கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தேகொட, கல்வலதெனிய பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 65 வயதான சமன் ரொஹான் என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து தனது மனைவியுடன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் இலங்கைக்கு வந்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே இவரின் மாதாந்த செலவுக்காக மனைவி வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி வந்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் பணம் கிடைத்ததாக தெரியப்படுத்தும் கணவர் இம்முறை தொலைபேசியில் அழைப்பேசியில் அழைப்பேற்படுத்தவில்லை.
இதனால் அயல்வீட்டு நபருக்கு அழைப்பேற்படுத்தி கணவர் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு மனைவி கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் கடந்த சில நாட்களாக வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய குறித்த நபர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் போலியான முறையான கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பினாங்கில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தில் போலியான ஆவணங்களை சமர்பித்து கடவுச்சீட்டை பெற முயற்சித்துள்ளனர்.
பதின்ம வயது நபருக்கு 10 வயது என்று கூறி கடவுச் சீட்டை பெற முயன்ற நிலையில், அவரின் தாய் போன்று நடித்த பெண்ணும் சிக்கியுள்ளார்.
எனினும் அவர்களின் ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த நபர் ஏலவே மலேசியக் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்திருந்த போதும், அவருக்கு மலே மொழி தெரியாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது. அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு.
ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடு வீழ்ச்சியடைந்த நிலையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துச் சென்றது. என்றாலும் தற்போது படிப்படியாக நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது. அதன் பிரகாரம் மக்களின் வருமானமும் அதிகரிக்க வேண்டும்.
அதனால் மக்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார்.
தொழில் முயற்சியாளர்களை அதிகரித்து அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வாழ்க்கைச்செலவு அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்றவகையில் நாளாந்த சம்பளத்துக்குத் தொழில் செய்பவர்கள் தங்களின் நாட்சம்பளத்தை அதிகரித்துக்கொள்கின்றனர்.
ஆனால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அதற்கு திறைசேரியின் அனுமதி பெற்று முறையாக மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கிறது.
அதனால் இந்த நடவடிக்கையை முறையாக மேற்கொண்டு தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது.
அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு. ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம். இது தேர்தலை இலக்கு வைத்துத் தெரிவிக்கப்படும் வாக்குறுதி என யாரும் நினைக்க வேண்டாம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சொல்வதையும் செய்யும் தலைவர் என்பது அரச ஊழியர்களுக்கு தெரியும். ஏனெனில் அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது ரணில் விக்ரமசிங்க என்பது அவர்களுக்கு தெரியும்.
மேலும் இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யாரை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களுடன் களமிறங்கியுள்ளார்.
அதனால் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இந்த நாடு தோல்வியடையும். நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே சிறிய உருவம் கொண்ட பெண் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பெண்ணைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
உலகில் உயிர் வாழ்பவர்களிலேயே மிகவும் சிறிய உருவம் கொண்டவர் ஜோதி (Jyoti Amge, 30). இந்தியாவின் நாக்பூரில் பிறந்த ஜோதிக்கு 30 வயதாகிறது என்றால் நம்ப முடியவில்லை.
கியூட்டான குழந்தை போல காட்சியளிக்கும் ஜோதியின் உயரம், 62.8 சென்றிமீற்றர் மட்டுமே. சிறுவயதில், achondroplasia என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டதால், ஐந்து வயதுக்கு மேல் அவரது உடல் வளர்ச்சி அடையவில்லை.
ஹாலிவுட்டிலும் கலக்கியிருக்கிறாராம்
ஆனால், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, சும்மா ஹாலிவுட் வரை சென்று கலக்கியிருக்கிறார் ஜோதி.
அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்த அவரது நடிப்பு பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது.
அது மட்டுமல்ல, 2009ஆம் ஆண்டில், உலகில் வாழும் சிறிய உருவம் கொண்ட பதின்மவயதுப் பெண் என கிரீடம் சூட்டப்பட்ட ஜோதி, பின்னர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.
