பாகிஸ்தானில் காரை விட மாடுகளின் விலை அதிகமாம்..!

cowபக்ரீத் பண்டிகையின்போது குர்பானி கொடுப்பதற்காக, பாகிஸ்தானில் ஆடு, மாடுகளின் விலை இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் முன்னணி நிறுவனத்தின் கார் விலையே ரூ.7 இலட்சம் தான். ஆனால், பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக வாங்கப்பட்ட ஆடு, மாடுகளின் விலை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.16 இலட்சம் வரை இருந்தது.

கடைசி நேரத்தில் சந்தையில், ஆடு-மாடுகள் கிடைக்காததால், சில இடங்களில் குர்பானிக்காக வாங்கி வைத்திருந்த கால்நடைகள் திருடப்பட்ட சம்பவமும் நடந்துள்ளன.

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இம்ரான் பர்கத் ரூ.1 லட்சம் கொடுத்து சில ஆடுகளை வாங்கி லாகூர் வாலன்சியா நகரில் உள்ள தனது வீட்டில் கட்டி இருந்தார்.

ஆனால், இரவோடு இரவாக அந்த ஆடுகளை யாரோ திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பான தகவல்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பாகி வந்தன.

விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சில ஆடுகள் ஸ்பிரைட் குளிர்பானம் குடித்ததையும், பான் பீடா மென்ற காட்சிகளும் தொலைக்காட்சி செய்தியில் இடம்பெற்றிருந்தன.

அவற்றில் ஒரு ஆட்டின் விலை ரூ.6 லட்சம் என்றும், அதிகபட்சமாக ஒரு எருமை மாட்டின் விலை ரூ.16 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கால்நடைகள் உங்கள் வீடு தேடி வரும் என்ற விளம்பரங்களுடன் இணைய தளம் மூலமான வர்த்தகமும் இந்த ஆண்டு பாகிஸ்தானில் கொடி கட்டிப் பறந்தது.

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் மட்டும் 70 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சம் வரையிலான கால்நடைகள் குர்பானி கொடுக்கப்பட்டதாக, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவம் பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் – இராணுவத் தளபதி..!

imgநாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க, பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும் போது எமக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டனர்.

அத்துடன் இராணுவத்தினரை நோகடிக்கும் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தனர். அப்போதெல்லாம், எமது இராணுவத்தினர் மிகவும் அமைதியாகவும் பக்குவமாகவும் செயற்பட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, எமது இராணுவத்தினர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு நாட்டுக்கான பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தனர் என ஜெனரல் தயா ரத்நாயக்க சுட்டிக் காட்டினார்.

இதன் பின்னர் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தோல்வியடைந்தது. மக்களுக்காக இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்த போதிலும் அரசுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

ஆனால் நாம் அரசியலுக்கு அப்பால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளோம் என்பதில் பெருமையடைகின்றோம் என இராணுவத் தளபதி கூறினார்.

தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறான நிலை ஏற்பட்டு நாடு பிளவுபடும் நிலைமை தோன்றினால் எமது இராணுவம் அதனைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

காதல் போட்டியால் நடந்த கொடூர கொலை!!

murder

மாணவியை காதலிக்கும் போட்டியில் ஹோட்டல் ஊழியர் ஒருவரை அவரது நண்பனே தீர்த்துக்கட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரமேரூர் பழைய மருத்துவமனை சாலையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சதீஷ்குமார்(22). சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.

இதனைத் தொடர்ந்து இவரது தந்தை பெருமாள் கொடுத்த புகாரின்படி, காஞ்சிபுரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் கடந்த 5ம் திகதி உத்திரமேரூர் வளத்தோட்டம் பாலாற்று மேம்பாலத்துக்கு கீழ் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு விசாரித்ததில் இறந்து கிடந்தது சதீஷ்குமார் என தெரியவந்ததைத் தொடர்ந்து விசாரணையை தீவிரபடுத்தினர்.

