பாடசாலை மாணவி மாயம் : தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு தாய் கோரிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவியொருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த மனோகரன் யதுர்னா எனும் 17 வயது மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த மாணவி கடந்த 10/08/2024 ம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லைனெ தாய் தெரிவித்துள்ளார்.

எனவே காணாமல்போயுள்ள மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொலைபேசி இலக்கத்திறக்கு 0775994497 அறிவிக்குமாறு தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தையை பார்க்க சென்ற மகன் விபத்தில் பலி!!

தென்னிலங்கையில் தந்தையை பார்க்க சென்ற மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றும் 54 வயதான வஜிர பிரியன் என்ற குடுபஸ்தரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் விபத்து காரணமாக நேற்று பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரி, விடுமுறையில் தந்தையை பார்ப்பதற்காக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிசிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (10) மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

கொழும்பு சென்ற பேருந்து தீப்பற்றியதால் பரபரப்பு!!

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (10) காலை தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

எனினும், தீ விபத்தில் உயிரிழப்புக்களோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில் தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் ஜனநாயக இடதுசாரி முன்னணி வேட்புமனுத்தாக்கல்!!

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்றையதினம் (09.10.2024) தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இருகட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது.

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அவுஸ்திரேலியாவில் பலரையும் திரும்பி பார்க்கவைத்த இலங்கை இளைஞன்!!

கல்விக்காக சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 25 வயதான வினுல் கருணாரத்ன எனும் இலங்கை இளைஞர் குறித்த தகவல்களை அவுஸ்திரேலியா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தற்போது மெல்பேர்னில் வசித்து வரும் இலங்கை இளைஞர், கல்வி பயிலும் போது, ​​இரவு நேரத்தில் தற்காலிகமாக ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தார்.

ஓய்வு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். வருமானம் நன்றாக இருந்ததால், பின்னர் நாட்டில் உள்ள பிரபல இணையத்தளமான Airtaskerயில் சேர்ந்தார்.

தற்போது, ​​அந்த இணையத்தளத்துடன் தொடர்பு கொண்டு அதிகம் பணம் ஈட்டுபவர்களில் முதல் 10 இடங்களில் வினுலும் உள்ளார். அவரது தினசரி வருமானம் 1,000-1,400 அவுஸ்திரேலிய டொலர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதன் ஊடாக அவர் கனவு கண்டு வந்த காரை வாங்கியுள்ளதுடன், இலங்கையில் வசிக்கும் தனது பெற்றோருக்கு ஒரு வீட்டையும் நிர்மாணித்து கொடுத்துள்ளார்.

மேலும் அந்த வேலைக்காக முழு நேரமும் உழைத்து வரும் வினுல், அங்கு வீடு வாங்கி மற்ற துறைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மரத்தில் மோதி இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பண்டாரகம வேவிட்ட தெம்பிலிகொட்டுவ சந்திக்கு கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம, மேற்கு பகுதியைச் சேர்ந்த லஹிரு நிமந்த ஜயதிலக என்ற 18 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் பண்டாரகம – களுத்துறை வீதியில் மொரந்துடுவ திசை நோக்கி பயணித்த போது, ​​தெம்பிலிகொட்டுவ சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சாரதியான 18 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பண்டாரகம ரொட்டரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் படுகாயமடைந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (08) இரவு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் உடைந்ததுள்ளதுடன் மரமும் சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் விலை மேலும் குறையும் : அநுர தரப்பு உறுதி!!

இலங்கையில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீள இயங்க இருப்பதால் எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையும் என பொறியியலாளரும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளருமான ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் இதுவரை காலமும் இயங்காமல் இருந்தன. இதனால் வெளிநாடுகளில் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலை பெற்றுக்கொள்ள அதிகளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் சுத்திகரிப்பு நிலையங்களை மீள இயங்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர், எரிபொருள் விலை கனிசமாக குறைவடையும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,

 

22 கரட் தங்க பவுணின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்!!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களின் அடிப்படையில் தங்கத்தின் விலையில் நேற்றையதினத்தை விட இன்றையதினம் (09.10.2024) சிறிதளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 207,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 191,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,621.96 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் (08.10.2024) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 200,900 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 191,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைய வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெற்றவையாகும்.