எனக்கு தொலைக்காட்சியில் நடிக்கப் பிடித்திருக்கிறது என்று கூறும் ஜோதி, அதற்கு வித்தியாசமான ஒரு காரணத்தைக் கூறுகிறார். தொலைக்காட்சியில் நடிக்கும்போது, மக்கள் என்னைக் கண்டு வியந்து பாராட்டுகிறார்கள்.
ஆனால், நேரில் பார்க்கும்போது, 30 வயது இளம்பெண்ணான என்னை, ஒரு சிறு குழந்தை போல தூக்கிவைத்துக்கொள்வதும், என்னிடம் குழந்தையிடம் கேள்வி கேட்பது போல கேட்பதும் எனக்குப் பிடிக்கவில்லை என்கிறார் ஜோதி.
உலகின் பயங்கரமான பொம்மை இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாமில் உள்ளது. பேய் பிடித்த இந்த பொம்மை இதுவரை 17 பேரை தாக்கியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கணவரால் ஏமாற்றப்பட்ட எலிசபெத் என்ற மணமகளின் ஆவி இந்த பொம்மை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, இது மணப்பெண் பொம்மை (Bridal Doll) என்றும் அழைக்கப்படுகிறது.
நியூயார்க் போஸ்ட்டுடனான ஒரு நேர்காணலில், அமானுஷ்ய நிபுணரும் பொம்மை உரிமையாளருமான லீ ஸ்டீர் (Lee Steer), “இந்த திருமண பொம்மை எப்போதும் அருங்காட்சியகத்தில் ஈர்ப்பு மையமாக இருந்து வருகிறது.
இப்போது தி கான்ஜூரிங் திரைப்படத்திலிருந்து நிறைய பேய் விஷயங்கள் கிடைத்துள்ளன, எனவே டால் பொறாமைப்படுகிறார். இந்நிலையில், மீண்டும் கவனத்தை ஈர்க்க பொம்மை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ” என கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தபோது கழுத்தில் எரியும் உணர்வை உணர்ந்ததாக லீ கூறினார். அவரது முதுகில் கீறல்களையும் அவர் கவனித்தார்.
இந்த பொம்மை பெண்களை தாக்காது என்று அவர் கூறினார். எலிசபெத் ஒரு மனிதனால் மோசமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள், அதன் பிறகு அவள் ஒரு திருமண பொம்மையில் வாழ்ந்து வருகிறாள் என்று கூறுகின்றனர்.
இந்திய மாநிலம் ஒடிசாவில் டேங்கர் லொறி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 5 பேர் பலியாகினர்.
ஒடிசா மாநிலத்தின் Ganjam மாவட்டத்தில் உள்ள சமர்ஜோலா என்ற இடத்தில், டேங்கர் லொறி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் சாலையோர தேநீர் கடையில் டேங்கர் லொறி கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் கடையில் அமர்ந்திருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த பயணி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 12 பேர் இந்த விபத்தில் காயமடைந்ததாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பவானிபட்னாவில் இருந்து பெர்ஹாம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த டேங்கர் லொறி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது.
மாநிலம் முதல்வர் மோகன் சரண் மாஜி இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என அறிவித்தார்.
இறந்தவர்களின் அடையாளம் காணப்படவில்லை என்றும், பொலிஸார் குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் நெடுஞ்சாலையை போக்குவரத்திற்காக சீரமைத்தனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தமக்கு 10 வயது என்று காண்பிக்கும் வகையிலான போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மலேசியாவின் கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவியாக அவரது தாய் போன்று பாசாங்கு செய்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பினாங்கில் உள்ள குடிவரவுத் திணைக்களத்துக்குச் சென்ற அவர்கள், போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். அதில் , ஆண் நபரொருவருக்கு 10 வயது என்று கூறி கடவுச் சீட்டை பெற முயன்றுள்ளனர்.
எனினும் குறித்த நபரது உடல் தன்மையைக் கண்டு சந்தேகித்த அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில் அவர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தமை தெரியவந்துள்ளது.
