கடவுச்சொல்லை பாதுகாக்க தவறும் இலங்கையர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சுமார் 50 வீதமானவர்கள் தமது ‘ஒரு முறை கடவுச்சொல்லை (OTP)’ பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 சதவீத மக்கள் ஒரு முறை கடவுச்சொல்லின் (OTP) நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜும்ஜிம் மொஹொட்டி, தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும், இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பயனர்களில் ஏறத்தாழ 68 சதவீதம் பேர், மோசடி செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்குள் உள்நுழைய பயன்படுத்தும் முறைகள் பற்றி அறிந்திருக்கவில்லை.

இணைய பரிவர்த்தனைகளில் முதன்மையான விதி என்னவென்றால், OTPயை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இணைய பரிவர்த்தனைகளில் கைப்பேசிகளுக்கு OTP வந்தால், அது உங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க பயன்படுத்தும் முறைமை.

நீங்கள் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யாதபோது OTPயைப் பெற்றால், இணையக் குற்றவாளிகள் தங்களது கணக்கிற்குள் நுழைந்துள்ளதாக அர்த்தம்.

சமூக ஊடகங்கள் தற்போது பல இணையக் குற்றவாளிகள் தங்களது மோசமான இலக்குகளை அடையப் பயன்படுத்தும் பொதுவான ஆயுதமாக மாறியுள்ளது.

இரகசிய அல்லது தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் மக்களை ஏமாற்ற உளவியல் தந்திரங்களைப் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அரசாங்க நிறுவனம் போல் அடையாளம் காட்டிக்கொண்டு பலமுறை உங்களை அழைத்து மோசடியில் ஈடுபடுவார்கள். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் விளிப்புடன் செயற்பட்டு தங்களது வங்கி கணக்குகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 30 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த இரு மாவட்டங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழந்துள்ளனதுடன் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

இதேவேளை, தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி இன்று (14.10.2024) காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நாளை மறுதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எதிர்வரும் 17.10.2024 அல்லது 18.10.2024 அன்று தமிழ்நாட்டின் வட பகுதிக்கும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ( கடல் மேற்பரப்பு வெப்பநிலை

(Sea Surface Temperature-SST) 30 பாகை செல்சியஸ் இனை விட உயர்வாக இருப்பதாலும் மேடன் யூலியன் அலைவு (The Madden-Julian Oscillation (MJO) சாதகமாக இருப்பதனாலும் இது ஒரு தீவிர தாழமுக்கமாகவே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை அதிகாலை முதல் கன மழை கிடைக்க தொடங்கும். இடையிடையே இது இடி மின்னலோடு கூடிய மழையாக இருக்கும். இந்த மழை எதிர்வரும் 18.10.2024 வரை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றரை விட அதிகமான வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள் நிலப்பகுதிகளில் காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாழமுக்கம் காரணமாக கடற் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனிமுல்லை பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனிமுல்லை, கம்சபா வீதியைச் சேர்ந்த நிலான் சதுரங்க என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சனிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.

களனிமுல்லை பகுதியில் கட்டடப்பொருட்கள் கடையொன்றினை நடத்தி வரும் இவர், அப்பகுதியில் சமூக சேவகராகவும், களனிமுல்லை இராணுவ முகாமில் சிவில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக தொண்டாற்றியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக படகில் பயணித்த போதே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, ​​8 வயது மகளை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு தந்தை கரை சேர்த்திருந்த நிலையில், தாயும் மரக்கிளையில் தொங்கியபடி கரைக்கு வந்துள்ளார். இதன்போது நீர்மட்டம் அதிகரித்து நிலான் சதுரங்க அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பொலிஸ் கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அழைத்து காணாமல்போனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று (13) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை : காலநிலையில் தொடரும் மாற்றம்!!

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

வெள்ளத்தால் திருமண புதுமண தம்பதிக்கு நேர்ந்த நிலை!!

இலங்கையின் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணமான புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அனர்த்தம் காரணமாக 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நீர்நிலைகள் பெருக்கெடுத்து வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளைஞன் ஒருவர் திருமணம் முடித்து தனது மனைவியை காரில் அழைத்து செல்வதற்கு பதிலாக படகில் அழைத்து செல்ல நேரிட்டுள்ளது.

களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புளத்சிங்கள பகுதியின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுமணத் தம்பதிகள் தங்கள் வீட்டிற்கு சென்ற விதம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

களுத்துறை உட்பட பல மாவட்டங்களுக்கு மண்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பொலிஸாரின் செயல்!!

கிளிநொச்சி ஏ-09 வீதி பளைப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இன்று (14) காலை பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலையில் பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி ஏ.09 வீதியின் இத்தாவில் முகமாலை மற்றும் உமையாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களை அரச பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலைமை காணப்படுகிறது.

இதனால் தினமும் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில், இன்றைய தினம் காலை முகமாலை பகுதியில் இருந்து பளை மத்திய கல்லூரிக்கு செல்லும் மாணவர்களை நீண்ட நேரமாகியும் அரச பேருந்துகள் எதுவும் ஏற்றி செல்லாத நிலையில்,

வீதியில் காத்திருந்த மாணவர்களை பளை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான அதிகாரி தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று பாடசாலையில் விட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை : மக்கள் விசனம்!!

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை மைதனமானது நகரில் உள்ள பிரதான மைதானமாகும். அங்கு விளையாட்டு வீரர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளிலும், நடை பயிற்சிகளும் பலரும் ஈடுபட்டு வருவதுண்டு.

இந்நிலையில், குறித்த மைதானத்தில் மண் சீரான முறையில் பரவப்படாமையால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியதவாறு காணப்படுவதுடன், மழை நேரங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகின்றது.

மைதானத்தின் சில பகுதிகள் புற்கள் நிறைந்ததாக காணப்படுவதுடன், அதில் விசப் பாம்புகளும் காணப்படுகின்றன. மைதானத்திற்கு வருபவர்கள் ஓய்வு எடுப்பதற்க உள்ள இருப்பிடங்கள் உடைந்து காணப்படுகின்றன. அத்துடன் குறித்த மைதானத்திற்குள் கால்நடைகள் வருவதனால் மைதானம் மேலும் அசுத்தமாகவும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக நடைபயிற்சி மற்றும் உடற் பயிற்சிகளுக்கு செல்லும் சிறுவர்கள், மாணவர்கள், பெரியோர் எனப் பலரும் அங்கு செல்வதை தவிர்த்து வருவதுடன், மாவட்டத்தின் பிரதான மைதானத்தில் நிலை கண்டு கவலையடைந்துள்ளனர்.

எனவே, இது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்தி மக்களுக்கான சேவையை சிறப்பாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, குறித்த மைதானத்திற்கான மின் ஓளி காணப்படுவதுடன் அது காலை 8 மணி வரை ஒளிந்து கொண்டு இருப்பதால் மின் வீண் விரயம் செய்யப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி இன்று இரவு அல்லது நாளை(14.10.2024) காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நாளை மறுதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது எதிர்வரும் 17.10.2024 அல்லது 18.10.2024 அன்று தமிழ்நாட்டின் வட பகுதிக்கும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ( கடல் மேற்பரப்பு வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் இனை விட உயர்வாக இருப்பதாலும் மேடன் யூலியன் அலைவு சாதகமாக இருப்பதனாலும் இது ஒரு தீவிர தாழமுக்கமாகவே இருக்கும்.)

கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை அதிகாலை முதல் கன மழை கிடைக்க தொடங்கும்.

இடையிடையே இது இடி மின்னலோடு கூடிய மழையாக இருக்கும். இந்த மழை எதிர்வரும் 18.10.2024 வரை தொடரும்.

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றரை விட அதிகமான வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள் நிலப்பகுதிகளில் காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாழமுக்கம் காரணமாக கடற் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதனால் கிளைகள் முறிந்து அல்லது பாறி விழும் மரங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக வீதியோர மரங்கள் தொடர்பாக வீதியால் பயணிப்போர் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. அதே வேளை எதிர்வரும் 22.10.2024 அன்றும் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்- என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தென்இந்திய பிரபலங்கள் பங்குபற்றும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி

வவுனியாவில் தென்இந்திய பிரபலங்களின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி

வவுனியா மண்ணில் IDMNC இன்டர்நேஷனல் கம்பஸ் பெருமையுடன் வழங்கும் தென்இந்திய பிரபலங்கள் கலந்து சிறப்பிக்கும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி எதிர்வரும் 18.10.2024 அன்று மாலை 6.00 மணிக்கு வவுனியா மோஜோ திருமண மண்டபத்தில் (MOJO HALL Trincomale Road) இடம்பெறவுள்ளது.

