அஜித்தின் ஆரம்பம் படமாக்கப்பட்ட காட்சி.!!(வீடியோ)

அஜித், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..

பவர் ஸ்டாரை கழற்றிவிட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணி!!

santhanam

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடித்த சந்தானம், சேது, விஷாகா ஆகிய மூவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு வாலிப ராஜா என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராகவும், சேது டிசைனராகவும், விஷாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாகவும் வருகிறார். மேலும் இப்படத்தில் பொலிவுட் நடிகை நுஸ்ரத் என்பவரும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். சென்னை, பாண்டிச்சேரியில் இதுவரை 26 நாட்கள் படமாக்கியுள்ளனர். இன்னும் மதுரை, குற்றாலம் ஆகிய இடங்களுக்கும் சென்று மீதி படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட கூட்டணி என்று சொன்னாலும் அந்த படத்தில் நடித்த பவர் ஸ்டார் சீனிவாசன் இந்த படத்தில் நடிக்கவில்லை. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் வெற்றிக்கு பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒரு காரணமாக இருந்தவர். அதன்பிறகு, பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்றதால், இந்த படத்தில் இருந்து அவர் கழற்றி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் சபையின் உறுப்பினரான கல்பாத்தி எஸ்.அகோரம்!!

kalpathi

2006ம் ஆண்டு வெளியான திருட்டு பயலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால்பதித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மண்ட். இதன் உரிமையாளர் கல்பாத்தி எஸ்.அகோரம்.

இவர் தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மதராச பட்டணம், எங்கேயும் காதல், யுத்தம் செய், அவன் இவன், மாற்றான் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பு மட்டுமின்றி கந்தக்கோட்டை, மைனா, பயணம் உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

இவ்வாறு திரைப்படத் துறையில் முத்திரை பதித்த கல்பாத்தி எஸ்.அகோரம் சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இந்திய கிரிக்கெட் சங்கத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் தற்போது ஜெய் நடிப்பில் உருவாகி வரும் நவீன சரஸ்வதி சபதம், தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன்’ உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகிறது.

நரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா?

white hair

பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.

இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும் அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.

அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர்.

ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும்.

இங்கு அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இஞ்சி

நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பசை போல் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

செம்பருத்தி

வாரத்திற்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

மருதாணி

விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் மருதாணி பொடியை தூவி கெட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்காப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.

கறிவேப்பிலை

நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர். அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் தலைமுடியை அலச வேண்டும்.

தயிர்

தயிர் மற்றும் மருதாணியை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் நரை முடி மறையும்.

வெங்காயம்

வெங்காயத்தை சாறு எடுத்து அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

மிளகு

நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அந்த நீரை தலைமுடியில் ஊற்றி மசாஜ் செய்து, பின் முடியை அலச வேண்டும்.

நெல்லிக்காய்

தலைமுடியை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம்.

தேநீர்/கோப்பி

தேநீர்/கோப்பி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி. அதற்கு தேநீர்/கோப்பியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

பொதுநலவாய மாநாட்டை நடத்த இலங்கைக்கு தகுதி இல்லை : ரணில் விக்ரமசிங்க!!

Ranil

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியா பொதுநலவாய விழுமியங்களை மீறி வருவதால் எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு இலங்கைக்கு தகுதி இல்லை என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அதனால் பொதுநலவாய மாநாடு தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவித்திருக்கிறார்.

சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு, சுதந்திரமான நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் பொதுச் சேவைக்குழு ஆகியன இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பொதுநலவாய கண்காணிப்புக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் அதுபற்றி அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சுயாதீனமான பொலிஸ் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுக்கள் இல்லாதபடியாலேயே நாட்டில் அரசியல் ரீதியான கைதுகள் நடப்பதாகவும் கூறிய ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீரவின் கைது நடவடிக்கை ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் பொதுநலவாய தலைவர்கள் மாநாடு நடாத்துவது நகைப்பிற்குரியது எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

வவுனியாவில் பௌத்த மதகுருவால் 12 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!

