லண்டனை உலுக்கிய அதிர்ச்சி சம்பவத்தில் திருப்பம் : நாட்டைவிட்டு தப்பிய கணவர்!!

லண்டனில் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கிழக்கு லண்டனில் பிரிஸ்பேன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 24 வயதான ஹர்ஷிதாவின் சடலத்தை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, நார்தம்ப்டன்ஷைர் பொலிசார் கொலை விசாரணையைத் தொடங்கினர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, சர்வதேச அளவில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளதாக நார்தண்ட்ஸ் பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால் ஹர்ஷிதாவின் கணவர் பங்கஜ் லம்பா எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்பதை அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை.

ஹர்ஷிதாவை அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹர்ஷிதாவின் உடலை நார்தாம்ப்டன்ஷையரில் இருந்து இல்ஃபோர்டுக்கு காரில் லம்பா கொண்டு சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, அவர் தற்போது நாட்டை விட்டு ஓடிவிட்டார் என நம்புகிறோம். அத்துடன் பங்கஜ் லம்பாவின் புகைபடத்தையும் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர். உடற்கூராய்வில், ஹர்ஷிதா படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.

அத்துடன், ஹர்ஷிதா முன்பு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் என்பதையும் இது தொடர்பில் நார்த்தாம்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாடியவர் என்பதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தடை!!

பரீட்சைக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாக சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் பெற்றோர்கள் சிலரினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இருவர் மருத்துவமனையில்!!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக. இன்று (18) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஏ 35 பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த, மோட்டார் சைக்கிளும் விசுவமடு பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முச்சக்கர வண்டியில் கருநாகம் : அழையா விருந்தாளியால் அதிர்ந்த சாரதி!!

முச்சக்கர வண்டியின் டயஸ் போட்டிற்குள் மறைந்திருந்த விஷம் நிறைந்த கருநாகம் பாம்பு, வாகனம் திருத்துநரின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.

வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை (17) அன்று சிறுவர்கள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்றபோது பயணத்தின் இடையில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் மயிலம்பாவெளி எனுமிடத்தில் வைத்து பாம்பை அவதானித்த சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார்.

உடனடியாக வாகனம் திருத்துநரை வரவழைத்து வண்டியின் முன் பகுதியை கழட்டி பாம்பை வெளியே எடுத்து காட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.

அதேவேளை கவனயீனமாக சாரதி இருந்திருந்தால் சாரதியை விஷப்பாம்பு தீண்டியிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அனுரவின் கீழ் மூன்று சக்திவாய்ந்த அமைச்சுக்கள்!!

இலங்கையில் 22 அமைச்சர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. பதவிப்பிரமாணம் ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதி அனுரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் 5 வருடம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் வெளியிட்ட கருத்து!!

அடுத்து வரும் 5 வருடமும் எப்படி செயற்படுகின்றேன் என்பதை பார்ப்பீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினராக இருந்த போது பல அபிவிருத்தி திட்டங்களை செய்திருந்தேன். இருந்த போதும் ஏதோ ஒரு காரணத்திற்காக மக்கள் என்னை நிராகரித்தனர். அதற்கு பல காரணம் உள்ளது.

எனக்கு எதிரான போலிப் பிரசாரங்களை எதிர்க் கட்சிகளும் போட்டியாளர்களும் முன்வைத்திருந்தனர். அது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.

எனது தொழில் அரசியல் அல்ல. நான் ஒரு வைத்தியர். கட்சி இந்த பதவியை தராவிட்டால் மீண்டும் ஒரு அரச உத்தியோகத்தராக செயற்படும் எண்ணத்தில் இருந்தேன்.

இந்நிலையில். வன்னி மாவட்டமானது திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெறுகின்ற ஒரு பிரதேசம். எனவே அதை உணர்ந்து செயற்படக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தேவையை அறிந்து கட்சி இந்த ஆசனத்தை வழங்கியுள்ளது.

என்மீது கட்சி வைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான எனது சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன்.

அந்தவகையில் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்கும் நன்றிகள்.கட்சிக்கும் நன்றிகள். இனிவரும் ஐந்து வருடங்களில் சத்தியலிங்கம் எப்படி செயற்ப்படுவார் என்பதை அனைவரும் நிச்சயமாக பார்ப்பீர்கள்.

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன். அது பொதுச்சபையில் தீர்மானிக்கப்படக்கூடிய ஒரு விடயம். அதனை விடுவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எற்படவில்லை“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் சபைக்குத் தெரிவு!!

பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக் குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தைச் சபைக்கு அனுப்புவதற்கு அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டில் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றம் வருகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் தமிழர் ஒருவருக்குத் தேசியப் பட்டியலில் இடமளித்தால் அமையவுள்ள நாடாளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகிப்பார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காவிட்டால் தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கை 27 ஆக அமையும்.