அதோடு , சம்மந்தப்பட்ட நபருக்குத் தாயாக நடிப்பதற்கு பெண்ணொருவருக்கு பணம் வழங்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் அந்நாட்டின் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை குறித்த நபர் ஏற்கனவே மலேசியக் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்திருந்த போதும், அவருக்கு மலே மொழி தெரியாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 49 வயது பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை (22) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
08 மற்றும் 09 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரான அதிபர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரு மாணவனையும் ,2023 ஆம் ஆண்டில் மற்றைய மாணவனையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இரு மாணவர்களும் விளையாட்டு செயற்பாடுகளுக்காக பாடசாலைக்கு சென்றிருந்த போது உணவு உண்பதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அறையொன்றிற்குள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிகுருகடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 7 வயதுடைய சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவனை கைது செய்வதற்கான விசாரணைகளை லிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வேலை செய்த கொத்தனாரின் உதவியாளராக வந்த சந்தேக நபர் பல தடவைகள் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சிறுவனின் தந்தை நேற்று (22)அன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலாப் படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தர பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து ஆட்களை ஏற்றி சென்ற சுற்றுலாப் படகு ஒன்றும் பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகு ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகிலிருந்த இருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரவு நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதால் காணாமல் போனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஹந்தான பிரதேசத்தில் வீடு இல்லாத காரணத்தால் புதிதாக பிறந்த மூன்று குழந்தைகளுடன் மரத்தில் கட்டப்பட்ட குடிலில் இரவைக் கழித்த தம்பதியினருக்கு நேற்று (22) புதிய வீடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது. இந்த பெற்றோருக்கு மற்றொரு மகள் உள்ளதால், புதிதாகப் பிறந்த மூன்று குழந்தைகளை சரியான முறையில் கவனித்துக் கொள்ள பொருத்தமான வீடொன்று இருக்கவில்லை.
அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட குடிசைக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை மரத்தின் மேல் இரவைக் கழிக்க அழைத்துச் செல்கிறார்கள்.
கடந்த காலங்களில் குறித்த குடும்பத்தின் அவலநிலை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
நிலையில் குறித்த குடும்பத்திற்கு வீடமைக்கும் பணியினை ஹந்தான சந்தகிரி சே விகாரையின் விகாராதிபதி கங்கசிரிபுர தம்மாலோக அந்த நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் பங்களிப்பைப் பெற்று, 20 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டின் நிர்மாணப் பணிகளை மூன்று மாதங்கள் கடப்பதற்குள் பூர்த்தி செய்ய ஹந்தான சந்தகிரி சே தேரரால் முடிந்தது.
அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த மண் குடிசையில் குடிநீர் வசதியோ, மின்சார வசதியோ இல்லை. அதேவேளை குழந்தைகளின் தந்தை மரத்தில் கட்டப்பட்ட குடிலில் இருந்து விழுந்து காயமடைந்தும் உள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு புதுவீடு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பாரிய வைரம் தென்னாபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் (Botswana) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த லுகாரா டயமண்ட் கர்ப்( Lucara Diamond Corp) நிறுவனத்தினால் போட்ஸ்வானா தலைநகர் கபரோனில் இருந்து 500 கி.மீ தொலைவிலுள்ள கெய்ரோ (Cairo) சுரங்கத்திலே 2492 கரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1905 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3106 கரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பாரிய வைரம் இதுவாகும்.
இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில், இதே சுரங்கத்தில் 1758 கரட் செவாலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த வைரத்தை பிரான்ஸ் பேஷன் நிறுவனமான Louis Vuitton வாங்கியது. ஆனால், அதன் விலையை வெளியிடவில்லை.