StopChildAbuse

வவுனியா அட்டமஸ்கடவில் பௌத்த மதகுருவால் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த 12 வயதுடைய சிறுவனொருவன் அப் பகுதியியல் உள்ள பௌத்த விகாரையொன்றின் பௌத்த மதகுருவினால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட் நிலையில் அச் சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா அட்டமஸ்கட பகுதியில் உள்ள விகாரையொன்றின் விகாராதிபதியால் நடத்தப்பட்டு வந்த சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுவனொருவன் நீண்ட நாட்களாக ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அச் சிறுவன் சிறுநீர் கழிப்பதற்கு சிரமப்பட்டமையினால் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் அச் சிறுவனுக்கு விகாராதிபதியினால் நீண்ட நாட்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையினால் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ள்ளதுடன் சிறுவனின் தாயாரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை சம்பந்தப்பட்ட பௌத்த குரு கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேற்படி விடயம் தொடர்பாக தகவல்களை தெரிவிப்பதற்கும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தயக்கம் காட்டிவருகின்றனர்.

இச் சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்தபோதிலும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளோ சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகளோ பௌத்த மதகுருவிற்குள்ள செல்வாக்கு காரணமாக நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியா திரும்பிய திரு.ஜி.ரி.லிங்கநாதனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு (படங்கள்).!

வடமாகாண சபைக்கு வவுனியாவில் இருந்து தேர்வாகிய திரு.ஜி.ரி.லிங்கநாதன், நேற்றைய தினம் யாழ்ப்பணத்தில் வைத்து புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் இணைந்து சத்தியப்பிரமானம் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தனது  சொந்த ஊரான வவுனியாவடக்கின் கற்குளம், பட்டிக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிற்கு விஜயம் செய்தார்.

இதன்போது கிராம மக்கள் கிராமங்களில் பொது மக்களால் திரு.ஜி.ரி.லிங்கநாதனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

12 3 4 5

19 நாட்களாக பல்லி, அணில்களை சாப்பிட்டு உயிர் பிழைத்த வேட்டைக்காரர்!!

hunter

காட்டுக்குள் 19 நாட்களாக பல்லி மற்றும் அணில்களை சாப்பிட்டு வேட்டைக்காரர் உயிர் பிழைத்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்தவர் ஜெனி பெனாப்ளோர். வேட்டைக்காரரான இவர் கடந்த மாதம் மென்டோசினோவில் உள்ள நேஷனல் வனப் பகுதிக்கு தனது நண்பருடன் வேட்டைக்கு சென்றார்.

இவர் மட்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு வேட்டையாட சென்றபோது கீழே தவறி விழுந்தார். எனவே தலையில் பலத்த அடிபட்டதால் நீண்டநேரம் மயக்கமடைந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் தனது நண்பரை பிரிந்தார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது இரவு வந்துவிட்டது. எனவே காட்டிலேயே தங்கிவிட்டார். வீடு திரும்ப முயன்றபோது வழி தவறி வேறு பாதையில் சென்றுவிட்டார்.

காட்டுக்குள் பல நாட்களாக சுற்றி திரிந்த அவர் அங்கிருந்த பாம்பு, பல்லி மற்றும் அணில்களை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார். காட்டில் கிடைத்த பழங்களை தின்றும், ஆற்று நீரை குடித்தும் வந்தார்.

ஒருநாள் காட்டுப் பகதியில் ஹெலிகப்டர் பறப்பதை பார்த்தார். அவர்களிடம் உதவி கேட்க புகை மூலம் சிக்னல் கொடுத்தார். அதை யாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே வனப்பகுதிக்குள் மாயமான அவரை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து 19 நாட்களுக்கு பிறகு அவரை மீட்டனர். அப்போது அவர் உடல்நலம் பாதித்த நிலையில் மிகவும் பரிதாபமாக இருந்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உலக அதிசய காதல்களில் இவா்களும் இடம் பிடித்தனர்!!

love

இரு வருடங்களுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எரின் எனும் இளைஞனும் சிறுவனாக பிறந்து பெண்ணாக மாறிய யுவதியும் இப்போது காதலர்களாக விளங்குகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்தவர். அவருக்கு லுகே என பெற்றோர் பெயரிட்டிருந்தனர். தான் பெண் தன்மையுடன் இருப்பதை உணர்ந்த அவர் ஒரு வருடத்துக்கு முன்னர் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார்.

இதேவேளை அமெரிக்காவைச் சேர்ந்த எரின் எனும் 17 வயது இளைஞன் பெண்ணாக பிறந்தவர். எமரல்ட் எனப் பெயரிடப்பட்டிருந்த இவர், பின்னர் சத்திரசிகிச்சை மூலம் ஆணாக மாறினார்.

