யாழில் மூதாட்டியின் சடலத்தைக் காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம், தென்மராட்சி – மட்டுவில் வடக்கில் தனித்து வாழ்ந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய வடக்கு வீதிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் சிறிய வீட்டில் வசித்து வந்த தம்பையா சறோசா (வயது 82) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (27.07.2023) மட்டுவில் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் அருகில் உள்ள பால் சாலைக்குச் சென்று திரும்பும்போது மூதாட்டியின் நாய் பெண்ணின் ஆடையைப் பிடித்து மூதாட்டியின் வீட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

வீட்டினுள் மூதாட்டி சடலமாகக் காணப்பட்டதை அடுத்து அந்தப் பெண் மட்டுவில் வடக்கு கிராம அலுவலருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கிராம அலுவலர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கோப்பாய் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.மூதாட்டி உயிரிழந்து 3 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று மூதாட்டியின் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட அடையாளமும், கையில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உடல் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சாவகச்சேரி நீதிபதி சென்று விசாரணை மேற்கொண்டதையடுத்து மூதாட்டியின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.

புத்தளத்தில் மாயமான இரட்டைச் சிறுமிகள் தொடர்பில் வெளியான தகவல்..!

புத்தளத்தில்..

புத்தளம் – முந்தலம பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட பிரதேசமொன்றில் 15 வயதுடைய இரண்டு இரட்டைச் சிறுமிகள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று முன்தினம் முதல்(25.07.2023) வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக முந்தலம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறுமியர் தொடர்பில் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முந்தலகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாயமான சிறுமிகளின் நண்பர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுடன் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை செல்வதாகவும், அந்த பயணத்திற்கு செல்வதற்கு தாயாரிடம் அனுமதி கேட்டதாகவும் தாய் அனுமதி வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுமிகள் தமது தாயாரிடம் 500 ரூபாவை கேட்டதாகவும், ஆனால் அந்தத் தொகையை தாய் வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சிறிய தந்தையால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 13 வயதுச் சிறுமி!!

யாழில்..

சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் கணவரின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான பெண்ணின் மகளை பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து கோப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர்!!

மாலைத்தீவில்..

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மாலைத்தீவு குடும்பத்தினரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கல்கிஸ்ஸ மிஹிது மாவத்தையில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகைக்கு முச்சக்கர வண்டி சேவை பெற்ற மாலைதீவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முச்சக்கரவண்டியில் தங்கள் பையை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

அவர்கள் மறந்து விட்டு சென்ற பைக்குள் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் அடங்கிய பையை உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைப்பதற்கு முச்சக்கர வண்டி சாரதி செயற்பட்டுள்ளார்.

மாலைத்தீவைச் சேர்ந்த தந்தை, தாய், மகள், மகன் ஆகிய நால்வரும் சில வாரங்கள் ஓய்வு எடுப்பதற்காக மிஹிது மாவத்தையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.

அதற்கமைய, கடந்த காலை குடும்பத்தினர் அனைவரும் பல பைகளுடன் வந்து பிரசாத் ரொட்ரிகோ என்பவரின் முச்சக்கரவண்டியைப் பெற்றனர். பயணத்தின் முடிவில், ஒரு பையை மறந்து விட்டது சென்றுள்ளனர்.

அதனை அவதானிக்காமல் வந்த சாரதி சிறிது நேரத்தின் பின்னர் கவனித்துள்ளார்.அதன் பின்னர் மீண்டும் அந்த குடும்பத்தை தேடி சென்று பையை ஒப்படைத்துள்ளார். பணப்பை சோதனையிட்ட வெளிநாட்டவர் இலங்கையரின் நேர்மையை பாராட்டி பரிசுகளையும் வழங்கியுள்ளார்.

கோதுமை மாவின் விலை 15 வீதத்தால் அதிகரிப்பு!!

கோதுமை..

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீம் அதிகரித்துள்ளது. கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவில் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.உக்ரைனுடனான ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் வழியாக தானியங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைனும் ரஷ்யாவும் உலகின் இரண்டு பெரிய தானிய உற்பத்தி நாடுகளாக அறியப்படுகின்றன. இருப்பினும், தானியக் கப்பல்களைத் தவிர பயணிகள் கப்பல்கள் கருங்கடல் வழியாக செல்ல ரஷ்யா அனுமதிக்காது என்று பிரித்தானியா குற்றம் சாட்டியது.பயணிகள் கப்பல்களை வெடிக்கச் செய்வதற்காக கருங்கடலில் கடல் குண்டுகளை ரஷ்யா சேர்த்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை வெளிப்படுத்தியுள்ளது.

