அஞ்சல் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அரச திணைக்களங்களுக்கு இடையே அஞ்சல் திணைக்களம் நடத்திய 9 பேர் பங்கு கொள்ளும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டித் தொடரின் இறுதியாட்டத்தில் வவுனியா கல்வித் திணைக்கள அணி வெற்றி பெற்றுச் சம்பியன் ஆனது.
வவுனியா சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் வவுனியா மாவட்ட போக்குவரத்துச் சபை அணியை எதிர்த்து வவுனியா கல்வித் திணைக்கள அணி மோதிக் கொண்டது.
இதில் வவுனியா கல்வித் திணைக் கள அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியனானது.இறுதியாட்டத்தில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அஞ்சல் அதிபர் குகதாசன் கலந்து கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது வரவேற்கத்தக்கது. ஆனால் இவ் வெற்றியை வைத்து பிரிவினைவாதம் பேசுவது தவறு. வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க முயன்றால் அதற்கான பதிலடியை நாம் கொடுப்போம் என பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டை சீரழிக்கும் விடயத்தை யார் செய்தாலும் அதற்கு நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம். கசினோ சூதாட்ட விடயத்தில் அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணத்தில் வரலாற்று வெற்றியினைப் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் தமது வெற்றியினை தவறாக பயன்படுத்துகின்றமையானது ஏற்றுக்கொள்ள முடியாது.
வடக்கில் ஆட்சியமைத்து மக்களுக்காக சேவையாற்றாது அவர்களின் சுயநலத்திற்காக மக்களை கொல்ல நினைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும் சதித்திட்டமாகும்.
இதைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தினால் தற்போது வடக்கில் வாழும் மக்களும் இறக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது சுய விருப்பிற்காக மத்திய அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. இலங்கையைப் பொறுத்தவரையில் அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டமே செயற்படுகின்றது. இதில் வட மாகாணத்திற்கு ஒரு மாதிரியும் ஏனைய மாகாணங்களுக்கு வேறு மாதிரியும் சட்டத்தை பிரயோகித்தால் அது இறுதியில் சட்டச் சிக்கலினையும் பிரிவினையினையுமே ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில்..
வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து தனி நாட்டுக் கோரிக்கையினை நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அதற்கான தகுந்த பதிலடியினை நாம் கொடுப்போம்.
கிழக்கில் முஸ்லிம் தீவிரவாத சக்திகளும் வடக்கில் புலித்தீவிர வாதிகளும் ஒன்றிணைந்து வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை கொன்று குவிக்கவே திட்டம் தீட்டுகின்றனர். இதை நடைமுறைப்படுத்த விடக்கூடாது.
பணத்தின் மீதுள்ள பேராசைகளினால் அப்பாவி மக்களையும் நாட்டின் கலாசாரத்தினையும் சீரழித்து விடக்கூடாது. இலங்கையில் பாரிய அளவிலான மோசமான நோய்கள் எவையும் இது வரையில் இனங்காணப்படவில்லை.
மக்கள் சுகாதாரமாகவும் நோயின்றிய வாழ்க்கையினையுமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதை கெடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து மோசமான நோய்களை இங்கு பரப்பி நாட்டினை வீணடிப்பதை அரசாங்கம் இப்போதே தடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்ணொருவர் மாமனாருடன் சேர்ந்து கணவரை கொன்று வீட்டின் முன்பே புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி கும்மனூரை சேர்ந்தவர் தேவன்(58). இவரது மகன் கேசவன்(35).
9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த கேசவன், சங்கீதா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கேசவனைக் காணவில்லை என்று கூறி பொலிசில் புகார் கொடுத்துள்ளார் தேவன். இதனைத் தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சங்கீதாவும் தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
இந்நிலையில் கேசவன் வீட்டின் முன்பு சத்தம் போட்டுக் குரைத்தபடி சில நாய்கள் மண்ணைப் போட்டுத் தோண்டியுள்ளன. மேலும் துர்நாற்றமும் வந்துள்ளது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பொலிசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் பொலிசார் வராததால் மக்களே தோண்ட ஆரம்பித்தனர். அப்போது அங்கு ஒரு பிணம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
மீண்டும் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிசார் உடலை கைப்பற்றினர். பின்பு இது தொடர்பா சங்கீதாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் உண்மை முழுவதையும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சங்கீதா கூறுகையில் தினமும் குடித்து விட்டு தன்னை கணவர் அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் மாமனாருடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்று வீட்டின் முன்புறம் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சங்கீதாவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் இன்னும் தேவன் கைது செய்யப்படவில்லை.
