொள்­ளப்­படும். இதன்­போது பொது­மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­க­ப்படும்.

இதன் போது அப் பகுதி மக்கள் அமைச்­சரிடம் தமது பிர­தேச சுகா­தார நிலை­மைகள் தொடர்பில் எடுத்­துக்­கூறியபோது..

தங்­க­ளு­டைய பிர­தே­சத்தில் வைத்­தி­ய­சாலை வச­திகள் இல்­லை­யெ­னவும் இதற்­காக 25 கி.மீ.க்கு அப்­பா­லுள்ள ஓமந்தை வைத்­தி­ய­சா­லைக்கே செல்­ல­வேண்­டி­யுள்­ள­தா­கவும் தெரிவித்­தனர். இவ்­வா­றான நிலையில் தமக்கு போக்­கு­வ­ரத்து வச­திகள் குறை­வாக காணப்­ப­டு­வதால் தங்கள் பகு­தியில் வைத்­தி­ய­சாலை வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­ வேண்­டு­மெ­னவும் கேட்­டுக்­கொண்­டனர்.

இதே­வேளை தமது பிர­தே­சத்­தி­லுள்ள குஞ்­சுக்­குளம் பாட­சாலை அதிபர் இல்­லாத நிலையில் பல­கா­ல­மாக இயங்­கு­வ­தா­கவும் உட­ன­டி­யாக அதிபர் ஒரு­வரை நிய­மிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­ட­னர்.

மேலும் நாட்டின் அசா­தா­ரண சூழ்­நிலை நில­வி­ய­போது தங்கள் பகு­தியில் இலங்கை செஞ்­சி­லுவைச் சங்­கத்­தினால் நடத்­தப்­பட்ட நட­மாடும் வைத்­திய சேவையில் தொண்­டர்­க­ளாக பல­வ­ரு­டங்கள் பணி­யாற்றிய இளைஞர், யுவ­திகள் தற்­போது வேலை­வாய்­ப்பின்றி இருப்­ப­தா­கவும் எதிர்­கா­லத்தில் சுகா­தா­ர­த்து­றையில் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டும்­போது தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கவேண்­டு­மெ­னவும் கேட்­டுக்­கொண்­டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் அவர்கள் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் இப்பகுதியில் வைத்தியசாலைக்கான தேவையுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

vavuniya vavuniya2

மேல் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமா ??

TNAஎதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்னவென்பதை அறிய தென்னிலங்கை மற்றும் வடக்கு வாழ் தமிழ் மக்கள் பெரிதும் ஆவலாக இருக்கின்றனர்.

கொழும்பு வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் இது தொடர்பில் அதிக அக்கறையைக் கொண்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் மேல்மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து அதன் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவிக்கையில்..

இது தொடர்பில் தற்போது உடனடிப் பதிலை வழங்க முடியாது.
மேல்மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னரே தேர்தலில் களமிறங்குவோமா, இல்லையா என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இது தொடர்பில் நாம் பேச்சு நடத்தவுள்ளோம் என்றார்.

அமெரிக்கா கதை எழுத இந்தியா இயக்கும் திரைப்படத்திலேயே விக்கினேஸ்வரன் நடிக்கிறார் : வசந்த பண்டார!!

wasantha-bandaraஅமெ­ரிக்கா திரைக்­கதை எழுத இந்­தியா இயக்­கு­ந­ராக செயற்­பட விக்­கி­னேஸ்­வரன் கதா­நா­ய­க­னாக நடிக்கும் திரைப்­படத்தின் இறுதிக் காட்­சிகள் அடுத்த வரு­டம் மார்ச் மாதம் எடுக்­கப்­படும் போது தான் இலங்கை அர­சாங்­கத்­திற்கு தலை­சுற்றும் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் வசந்த பண்­டார தெரி­வித்தார்

இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்..

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாக­ரீ­க­மான முறையில் மிகவும் முன்­னேற்­ற­க­ர­மான பாதையில் தனது அர­சியல் காய்நகர்த்­தல்­களை முன்­னெ­டுக்­கின்றார்.