தம்பியை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

அஹங்காமவில்..

அஹங்காம மலைக்கு அருகில் உள்ள கடலில் அடித்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சமீர சந்தருவன் என்பவரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதனை அவதானித்த அண்ணன் ஜனித சதுரங்க அவ்விடத்திற்கு சென்றுள்ளார்.

உடனடியாகச் செயல்பட்ட அவர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது சகோதரனைக் காப்பாற்றும் நோக்கில் கடலில் குதித்தார்.ஆரம்பத்தில் கடல் அலையில் சிக்கிய சமீர சந்தருவன் நீண்ட நேர முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும் தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

காதல் மனைவி பிரிந்து சென்றதால் சோகம்.. கணவன் எடுத்த விபரீத முடிவு!!

வேடசந்தூரில்..

வேடசந்தூர் அருகே சரக்கு வேன் ஓட்டுனர் தற்கொலை – தற்கொலைக்கான காரணம் குறித்து செல்போனில் பேசி ரெக்கார்டு செய்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (வயது 25) என்ற பெண்ணுடன் காதல் திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த ஒரு மாதமாக வேடசந்தூரில் உள்ள உசேன்ராவுத்தர் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வினோதினி கிருஷ்ணமூர்த்தியுடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இரண்டு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி தனியாக வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை 11 மணியளவில் தனது தந்தையிடம் செல்போனில் பேசியுள்ளார். அவர் தந்தை பலமுறை தொடர்பு கொண்டும் செல்போன் எடுக்காததால், அவர் வசித்து வரும் வீட்டிற்கு தேடிவந்துள்ளார்.

அங்கு அவரது செருப்புகள் வெளியே இருந்த நிலையில் மீண்டும் செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரிங் உள்புறம் ஒலிக்கவே, வேசந்தேகப்பட்டு அவர் கதவை உடைத்துள்ளார். இதையடுத்து கதவைத் திறந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் நூல் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து தொங்கிய நிலையில் கண்டதும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், வேடசந்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது செல்போனில் தனது இறப்பிற்கான காரணம் குறித்து பேசி ரெக்கார்டு செய்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

அதில் தனது மனைவி வினோதினி 3 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சென்று விட்டார் என்றும், இதனால் தனது தம்பிக்கு கால்குலேட்டர் கூட வாங்கி கொடுக்க முடியவில்லை என்றும் தனது மனதில் உள்ளதை வெளிப்படுத்தி கண்ணீர் சிந்தி பேசியுள்ளார்.

மேலும் தனது பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்ளுமாறும், தன்னை தனது தாயும், தம்பியும் மன்னித்துக்கொள்ளும்படியும் தேம்பி தேம்பி அழுதுகொண்டே பேசியுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஆர்ப்பரித்த அருவியை ரசித்த இளைஞர்… நொடியில் உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ!!

கர்நாடகாவில்..

ஆர்ப்பரித்து கொட்டிய அருவியை ரசித்துப் பார்த்த 23 வயது இளைஞர் அடித்துச் செல்லப்பட்ட காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் அரிசினங்குடி அருவியில் மழை வெள்ளம் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

இதனை 23 வயது இளைஞர் ஒருவர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அங்கு பார்த்துக் கொண்டிருப்பதை அருகில் மற்றொருவர் காணொளி எடுத்துள்ளார்.

இளைஞர் ஒரு கட்டத்தில் தனது கால்களை மெதுவாக அசைத்த போது, வழுக்கி கரைபுரண்டு ஓடும் அருவியில் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை ஆரம்பம்..!

தொடருந்து சேவை..

கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா’ எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, வார இறுதி நாட்களில் செயற்படவுள்ள இந்த தொடருந்து சேவையானது, வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிஸ்சை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளயது.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கல்கிஸ்ஸை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.இந்த அதி சொகுசு தொடருந்தில் உணவகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளது.

தொடருந்தின் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.’யாழ் நிலா’ தொடருந்தில் முதல் வகுப்பு ஆசனமொன்றுக்கு 4,000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 3,000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.மூன்றாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 2,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இந்த தொடருந்து சேவை நல்லூர் திருவிழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தினமும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பதுளை பெண் : தீர்ப்பு திகதி அறிவிப்பு!!