மேலும் கொலைக்கான காரணமாக அவர் ஒன்றைக் கூறினாலும் கூட வேறு காரணம் எதாவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சங்கீதாவையும் தேவனையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
2011ல் ஸ்ரீராமாஜ்ஜியம் தெலுங்கு படத்தில் நடித்து விட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். படப்பிடிப்பின் கடைசி நாளில் கண்ணீரோடு விடை பெற்றார். அதன் பிறகு திருமணத்துக்கான தடபுடல் ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால் திடீரென அந்த திருமணம் ரத்தாகி இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ராஜா ராணி படத்தில் நடித்தார். ரசிகர்கள் பழைய மாதிரி ஏற்பார்களா, என்று சந்தேகம் அவருக்கு இருந்தது. ஆனால் படம் வெற்றிகரமாக ஓடி நயன்தாராவை திரும்பவும் உச்சத்தில் தூக்கி வைத்தது.
அடுத்து அஜித் ஜோடியாக நடிக்கும் ஆரம்பம் படம் தீபாவளிக்கு வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கும் இது கதிர்வேலன் காதலி படம் வருகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் அனாமிகா படத்தில் கர்ப்பிணி வேடத்தில் வருகிறார். அதன் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவும் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. முன்னணி நடிகைகள் பலர் இரண்டாவது ரவுண்டில் காணாமல் போகி உள்ளனர்.
மீண்டும் நடிக்க விரும்பினாலும் அக்கா, அண்ணி வேடங்களே வந்தன. இவர்களுக்கு மத்தியில் நயன்தாராவின் வளர்ச்சி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. காதலில் தோற்றாலும் சினிமாவில் ஜெயித்து வருகிறார்.
பாகிஸ்தானை சேர்ந்த மொடல் அழகி ஃபெஹ்மினா சவுத்ரி(27) என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சொத்து ஒன்றை வாங்குவதற்காக பாகிஸ்தானுக்கு சென்றார்.
அங்கு வசிக்கும் தனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தான் இஸ்லாமாபாத் வந்திருக்கும் தகவலை தெரிவித்த அவரது மொபைல் சிறிது நேரத்திற்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சில மணி நேரங்கள் கழித்து அவரது தொலைபேசியிலிருந்து தாயாருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.சில் ஃபெஹ்மினா சவுத்ரி கடத்தப்பட்டதாக தகவல் வந்தது. இதனையடுத்து, தனது மகளை யாரோ கடத்தி விட்டதாக அவர் பொலிஸில் புகார் அளித்தார்.
கடந்த 5 நாட்களாக அவரை கண்டுபிடிக்க விசாரணை நடத்திவந்த பொலிஸார் இறுதியாக அவருக்கு சொத்து வாங்கிதர ஏற்பாடு செய்த புரோக்கரை கண்டுபிடித்து கைது செய்து விசாரித்தனர்.
ஃபெஹ்மினா சவுத்ரியை கொலை செய்து இஸ்லாமாபாத் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஓடையில் பிணத்தை தூக்கி வீசிவிட்டதாக புரோக்கர் வாக்குமூலம் அளித்தார். அந்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ஓடை கரையோரம் ஒதுங்கியிருந்த பிணத்தை கைப்பற்றினர்.
இந்திய மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த ஒரு ஜோடியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து பல்வேறு சித்திரவதைகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.
எனினும் இதுவரை பொலிசார் யாரையும் கைது செய்யவில்லை. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காதல் ஜோடியின் உடைகளை கிழித்து அவர்கள் உடலில் கறுப்பு பெயிண்ட் அடித்து ஊர்மக்கள் திரண்டு அவர்கள் அடித்து உதைத்த வண்ணம் 3 கிராமங்களை சுற்றி வந்துள்ளனர்.
அத்துடன் அவர்களது உடலின் மர்மஸ்தான பகுதியில் மலம் உள்ளிட்டவற்றை கட்டித் தொங்க விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் கோகாரியா, பல்வாரி, படிபுரா கிராமம் முழுதும் இவர்களை தர்ம அடி கொடுத்து கூட்டிவந்துள்ளனர்.
மேலும் காதல் கணவன் கையில் ஒரு டிரம் ஒன்றைக் கொடுத்து அடித்து வரவும் செய்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் இவர்களை இவ்வாறு கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மிகவும் உற்சாகமாக இதில் பங்கேற்றமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவமானமும் சித்ரவதையும் முடிந்த பிறகு காதல் கணவன் பொலிசில் புகார் செய்ததாக தெரிகிறது. ஆனால் கிராம மக்கள் பொலிசையே மிரட்டியுள்ளனர். புகாரை எடுக்கவேண்டாம் என்றும் பிறகு பொலிசிலா புகார் கொடுக்கிறாய் என்று இரவு மீண்டும் அடி உதை கொடுக்கப்பட்டது காதலர்களுக்கு.
