இரத்தக் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர் : நடந்தது என்ன?

திருகோணமலை புல்மோட்டை மத்திய கல்லூரியின் இளம் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அவரது குடும்பத்தினர் மற்றும் பாடசாலை சமூகத்திடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (28) என்ற ஆசிரியரே அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவரது மனைவி தமது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் இல்லை,எனவே எங்கே எனது கணவர் உள்ளார் என்று பாடசாலை அதிபருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.

அதிபர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்வையிட்ட போது அவர் உயிரற்ற நிலையிலும்,உள்ளாடை மற்றும் காற்சட்டை என்பன அவிழ்ந்த நிலையிலும்,கால்களில் இரத்தக் காயங்களுடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த நீதவானின் உத்தரவிற்கு இணங்க சடலம் சட்டவைத்திய மரண பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கின்னஸ் உலக சாதனை படைத்த சேவல் வடிவத்திலான உல்லாச விடுதி!!

பிலிப்பைன்ஸின் நீக்ரோஸ் ஆக்சிடென்டலில் உள்ள காம்புஸ்டோஹானில், இராட்சத வேசல் கோழி வடிவிலான உல்லாச விடுதிக் கட்டிடம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

ஒரு தனித்துவமான மற்றும் மிகப்பெரிய அடையாளமாக இப்போது தனித்து நிற்கும் இந்த இராட்சத வேசல் கோழி வடிவிலான உல்லாச விடுதிக் கட்டிடம்.

Campuestohan Highland Resort இல் அமைந்துள்ள இந்த அசாதாரண அமைப்பு கோழி வடிவில் உள்ள மிகப்பெரிய கட்டிடமாக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

இது 34.931 மீட்டர் (114 அடி 7 அங்குலம்) உயரமும், 12.127 மீட்டர் (39 அடி 9 அங்குலம்) அகலமும், 28.172 மீட்டர் (92 அடி 5 அங்குலம்) நீளமும் கொண்டது.

கண்ணைக் கவரும் இந்த உல்லாச விடுதிக்கான யோசனை, திட்டத்தின் பின்னணியில் உள்ள தொலைநோக்கு பார்வையாளரான ரிக்கார்டோ கானோ குவாபோ டானிடமிருந்து வந்தது.

தன்னை ஒரு கனவு காண்பவர் என்று விவரித்த டான், அசாதாரணமான மற்றும் மறக்கமுடியாத ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.

கான்செப்ட் முதல் கட்டுமானம் வரை, டானின் லட்சியத் திட்டம் திட்டமிடுவதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே எடுத்து, ஜூன் 10, 2023 அன்று கட்டுமானத்தைத் தொடங்கியது. செப்டம்பர் 8, 2024 இல், கட்டிடம் முழுமையடைந்து கின்னஸ் பட்டத்தைப் பெற்றது.

அதிகரிக்கும் இணைய நிதி மோசடிகள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில் தற்போது வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஆன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

dir.ccid@police.gov.lk என்ற ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல முறைப்பாடுகள் பதிவாகி வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்களது தொலைபேசிகளுக்கு வரும் அநாமதேய இணைப்புகளை திறக்கவோ அல்லது OTP குறியீடுகள் அல்லது SMS அல்லது WhatsApp செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு சிறுவனால் நேர்ந்த கதி!!

இலங்கைக்கு தனது காதலனுடன் வருகை தந்த நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு பூ விற்பனை செய்த 15 வயது சிறுவனே இவ்வாறான செயலை செய்துள்ளதாகவும் அவரை கைது செய்துள்ளதாகவும் கந்தபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 வயதுடைய நெதர்லாந்து பெண் தனது காதலனுடன் நுவரெலியா, கந்தபொல பகுதிக்கு சென்றிருந்த போது பூ விற்பனை செய்யும் 15 வயது சிறுவன் பூங்கொத்து ஒன்றை கொடுத்துள்ளார்.