பதுளையில்..

பொலிஸ் தடுப்பில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் ஆர்.ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் தொடர்பான மரண விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (26.07) பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த பெண் உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று (26.07.2023) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்படி,

இந்த மரண விசாரணை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவினால் நடத்தப்பட்ட சாட்சி விசாரணை இன்று நீதிமன்றில் நிறைவடைந்த நிலையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதேவேளை பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த பெண், கொழும்பில் வசிக்கும் நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய நிலையில், தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் இருந்தபோது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நாளையதினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமா? சங்கங்களின் நிலைப்பாடு என்ன?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28.07) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இவ் ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தகசங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் ஆகிய தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது, எமக்கு இதுவரை எவரும் கோரிக்கை விடுக்கவில்லை, கோரிக்கை எவையும் கிடைக்கப்பெறாமையினால் எவ்வித தீர்மானமும் நாங்கள் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது,
எமது பேரூந்துகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் சேவைகள் ஈடுபடுத்தப்படாது என்பதுடன் ஏனைய பகுதிகளுக்கான சேவைகள் பேரூந்து உரிமையாளர்களின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தனர்..

இவ்விடயம் தொடர்பாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது, மாவட்டத்திலுள்ள ஏனைய சங்கங்களின் நிலைப்பாடே எமது நிலைப்பாடக அமையும் எனவும் இதுவரை எவ்வித முடிவுகளும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட சிகை அலங்கார சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது, சங்கத்தில் இது தொடர்பில் எவ்வித கூட்டங்களும் இடம்பெறவில்லை என்பதுடன் எமது நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மொத்த மரக்கறி வியாபாரிகள் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது,

ஹர்த்தாலுக்கு எமக்கு எவரும் கோரிக்கை விடுக்கவில்லை என்பதினால் சங்கத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை எனவே நாளை வழமை போன்று இயங்கும் என தெரிவித்தனர்.

வவுனியா வர்த்தக சங்கத்தால் காரசார விவாதம் : அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சலசலப்பு!!

வவுனியா வர்த்தக சங்கத்திற்குரிய புதிய கட்டடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் காரசாரமாக விவாதம் முன்வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஆளுனர் பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் நேற்று(26.07) இடம்பெற்றது. இதன்போது வவுனியா நகரின் அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் திட்ட முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டது.

இதன்போது நகரில் ஏற்க்கனவே சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டங்கள் தொடர்பாகவும், நகரில் உள்ள காணிகளை பாதுகாப்பது தொடர்பாகவும் எவ்வாறான நடவடிக்கையினை எடுப்பது என்று அபிவிருத்திகுழு தலைவரால் கோரப்பட்டதுடன்,

வவுனியா வர்த்தக சங்கத்தால் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறித்த கட்டடம் அமைந்துள்ள காணி அரச காணியாக இருப்பதால் பிரதேச செயலாளர் ஏன் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று ஆளுனரால் கோரப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பிரதேச செயலாளர் இது தொடர்பாக நகரசபைக்கு கடிதம் அனுப்பியதாகவும், அவர்கள் அதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை. அப்படியானால் வர்த்தகசங்கம் செய்தது தவறு நான் செய்தது பிழையா என்று தெரிவித்தார்.

எனினும் காணி பிரதேச செயலாளரின் கீழ் இருப்பதால் நீங்கள் கட்டடம் அமைக்க முன்னரே அதற்கான நடவடிக்கையினை எடுத்திருக்க வேண்டும் என்று ஆளுனர் தெரிவித்திருந்தார். குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட குழுக்கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா நகரில் இவ்வாறு பல கட்டடங்கள் அனுமதியற்று கட்டப்படுவதாகவும் அதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறான அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்த ஆளுனர் ஏற்கனவே அமைக்கப்படிருந்த கட்டடங்களின் பெறுமதிக்கமைய அவர்களிடமிருந்து குத்தகையினை அறவிட்டு குத்தகை அடிப்படையில் அதனை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் வடமாகாண ஆளுனரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!!

வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் வடமாகாண ஆளுனரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் இன்று (26.07.2023) காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுனரை தொடர்பு கொள்வதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமையுடன்,

வாரநாட்களில் மக்கள் தமது முறைப்பாடுகளை இவ் அலுவலகத்தில் தெரிவிக்க முடியும் என்பதுடன் மாதத்தில் இரு தடவைகள் ஆளுனர் இங்கு விஐயம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இக் கட்டிடத்தினை வடமாகாண ஆளுனர் பி.எஸ்எம்.சாள்ஸ் அவர்கள் திறந்து வைத்திருந்தார்.

இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன், உள்ளூராட்சி அதிகாரிகள், ஆளுனர் அலுவலக அதிகாரிகள், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் சீனி தொழிற்சாலைக்கு என 400 ஏக்கர் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் ஆளுனரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது,

அது தொடர்பில் தெரியாது எனவும் மேலும் அவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு பணிக்க வேண்டிய தேவை எனக்கில்லை இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது தெரிந்தால் அறிவிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சிறுவனுக்கு கிடைத்த அங்கீகாரம் : உலக அளவில் குவியும் பாராட்டுக்கள்!!

கல்யா கந்தேகொட கமகே..

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சிறுவன் ஒருவன் சர்வதேச விருதொன்றை வென்றுள்ளார்.14 வயதான கல்யா கந்தேகொட கமகே என்ற சிறுவனே இவ்வாறு மவுண்ட் பேட்டிங் என்னும் பதக்கத்தை வென்றுள்ளார்.

பொதுநலவாய நாடுகளில் நாடு ஒன்றில் ஓர் ஆண்டில் மேற்கொண்ட மிகச்சிறந்த உயிர் காப்பு வீரதீர செயலுக்கான விசேட அங்கீகாரம் இந்த சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உலகில் இந்த வீர பதக்கத்தை வென்ற மிகவும் இள வயது சிறுவனாக கல்யா கருதப்படுகின்றார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி படகு விளையாடில் ஈடுப்பட்ட போது , அவரது 11 வயது சகோதரர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன் போது சம்பவத்தை அறியாது கரைக்கு நீந்தி வந்த கல்யா, மீண்டும் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் நீந்தி சென்று தனது சகோதரனை மீட்டு தரைக்கு கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில் இந்த வீர செயல் பெரும் அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

56 நாடுகளைக் கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடந்த ஆண்டில் பதிவான மிகச்சிறந்த வீரச் செயலாக இந்த செயல் கருதப்படுகின்றது.தனது சகோதரனே பாதுகாத்த கல்யாவிற்கு அரச உயிர் காப்பு சங்கத்தின் மவுண்ட் பாட்டின் பதக்கம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய வெள்ளைக்காரர்!!

கனடாவில்..

நம்மவர்களில் சிலர் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நாகரீக மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் முருகனுக்கு காவடி எடுத்து தனது பகிதியை வெளிப்படுத்திய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் கனடா – மொன்றியல் முருகன் (montreal val morin murugan temple) கோவிலில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. வேல் முருகன் கோவில் உற்சவத்தின் தேர்த் திருவிழா தினமன்று குறித்த நபர் காவடி எடுத்துள்ளார்.

தமிழர்களின் ஆதிகடவுளான முருகனுக்கு இந்துக்கள் பக்தி பூர்வமாக காவடி எடுத்து நேர்த்திகடன்கள் செய்வது வழமை. ஈழத்தில் மட்டுமல்லாது , புலம்பெயர் தேசத்திலும் நம் பாரம்பரியங்கள் நம் மக்கள் வாழும் இடமெல்லாம் வியாபித்துள்ளது.

அதேசமயம் எமது தெய்வங்களின் மீது வெளிநாட்டவர்களும் ஆர்வம் கொண்டு வணங்கி வருவதும், தமிழர் திருநாளை கோலாகலமாக கொண்ட்டாடியும் வருகின்றனர்.

அந்தவகையில் கனடா முருகன் ஆலயத்தில் (montreal val morin murugan temple) வெள்ளைக்காரர் ஒருவர் காவடி எடுத்து தன் பக்தியை வெளிப்படுத்தியுள்ளமை இந்து மக்களை புழகாங்கிதமடைய வைத்துள்ளது.

இலங்கையில் தாய் மற்றும் குழந்தைக்கு நேர்ந்த சோகம் : பெண்ணின் நகை அடகு கடையில்!!

அங்குருவத்தோட்டயில்..

அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகை கட்ஃபையொன்றி அடகு வைகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டையின் தொழில்நுட்பத்தின் ஊடாக பொலிஸார் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். எனவே இது தொடர்பிலான உண்மைத் தன்மையை உறுதியாக கூற முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சந்தேக நபரை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் அண்மையில் இளம் தாயும் ,கை குழந்தையும் படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.