இது சாதிய கலப்புத் திருமணமா, அல்லது பெண் தலித்தா, ஆண் தலித்தா போன்ற தகவல்கள் தெரியவரவில்லை.
நடிகை பாவனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. எனவே திருமணத்துக்கு தயாராகிறார். இதுகுறித்து பாவனா கூறியதாவது..
எனக்கு இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் திருமணம் நடக்கும். எப்போது நடக்கும் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது. திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. வாழ்க்கை பூரா தொடர்ந்து வரக்கூடியது.
எனவே இதில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே திருமணத்தை எச்சரிக்கை உணர்வோடு அணுகுவேன்.
என் நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்திப்பட உலகில் நான் இருந்தபோது யாருமே என்னிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டது இல்லை.
என் வயதுள்ள பலர் அங்கு முன்னணி நடிகைகளாக உள்ளனர். 30 வயதுள்ள நடிகைகள் கூட அங்கு திருமணம் பற்றி சிந்திப்பது இல்லை. எனக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நேற்று மலிவுவிலையில் மதுவிற்பனை செய்யப்பட்டது. மலிவு விலையில் கிடைத்ததால் அந்த பகுதியில் உள்ள பள்ளி,மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அளவுக்கதிமாக குடித்துவிட்டு, ஆடைகளை கழட்டி அட்டகாசம் செய்தனர்.
மாணவ, மாணவிகள் என்பதால் பொலிஸார் எச்சரித்துவிட்டு அவர்களை வீடுகளில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பகுதியில் நேற்று ஒரு பவுண்டுக்கு மலிவு விலையில் மதுவிற்பனை செய்யப்பட்டது. இவ்வளவு குறைந்த விலையில் மது வகைகளும், வைன் வகைகளும் தாராளமாக கிடைத்ததால் ஏராளமான ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி அளவுக்கதிமாக குடித்துவிட்டு ரோட்டில் மயங்கிக்கிடந்தனர்.
இவர்களில் பலர் பள்ளி, கல்லூரி மாணவிகள். அரைகுறை ஆடையுடன் போதையில் அவர்கள் போட்ட ஆட்டம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியுற வைத்தது.
இந்த தகவல் பொலிசாருக்கு கிடைத்ததும் அவர்கள் விரைந்து வந்து போதையில் மயங்கிக்கிடந்த மாணவிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் மொபைல்களில் இருந்த நம்பர்களின் மூலம் அவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். மலிவு விலையில் மதுவிற்பனை செய்த கடைகளை சீல் வைத்து அடைத்தன
தமிழக வாழ்வரிமைக் கட்சி சார்பாக ஐந்து அம்சக் கோரிக்கையினை வலியுறுத்தி இந்திய மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
1. மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
3. செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடுமாறும், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யுமாறும், இலங்கைச் சிறையில் வாடும் அப்பாவித் தமிழக மீனவர்களை உடனயாக விடுதலை செய்யுமாறு கோரியும்,
4. இந்திய அரசு இலங்கைக்கு எவ்விதமான இராணுவ உதவிகளையும் வழங்க கூடாது எனவும், இலங்கை வீரர்கள் இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும்,
5. இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 359 ஓட்டங்களை குவித்தது.
இந்திய தரப்பில் வினய்குமார் 2, அஸ்வின் 1 விக்கெட் விழ்த்தினர். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 360 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தவான் 86 பந்துகளில் 95 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 141 ஓட்டங்களையும், விராத் கோலி 52 பந்துகளில் 100 ஓட்டங்ளையும் எடுத்தனர்.
நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் மூவர் இன்று வவுனியா இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வடமாகணசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மாகாண அமைச்சர்களை நியமனம் செய்தல் தொடர்பாக பங்காளிக் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக கடந்த 11 ம் திகதி யாழில் நடந்த பதவிப்பிரமாண நிகழ்வினை ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் பகிஸ்கரித்தனர்.