இதன்போது சிறுவன் தன்னை கட்டிப்பிடித்து தனது அங்க சேட்டையில் ஈடுபட்டதாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் தனது காதலனுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, பொலிஸார் விசாரணை நடத்தி சிறுவனை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை வெரலவத்தை சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைக்கு சென்ற பெண்களுக்கு நேர்ந்த அவலநிலை!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து கிரீஸ் நாட்டில் தொழிலுக்கு சென்ற இலங்கைப் பெண்கள் குழுவொன்று தங்குமிட வசதிகள் இன்மையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நுகேகொட பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று அண்மையில் கிரீஸில் உள்ள ஸ்ட்ராபெரி பண்ணைகளில் பணிபுரிய 05 பெண்களை அனுப்பியுள்ளது.

இருப்பினும், பணியிடங்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் பிற வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தின் காரணமாக அவர்கள் பணிபுரிந்த பண்ணைகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமூக ஊடக மோசடிகள் குறித்து அரசாங்கத்தின் எச்சரிக்கை!!

வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

dir.ccid@police.gov.lk ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஊடுருவதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணைப்புகளைத் திறக்கவோ அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP/ PIN), குறியீடுகள் அல்லது SMS அல்லது WhatsApp செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!

 

2024ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை என்பன அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை என்பன தபால் மூலம் அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தபால் மூலமாக அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், நவம்பர் 18ஆம் திகதி முதல் www.doenets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், வழங்கப்பட்ட அனுமதி அட்டையில், பெயர் உள்ளிட்ட திருத்தங்கள் இருப்பின், ஊடகம் மற்றும் பெயர் திருத்தங்கள் onlineexams.gov.lk/eic/index.php/clogin என்ற இணையதளத்தின் ஊடாக திருத்தங்களைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 18 நள்ளிரவு 12.00 வரை இவ்வாறு திருத்தங்களைச் செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், எக்காரம் கொண்டும் பரீட்சை நிலையங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையில் மாத்திரம் கவனம் செலுத்துமாறும் பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உலக மக்களை பிரமிக்க வைத்த இலங்கைக்கான தங்க விருது!!

   

2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த தரப்படுத்தலில் இலங்கை 8வது இடத்தில் இருந்தது.

இலங்கையை Most Desirable Island பெயரிடுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்திய பெருங்கடலின் முத்து என்ற வகையில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள புராதன இடங்கள் குறிப்பாக சிகிரியா, தம்புள்ள குகைகள், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை புராதன இடிபாடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகை விருதுகளில், இரண்டாவது இடத்தை தாய்வானும், மூன்றாவது இடத்தை போர்ட்டோ ரிகோவும் பெற்றுள்ளது.

சர்வதேச ரீதியாக 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தரப்படுத்தலுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன உதவியுடன் வருமானம் குறைந்தவர்களுக்கு 2000 வீடுகள்!!

சீன அரசாங்கத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுமார் 2000 வீடுகளை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடுகளை 3 சீன நிறுவனங்கள் நிர்மாணிக்கவுள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு,

நகர மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, மொரட்டுவையில் 575 வீடுகளும், கொட்டாவவில் 108 வீடுகளும் “சீனா தொடருந்து 25வது பணியகக் குழுமம்”(M/S China Railway 25th Bureau Group Co. Ltd) நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதனை தவிர தெமட்டகொடையில் 586 வீடுகள் மற்றும் மஹரகமவில் 112 வீடுகள் “எம்.எஸ் சீன ஹார்பர் இன்ஜினியரிங்” (M/S China Harbour Engineering Company Ltd) நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேலியகொடையில் 615 வீடுகளை “ஷாங்க்சி கன்ஸ்ட்ரக்ஷன் இன்வெஸ்ட்மென்ட்” (M/S Shanxi Construction Investment Group Co. Ltd) நிறுவனம் நிர்மாணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முக்கிய பகுதியில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் : விசாரணையில் வெளியான தகவல்!!

இரத்மலானை – படோவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்று நேற்று திடீரென இரத்த சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இது தொடர்பில் ஆராயப்பட்டபோது, நீரில் கைத்தொழில் சாயம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேல் மாகாண அலுவலகப் பிரதிநிதிகள், நீர் சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தைக் கண்டறியும் சோதனையை மேற்கொண்டதுடன், தண்ணீரில் தொழிற்சாலைச் சாயம் வெளியிடப்பட்டதை கண்டறிந்தனர்.

