இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. நேற்றைய தினம் வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய (25) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 803,011 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 28,330 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 226,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,970 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 207,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,790 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,350 ரூபாவாக பதிவாகியுள்ளது

கொழும்பு செட்டியார் தெரு தங்கத்தின் விலை நிலவரங்கள்
இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 218,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு 201,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 217,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 200,700 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

யாழில் திருமணமான ஒரே வருடத்தில் நிகழ்ந்த சோகம் : மனைவி எடுத்த தவறான முடிவு!!

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். இந்நிலையில் கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் மனைவி பெருமளவான மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு : சோகத்தில் பிரதேசவாசிகள்!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தைஏற்படுத்தியுள்ளது .

இதேவேளை யாழ் வடமராட்சி பகுதியில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அடிக்கடி சுகயீனமுற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .

இந் நிலையில் நேற்றைய தினம் சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

நெல்லியடி செல்லமுத்தூஸ் புடவைக்கடையில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த கரவெட்டி கப்பூது பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் துசிகரன் வயது 34 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

மேலும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார் .

பருத்தித்துறை கூவில் பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் வயது 26 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்களின் தொடர் உயிரிழப்பு வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் எலிகாய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் எலிகாய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கலைவாணி வீதியே துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் (வயது 34) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 32ஆம் திகதி சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். எலிகாய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் கடுமையாகும் சட்டம் : மீறுவோருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை!!

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரின் குடும்பத் தகராறுகள் குழந்தைகளை கடுமையாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தரங்க புகைப்படங்களை உருவாக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இதற்கு தண்டனைச் சட்டத்தின் 286வது பிரிவின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

போலித் தொலைபேசி அழைப்புக்கள் : பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

4 அல்லது 13 எண்களில் தொடங்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி செய்தியினால் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு (SLCERT) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

SLCERT சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல இந்த விடயம் தொடர்பாக பல அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களில் இருந்து நீங்கள் அழைப்பைப் பெற்றால், எந்த சூழ்நிலையிலும் பதிலளிக்க வேண்டாம். நீங்கள் அழைப்பிற்கு பதிலளிக்கும் போது உங்கள் தொலைபேசி உடனடியாக வெடிக்கும்.

இது ஏற்கனவே நடந்தது, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பலர் இறந்துள்ளனர். 13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம், மேலும் இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும் என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து கையடக்கத் தொலைபேசிகள் வெடித்த சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

உற்பத்திக் குறைபாட்டினால் தொலைபேசி வெடிக்கக்கூடும், ஆனால் அழைப்பால் அப்படி எதுவும் ஏற்படாது என்றும், இதுபோன்ற தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

13 அல்லது 4 எண்களில் தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சாதாரண முறையில் கடவுச்சீட்டை பெறுவதற்கு இந்த நாட்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்கள் மட்டுமே திணைக்களத்திற்கு வருமாறு மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் போதுமான கடவுச்சீட்டுகள் உள்ளதாகவும், நவீனமயமாக்கப்பட்டு, வித்தியாசமான முறையில் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி முதல் புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் வெளிப்புற அட்டை நீல நிறத்தில் உள்ளது. முன்பு சிவப்பு நிறமாக இருந்தது.

பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்கள் இருந்த நிலையில், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்கள் மட்டுமே உள்ளன. பழைய கடவுச்சீட்டில் N என்ற எழுத்தும், புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் P என்ற எழுத்தும் காணப்படுகின்றது.

கடவுச்சீட்டின் ஒவ்வொரு பக்கமும் இலங்கையின் நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் காட்டும் வண்ணம் வரையப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும்.

மன்னார் மாவட்டத்திற்கு பெருமையை தேடித் தந்த மாணவி : குவியும் வாழ்த்துக்கள்!!

அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாண இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும்,

அதேவேளை, மகரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை எமது மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும், பெருமையை பெற்றுத்தந்துள்ளார்.

மேலும், குறித்த மாணவி 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதி இளைஞன் மரணம்!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், ஏறாவூர் குடியிருப்புப் பகுதியால் செல்லும்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியைச் சேர்ந்த முஜாகித் எனும் இளைஞரே ரயிலுடன் மோதி மரணமடைந்துள்ளார்.

