பலத்த காற்று வீசக்கூடும் : வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக் கூடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில், காலை வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

தலையில் கிரிக்கெட் பந்து தாக்கி 15 வயது மாணவி பலியான சோகம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள கோட்டக்கலில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து தபஸ்யாவின் தலையில் தாக்கியுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதன் பின்னர் தபஸ்யாவின் குடும்பத்தினர் அச்சிறுமியை மகாராஷ்டிராவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தபஸ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் பந்து பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைக் சாகசம்… சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் துடிதுடித்து பலியான சோகம்!!

தேனி அருகே நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது போதையில் ஜாலியாக பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட ஒரே தெருவைச் சேர்ந்த 5 நண்பர்களில்,

இவர்களது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கூடலூரில், ஒரே தெருவைச் சேர்ந்த 5 இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் பணிபுரிந்து வரும் நிலையில், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு பைக்குகளில் 5 இளைஞர்களும் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்குகளும் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த, 2 இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய 5 இளைஞர்கள் கூடலூரைச் சேர்ந்த லிங்கேஷ்(24), சேவாக்(23), சஞ்சய்(22), மோனிஷ்(22), கேசவன்(22) என்பதும்,

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டதும், அதிவேகத்தில் சென்றதும் விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் லிங்கேஷ், சேவாக், சஞ்சய் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோனிஷ் மற்றும் கேசவன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தீபாவளி நாளில் சொந்த ஊருக்கு வந்திருந்த இளைஞர்கள் 3 பேர் இப்படி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

19 வயது காதலியை கொலை செய்த 18 வயது காதலன் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

தனது காதலியைக் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காதலனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

களுத்துறை மக்கொன பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய காதலனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலன் கடந்த செவ்வாய்க்கிழமை (29.10) பிற்பகல் கொலை செய்யப்பட்ட காதலியுடன் பயாகலை, தியலகொட பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் கோபமடைந்த காதலன் தனது காதலியைக் கல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த காதலி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலியே கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று (31) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிறந்த குழந்தையை பார்க்க சென்ற தந்தை பரிதாபமாக பலியான சோகம்!!

களுத்துறை – மத்துகம வீதியில் தொடங்கொட மற்றும் ருவன்மகா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியின் கம்பத்தில் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

சாரதி நித்திரையினால் வீதியை விட்டு விலகி, விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தை பார்த்துவிட்டு மத்துகமவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(01.11. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.64 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 214.98 ரூபாவாகவும், கொள்வனவு விலை 205.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.42 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 312.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 385.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 370.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்கி தங்கை உயிரிழப்பு : சகோதரன் மருத்துவமனையில்!!

பசறை அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி தங்கை உயிரிழந்துள்ளதுடன் அண்ணன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று நேற்று (31.10.2024) இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தங்கையும் 17 வயதுடைய அண்ணனும் வீட்டுக்கு முன்பாக மண்வெட்டியுடன் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

பிள்ளைகளின் சத்தத்தை கேட்ட பெற்றோர் வெளியில் வந்து பார்த்த போது தனது இரு பிள்ளைகள் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்து கூக்குரல் இட்டு உதவியை நாடி உள்ளனர்.

சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அயலவர்கள் இரு பிள்ளைகளையும் பசறை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, தங்கை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயங்களுக்குள்ளான 17 வயதுடைய அண்ணன் பசறை வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கராத்தே பயிற்றுவிப்பாளரால் இரு பாடசாலை மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!!

கம்பஹாவில் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா – தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிகள் கல்வி கற்கும் அதே பாடசாலையில் கராத்தே பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார். இவ்வாறான நிலையில், சந்தேக நபர் கராத்தே பயிற்றுவிக்கும் போது இந்த இரு மாணவிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல இடங்களில் இன்று (01.11.2024) மாலை அல்லது இரவு வேளைகளில் கடும் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறு மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னல் மற்றும் மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையினால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.

 

பல்கலை மாணவர்கள் சென்ற பேருந்து கோர விபத்து : மூவர் உயிரிழப்பு, 35 பேர் வைத்தியசாலையில்!!

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (01) காலை 7.45 மணியளவில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 35 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சேதவிபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது மை டாலா என்ற பிரசித்தி பெற்ற ஏரி. இந்த ஏரியில் நேற்று விடுமுறை நாளானதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குளித்து இயற்கையை ரசித்து வந்தனர் பலர் பாறைகளுக்கு இடையே நின்று கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் துமகூரு மாவட்டம் குப்பி தாலுக்கா ஷிவரனாபுரா கிராமத்தில் வசித்து வரும் சோம்நாத் என்பவரின் மகள் ஹம்சாவும் ஏரிக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.