இருப்பினும், ‘PH’ சோதனையின்படி தண்ணீரில் கலந்த ரசாயனம் ஆபத்தானது அல்ல என்று முதற்கட்ட சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, நேற்று பெய்த கனமழையின் போது அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு வளாகத்தில் சேமித்து வைத்திருந்த சாயம் கால்வாயில் அடித்து செல்லப்பட்டமை தெரியவந்தது.

இதன் காரணமாக, இரத்மலானையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக இணைப்புக் கால்வாய்கள் சிவப்பு நிறமாக மாறக்கூடும் என்பதால், இரத்மலானையில் வசிக்கும் மக்களை அச்சமடைய வேண்டாம் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.

கண்டியில் மர்ம மரணம் கொலையா? விபத்தா? : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிட்டிய மீகனுவ வீதியில் முச்சக்கரவண்டிக்கு அருகில் வீழ்ந்து கிடந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (06) மாலை வாகன விபத்து தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​கண்டி நோக்கிய வீதியின் வலதுபுறத்தில் உள்ள மின்கம்பமொன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் சாரதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் முச்சக்கரவண்டிக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.

குறித்த நபர் அதிகாரிகளால் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெரெல்லகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 13-11-2024 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18-11-2024 ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காகப் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்’ மகன் இறந்த சோகத்தில் கணவன் – மனைவி விபரீத முடிவு!!

“அவன் எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்…” என்று மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தம்பதியர் விஷம் குடித்து விடுதி அறையில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி வத்சலா. இந்த தம்பதியருக்கு 7 வயதில் சுரேஷ் என்கிற மகன் இருந்த நிலையில்,

கடந்த மார்ச் மாதம் திடீரென்று சுரேஷூக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனின்றி ஏப்ரல் மாதம் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தங்களது ஆசை மகன் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் காரணமாக பெற்றோர் மிகவும் மனமுடைந்து போயினர். மன அழுத்தத்தில் இருந்து வந்தவர்களை உறவினர்கள் எத்தனை தேற்றியும் துக்கத்தில் இருந்து மீளவில்லை.

இதனையடுத்து கோவை அருகே குடும்பத்துடன் வசித்து வரும் பழனிசாமியின் அண்ணன் முருகேசன், மகனை இழந்த சோகத்தில் இருக்கும் தனது தம்பி பழனிசாமி மற்றும் வத்சலாவை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேடப்பட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் பழனிச்சாமி மாணவர்களுக்கு வீட்டில் டியூசன் எடுத்து வந்தார். வத்சலா தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வத்சலாவும், பழனிச்சாமியும் கடந்த நவம்பர் 3ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

ஒரு நாள் முழுவதும் இருவரும் லாட்ஜ் அறையை விட்டு வெளியே வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் உரிமையாளர், ஊழியர்களுடன் சென்று அறையின் கதவை பலமுறை தட்டினர்.

அப்படியும் கதவு திறக்கப்படாததால் தங்களிடம் இருந்த மாற்று சாவியால் அறையைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கட்டிலில் வாயில் நுரை தள்ளியபடி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லாட்ஜ் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் தம்பதி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், “எங்களது மகன் சுரேஷ் இல்லாத வாழ்க்கையை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 7 வருடம் நாங்கள் அவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டோம்.

இப்போது அவன் இல்லாததால், ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்க ஒவ்வொரு வருடம் போல ஆகிறது. அவனால் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனவே அவன் இருக்கும் இடத்துக்கே நாங்கள் சென்று விடுகிறோம்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

யாழில் 6 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

துன்னாலை கிழக்கு, குடத்தனை பகுதியைச் சேர்ந்த 68 வயதான 6 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கடந்த 3ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது.

இந்நிலையில் 4 ஆம் திகதி மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (05) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இந்நிலையில் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

125 மில்லியன் இலஞ்சம் : அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறை!!

இலங்கை சுங்க திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

குறித்த அதிகாரிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமையே இதற்குக் காரணம்.

அதேவேளை குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளார்.

யாழில் நித்திரையில் நடந்த சம்பவம் : இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியி்ல் நேற்று இரவு இளைஞர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது நேற்றிரவு தனது வாகனத்தில் நித்திரையில் இருந்த போது குளவி கொட்டியுள்ளது . வலி தங்கமுடியாமல் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் 35 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். சடலம் உடல் கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம்கையளிக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.