மேற்படி இளைஞரின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம் : உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்!!

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கலைவாணி வீதி துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 23 ஆம் திகதி சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

யாழ்ப்பணம் போதனை வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(24) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

எலிக்காய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சுற்றுபாதையில் வெடித்து சிதறிய செயற்கைக்கோள்!!

ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங்கினால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் உடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

iS-33e என்னும் செயற்கைக்கோளே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது. குறித்த செயற்கைக்கோளை இயக்குபவர், iS-33e ஆனது மொத்தமாக வெடித்து சிதறியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விரிவான பகுப்பாய்வை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

போயிங், அதன் வணிக விமான வணிகத்தில் வேலைநிறுத்தம் மற்றும் அதன் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சிக்கல்கள் போன்ற பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், செயற்கைக்கோள் உற்பத்தியாளரான போயிங், பிற அரசு நிறுவனங்களுடன் தரவு மற்றும் அவதானிப்புகளை பகுப்பாய்வு செய்ய ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மாமியாரின் இறுதிச் சடங்கிற்காக சென்ற மருமகனுக்கு நேர்ந்த துயரம்!!

மொனராகலை மெதகம வீதியில் பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பகினிகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஆபத்தான நிலையிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தனது மனைவியின் தாயாரின் இறுதிக் கிரியைக்காக அப்பகுதிக்கு வந்துள்ளதாகவும், இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை எடுத்து வருவதற்காக மெதகம நகருக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பல பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!!

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக, நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பஸ்கொடை, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரெலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் குறித்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

முல்லைத்தீவில் இளைஞனுக்கு எமனான நாய்!!

முல்லைத்தீவில், மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த வேளையில், நாய் ஒன்று குறுக்கிட்டு சென்றதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, முல்லைத்தீவு – வெலி ஓயா, கிரிப்பண்ணா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 20ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை நாய் ஒன்று குறுக்கே சென்ற நிலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு விவகாரம் : நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை!!

களனி பல்கலைக்கழகத்தில் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தில் நான்காம் ஆண்டில் கணக்கியல் கற்கை நெறியில் கல்வி கற்கும் பிரின்ஸ் ராஜு பண்டார என்ற 24 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக பல்கலைக்கழக மாணவர் நலன்புரிப் பணிப்பாளரிடம் இருந்து விசாரணை அறிக்கை வரவழைக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கை இன்று (24) பெறப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிபில பிரதேசத்தில் வசிக்கும் இம்மாணவனின் குடும்பத்திற்கு சடலத்தை எடுத்துச்செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாணவனின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக விடுதியில் மாணவரொருவரின் பிறந்தநாளுக்கு விருந்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வருவதாகவும், விடுதியில் முறைகேடு நடந்ததாக தகவல் கிடைத்தால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மாணவனின் மரணம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என களனி பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர் பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கரா மாணவர் விடுதியின் 416ஆம் இலக்க அறையில் அவர் தங்கியிருந்த போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, களனி பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஏ.கே. தேவப்பிரியவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதம இன்ஸ்பெக்டர் ஹேரத்தின் வழிகாட்டலின் கீழ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே உயர்தர பொருளாதாரம் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக ஆசிரியராக பணியாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.

கண்டியில் தோளில் சுமந்து கொண்டு வந்த நண்பன் மரணம் : தப்பியோடிய நபர்!!

கண்டி, பிரிம்ரோஸ் கார்டன் பகுதியின் கீழ் பகுதியில் வீதியில் உயிரிழந்த நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது அல்லவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி பிரிம்ரோஸ் பார்க் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் போதைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது வீட்டிற்கு அருகில் நண்பர் ஒருவருடன் ஹெரோயின் பயன்படுத்தும் போது, ​​தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து, நோய்வாய்ப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக மற்றுமொருவர் தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.

இடைநடுவில் குறித்த நபர் உயிரிழந்தை அறிந்ததும், உயிரிழந்தவரின் சடலத்தை வீதியிலேயே விட்டுவிட்டு நண்பன் தப்பியோடியுள்ளார். தப்பி ஓடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், அவரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.