இதில் சதீஷ்குமாருடன் காஞ்சிபுரம் ஹோட்டலில் வேலை செய்து வந்த காஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த சண்முகம்(19) மற்றும் 2 பேரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்ததில் 3 பேரும் சதீஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து குற்றவாளிகளில் ஒருவரான சண்முகம் அளித்துள்ள வாக்குமூலத்தில் சதீஷ்குமார் என்னிடம் பணம் வாங்கி ஏமாற்றி வந்தான். மேலும் 10ம் வகுப்பு மாணவியை சதீஷ்குமார் காதலித்தான். நானும் அவளை காதலித்தேன் ஆனால் அவள் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சதீஷ்குமார் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். அதன்படி கடந்த 5ம் திகதி இரவு மது வாங்கி தருவதாக சதீஷ்குமாரை வளத்தோட்டம் பாலாற்று பகுதிக்கு அழைத்து சென்றோம்.

அங்கு மது அருந்திய பின்னர் கத்தியால் சரமாரியாக சதீஷ்குமாரை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினோம் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பின்பு சண்முகத்தை சைதாப்பேட்டை சிறையிலும், மற்ற இருவரையும் புரசைவாக்கத்தில் உள்ள காப்பகத்திலும் பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.

மருத்துவமனையால் 38 வருடங்களாக பைத்தியமாகப்பட்ட நபர்!!

AFP6E1

ஜேர்மன் நாட்டில் சுமார் 38 வருடங்களாக மனநோயால் பாதிக்கப்படாத நபர் ஒருவருக்கு மருத்துவம் பார்த்துவந்த மருத்துவமனையில் தவறான செயல் அம்பலமாகியுள்ளது.
ஜேர்மனில் வெட்லிபாலியா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 18 வயது நபர் ஒருவர் டரிட் சின்ட்ரோம் காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சிகிச்சை அளித்துவந்தனர். தற்போது 56 வயதை அடைந்துள்ள அந்த நபரின் உடல்நலக்குறைபாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை மாறாக மோசமான நிலையிலேயே உள்ளார்.

மேலும் அந்த நபரால் பிறரின் துணையில்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் மனநோயால் பாதிக்கப்படாத இந்த நபருக்கு தவறான மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர் இவால்ட் ரான் கூறுனையில் நாங்கள் அவருக்கு சிகிச்சை அளித்தது சம்பந்தமான பதிவுகள் அனைத்தும் எங்களிடம் இருக்கிறது என்றும் ஆனால் இதனை அந்நோயாளியின் சட்டத்தரனி ஏற்க மறுக்கிறார் எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நோயாளியின் சட்டத்தரனி ஸ்டீபன் மற்றும் அவரது துணை சட்டத்தரனி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டதில் அந்நோயாளி நீண்ட நாட்கள் குளிக்காமல் இருப்பதும் இன்னும் அவரது நிலைமை மோசமடைந்துள்ளதையும் பார்வையிட்டுள்ளனர்.

என்னை காப்பாற்றுங்கள் : இந்தியாவில் கதறும் ரஷ்ய விலைமாது!!

rasia

ரஷ்ய நாட்டை சேர்ந்த விலை மாது ஒருவரை இந்தியர் ஒருவர் சிறை வைத்துள்ள சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
சண்டிகரில் உள்ள பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் தொடர்புகொண்டு பேசிய பெண்ணொருவர் கூறுகையில், நான் ஒரு விலை மாது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த எனக்கு கிரண் என்பவரது தொடர்பு ஒருவாரம் முன்பு கிடைத்தது. கிரண் இங்கு பாலியல் தொழில் செய்துவருகிறார். அவர் வற்புறுத்தலின் பேரில் 36 நபர்களுடன் உறவு கொண்டேன்.

ஆனால் கிரண் 34 வாடிக்கையாளர்களுக்கான தொகையை மட்டுமே கொடுப்பேன் என்றும் வாடிக்கையாளர் ஒருவருக்கு 1500 கொடுப்பதாக கூறினார். இதனால் நான் முழுத் தொகையையும் கேட்டவுடன் என்னை சிறை வைத்துள்ளார். எனவே என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பிறந்த மண்ணிலேயே கடைசி டெஸ்ட் : நிறைவேறிய சச்சின் விருப்பம்!!

sachinஇந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் பிறந்த மண்ணான மும்பையிலேயே அவரது 200வது டெஸ்ட் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

இந்தியா செல்லவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் (நவம்பர் 14-18) போட்டியுடன் சச்சின் ஓய்வு பெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து இன்று மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அட்டவணை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியை (நவம்பர் 6-10) கொல்கத்தாவில் நடத்தவும்.