பல பாறைகளுக்கு இடையே நின்று இளம் பெண் நேற்று மாலை நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி ஏரிக்குள் விழுந்து பாறைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டார்.

அலறி கூச்சலிட்டத்தில் நண்பர்கள் அப்பகுதியில் குளித்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை மீட்க மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேர மீட்பு பணி போராட்டத்திற்குப் பிறகு இன்று பிற்பகல் சுமார் 2 மணிக்கு பத்திரமாக மீட்டனர்.

கணவனை தலையணையால் அழுத்தி கொலை செய்த மனைவி!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ண சல்யாண்.

இவர் 44 வயதான பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் . இவர்கள் இருவரும் 18 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பாலகிருஷ்ணாவின் வருமானம் போதுமான அளவு இல்லாததால் பிரதிமா அதே ஊரில் சொந்தமாக ஒரு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பதிவிட்டு சமூக வலைதளத்தின் மோகத்தில் சிக்கியிருந்தார். சமீபத்தில் பிரதிமாவுக்கு 28 வயதான திலிப் ஹெக்டேவுடன் காதல் ஏற்பட்டது.

இந்த காதலை முறித்துக் கொள்ளும்படி பலமுறை பிரதிமாவின் குடும்பத்தார் அறிவுறுத்தினர்.

ஒன்றரை மாதத்திற்கு முன்பு காவல் நிலையத்திற்கு புகாராக சென்ற நிலையில், அங்கு தான் திலிப் உடன் வாழ விரும்புவதாக அவர் கூறினார். இந்நிலையில் அனைவரும் அவரை சமாதானம் செய்து கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இது நடந்து சில நாட்களில் பாலகிருஷ்ணாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு அடுக்கடுக்காக பல உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் உடுப்பி, மங்களூரு, பெங்களூரு என பல நகரங்களில் பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தான் உயிர் பிழைப்பது கடினம் என்று தெரிந்து கொண்ட பாலகிருஷ்ணா, அக்டோபர் 19ம் தேதி பெங்களூரு நகரில் இருந்த விக்டோரியா மருத்துவமனையில் இருந்து கிளம்பி இரவு தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.

அடுத்த நாள் 20ம் தேதி காலை பாலகிருஷ்ணா மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது முகத்தில் பல இடங்களில் கீறல்களும் காயங்களும் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விசாரணையில் பிரதிமாவின் அண்ணன் சந்தீப் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரை தனியாக அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்.

பிரதிமாவின் குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் விசாரித்தபோது அவர் 20ம் தேதி காலை சுமார் 1:30 மணிக்கு அவரது காதலனை வரவைத்து தலையணையை கொண்டு அவரை அழுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

தவறை மன்னித்து விட்டுவிடும் படி அவர் கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காமல் அவரது சகோதரர் சந்தீப் உடனடியாக இந்த கொலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலகிருஷ்ணாவை தலையணையை வைத்து கொலை செய்தது மட்டுமின்றி பிரதிமாவிடம் ஸ்லோ பாய்சன் வாங்கிக் கொடுத்தது தான்தான் என விசாரணையில் திலீப் வாக்குமூலம் அளித்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியிடப்படும் பொய்யான தகவல்களை கவனத்திற் கொள்ள வேண்டாம்.

அத்துடன், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை மாத்திரம் கவனத்திற் கொள்ளுமாறு அவர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கடற்கரையில் காதலனின் செயலால் 19 வயது காதலி பரிதாபமாக உயிரிழப்பு!!

தியலகொட பிரதேசத்தில் காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. களுத்துறை, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த காதலி தனது காதலனுடன் இணைந்து பயாகலை, தியலகொட பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் கோபமடைந்த காதலன் தனது காதலியைக் கடலில் தள்ளிவிட்டுள்ளார்.

இதன்போது, கடலிலிருந்த பாறைகளின் மேல் விழுந்த காதலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடம் கற்றுகொடுப்பதாக மாணவிகள் இருவர் துஸ்பிரயோகம் : கணித ஆசிரியர் கைது!!

இரு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித பாட ஆசிரியர் ஒருவர் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை – வகவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் கணித பாட ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கணித பாடத்தை கற்றுக் கொடுக்கும் போர்வையில் 14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் துயரத்தை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு!!

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முன்நாள் மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் நிதர்சன் 27 அகவையுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (29) உயிரிழந்துள்ளார் .

இந்நிலையில் மாணவைன் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.