இவ் இசை நிகழ்ச்சியில் தென்இந்திய பாடகர்களான ஜீவித்தா, ஸ்ரீநிதி , விக்னேஷ் , ஜோன் ஜெராம் , மேக்னா , திவிஷா ஆகியோர் கலந்து கொண்டு மக்களை மகிழ்விக்கவுள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களை உள்ளமையினால் இன்றே உங்கள் ஆசனங்களை பதிவு செய்து கொள்ளுங்கள் ரிக்கேட் கிடைக்கும் விபரங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளன.

  • IDMNC இன்டர்நேஷனல் கம்பஸ் (குருமன்காடு) – 0760970954
  • KPK புத்தகம் நிலையம் (பழைய பேருந்து நிலையம்) 0242228275 / 0771781183
  • ஜேபிகே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (பஜார் வீதி) 0242222504 / 0770488903
  • திருமகள் புத்தக நிலையம் (தர்மலிங்கம் வீதி) 0777856882
  • மோஜோ உணவகம் (இரண்டாம் குறுக்குத்தெரு) 0242227575
  • வவுனியா ஊடக அமையம் (வவுனியா நகரம்) வவுனியா நகரம் 0763445678 / 0770779434

வங்கி மூலம் வைப்பிட்டு உங்கள் ஆசன பதிவினை முற்பதிவு செய்ய விரும்பினால் 0763445678 அல்லது 0770779434 அல்லது  0760970954 ஆகிய இலக்கங்களையும் அழைப்பினை ஏற்படுத்தவும்

யாழில் விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்!!

யாழ்பாணம் வடமராட்சி வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் மயிலிட்டி டைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை பகுதியில் வசித்து தற்போது உரும்பிராய் பகுதியில் வசித்து வரும் damro யாழ் முகாமையாளர் துரைலிங்கம் மலைமகன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே வடமராட்சி பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழைய இரும்பு ஏற்றும் பட்டா வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்ததுடன் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

6 வயது சிறுமியை மூச்சு முட்ட சாப்பிட வைத்தே கொன்ற பெண் : கடனை திருப்பிக் கேட்டதால் ஆத்திரம்!!

கொடுத்தக் கடனைத் திருப்பிக் கேட்டதால், 6 வயது சிறுமியை மூச்சு முட்ட சாப்பிட வைத்து மூச்சு திணறல் ஏற்படுத்திக் கொலைச் செய்துள்ள சம்பவம் ஆந்திராவை அதிர செய்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரைச் சேர்ந்தவர் அசனத்துல்லா.

இவரது மனைவி சானியா. இந்த தம்பதியருக்கு 6 வயதில் அஸ்வியா என்ற மகள் இருந்தார். அதே பகுதியில் வசித்து வரும் ரேஷ்மா எனும் பெண்ணுக்கு அசனத்துல்லா வட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் ரூ.3 லட்சம் கடன் வாங்கிய பிற்கு ரேஷ்மா அசலையும் தராமல், கடனுக்கான வட்டியையும் தராமல் இருந்து வந்துள்ளார்.

கடனுக்கான வட்டிப் பணத்தை அசனத்துல்லா ரேஷ்மாவிடம் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், கடந்த 1ம் தேதி தனது வீட்டிருகே விளையாடிக் கொண்டிருந்த அசனத்துல்லாவின் மகள் அஸ்வியா காணாமல் போனார்.

பல இடங்களில் தேடிப் பார்த்தும் அஸ்வியா கிடைக்காத நிலையில், தனது மகள் அஸ்வியா காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அசனத்துல்லா புகார் அளித்தார்.

சிறுமி அஸ்வியாவை தனிப்படை அமைத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், புர்கா அணிந்த பெண் ஒருவர் சிறுமியை தூக்கிச் சென்ற காட்சியை கைப்பற்றி விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு, காணாமல் போன சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது.

போலீசாரின் சந்தேகப்பார்வை ரேஷ்மா மீது விழுந்ததில், ரேஷ்மாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கடனைத் திருப்பிக் கேட்டதால், தனது தாய் ஹசீனாவுடன் சேர்ந்து சிறுமி அஸ்வியாவை கொலை செய்து ஏரியில் வீசியதை காவல்துறையினரின் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு சிறுமிக்கு சாப்பாடு போட்டுக் கொலைச் செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து ரேஷ்மாவையும், அவரது தாயாரையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : இந்திய வானிலை ஆய்வு மையம்!!