சச்சின் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி 200வது டெஸ்ட் போட்டியை, அவரது சொந்த ஊரான மும்பையில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர இப்போட்டியுடன் விடைபெறும் சச்சினுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் பி.சி.சி.ஐ சார்பில் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ரணில் ஒப்புக்கொண்டார்!!

Ranil

கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக் கொண்டதாக தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்குள் கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரணில் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

அதி உயர் பீடமொன்றை அமைத்து அதன் மூலம் கட்சியை வழிநடத்துவதாக பௌத்த பிக்குகளிடம் ரணில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

sex workers

இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்.ஐ.வீ. தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் 35,000 முதல் 40,000 பெண் பாலியல் தொழிலாளிகள் சேவையாற்றி வருகின்றனர்.

பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எயிட்ஸ் நோய் அதிகம் பரவும் ஐந்து நாடுகளின் வரிசையில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு ரகசிய திருமணம் நடக்கவில்லை : சமந்தா!!

Samanthaசித்தார்த்துக்கும், சமந்தாவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது.

தெலுங்கு படமொன்றில் சமந்தாவும், சித்தார்த்தும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக செய்தி வெளியானது. கோவில்களுக்கு குடும்பத்தினருடன் ஜோடியாக சென்று சாமி கும்பிட்டும் வந்தார்கள். இதுகுறித்து சமந்தாவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது..

என் திருமணம் பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக எழுதுகிறார்கள். ஒருவருடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதாகவும் கூறுகிறார்கள்.

இது உண்மையல்ல. நான் ஏன் ரகசிய திருமணம் செய்து கொள்ள வேண்டும். இப்போது என் திருமணம் நடக்காது. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் நடக்கும் போது அதை எல்லோருக்கும் தெரிவிப்பேன்.

தெலுங்கு படங்களில் அடுத்த வருடம் முதல் நடிக்கமாட்டேன். சில தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். தெலுங்கில் நடித்த படம் ஒன்று இந்த மாதம் ரிலீசாக உள்ளது.

அதன் பிறகு புது தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தம் ஆகவில்லை. என் கரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கிறேன். கதை நன்றாக இருந்தால் நடிப்பேன். சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. பீட்சா படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி உள்ளது என்று சமந்தா கூறினார்.

தியாகுவின் போராட்டம் முடிவுக்கு வந்தது!!

thiyaguபொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

14 நாட்களாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். உடல் நலிந்த நிலையில் அவர் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் உட்பட பலர் அவரை சந்தித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள தியாகுவும் மாலையில் பழ இரசம் அருந்தி தனது உண்ணாநிலை போராட்டத்தினை முடித்துக்கொண்டார்.

பட்டினியில் இலங்கை 43வது இடம் !!

patini

2013 பட்டினி சுட்டியில் இலங்கை 43 வது இடத்திலுள்ளதுடன் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இந்தியா 2012ம் ஆண்டு உலக பட்டினிச் சுட்டியில் 67ம் இடத்திலிருந்து 2013ம் ஆண்டு 63ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 40 வீதமானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை. சீன, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கீழேயே இந்தியா உள்ளது. உலக பட்டினி சுட்டியில் சீனா, பட்டினி மட்டத்தில் 6ம் இடத்தில் உள்ளது. இலங்கை 43 ஆவது, பாகிஸ்தான் 57வது, பங்களாதேஷ் 58 வது இடங்களை பெற்று கடுமையான பட்டினி மட்டத்திலிருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த சுட்டி 120 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டினி மட்டத்தை காட்டுகின்றது. இந்த சுட்டியை தயாரிக்கும் போது மந்த போஷனை உடையோரின் விகிதாசாரம், ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் நிறை குறைந்த பிள்ளைகளின் விகிதாசாரம், ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் மரண வீதம் ஆகிய மூன்றும் சம அளவில் கருத்தில் எடுக்கப்பட்டன.