2020 பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர். தேசியப் பட்டியல் ஊடாக மூவருக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் கடந்த நாடாளுமன்றத்திலும் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர்.

தேசிய மக்கள் சக்தி – 13 தமிழர்களின் பெயர் விபரங்கள்

01. கிட்ணன் செல்வராஜா (பதுளை) – 60,041

02. அம்பிகா சாமுவேல் (பதுளை) – 58, 201

03. கே. பிரபு (மட்டக்களப்பு) – 14,856

04. கே.இளங்குமாரன் (யாழ்ப்பாணம்) – 32,102

05. எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா (யாழ்ப்பாணம்) – 20,430

06. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் (யாழ்ப்பாணம்) – 17,579

07. சரோஜா போல்ராஜ் (மாத்தறை) – 148,379

08. கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா) – 33,346

09. எஸ். பிரதீப் – 112,711 (இரத்தினபுரி)

10. அருன் ஹேமச்சந்திர ( திருகோணமலை) – 38,368

11. செல்வதம்பி திலகநாதன் (வன்னி) – 10,652

12. மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280 (வன்னி)

13. இராமலிங்கம் சந்திரசேகர் (தேசியப் பட்டியல்)

சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள ஜேவிபி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

தேசிய மக்கள் சக்தியின் கீழ் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் சம்பளம் இன்றி பணியாற்ற தயாராக இருப்பதாக அக்கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

அதற்கான ஒப்புதல் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுசந்த குமார கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் 76 வருடங்களாக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுவதால், தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் கவிழாது எனவும் சுசந்த குமார இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக தமிழ்ப் பெண் நியமனம்!!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18.11) காலை நடைபெற்றது.

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்ற நிலையில், புதிய அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் : விபரங்கள் உள்ளே!!

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இலங்கையில் நடந்து முடிந்த 10 ஆவது நாடாளும்ன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றுள்ல நிலையில் இன்று புதிய அமைச்சரவை நியமனம் இடபெற்றுகின்றது.

அந்தவகையில் முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி முன்பள்ளி கலைவிழா -2024

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி முன்பள்ளி கலைவிழா

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

வவுனியா பாரதி முன்பள்ளியின் கலைவிழாவானது பாடசாலையின் அதிபர் ஜெயராஜா சந்திரா தலைமையில் வவுனியா நகர கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக பேராசிரியர் பூங்கோதை செல்வராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நகரசபை செயலாளர் அரசரட்ணம் பாலகிருபன் , வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ரமேஷ் ரட்ணதேவி , வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை அதிபர் துவாரகேசன் கார்த்திகா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிராம சேவையாளர் சபாஸ் வவித்திரா , முன்னாள் கிராம சேவையாளர் கந்தையா விஜயகுமார் அவர்களும் கலந்து கொண்டிருந்தமையுடன் விருந்தினர்களாக முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் , பொதுமக்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது.

முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மணிவேல் பிள்ளை சஞ்சீவ் பிரதீபன் என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் முள்ளிவளை பொலிஸாரால் கடந்த (16.10.24) அன்று கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இரு குற்றவாளிகளுக்கு பிணை வைத்துள்ளதுடன் மற்றும் ஒரு குற்றச்செயல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் (23.10.24) அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அப்போதும் உறவினர்கள் பார்வையிட்டுள்ளார்கள். அதன் பின்னர் 06.11.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வவுனியா சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது அவர் நன்றாக இருந்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனைவி பிள்ளைகள் அறிந்து அங்கு சென்று பார்வையிட்ட போது அவர் பேச்சற்ற நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், கைதியினை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது கைதி தொடர்பில் எந்த தகவலும் பொலிஸாரால் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் முள்ளியவளை பொலிஸார் ஏற்கனவே குறித்த கைதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா சிறைச்சாலை பொலிஸார் குற்றம் சாட்ட முள்ளியவளை பொலிஸார் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதனை விட தீவிர சிகிச்சைப்பிரிவில் உறவினர்கள் மருத்துவரிடம் விசாரித்த போது அவரது மூளை சாவடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஒருவாரமாக மூளை சாவடைந்த நிலையில் குறித்த கைதி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பம் நீதி கட்டு வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடந்த 13 ஆம் திகதி சென்றபோது அவர்கள் 18ஆம் திகதி திங்கட் கிழமைதான் முறைப்பாடு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ள நிலையில் குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.

இந்த கைதியின் உயிரிழப்பு குறித்து மனைவி பிள்ளைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் சிறைச்சாலையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், இவரின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.

வவுனியாவில் கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்!!

வவுனியா – கள்ளிக்குளம் பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நேற்றையதினம் குறித்த சிறுவன் கிணற்றுப் பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ளியுள்ளார். இதன்போது தவறி உள்ளே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த க.டிலக்சன் என்ற 8 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து!!