ஜனா­தி­பதி முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து முத­ல­மைச்சர் பதவி மற்றும் அமைச்சுப் பத­வி­களை ஏற்­பது, அர­சுடன் நட்­பு­ற­வுடன் செயற்­பட தயா­ரென தெரி­விப்­பது,

மாகாண சபை அதி­கா­ரங்கள் ஊடாக மக்­க­ளுக்கு சேவை­களை முன்­னெ­டுப்­பதே தனது நோக்கம் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­திலும் கூட்­ட­மைப்­புக்குள் உள்ள கடும் போக்­கா­ளர்­களின் போக்கை ஏற்­றுக்­கொள்­வ­தில்­லை­யென்ற தனது போக்­கினை வெகு­வாக பிர­பல்­யப்­ப­டுத்தி வரு­கிறார்.

இது அமெ­ரிக்கா எழு­திய கதை. இந்­தியா அதனை இயக்­கு­கின்­றது. கதா­நா­ய­க­னாக சிறப்­பாக விக்­கி­னேஸ்­வரன் நடிக்­கின்றார்.
உணர்­வு­களை தூண்டி விட்டு சிறு­பிள்­ளைத்­த­ன­மான அர­சி­யலை விக்­கி­னேஸ்­வரன் மேற்­கொள்­ள­வில்லை. மாறாக நாக­ரிக­மான முன்­னேற்­ற­க­ர­மான அர­சியல் பாதையில் பய­ணிக்­கின்றார்.

இத்­தி­ரைப்­ப­டத்­திற்கு அர­சாங்கம் ஏமாந்து விட்­டது. கூட்­ட­மைப்பு இரண்­டாக பிரிந்து விட்­டது என கனவு காண்­கி­றது. ஆனால் அமெ­ரிக்­கா­வி­னதும் இந்­தி­யா­வி­னதும் திரைப்­ப­டத்தின் இறுதிக் காட்­சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் பட­மாக்­கப்­படும்.

அக்­காட்­சி­களில் அர­சாங்­கத்­துடன் நட்­பு­றவை பேணினோம். மத்­திய அர­சாங்­கத்தை மதித்தோம். ஆனால் வட மாகாண சபைக்கு அர­சாங்கம் அதி­கா­ரங்­களை வழங்க மறுக்­கின்­றது என்ற இறு­திக்­காட்­சியை விக்­கி­னேஸ்­வரன் ஐ.நா.வில் நடிப்பார்.

அப்­போது தான் அர­சாங்­கத்தின் தலை சுற்றப் போகின்­றது. காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை இவ் இறுதிக் காட்சி ஊடாக விக்­கி­னேஸ்­வரன் பெற்றுக் கொள்வார். அதன் பின்னர் தனித் தமி­ழீ­ழத்­துக்­கான அர­சியல் போராட்டம் ஆரம்­ப­மாகும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் : குற்றவாளி கைது!!

RAPEதமிழ்நாடு, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இராமியம்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் ஆனந்தன் (40). திருமணமான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர் மீது பொலிஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆனந்தன் இராமியம்பட்டியில் இரவில் வீட்டில் தனியாக உள்ள பெண்களை நோட்டமிட்டு அந்த வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் புகுந்து பாலியியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் தீர்த்தகிரி என்பவரின் வீட்டில் நுழைந்து, அவரது மனைவி சரோஜா(60) என்பவரை பாலியல் பாலத்காரம் செய்ய முயன்றுள்ளார். விழித்தெழுந்த சரோஜா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்ததில் ஆனந்தன் மூதாட்டியுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் விரட்டியதில் அங்கிருந்து ஆனந்தன் தப்பியோடிவிட்டார்.

இது குறித்து சரோஜா கொடுத்த புகாரின் படி பாப்பிரெட்டிப்பட்டி பொலிஸார் வழக்கு பதிந்து தப்பிஓடிய ஆனந்தனை கைது செய்துள்ளனர்.

 

இரு கடிதங்களின் பெறுமதி நான்கு லட்சம் டொலர்கள்!!