இதுவரை வெளியிடப்பட்ட பட்டினிச் சுட்டி அறிக்கையின்படி, 19 நாடுகள் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலையில் தீக்குளித்த 6ம் வகுப்பு மாணவி!!

Fire girl

தமிழ்நாடு, காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் திடீரென தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருபவர் சினேகா. இவர் நேற்று காலை பள்ளிக்கூட இடைவேளையின்போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து மாணவியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் ஏன் தீக்குளித்தார் என்பதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

அனுஷ்காவை வெட்கப்பட வைத்த பாடல்!!

anuska

தமிழில் நான் ஈ படத்தை இயக்கிய ராஜமௌலி தெலுங்கில் இயக்கி வரும் படம் ராணி ருத்ரம்மா தேவி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் ராணி ருத்ரம்மா தேவி வேடத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகளில் அதிரடிக் காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். இந்த காட்சிகளில் நடிப்பதற்காக ஆயுதம் மற்றும் தற்காப்பு கலைகளை கற்று, நடித்து வந்தார் அனுஷ்கா. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பாடல் மற்றும் கிளுகிளுப்பான காட்சிகளை படமாக்கி வருகிறார் ராஜமௌலி.

இதற்காக பிரம்மாண்ட அரண்மனை போன்று அரங்கு போடப்பட்டு, அதில் அனுஷ்கா ஆடிப்பாடும் அந்தப்புர பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் கவர்ச்சி மிகுதியாகவும், அதேவேளையில் தத்ரூபமாகவும் இருப்பதற்காக ஆடைகளை குறைத்து நகைகளை மட்டுமே கொண்டு உடம்பை மறைத்தபடி காட்சியை படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இந்த காட்சியை படமாக்கும்போது ஒட்டுமொத்தப் படக்குழுவும் நின்று அனுஷ்காவின் அழகை வேடிக்கை பார்த்ததால் வெட்கத்தில் கூனிக்குறுகி போய்விட்டாரம் அனுஷ்கா. அந்த காட்சியில் நடிக்க ரொம்பவே தயக்கம் காட்டினாராம்.

அதன்பிறகு இயக்குனர் வேடிக்கை பார்த்த படக்குழுவினரை வெளியே அனுப்பிவிட்டு இயக்குனர், கமராமேன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே அந்த காட்சியை படமாக்கினார்களாம். அதன்பிறகு அந்த பாடல் காட்சியில் தைரியமாக நடித்தாராம் அனுஷ்கா.

அங்கங்களை இழந்தவர்களுக்கு முல்லைத்தீவு வைத்தியசாலையில் கட்டடத் தொகுதி : சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம்!!(படங்கள்)

யுத்த காலத்தில் தமது அங்கங்களை இழந்தவர்களுக்கு வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதியில் பிரத்தியேக பகுதியில் விசேட இணைப்பை ஏற்படுத்துவதுடன், சுகாதாரக் குறைபாடுகளை குறைப்பதற்கு எம்மால் முடிந்தவரை பணியாற்றுவது உறுதி என்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், தனது முதல் விஜயமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று, வடமாகாண சபையின் துணை அவை முதல்வரும் புனர்நிர்மாணம், மக்கள் இணக்கப்பாடு, மீள் குடியேற்றம் அமைச்சருமாகிய அன்ரன் ஜெயநாதனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் அருட்தந்தை மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், மக்கள் என பலரையும் சந்தித்த வடமாகாண சுகாதார அமைச்சர்,

வடக்கில் என்றும் எம் மனக்கண் முன் இருப்பது முல்லை மண். தமிழர்களின் வீரம் நிறைந்த போராட்டத்திற்கு இன்று வரை உலக கடைசி எல்லை வரை தமிழ் இனத்தை தூக்கிச் சென்ற உன்னத நிலம். இதனை யாரும் மறக்கவில்லை.

அந்த வகையில் மதிப்புக்குரிய ஜெயநாதன் ஐயாவிற்கு வழங்கிய அமைச்சுக்களுக்கு அப்பால் ஏனைய நான்கு அமைச்சுக்களும் தமது முழு பார்வையையும் இந்த மாவட்டத்தையே குறிவைத்துள்ளனர். நான் கூட எனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் எனது உத்தியோக விஜயம் கூட இங்கு தான் மேற்கொண்டுள்ளேன்.