வங்கக்கடலில் வருகிற ஒக்டோபர் 14 -ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், ஒக்டோபர் 14 -ம் திகதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கரூர் திருச்சி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி,

திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் வருகிற ஒக்டோபர் 14 -ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, தற்போது நிலவி வரும் வளிமண்டல சுழற்சி தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.

யாழில் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரு ஆசிரியர்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு!!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரால் கடிதம் மூலம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள், பெண் பிள்ளைகளை பாடசாலையின் தனிப்பட்ட அறையில் அழைத்து விசாரிப்பது, முறையற்ற நடத்தைகள் என்பவற்றில் ஈடுபடுகின்றனர் என பெற்றோர் முறைப்பாட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த முறைப்பாட்டு கடிதத்தில், குறித்த பிள்ளைகள் பாரிய மனஉளைச்சலை சந்திப்பதுடன் பாடசாலைக்கு செல்ல மறுக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினை பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளரிற்கு தெரியப்படுத்தி அவரையும் பாடசாலைக்கு அழைத்து சென்று அதிபரிற்கு தெரியப்படுத்தினோம்.

முன்னதாக ஆசிரியரொருவரினால் றீப்பை தடியினால் தமது பிள்ளைகள் தாக்கப்பட்டு அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் அதிபரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிபரும் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவர்களை இடைநிறுத்தி விசாரணை மேற்கொண்டு உரிய தண்டனைகளை வழங்குவதுடன் இடமாற்றம்செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவற்றை தாங்கள் செய்வதன் மூலம் எமது பிள்ளைகள் அச்சமின்றி பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரால் பொலிஸார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றிலும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

வெள்ளத்தால் மேல் மற்றும் தென் மாகாண வீதிகள் முடக்கம்!!

மேல் மற்றும் தென் மாகாணங்களில், வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அந்தவகையில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பண்டாரகம – கொலமதிரிய, பாலிந்தநுவர – பதுரலிய, பரல்லாவிட்ட – அவிட்டாவ, களுத்துறை – மத்துகம, புலத்சிங்கள – மொல்கா ஆகிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் மினுவாங்கொடை, கட்டான, ஹன்வெல்ல, கடுவெல, கொலன்னாவ, பன்னல, ஹோமாகம உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி!!

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி 280 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா 100 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ பாகற்காய் 350 ரூபாவாகவும் , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும், ஒரு கிலோ புடலங்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணி 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் , ஒரு கிலோ வெங்காயத்தாள் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 80 ரூபாவாகவும் ,ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ நோகோல் 100 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 200 ரூபாவாகவும் ,

ஒரு கிலோ இஞ்சி 800 ரூபாவாகவும் , ஒரு கிலோ கத்திரிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய் 150 ரூபாவாகவும் ,ஒரு கிலோ பெரிய வெங்காயம் 250 ரூபாவாகவும் , ஒரு கிலோ உருளைக்கிழங்கு 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டினால் குடும்பத்தையே தள்ளிவைத்த வட்டுவாகல் கிராம பொது அமைப்பினர்!!

முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தில் வளர்ந்து வரும் கால்பந்து வீரர் சிவசுப்ரமணியம் ஜிந்துசனின் குடும்பத்தினரை, சமூகத்தில் இருந்து, கிராம மட்ட அமைப்புக்கள் ஒதுக்கிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நேற்றையதினம் (11.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

“முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தில் வசித்து வருகின்றேன். ஆரம்பத்தில் முல்லைத்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகத்தில் உறுப்பினராக இருந்து விளையாடிவந்தேன். அங்கு எனக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர், முல்லைத்தீவு சென்யூட் கழகத்தினர் அதிக ஊதியத்துடன் கூடிய விளையாட்டு துறைக்கு என்னை அழைத்திருந்தார்கள்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் அவர்களது கழகத்திற்கு மாறி செல்கின்றமை தொடர்பாக எழுத்து மூலம் கடிதம் வழங்கியே விளையாட சென்றேன்.

அதன் பின்னர் நான் பல சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. அதனையடுத்து, கிராம மட்ட அமைப்புக்கள் எம்மை எம் கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.