ஒன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20 சதவீதம் ஒன்லைன் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவையாகும்.

இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் வங்கி பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.

கடந்த காலங்களில் ஒன்லைன் வங்கிச் சேவை தொடர்பான மோசடிகள் தொடர்பான 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வங்கிகள் தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாத பலர் இவ்வாறான மோசடியில் சிக்கியுள்ளதாக கணினி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்தவர் கைது!!

யாழில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

“அராலியை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டுக்கு முன்னால் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார்.

அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.

இந்நிலையில் வீதியால் சென்றவர்கள் அந்த பணத்தினை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது. இதுகுறித்து சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 42 வயதுடைய, 3 பிள்ளையின் தந்தையான குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி : கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!!

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய மாணவி கல்வி பயின்ற கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் கோரவுள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை மூன்று மேலதிக செயலாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கையில் செயற்படும் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் மீது கல்வி அமைச்சிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை, ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து அறிக்கை கோரப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை கல்வி அமைச்சின் ஊடாக கண்காணிக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 15 வயதான பாடசாலை மாணவி, தாமரை கோபுரத்தின் 29ஆவது தளத்திலிருந்து வீழ்ந்து உயிரை மாய்த்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெருவிலுள்ள கட்டடம் ஒன்றில் இருந்து பாய்ந்து இரண்டு மாணவர்கள் உயிரை மாய்த்திருந்தனர்.

இதன் காரணமாக அவர்களின் நெருங்கிய நண்பியான 15 வயதான குறித்த மாணவி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாக அவரின் தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரை தெரியுமா? பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்!!

காணாமல் போன பெண் ஒருவரை கண்டுபிடிக்க மத்தேகொட பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மத்தேகொட பிஅரதேசத்தை சேர்ந்த 59 வயதான விக்கிரமசிங்க ஆராச்சிகே துலானி என்பவரே காணாமல்போயுள்ளார்.

பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மத்தேகொட பொலிஸ் நிலையத்தின் 071 859 2207 அல்லது 011 278 3776 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற நீரோடைக்குள் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுமி! பெரும் சோக சம்பவம்!!

புத்தளம் – தங்கொட்டுவ, யோகியான வேகொட பகுதியில் பாலர் சிறுமி ஒருவர் நீரோடைக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தங்கொட்டுவ, யோகியான வேகொட பகுதியில் இன்றையதினம் (08-10-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 4 வயதான அனன்யா பரமி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி பாலர் பாடசாலைக்கு சென்றுவிட்டு தனது பாட்டியுடன் வீட்டுக்கு திரும்பியதாகவும், வீட்டுக்கு வந்த சிறுமியை குளிப்பாட்டுவதற்காக பாட்டி சுடுநீர் தயார் செய்ய சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாட்டி அடுப்பில் சுடுநீர் வைப்பதற்காக சென்ற சமயம் குறித்த சிறுமி யோகட் சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், வெளியே சென்ற சிறுமி தனது வீட்டுக்கு பின்பக்கமாக உள்ள பாதுகாப்பற்ற நீரோடைக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற போது சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் குறித்து தங்கொட்டுவ பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு : பாதுகாவலர் ஸ்தலத்தில் பலி!!

பொலன்னறுவை வெலிகந்த நகர் அரச வங்கி ஒன்றில் வங்கி பாதுகாவலரின் துப்பாக்கி வெடித்து ஸ்தலத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (08) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்தவர் , இலக்கம் 113, சுசிரிகம, வெலிகந்த என்ற முகவரியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய டபிள்யூ.டி.ஜி. அவர்கள் அனுர விஜேசிங்க என என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கடமையை முடிக்க, ரிப்பீட்டர் ரக துப்பாக்கியில் சிக்கியிருந்த தோட்டாவை அகற்றுவதற்காக முயற்சித்த போது , துப்பாக்கி வெடித்து, காவலாளியின் மார்பில் பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வெலிகந்த பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 வயது மாணவிக்கு நேர்ந்த சோகம் : ஆசிரியர் கைது!!

11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ஆசிரியர் கடந்த 2 ஆம் திகதி அன்று பாடசாலை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதன்போது, தனது பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.