இவர்களில் கடந்த 14 ஆம் திகதி ரெலோவின் கே.சிவாஜிலிங்கம் முள்ளியவாய்க்காலிலும், புளொட்டின் த.சித்தார்த்தன், ரி.லிங்கநாதன் ஆகியோர் யாழிலும், ஈபிஆர்எல்எப் து.ரவிகரன் மற்றும் ரெலோவின் எஸ்.குணசீலன் ஆகியோர் கொழும்பில் சிவி முன்னிலையிலும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மற்றைய நான்கு உறுப்பினர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்வார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஈபிஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்ட க.சர்வேஸ்வரன், ம.தியாகராஜா, க.சிவமோகன் ஆகியோர் இன்று தமது பதவிப்பிரமாணத்தைச் செய்து கொண்டனர். வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள சிந்தாமணி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் சட்டத்தரணி கே.தயாபரன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சூரியன் மறைந்த பின்னும் ஆறு மணி நேரத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்து அமெரிக்க சூரிய சக்தி மின் நிலையம் ஒன்று சாதனை படைத்து உள்ளது. இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வெற்றி சூரிய சக்தி ஆர்வலர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சூரிய ஒளி, சூரிய வெப்பம் ஆகிய இரண்டு வேறுபட்ட தொழில்நுட்பங்கள் மூலம் சூரிய சக்தியில் இருந்து, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில்,சூரிய ஒளி தொழில்நுட்பம் பரவலாக உள்ளது.
ஆனால், இந்த தொழில்நுட்பம் மூலம், வெயில் உள்ள வேளைகளில் மட்டும் தான் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். வழக்கமாக, இரவு நேரங்களில் மின் தேவை அதிகரிக்கும். அப்போது,இந்த தொழில்நுட்பத்தால் கைகொடுக்க முடியாது.
இந்த குறைபாட்டை தீர்க்கும் விதத்தில் தற்போது சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்து உள்ள சோலானா என்ற தனியார் மின் நிலையம் சாதனை படைத்து உள்ளது.
கடந்த 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் சந்ததியினர் 19 பேர், தற்போது, ஒஸ்ரியா நாட்டில் வாழ்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
கடந்த1991ல், இத்தாலி நாட்டின், டைரோல் மலைப் பகுதியில், பனியில் உறைந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஆய்வில்,அது 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் உடல் என,தெரியவந்தது.
அதிலிருந்து அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் குறித்து, தொன்மையான தகவல்கள் கிடைக்கும் என்பதால், அதன் மீது ஏகப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வாளர்கள் அந்த மனிதருக்கு ´ஓட்சி பனிமனிதன்´ எனவும் பெயரிட்டனர்.
ஆய்வுகளின் ஒரு பகுதியாக, முழு மரபணு தகவலும் சேகரிக்கப்பட்டது. அந்த தகவல்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டன. அதில் ஓட்சியின் மரபணுவில் ஒரு சடுதி மாற்றம் இருந்ததாக தெரியவந்தது.
இத்தகைய மாற்றங்கள்,சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தட்பவெப்பம் உள்ளிட்ட சூழல்களால், அங்கு வசிப்பவர்களிடம் உருவாகின்றன. அதனால், அவை பண்டைய மக்களின் இடப்பெயற்சிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு பயன்படுகின்றன.
அதன் அடிப்படையில் ஒஸ்ரியா நாட்டின் டைரோல் பகுதியில், 3,700 பேரின் மரபணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 19 பேருக்கு ஓட்சியின் மரபணு சடுதி மாற்றம் இருந்ததாக தெரியவந்தது. ஆய்வாளர்களின் கணிப்பு படி, அவர்கள் ஓட்சியின் சந்ததியினர் அல்லது சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும்.
வானளாவிப் பரந்து விரிந்திருக்கும் இணையதளத் தொடர்புகளின் சேவை எல்லையை ஆழ்கடலின் அடியிலும் பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
சுனாமி அறிவிப்பு, மாசுபாடுகள் கண்டறிதல் மற்றும் நிகழ்வுகள் கண்காணிப்பு போன்றவற்றைக் கண்டறிவதற்கும் ஆழ்கடல் இணையதள இணைப்புகளை ஏற்படுத்தும் சோதனை முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலம் சார்ந்த வயர்லெஸ் தொடர்புகள், செயற்கைக்கோள் மற்றும் அண்டெனா வழியாக வரும் தரவுப் பரிமாற்றத்திற்கு ரேடியோ அலைகளைச் சார்ந்திருந்தன.
