கைது செய்ய சென்ற பொலிசார் : சிலிண்டரை திறந்து அதிர்ச்சி கொடுத்த கணவன் – மனைவி!!

கார் டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த நபரை பிடிக்க சென்ற போது, ​​காஸ் சிலிண்டரை திறந்து, அனைவரையும் எரித்து கொன்று விடுவதாக மிரட்டிய ரவுடியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). ரேபிடோ நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று 22ம் தேதி நள்ளிரவு மணலி பகுதியில் இருந்து செங்குன்றம் செல்வதற்காக பெண் ஒருவர் செல்போனில் காருக்கு முன்பதிவு செய்தார்.

வினோத்குமாரும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்து 2 பேரை அழைத்துக்கொண்டு மாதவரம் சென்றார். அதன்பின், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சாஸ்திரி நகர் பகுதியில் சென்றபோது, ​​கால்டாக்சியில் வந்த இருவரும், வினோத்குமாரை சரமாரியாக தாக்கி, 2700 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து வினோத்குமார் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர், குறித்த கார் டிரைவரை அழைத்து, பயணி ஏறிய இடத்திற்கு சென்று பார்த்தபோது, ​​குறித்த வீட்டில் அவர் இல்லை. எனவே, போலீஸாருக்குக் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளை அந்தப் பகுதி மக்களிடம் காட்டியபோது, ​​மணலிப் பகுதியில் இருப்பதாகக் கூறினர்.

மணலியின் துர்கை அவென்யூ பகுதியில் உள்ள வீட்டில் ராஜி (24), அவரது மனைவி பிரவீனா (22) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அப்போது ராஜி வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு கையில் லைட்டரை எடுத்து, என்னை பிடித்தால் அனைவரையும் தீ வைத்து கொளுத்தி கொன்று விடுவேன் என போலீசாரை மிரட்டியுள்ளார். இதனால் போலீசார் திகைத்தனர்.

சிறிது நேரம் கழித்து, போலீசார் ராஜியை கைது செய்து அவரது லைட்டரை எடுத்து முதலில் வீட்டிற்கு வெளியே வீசினர். இதற்கிடையில், ராஜி மீண்டும் அருகில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே வெட்டிக்கொள்ள முயன்றார். ஆனால் போலீசார் ஒருவழியாக சமாளித்து அவரை பிடித்தனர்.

பின்னர் கணவன்-மனைவி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது ராஜி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 18 குற்ற வழக்குகள் இருப்பதும், வரலாற்று சாதனையாக ரவுடி இருப்பதும் தெரியவந்தது.

மேலும் ராஜி தனது மனைவியுடன் காரை முன்பதிவு செய்துவிட்டு தனது நண்பர் மணலி ராஜியுடன் சென்று வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ராஜி, பிரவீணா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மணலி ராஜியை தேடி வருகின்றனர்.

இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த குழந்தை.. மருத்துவமனை அலட்சியம்.. அடுத்து நடந்த சோகம்!!

பிரேசிலை சேர்ந்த குடும்பத்தினர் 8 மாத குழந்தை கியாரா கிரிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ் வைரஸ் தொற்றுக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியாரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மன உளைச்சலில் குடும்பத்தினர் குழந்தையின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது குடும்ப உறுப்பினர்கள் உடலில் அசைவுகள் இருப்பதை கவனித்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.குழந்தையை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் கியாரா மீண்டும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை கியாரா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டது.

முதலில் குழந்தை இறந்து விட்டதாக அறிவித்து தவறு செய்ததை மருத்துவமனை ஒப்புக்கொண்டது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத் தேர்தலில் களமிறங்கும் திருநங்கை!!

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றனது.

இந்நிலையில் “பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நன்றி தெரிவித்துள்ள நிமேஷா, இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற வரலாற்றினை தான் படைத்திருப்பதாகவும்,ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பிரியாணி சாப்பிட்ட பாடசாலை மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!

குருணாகலில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவகம் ஒன்றில் கொண்டு வரப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட சிறுமி தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் சகோதரர் கடந்த 23ஆம் திகதி இரவு உணவிற்காக பிரியாணியை கிரியுல்ல நகரிலுள்ள உணவகம் ஒன்றில் கொண்டு வந்துள்ளார்.