கேகாலை, ரம்புக்கனை நகரத்திற்கு அருகில் பேருந்து ஒன்று மோட்டார்சைக்கிளை மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (16.11) காலை இடம்பெற்றுள்ளது.

பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்தைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தொகையான புதிய முகங்களுடன் கூடவுள்ள நாடாளுமன்றம் : பலர் படுதோல்வி!!

 

பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 10வது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 160இற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுடன் புதிய நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தலைமையில் சபையின் முதல் நாள் பணிகள் ஆரம்பமாகும்.

செங்கோல் வைத்த பின்னர் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் திகதி மற்றும் நேரத்தை நிர்ணயம் செய்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல், அன்றைய தினம் முதல் பணியாக பொதுச் செயலாளரால் சபையில் சமர்ப்பிக்கப்படும்.

பின்னர், அரசியலமைப்பின் உறுப்புரை 64 (1) மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 இன் விதிகளின்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர், உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம் செய்வார்கள் அதனை துணை சபாநாயகர் மற்றும் துணைக்குழு தலைவர் ஆகியோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாகும்.

தேர்தல் வாக்களிப்பு மூலம் 196 உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலம் 29 உறுப்பினர்களுமாக மொத்தம் 225 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில்,

  1. சுசில் பிரேமஜயந்த
  2. அனுர பிரியதர்ஷன யாப்பா
  3. நிமல் சிறிபால டி சில்வா
  4. மகிந்த அமரவீர
  5. ரொஷான் ரணசிங்க
  6. டக்ளஸ் தேவானந்தா
  7. டீ.பி.ஹேரத்
  8. ரோஹன திசாநாயக்க
  9. சரத் வீரசேகர
  10. புத்திக பத்திரன
  11. சன்ன ஜயசுமன
  12. திஸ்ஸ குட்டியாராச்சி
  13. நிபுண ரணவக்க
  14. எம்.ஏ.சுமந்திரன்
  15. மனோ கணேசன்
  16. எஸ்.எம். சந்திரசேன
  17. துமிந்த திசாநாயக்க
  18. அசங்க நவரத்ன
  19. ஷாந்த பண்டார
  20. பிரமித்த பண்டார தென்னக்கோன்
  21. அரவிந்தகுமார்
  22. வடிவேல் சுரேஷ்
  23. ஷசீந்திர ராஜபக்ஷ
  24. ரமேஷ் பத்திரன
  25. மனுஷ நாணயக்கார
  26. கஞ்சனா விஜேசேகர
  27. செல்வராசா கஜேந்திரன்
  28. ஹரின் பெர்னாண்டோ
  29. ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய
  30. பவித்திரா வன்னிஆராச்சி
  31. ரஞ்சன் ராமநாயக்க
  32. திலும் அமுனுகம
  33. உதய கம்மன்பில
  34. நிமல் லன்சா
  35. பிரசன்ன ரணவீர
  36. அஜித் ராஜபக்ச
  37. அருந்திக்க பெர்னாண்டோ
  38. ஜானக்க வக்கும்புர
  39. பிரேமலால் ஜயசேகர
  40. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
  41. சிவநேசதுரை சந்திரகாந்தன்
  42. அங்கஜன் ராமநாதன், உட்பட பலர் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 20 பெண் உறுப்பினர்கள்!!

2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹரிணி அமரசூரிய, கடந்த பொதுத் தேர்தலின் போது தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

பெண் பிரதிநிதித்துவம்

  • தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் சமன்மலி குணசிங்க
  • பதுளை மாவட்டத்தில் அம்பிகா சாமுவேல்
  • நிலாந்தி கோட்டஹச்சி
  • களுத்துறை மாவட்டத்தில் ஓஷானி உமங்கா
  • மாத்தறை மாவட்டத்தில் சரோஜா போல்ராஜ்
  • இரத்தினபுரி மாவட்டத்தில் நிலுஷா கமகே
  • கேகாலை மாவட்டத்தில் சாகரிகா அதாவுத
  • புத்தளம் மாவட்டத்தில் ஹிருணி விஜேசிங்க
  • மொனராகலை மாவட்டத்தில் சதுரி கங்கானி
  • கண்டி மாவட்டத்தில் துஷாரி ஜயசிங்க
  • காலி மாவட்டத்தில் ஹசர லியனகே
  • மாத்தளை மாவட்டத்தில் தீப்தி வாசலக
  • யாழ் மாவட்டத்தில் ராசலிங்கம் வெண்ணிலா

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களை பிரதிநித்துவம் செய்த இரண்டு பெண்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய முன்னாள்,

  • அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் மகளான சமிந்திரனி கிரியெல்ல,
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோர் தெரிவாகி உள்ளனர்.