Einsteinஅமெரிக்காவின் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு பிரபல இயற்பியல் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன் எழுதிய இரு கடிதங்கள் 4 லட்சம் டொலர் வரை ஏலம் போகும் என நியூயோர்க் போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

1938ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஹெர்பர்ட் ஈ சால்ஸர் என்பவர் இயற்பியலில் ஒப்பிணைவு குறித்த ஐன்ஸ்டீனின் கோட்பாட்டில் உள்ள பிழை குறித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளித்து ஆகஸ்ட் 29ம் திகதி ஒரு கடிதத்தையும் செப்டம்பர் 13ம் திகதி மற்றொரு கடிதத்தையும் ஐன்ஸ்டீன் அனுப்பியிருந்தார்.

இரண்டாவது கடிதத்தில் சால்ஸர் கூறியதுதான் சரி என்றும் தான் தவறு செய்திருந்ததாகவும் பெருந்தன்மையுடன் அவர் ஒப்புக்கொண்டிருந்தார். பிற்காலத்தில் கணிதவியல் வல்லுநராகவும், விஞ்ஞானியாகவும் திகழ்ந்த சால்ஸர் 2006ம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில் அவரிடமிருந்த ஐன்ஸ்டீனின் இரு கடிதங்களும் வரும் நவம்பர் 7ம் திகதி நியூயோர்க்கிலுள்ள கர்ன்ஸீ ஏல மையத்தில் ஏலத்துக்கு வரவிருப்பதாகவும் அவை 4 லட்சம் டொலர் வரை விலை போகக்கூடும் என்றும் நியூயோர்க் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் இணையும் மைக்கல் கிளார்க்!!

clerkஉலகின் செசினோ சூதாட்ட மன்னன் என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் கிளார்க் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையில் 400 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள கெசினோ நிலையத்திற்கு பிரச்சாரம் செய்யும் வகையில் மைக்கல் கிளார்குடன், ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரவுன்ஸ் நிறுவனம் முன்மொழிந்துள்ள கல்வி மற்றும் பயிற்சி அம்சங்கள் வெற்றிகரமாக இருந்தால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என கிளார்க் இணக்கம் தெரிவித்துள்ளார்.

கிளார்க் தொழில் வாய்ப்புத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவார் என்றும் கல்வித் தூதுவராக இலங்கைக்கு விஜயம் செய்து வேலை தேடுபவர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு அதரவு வழங்குவார் எனவும் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 450 அறைகளைக் கொண்ட சூதாட்ட நிலையம் ஒன்றை அமைக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அது தொடர்பான சட்டமூலம் ஒன்றையும் பாராளுமன்றில் சமர்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த கெசினோ திட்டத்திற்கு பிரதான எதிர்கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்கட்சிகள் மற்றும் மத பிரிவுகளும், ஆளும் கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகள் சிலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா பொன்னாவரசன்குளம் மக்களுடன் சந்திப்பு!! (படங்கள்)

வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள், வவுனியா பொன்னாவரசன்குளம் பகுதிக்கு நேற்றைய விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் நிலைமைகளை அவதானித்துடன், அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்தும் கொண்டுள்ளார்.

அவர்களின் வீடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதைப் கண்ணுற்ற வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் இது விடயத்திலும், இம்மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

2 32

வவுனியாவில் நடைபெற்ற விவசாயிகள் தினம்!!(படங்கள்)

வவுனியாவின் சமூக ஆர்வலர்கள் ஒழுங்கு படுத்தலில் விவசாயிகள் தினம் நேற்று வவுனியாவில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டள்ளது.

இத்தினத்தை முன்னிட்டு மீள்குடியேற்றப்படட கிராமமான கள்ளிக்குளத்தில் விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் அவாகளுக்கு தேவையான உதவிகைளயும் வழங்கியிருந்தனர்.

இதேவேளை மீள்குடியேறிய மக்களிற்கான உலருணவு பொதிகளை வழங்கியுள்ளதுடன் பொதுமக்களின் காணிகளில் பயன்தரு மரங்களையும் நாட்டியும் வைத்துள்ளனர்.

இந் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, வரியிறுப்பாளர் சங்க தலைவர் செ.சந்திரகுமார், கலைஞர் மாணிக்கம் ஜெகன், சமுர்த்தி உத்தியோகத்தர்களான கனிசியஸ், கோ.சிவநேசன் உட்பட வவுனியா பாடசாலை சாரணர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

3 4 5 6 2

 

சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பாருங்கள்!!

சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கொடுமையைப் பாருங்கள்..

 

இறக்குவானை பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழை!!

redrainஇறக்குவானையில் தெமுவாவத்த கிவுல்எல்ல பிரதேசத்தில் நேற்று காலை 6.45 மணியளவில் சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சிவப்பு மழையை சேகரித்த பிரதேசவாசிகள் இறக்குவானை பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து கிவுல்எல்ல கிராமத்திற்குச் சென்ற பொலிஸார் சிவப்பு மழை நீரைப் பெற்று பரிசோதனைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 5 நிமிடங்கள் சிவப்பு மழை பெய்ததாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து கொடக்கவெல பொது சுகாதார பரிசோதகர் பிரிவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது : டக்ளஸ் தேவானந்தா!!

daklausவடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டிவிடுகிறது. இதன்காரணமாகவே அந்தக்கூட்டமைப்பால் அதிக ஆசனங்களை பெறமுடிந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிறந்த அரசியல்வாதியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்..

தற்போதே அதனை பற்றிக்கூறுவது பொருந்தாது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதுதான் அரசியலில் ஈடுபட்டுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் முரண்பட்டு கொண்டு வடக்கு மாகாணசபையை கொண்டு செல்லமுடியாது. 13வது அரசியல் அமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் தமது கட்சி எப்போதுமே இறுக்கமாக இருந்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13வது அரசியல் அமைப்பு திருத்தம் என்பது ஒரு குழந்தையை போன்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கில் அதிக இராணுவ பிரசன்னம் பற்றி கருத்தை வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா இராணுவம் தேசிய பாதுகாப்பை கருதியே வடக்கில் நிலைகொண்டுள்ளது. எனினும் அந்த இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கூறினார்.

மனித ரோபோவை தயாரித்து அமெரிக்கவுக்கு சீனா சவால்!!

robotஅமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையமான நாசாவுக்கு போட்டியாக சீனா ஒரு மனித ரோபோவை தயாரித்துள்ளது.

ஹொங்ஹொங் பல்கலையில் கடந்த வாரம் ஹுயுமானாய்டு ரோபோஅட்லஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ரோபோ மனிதர்களைப் போன்று நடக்கவும் அனைத்து பணிகளையும் செய்யும் விதத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆறடி உயரமும் 150 கிலோ எடையும் உள்ள இந்த அட்லஸ் ரோபோ அலுமினியம் மற்றும் டைட்டானியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 12.24 கோடி ரூபாய்.

குடியைக் கண்டித்த புது மனவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்!!

Knifதிருப்பூர் நகரிலுள்ள சுண்டமேடு குப்புசாமி காம்பவுண்டை சேர்ந்தவர் அசோக் (28). இவரது மனைவி கவிதா (25). அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இவர்கள் இருவருக்கும், 4 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.

இருவரும் திருப்பூருக்கு வந்து அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். அசோக், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை கவிதா கண்டித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவும் அசோக் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதற்காக கவிதா அவருடன் சண்டை போட்டுள்ளார்.

இதனால் அவமானமடைந்த அசோக், மனைவி சத்தம் போடுவது பக்கத்து வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்க தன்னுடைய வீட்டிலிருந்த ரேடியோவில் சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு வீட்டை உள்பக்கமாக பூட்டி தாளிட்டுள்ளார்.

அதன் பின் கவிதாவுடன் சண்டை போட்டுள்ளார், பின்னர் வெறியிலிருந்த அசோக் கத்தியால் கவிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

அதன் பின் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் படுத்ததும் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகி விட்டார். நேற்று காலை வீடு திறக்காததால் பக்கத்து வீட்டார் கவிதாவை அழைத்துள்ளனர்.

எவ்வித சத்தமும் வராததால் சந்தேகமடைந்து கதவை திறந்து பார்த்தபோது கழுத்து அறுபட்ட நிலையில் கவிதா பிணமாக கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அசோக்கை தேடி வருகின்றனர்.