இரு வருடங்களுக்கு முன்னர் முதல் தடவையாக சந்தித்த இவ்விருவரும் தற்போது காதலர்களாக உள்ளனர். கடந்த மாதம்தான் எரினின் மார்பகங்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்கள் ஏனைய அமெரிக்க ஜோடிகளைப் போன்று தற்போது கடற்கரைகளில் நீந்துவதுடன் படகுச்சவாரியிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். தனக்கு கம்பீரமான ஆணாக எரின் தெரிகிறார் என்கிறார் கெத்தி.

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மானம்பூ திருவிழா!!(படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் மானம்பூ திருவிழா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்றது விஜய தசமி நாளன்று இடம் பெறும் இந் மானம்பூ திருவிழா மகிடாசூரனை துர்க்கை வதம் செய்ததை நினைவு படுத்துகின்றது.

சிறப்பாக நடைபெற்ற இத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

2 3 4 5 6 7 8 9

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க வவுனியாவிற்கு விஜயம்!!(படங்கள்)

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னிக் கட்டளை தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை, வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து வன்னிக் கட்டளைத் தலைமையகத்தின் நுழைவாயிலை உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதி திறந்துவைத்ததுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். , வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இராணுவ வீரர்களுடனான சந்திப்பின் போது அவர் உரை யாற்றுகையில்..

சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும் போது எமக்கு எதிராக நடவடிக்கையை சிலர் மேற்கொண்டதுடன் எமது இராணுவத்தினரை மிகவும் நோகடிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர். அப்போதெல்லாம் எமது இராணுவத்தினர் மிகவும் அமைதியாகவும் பக்குவத்துடனும் செயற்பட்டனர் என்றார்.

அதன் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது எமது இராணுவத்தினர் மிகவும் சிறப்பாக செயற்பட்டு நாட்டுக்கான பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தனர். இவ்வாறான நிலையில் நாம் எம்மிடம் சரணடைந்த விடுதலைப் புலிகஇளுக்கு சிறப்பான புனர்வாழ்வை கொடுத்துதவினோம்.

அப்போதெல்லாம் நாம் எவ்வாறு புனர்வாழ்வை வழங்கப் போகின்றோம் என பார்த்தனர். ஆனால் நாம் எவரும் எதிர்பாராத வகையில் மிகவும் சிறப்பான முறையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவர்களுக்கான புனர்வாழ்வை அளித்து அவர்களை மீண்டும் சமூகத்தில் இணைத்தோம் என்று குறிப்பிட்டார்.

எமது இராணுவத்தினர் மக்களுக்கான தமது சேவைகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வந்தனர். மக்களுக்கு தேவையான பல உதவிளையும் வழங்கினர். இதன் பின்னர் வட மாகாண சபை தேர்தலின் போது அரசாங்கம் தோல்வியடைந்ததை அடுத்து மக்களுக்காக இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்த போதிலும் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

ஆனால் நாம் அரசியலுக்கு அப்பால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளோம் என்பதில் பெருமைப்படுகின்றோம். அந்த வகையில் எமது சேவை தொடர்ந்தும் மக்களுக்காக இடம்பெறும். ஆனால் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரை சீண்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது.

அவ்வாறான நிலை ஏற்பட்டு எமது நாட்டை பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால் எமது இராணுவம் அதனை தடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
இதேவேளை இராணுவத்தினருக்கு மத்தியிலும் சூழ்ச்சிகளை ஏற்படுத்த சிலர் முற்படுவர். எனவே அனைவரும் விழிப்பாக செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் எமது இராணுவத்தில் தேகாரோக்கியம் முக்கிய விடயமாகும். சிலர் பெருத்த வயிறுடன் காணப்படுகின்றனர். அவ்வாறானவர்கள் எமக்குள் இருந்தால் பதவியுயர்வுகள் கிடைக்காது. திடகாதிரமானவர்களாக உள்ளவர்களே சிறந்த நிலைக்கு செல்லமுடியும்.

அத்துடன் எமது இராணுவத்தினர் தமிழ், சிங்களம். ஆங்கிலத்தை கற்க வேண்டும் என்பதுடன் எமது இராணுவத்தினர் சிறந்த கல்விமான்களாக உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம் எனவும் இராணுவ தளபதி மேலும் கூறினார்.

61 2 3 4 5 7

மங்கள சமரவீர பிணையில் விடுதலை!!

mangala

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸாரால் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மங்கள சமரவீர 1 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மங்கள சமரவீரவுடன் பொலிஸில் ஆஜரான மேலும் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில் மங்கள சமரவீரவுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இருப்பின் அவர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் தனது சட்டத்தரணியுடன் சென்று இன்று மாத்தறை பொலிஸில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைத்தலின் காரணமாக இலங்கையில் வருடத்திற்கு 20,000 பேர் உயிரிழப்பு!!

