யாழ்ப்பாணம் மாவட்டம் – வடமராட்சி பிரதேசத்தில் முச்சக்கர வண்டியும் பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (25-07-2023) மந்திகை, மடத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்த இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி தலைகீழாக புரண்டு சேதமடைந்துள்ளது.விபத்து தொடர்பில் பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளார்.
வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று (26.07) சோதனை செய்துள்ளனர்.
கடந்த ஞாயிறு அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டிற்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர்.
இச் சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்று (26.07) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிசார் வருகை தந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு இரசாயன பகுப்பாய்வு செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு தரப்புக்களிடமும் வாக்கு மூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி எனற் பெண் குழந்தையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 19ஆம் திகதி முதல் தனது மனைவியும் மகளும் காணாமல் போயுள்ளதாக கணவர் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.தாம் 19ஆம் திகதி காலை கிருலப்பனை பாமன்கடை பழக்கடைக்கு வேலைக்குச் சென்றதாகவும், அன்று இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பியபோது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை எனவும் சமிந்து திவங்க என அழைக்கப்படும் கணவர் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், தெமட்டகொடயில் வசிக்கும் தாயாரிடம் மனைவி மற்றும் மகள் குறித்து கேட்டதாகவும், அவர்கள் வரவில்லை என கூறியதாக திவங்க குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாய் மற்றும் மகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0112-850700 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு மஹரகம பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றில் பயணித்த பயணி ஒருவரின் தகாத செயலால் , அதில் பயணம் செய்த இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தனது கைபேசியில் எதிரில் இருந்த யுவதியை தகாத முறையில் குறித்த பயணி காணொளி எடுத்த நிலையில் அதனை அவதானித்த இளைஞர்கள் நன்றாக கவனித்துள்ளனர்.தனது கைத் தொலைபேசியை சூம் பண்ணி யுவதியின் அந்தரங்கப் பகுதியை குறித்த பயணி காணொளி எடுத்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சந்தேக நபரை நையப்புடைத்த இளைஞர்கள், பெண்ணின் காலை தொட்டு மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். குறித்த காணொளி சமூக வலைத்தளைங்களில் வெளியாகியுள்ளது.
எனவே பேருந்துகளில் , புகையிரதங்களில் வெளியிடங்களுக்கு பயணிக்கும் யுவதிகள் இதுப்[ஓன்றவர்கள் தொடர்பில் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று(26.07.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகந்தன் என்பவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்துள்ளது.நேற்றைய தினம் (24.07.2023) தங்கத்தின் விலை குறைந்திருந்தது.
அதன்படி செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 156,300 ரூபாவாக பதிவாகியிருந்தது.24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,000 ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபா அதிகரித்து 158,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தில் உணவுத் திருவிழா இடம்பெற்றுள்ளது.
இந்த உணவுத்திருவிழா சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறை இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று (24.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ மற்றும் வணிக பீட வளாகத்தில் காலை 9.30 மணியளவில் உணவுத் திருவிழா ஆரம்பமானது.
தமிழ் சிங்கள இஸ்லாமிய கலாசார உணவு வகைகள் மற்றும் மேலைத்தேய உணவு வகைகள், குடிபானங்கள் என பல்வேறுபட்ட உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இரண்டாம் ஆண்டு முதலாம் அரையாண்டில் கல்வி கற்கும் மாணவர்களின் முயற்சியாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உணவுத் திருவிழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா ஆரம்பித்து வைத்ததுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட பீடாதிபதி பா.நிமலதாசன், சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறைத்தலைவரும் பேராசிரியருமான சி.சிவேசன் உள்ளிட்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 23.07.2023 அன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டமையுடன் வீட்டிற்கும் தீ வைத்தததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததமையுடன் பத்து நபர்கள் தீக்காயங்களுக்குள்ளாகியிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்பி ருவான் குணசேகர, குறித்த வீட்டில் வசித்து வந்த 19வயது சிறுமியின் பிறந்தநாள் வைபவம் 22ம் திகதி இரவிலிருந்து இடம்பெற்று வந்துள்ளது.
இதன் போது வீட்டிற்கு வருகை தந்த சிலரால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளமையுடன் வீட்டு உரிமையாளருக்கு பாரிய ஆயுதத்தினால் தாக்கி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரனையில் தெரியவந்துள்ளது.
வவுனியா பொலிஸாரினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதுவரை இச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் நேற்றையதினம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டமையுடன்,
காயமடைந்தவர்களில் 7 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களின் ஒருவரின் நிலமை கவலைக்கிடமான நிலையில் காணப்படுகின்றமையும் குறிப்படத்தக்கது.
ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயுள்ள 21 வயதுடைய இளம் தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய மகளைத் தேடி ஹங்குரன்கெத்த பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த யுவதி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். ஹங்குரன்கெத்த ஹோப் பகுதியில் வசித்து வந்த சுரேந்த ராணி என்ற தாயும், தருஷிகா அபி என்ற சிறுமியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு கடந்த 17ஆம் திகதி மருத்துவ தேவைக்கருதி தனது மகள் அவரின் சிறிய மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக காணாமல் போன பெண்ணின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக, அருகில் உள்ள சிசிரீவியில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன பெண்ணின் குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அவரது கணவர் எப்பொழுதும் குடித்துவிட்டு பெண்ணுக்கு இடையூறு செய்வதாகவும், இதனை பொறுக்க முடியாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் குறித்த தாயும் மகளும் ஏதேனும் வீட்டில் பாதுகாப்பு கருதி தங்கியிருந்தால் ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 0718-591055 இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.மனைவியின் மூத்த சகோதரியின் 12 வயது மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சிறுமி பிரசவித்த குழந்தையின் இரத்தத்தையும் சந்தேக நபரின் இரத்தத்தையும் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேக நபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரவ்பொத்தான ஒலுகஸ்கடவல பகுதியை சேர்ந்த சமன்சிறி என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.சிறுமியை பலாத்காரம் செய்த நபர் தனது முந்தைய திருமணத்தின் மனைவியை கைவிட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், தனது மனைவியின் சகோதரியின் 12 வயது மகளை இரண்டாவது திருமணத்தில் இருந்து பலாத்காரம் செய்துள்ள நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையின் இரத்த மாதிரிகள் மற்றும் சந்தேக நபரின் இரத்த மாதிரிகளை சட்ட வைத்திய அதிகாரிக்கு பரிசோதனைக்காக அனுப்ப முயற்சித்த போது சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த மலேசியா வாழ் தமிழ் தம்பதியை சுங்கத்துறை அதிகாரிகள் , பெண்னின் கழுத்தில் இருந்த தாலியை கழட்டசொல்லி அட்டூழியம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில்,இன்று காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மலேசியாவைச் சேர்ந்த தமிழ் தம்பதி வெளியே வருகையில் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது அதிகாரிகள் பெண் அணிந்திருந்த தங்க தாலி செயினை கழட்ட சொல்லி வற்புறுத்திய நிலையில் அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த பெண் நாங்கள் கல்யாணம் முடிந்ததில் இருந்து என் தாலியை நான் கழட்டி வைத்தது இல்லை என்று தெரிவித்த நிலையில், அவரது கணவர் அதிகாரிகளிடம் எப்படி தாலியை கழட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரி ஒருவர், நீங்கள் இந்தியர்கள் கிடையாது என்றும் நீங்கள் மலேசியன் என்று கூறியுள்ளார். அப்போது அந்த தம்பதிகள் எங்களுக்கு எவ்வளவு நகை கொண்டு வரவேண்டும் என்று தெரியாது என்றும் எவ்வளவு அபராதம் என்றும் கேட்டுள்ளார்.
மேலும் தங்களை விமான நிலையத்தில் 2 1/2 மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் நாய் மாதிரி ட்ரீட் செய்ததாக கூறிய அந்த பெண் அதுமட்டுமல்லாது தன் கணவரிடம் இருந்த நகையை அதிகாரிகள் பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.அதுமட்டுமல்லாது தங்கள் நகை மீட்க லட்சக்கணக்கில் சுங்கத் துறை அதிகாரிகள் பணம் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுங்கத்துறை அதிகாரிகள் தனக்கு அபரதமாக 7 லட்சம் ரூபாய் எழுதியதாகவும் பின்னர் அதை ரூ 5 லட்சமாக குறைத்தாகவும் அப்போது அங்கிருந்த மற்றொரு சுங்கத்துறை அதிகாரி ஏன் சார் இவ்வளவு குறைத்துவீட்டீர்கள் என கேள்வி எழுப்ப, மற்றொரு அதிகாரி பிழைத்து போகட்டும் என்று தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
இது இந்தியா..என்ன நடக்குது.. ஏன் இவ்வளவு கேவலமாக நடத்துறீங்க… இது இந்தியா 10 கிராமில் தான் தங்கம் கொண்டு வரவேண்டும் என்றால் எப்படி முடியும் என்றும் அப்பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் சம்பவம் குறித்து மலேசியன் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் மேலும் கூறியுள்ளார்.
நுவரெலியா – கொட்டகலையை சேர்ந்த பவிஷ்ணா என்ற சிறுமி உலக சாதனை புத்தகத்தில் (International Book of World Record) இடம்பிடித்துள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த செந்தில்குமார் – ரேவதி தம்பதிகளின் புதல்வியே இந்த சாதனையை படைத்துள்ளார்.
தனது மூன்று வயதில், உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனை படைத்துள்ளார்.
உலக சாதனை புத்தக நிறுவனமானது இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இதற்காக விண்ணப்பித்து ஏப்ரல் மாதம் சாதனை படைத்த சிறுமியாக அறிவித்து இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(24.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (24.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 334.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 254.90 ரூபாவாகவும், கொள்வனவு விலை 241.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 374.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 356.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 432.04 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 412.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற குறித்த போட்டியில், கொழும்பு ரோயல் கல்லூரியின் வினுக விஜேரத்ன 02 தங்கப் பதக்கங்களையும், மாத்தறை சுஜாதா கல்லூரியின் ஹோசித்மி பெஹன்சா சமரவீர மற்றும் இரத்தினபுரி பெர்குசன் உயர் கல்லூரியின் இலிஷா உமண்டி முதலி ஆகியோர் ஒரு தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.
அத்துடன் வத்தளை லைசியம் கல்லூரியின் துலன் பிம்சாட் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதக்கங்களை வென்ற இலங்கை சதுரங்க அணி இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.07.2023) பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (24.07.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும், அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்க வேண்டும் என்பதுடன், வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மனைவியைக் கடத்திச் சென்ற சைக்கோ கணவன், மனைவி சேர்ந்த வாழ ஒத்துழைக்காததால் ஒரு மாதத்துக்கு பிறகு சென்னையில் நடுத்தெருவில் விட்டுச் சென்ற கொடூரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான நான்கே மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார்.
இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
இந்நிலையில், போலீசாருக்கு வாக்குமூலம் அளித்த உமாமகேஸ்வரி, தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, குளோரோபார்ம் கொடுத்து மயக்கமடைய செய்ததாகவும், தொடாந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்ததாகவும், பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்ததாகவும் தொடர்ந்து கணவனுடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், உமாமகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.