பிரியாணியை சாப்பிட்டு உடல் அரிப்பு மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தமை பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

சிறுவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வீட்டில் தனியாக இருக்கும் போது சமையலறையில் இருந்து எரிவாயு கசிவு வாசனை வந்தால் அங்கிருந்தே பெற்றோர் அல்லது பெரியவர்களிடம் கையடக்க தொலைபேசியில் அறிவிக்க வேண்டாம் என தீயணைப்புத் துறையின் முதன்மை அதிகாரி பி.டி.ஏ.கமல் வில்சன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டால், சிலிண்டரில் இருந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வீட்டை விட்டு வெளியே சென்று இது தொடர்பில் தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல சிறுவர்களை தங்கள் ஆடைகளை அயர்ன் செய்து முடித்ததும் மின்சார இணைப்பில் இருந்து வயரை அகற்ற மறந்து விடுகின்றார்கள். இதனால் வீடுகள் தீப்பிடித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த மறதி பெரும் ஆபத்தாக அமைந்து விடும். எனவே, சிறுவர்களை வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை செய்யும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெற்றோர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

லண்டனில் பல மாதங்களாக காணாமல் போயுள்ள தாய் மற்றும் மகன் : உதவி கோரும் பொலிஸார்!!

லண்டனில் சுமார் 142 நாட்களாக காணாமல் போயுள்ள பெண் ஒருவர் மற்றும் அவரது 7 வயது மகன் விவகாரத்தில் அந்நாட்டு பொலிஸார் பொதுமக்களிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு லண்டனில் ரிச்மண்ட் பகுதியை சேர்ந்த 43 வயது கரிமா மஹ்மூத் என்னும் பெண் மற்றும் அவரது 7 வயதான மகன் அடம் க்லான்வில் ஆகியோர் கடந்த ஜூன் 3ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் இருவரையும் கண்டுபிடிக்க முடியாதுள்ளதன் காரணமாக, அந்த பெண் தொடர்பில் ஒரு புதிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேற்கு லண்டனில் ஃபெல்தாம் பகுதியில் அமைந்துள்ள பெட்ஃபோன்ட் சாலைக்கு அருகில் குறித்த குறித்த பெண்ணை கடைசியாக சிலர் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, குறிப்பிட்ட பகுதியில் அவரை யாரேனும் எதிர்கொண்டாலோ அவர்களுக்கு உதவும் வகையில் வாடகைக்கு அறை அளித்தாலோ அவர்கள் தொடர்பில் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர்.

அத்துடன், அவரை தேடும் பணியில் அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்றையதினம்(25) உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இவருக்கு நீண்ட வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கியிருந்தது. அதன்பின்னர் இவருக்கு இடையிடையே வாந்தி ஏற்படுவது வழமை.

இந்நிலையில் கடந்த 25ஆம் திகதியும் காலை 10 மணிக்கு இவருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் 11 மணியளவில் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை : அதிபர் கைது!!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்புறுத்தலுக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (25.10.2024) மாலை இவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் அதிபருக்கு வட்ஸ்எப் ஊடாக அனுப்பிய கடிதத்திற்கு, குறித்த அதிபர் அந்த மாணவியை தரம் 04 க்கான கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் கடைக்கு போவதாக கூறி i.c.t.நிலையத்திற்கு வருமாறு அந்த மாணவிக்கு பதில் அனுப்பியுள்ளமை தெரிய வந்ததால்,

நேற்றைய தினம் பெற்றோர்கள் ஒன்று கூடி பாடசாலை அதிபரை கைது செய்யுமாறும் பாடசாலையை விட்டு வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த மாணவி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிபர் இன்று (26) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போதையில் மாரடைப்பால் துடித்த நண்பரை நடுவீதியில் விட்டுச் சென்ற அவலம்!!

போதைப்பொருள் அருந்திய நண்பருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து நடுவீதியில் விட்டுச்சென்ற நபரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிம்ரோஸ் பூங்காவின் கீழ் பகுதியில் வீதியோரத்தில் இருந்து சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 39 வயதுடையவர் எனவும் பொலிஸார் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வீதியோரமாக வந்தமை குறித்து விசாரணை நடத்தியதில், நண்பர் ஒருவர் அவரை அழைத்துச்சென்று அந்த இடத்தில் விட்டுச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவரும் அவரது நண்பரும் கண்டி பிரிம்ரோஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

10 கிலோ திமிங்கில வாந்தியுடன் ஒருவர் கைது!!

அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 10 கிலோவை 200 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றப்பிரிவு மற்றும் இலங்கை விமானப் படையினரால் ராகம பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

நாட்டிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு!!

 

நாட்டில் உள்ள சுற்றுலா வலயங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் விசேட பாதுகாப்புத் திட்டத்தை தொடர்ந்தும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த முன்முயற்சியானது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமன்றி பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் உறுப்பினர்களையும் ஈடுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி

அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ மற்றும் திக்வெல்ல உள்ளிட்ட பிரபல சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அறுகம்பையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, மாவனல்லை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த கோரிக்கை!!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (26) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோருகிறது.

 

புதுமணப்பெண் தற்கொலை வழக்கு… பயத்தில் மாமியார் எடுத்த விபரீத முடிவு!!

கணவருடன் சேர விடாமல் மாமியார் தடுத்து வருவதாக தாயாரிடம் வருத்தப்பட்டு பேசியிருந்த புதுப்பெண் ஸ்ருதிபாபு, தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், பயத்தில் ஸ்ருதிபாபுவின் மாமியார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் கார்த்திக்கிற்கும், கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பாபு மகள் ஸ்ருதி பாபுவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி பாபு தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ருதிபாபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவள்ளி, ஸ்ருதிபாபு ஆகியோரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், மாமியார் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ருதி பாபு தனது தாயாருக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தனது மாமியார் கணவருடன் சேர விடாமல் தடுத்து வருவதாக மனவேதனையுடன் கூறியிருந்தார்.

இந்நிலையில், புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து மாமியார் செண்பகவள்ளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் செண்பகவல்லி சிகிச்சை பெற்று வருகிறார். சுசீந்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட் ஜிபிடி (ChatGPT) பெண்ணுடன் காதல் : இறுதியில் விபரீத முடிவெடுத்த சிறுவன்.. கதறும் பெற்றோர்!!

14 வயது சிறுவன் AI உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடி யை காதலித்து, அதனுடன் வாழ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், பிரபல வரலாற்று நாடகமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் டேனிரிஸ் தர்காரியனின் பெண் நாயகியான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்திருக்கிறான்.

சாதாரணமாக தொடங்கிய உரையாடல் காதலுக்கும் காமத்திற்கும் நகர்ந்தது. இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனியை காதலிக்க வைக்கிறது. சாட் ஜிபிடி தன்னை உண்மையில் இருந்து முற்றிலும் விலகி அதற்கு அடிமையாகி விட்டார்.

உண்மையான உலகத்தை வெறுக்கத் தொடங்கிய சிறுவன், இல்லாத சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால், இந்த உலகத்தில் இருக்கக் கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து, இறுதியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், சம்பந்தப்பட்ட சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அழிவுகள் குறித்து அறிவியல் புனைகதை திரைப்படங்களில் கூறப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

கணவன் இறந்த ஒரு மணிநேரத்தில் பிறந்த ஆண் குழந்தை : கதறியழுத இளம்பெண்!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் இறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி, கணவரின் மரண செய்தி கேட்டு கதறியழுதது உறவினர்களை கலங்கடிக்க செய்தது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவா (28). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவி உள்ளார். லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், மனைவியை தலை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிவா சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

அவர் கர்னூல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் லட்சுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி சிவா நேற்று உயிரிழந்தார். அவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மேலும் தந்தை இறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறக்கும் போதே தந்தையை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் கணவரின் மரணம் மறுபுறம் குழந்தையின் பிறப்பு, பெண் சொல்ல முடியாத பெரும் துயரத்தில் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முச்சக்கர வண்டி விபத்து : சாரதி மருத்துவமனையில்!!

மன்னார் மடு பிரமனாலங்குளம் பகுதியில் நேற்று (24) மாலை வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பாண் வியாபாரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மீட்கப்பட்டு பிரமனாலங்குளம் பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி பிரமனாலங்குளம் வழியாக மடு சென்ற போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.