AntiSmokingCampaigns1

புகைத்தலின் காரணமாக வருடம் ஒன்றிற்கு 20 000 பேர் வெவ்வேறுபட்ட நோய்களுக்கு முகங்கொடுத்து உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாள் ஒன்றிற்கு1000 பேர் வெவ்வேறுபட்ட நோய்த்தாக்கங்களுக்கு உட்பட்டு உயிரிழக்கும் அதேவேளை இதில் 60 வீதமானவர்கள் தொற்றா நோய்களின் காரணமாக உயிரிழப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த 60 வீதமானவர்களில் அநேகர் புகைத்தலினால் ஏற்படும் நோய்களின் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் சுட்டிக் காட்டினார். புகைத்தலினால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் பல நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 150 லட்சம் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பெருந்தொகை பணம் செலவிடப்பட்ட போதும் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொலன்நறுவை, அரலங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

ஈழக் கனவை நனவாக்க படிப்படியாக முன்னேறுகிறது கூட்டமைப்பு : முஸாம்மில்!!

mussamil

புதிய ஈழத் திட்டம் படிமுறை படிமுறையாக முன்னோக்கிச் செல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் கண்டுபிடித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தனது கண்டுபிடிப்பு பற்றி கருத்து வெளியிட்டார்.

பிரிவினைவாத அதிகாரத்துடன் வடக்கு ஆட்சியை கைப்பற்றிய கூட்டமைப்பு ஈழக் கனவை நனவாக்கிக் கொள்ளவென செயற்படுகிறது.

அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கை தற்போது பிரிந்து இருக்கும் வடக்கு, கிழக்கை ஒன்றிணைப்பதாகும். இதனை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.

உள்நாட்டில் சுயாட்சி வழங்கப்படாவிட்டால் சர்வதேச ஆதரவுடன் அதனைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனவே கூட்டமைப்பினர் தமது இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேறிச் செல்கின்றனர். இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார்.

அஜித்தின் ஆரம்பம் படத்தை வெளியிட தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

Aarambam

அஜித், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் படத்தை தீபாவளிக்கு முன்னதாக அக்.31ம் திகதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் ஆரம்பம் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பி.அனந்த கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். அவர் அளித்துள்ள மனுவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு கடந்த 2005ம் ஆண்டு கேடி என்ற படத்திற்காக 1 கோடியோ 50 லட்சம் பைனான்ஸ் செய்துள்ளதாகவும் அதை அவர் திரும்பத் தராததால் தற்பாது அவர் தயாரித்துள்ள ஆரம்பம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் ஏ.எம்.ரத்னமோ இந்த படத்தின் தயாரிப்பாளார் நான் இல்லை என்றும் ஏ.ரகுராம் என்பவர்தான் சத்ய சாய் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கிறார் என்றும் பதில் அளித்துள்ளார்.

டுவிட்டர், பேஸ்புக்கில் நடிகைகளை கேவலப்படுத்துகின்றார்கள் : சுவாதி!!

Swathi

நடிகர், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி கணக்குகளை ஆரம்பித்து ரசிர்களுடன் சிலர் தொடர்பு வைத்து பேசி வருகிறார்கள். ரசிகர்களும் இந்த போலிகளை உண்மை என நம்பி உரையாடுகின்றனர். அத்துடன் நடிகைகள் பற்றி இழிவான கருத்துக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு நடிகை சுவாதி கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது..

டுவிட்டர், பேஸ்புக்கில் நான் இல்லை அதில் நடிகைகளை அசிங்கமாக சித்தரிக்கிறார்கள். கேவலமான கேள்விகள் கேட்கிறார்கள். கருத்துக்களையும் வெளியிடுகிறார்கள். அவர்களோடு உரையாட நான் தயார் இல்லை. என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அதில் பகிர்ந்து கொள்ளவும் விருப்பம் இல்லை.

நான் எப்போதும் போனில் கிடைக்கிறேன். எது பற்றியும் போனில் பேசலாம். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தேன். அதில் என் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டுகிறார்கள். அடுத்து ஜெய் ஜோடியாக வடகறி படத்தில் நடிக்கிறேன். இதில் எனக்கு நல்ல வேடம் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறேன் என்று சுவாதி கூறினார்.