அன்மையில் கூட மற்றய எம் சக அமைச்சர் கூட இங்கு வந்திருந்தார். இவ்வாறாக இழப்புக்கள் ஈடு செய்ய முடியாததாயினும் எம்மால் முடிந்த வரை எமது பணி தமிழர் தாயகம் எங்கும் பாகுபாடின்றி தொடரும்.

குறிப்பாக யுத்த காலத்தில் தமது அங்கங்களை இழந்த எம் உறவுகட்கு வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதியில் பிரத்தியேக பகுதியில் விசேட இணைப்பை ஏற்படுத்துவதுடன் சுகாதாரக் குறைபாடுகளை குறைப்பதற்கு எம்மால் முடிந்தவரை பணியாற்றுவது உறுதி என்ற சுகாதார அமைச்சர் உங்கள் குறைகளை மதிப்புக்குரிய ஜெகநாதன் மூலம் தெரியப்படுத்தலாம் எனவும் குறிபிட்டார்.

12 3 4 5 6 7 8

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தங்கமீன்கள் தேர்வு!!

thanga_meengal

கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறியப்பட்டவர் ராம். இவர் சமீபத்தில் நடித்து இயக்கி வெளிவந்த படம் தங்கமீன்கள். இப்படம் தந்தை-மகளுக்கிடையே உள்ள பாச உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. வெளியிட்ட இடங்களில் எல்லாம் இப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் ஒரே ஒரு தமிழ்ப்படம் தங்க மீன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 18வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் தங்க மீன்கள் படத்தை குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் மற்ற உலகப் படங்களோடு திரையிடத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் தங்கமீன்கள் படம் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டத்தில் இயக்குனர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் மற்றும் தயாரிப்பை ஒருங்கிணைத்த கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மல்லிகா ஷெராவத்துக்கு விரைவில் திருமணம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாப்பிள்ளையை தேர்வு செய்தார்!!

Mallika Sherawat

இந்திப்பட உலகின் கவர்ச்சி கன்னியாக பரபரப்பாக பேசப்படுபவர் நடிகை மல்லிகா ஷெரவாத். அரியானா மாநிலத்தின் ஜாட் குடும்பத்தில் பிறந்த மல்லிகா மும்பையில் மொடலிங் தொழில் செய்தார். தொலைக்காட்சி மற்றும் சினிமா படங்களில் கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

மணிரத்தினத்தின் குரு படத்தில் மையா மையா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன்பிறகு கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் கலாசலா சலசலா என்ற பாடலுக்கும் நடனம் ஆடினார்.

லைப் ஓ.கே என்ற ஆங்கில தொலைக்காட்சியில் மாப்பிள்ளை தேடும் வித்தியாசமான நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. இதில் நடிகை மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டார். அவரை மணக்க விரும்பும் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களிடம் மல்லிகா ஷெராவத்தை விரும்பும் காரணங்கள் பற்றி விளக்கங்கள் கேட்கப்பட்டன. அவர்களுக்கான தகுதி திறமை போட்டியும் நடந்தது.

இறுதியில் 15 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர். இதில் ஜாஷன் சிங் என்பவர் மல்லிகாவை கரம் பிடிக்க விரும்பினார். சினிமா நடிகையாக மட்டுமல்லாது மற்ற விஷயங்களிலும் அவரை பிடித்து இருப்பதாக கூறினார்.

ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதமான காரணங்களை தெரிவித்தனர். முடிவில் ஒரு போட்டியாளர் பிடித்துப் போய்விடவே அவரை தனது வாழ்க்கை துணையாக மல்லிகா ஷெராவத் தேர்வு செய்தார். அவரை மணக்கவும் மல்லிகா ஷெராவத் சம்மதித்தார்.

நேற்று இந்நிகழ்ச்சி லைப் ஓ.கே சனலில் ஒளிபரப்பானது. இது தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றாலும் உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியாகும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளரை மல்லிகா ஷெராவத் விரைவில் மணக்க இருக்கிறார்.