முன்னதாக 2017ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் 1,111 கரட் லெசிடி லா ரோனா வைரம் கண்டுபிடிக்கப்பட்டது, இதை ஒரு பிரித்தானிய நகைக்கடைக்காரர் ரூ.444 கோடிக்கு வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், போட்ஸ்வானா உலகின் மிகப்பாரிய வைர உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளதோடு, உலகின் வைரத்தில் 20% இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழாவில் 97 வயதான லீலாவதி அசிலின் தர்மரத்ன பாலி மற்றும் பௌத்தத்தில் முதுகலைப்பட்டத்தை பெற்றுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (21) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
களனி ரஜமஹா விகாரையின் தலைவரும், களனி பல்கலைக்கழக வேந்தருமான சிரேஷ்ட பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரோபா இந்த முதுகலைப் பட்டத்தை வழங்கி வைத்துள்ளார்.
லீலாவதி அசிலின் தர்மரத்ன என்பவர் 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வஹரணவிலுள்ள மில்லவ கிராமத்தில் பிறந்தார். அவர் தனது ஆரம்ப கல்வியை மில்லவ பெண்கள் கல்லூரியில் கற்றுள்ளார்.
இதன்பின்னர் உயர்தரத்தில் சித்திப்பெற்று ஆசிரியர் பணியில் சேவையாற்றிய பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.
1962ஆம் ஆண்டு நடைபெற்ற நொத்தாரிசுகளுக்கான பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற லீலாவதி நொத்தாரிசு பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பெண் என்ற விருதையும் பெற்று பாராட்டப்பட்டுள்ளார்.
இந்த முதுகலைப் பட்டம் தன் வாழ்வில் கிடைத்த மாபெரும் சாதனை என்றும் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி வரலாற்றில் விசேட மைல்கல்லாக விளங்கும் லீலாவதி பெற்ற இந்த முதுகலைப் பட்டம் உயர்கல்வியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யாழில் (Jaffna) காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா (வயது 1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரியில் மனைவியும் மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் கணவன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் மனைவி உயிரிழந்ததுடன், மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிவிதிகல தெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனைவியையும் மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் உயிரை மாய்த்துள்ளார்.
மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, மூத்த மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் அந்த நபர் வீட்டின் மின்கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
48 வயதுடைய ஆண் ஒருவரும் அவரது மனைவியான 39 வயதுடைய பெண்ணுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மகனுக்கு 18 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன் பலத்த வெட்டுக்காயம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர்களுக்கு மேலும் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் தற்போது உறவினர்களின் பராமரிப்பில் உள்ளனர். நிவித்திகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வைத்தியசாலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிசுவின் தந்தை கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி வவுனியா, செட்டிகுளம், பிரமனாலங்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயது யுவதி ஒருவர் பிரசவத்திற்காக வவுனியா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை சத்திரசிகிச்சை மேற்கொண்டு சிசுவை எடுத்துள்ளனர்.
எனினும் சிசு உயிரிழந்துள்ளது. வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்களின் அசமந்தப்போக்கே தமது சிசு மரணமடையக் காரணம் என தந்தை வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் (21.08) மாலை வவுனியா மாவட்ட நீதிபதி சிசுவின் உடலை பார்வையிட்டதுடன், தந்தையின் வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார்.
நேற்று (22.08) யாழ் வைத்தியசாலையில் கடமையர்றும் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் சடலத்தை ஒப்படைத்து விசாரணைகளை முன்னெடுக்க வவுனியா நீதிமன்று உத்தரவிட்டது.
எனினும், குறித்த சிசுவின் உடலை கொண்டு செல்ல வவுனியா வைத்தியசாலையினர் நோயாளர் காவு வண்டியையோ அல்லது வேறு வாகனத்தையோ கொடுக்க மறுத்துள்ளதால் சிசுவின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவில்லை.
பெற்றோர் அதனை தாம் கொண்டு செல்ல முடியாது எனவும் வைத்தியசாலையின் தவறுக்கு அவர்களே கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து சிசுவின் சடலத்தை பொறுப்பேற்கவில்லை.
இதனால் பிறந்து ஒரு நாள் கூட மண்ணில் வாழாத சிசு மரணித்த பின் இரண்டாவது நாளாகவும் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ளது. இது குறித்து பெற்றோர் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.