ஆனால் தண்ணீருக்கடியில் இவற்றின் செயல்பாடு சக்தி வாய்ந்ததாக இருக்காது என்பதால் பொதுவாக ஒலி அலை சார்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது இணையதளப் பயன்பாடுகள் மூலம் ஏற்படுத்தப்படும் வயர்லெஸ் இணைப்புகள் கடலுக்கடியில் இருந்து தரவுகளைச் சேகரிக்க முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் திறமையாகச் செயல்படும் என்று இத்திட்டத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும், பஃபெல்லோ பல்கலைக்கழகத்தின் மின்பொறியியல் இணை பேராசிரியருமான டொம்மாசோ மெலோடியா தெரிவிக்கின்றார்.
சுனாமி போன்ற பேரழிவு ஏற்படும் காலங்களில் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் யாருக்கும் கிடைக்கும் இந்தத் தகவலை வைத்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்று இவர் கூறுகின்றார்.
பல அமைப்புகள் உலகளவில் இந்த முறையைப் பயன்படுத்தினாலும் கட்டமைப்பு மாறுபாடு காரணத்தினால் அவற்றுள் செய்திகளைப் பகிர்ந்தளித்தல் என்பது இயலாத ஒன்றாக உள்ளது.
ஆனால், நீருக்கடியில் பயன்படுத்தப்படும் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தொடர்புகளில் தகவல் பரிமாற்றங்கள் எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தப் புதிய தொழில்முறை பேரழிவுக் காலங்களில் கடலோர மக்களை முன்கூட்டியே எச்சரித்துப் பாதுகாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி படைக்கும் போராளிகளிக்கும் இடையே நடந்துவரும் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள புறநகர் பகுதிகள் பெரும்பாலும் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் தொடர்ந்து தீவிரமான குண்டு தாக்குதல் நடந்து வருவதால், மக்கள் வெளியே செல்ல முடியாமல் அங்கேயே பட்டினியால் வாடி வருகின்றனர்.
உணவு மருத்துவம் உள்ளிட்ட சர்வதேச உதவிகளூம் அப்பகுதிக்கு செல்லவில்லை.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் திருநாளை மக்கள் விருந்துண்டு கொண்டாவது வழக்கம். இந்நிலையில் அவர்கள் எங்கும் செல்லமுடியாத நிலையில் இருப்பதால் அங்கு பட்டினி கிடங்கும் மக்களுக்கு அப்பகுதி மசூதிகளின் மதத்தலைவர்கள் புதிய உத்தரவு ஒன்றை புறப்பித்துள்ளனர்.
பட்டினி கிடக்கும் மக்கள் பூனை, நாய், கழுதைகளை சாப்பிட்டு பட்டினியை போக்கிக்கொள்ளலாம் என்று மதத்தலைவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் தங்களை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று, இஸ்லாத்தில் சொல்லப்படாத மனிதர்களுக்கு பொருந்தாத விலங்குகளான பூனை, நாய், கழுதைகளை சாப்பிட்டு பசியை போக்கிக்கொள்ள சாப்பிட ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
பட்டினியால் துடித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கும் இது ஒரு உதவியாக இருக்கும். இந்த மோசமான நிலை தொடருமானால், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இறந்ததை தின்னும் நிலை உருவாகும் என்றும் மதகுருமார்கள் எச்சரித்துள்ளனர்.
சிரியா முழுவதும் நடைபெற்று வரும் இந்த சண்டை காரணமாக இதுபோன்று உத்தரவுகள் சிரியாவின் மற்ற பகுதிகளில் முன்பு மதகுருமார்கள் பிறப்பித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக இலங்கை அகதிகளிடம் 20 இலட்ச ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி, பவானி, வாழவந்தான் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் இருக்கும் சிலரிடம் கள்ளத்தனமாக படகு மூலம் அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி 60,000 ரூபாய் முதல் 1.5 இலட்ச ரூபாய் வரை தலா 15 பேரிடம் 20 இலட்ச ரூபாய் வசூலித்துள்ளனர்.
ஆனால் பணம் பெற்றவர்கள் அவுஸ்திரேலியா அழைத்து செல்லாமல் ஏமாற்றினர். இதற்கான பணப் பரிமாற்றம் கோவையில் உள்ள ஒரு விடுதியில் நடந்ததால் பணம் கொடுத்து ஏமாந்தோர் கோவை, “கியூ´ பிரிவு பொலிஸில் முறைப்பாடு கொடுத்தனர்.
இதையடுத்து கியூ பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில் சிவசங்கர், ஜெகன், சதீஷ்குமார், மதுரையை சேர்ந்த, வீரமணி உட்பட நான்கு பேரை கடந்த மாதம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நான்கு பேரையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில், காவலில் வைக்க கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறையிலிருக்கும் நான்கு பேரிடமும் கமிஷனரின் உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டது.