சிலிண்டர் வெடித்து வெந்துபோன உடம்பு.. கைவிட்ட உறவினர்கள்… கர்ப்பிணியின் கதறல்!!

அனிதா..

பள்ளி படிக்கும் போது கேஸ் சிலிண்டர் வெடித்து தனது உடல் வெந்துபோன நிலையில், தற்போது கர்ப்பிணியாக நின்று உதவிக்காக கதறிய பெண்ணின் காணொளி வைரலாகி வருகின்றது.

அனிதா என்ற இந்த பெண் பள்ளி படிக்கும் போது கேஸ் வெடித்து தீவிபத்தில் சிக்கி தனது உடம்பு சிதைந்து போயுள்ளது. இதில் இவரது வாய் எதையும் சாதாரணமாக சாப்பிட முடியாத அளவிற்கு பாதித்துள்ளது.

குடும்பத்தினர் அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட இந்த பெண் தற்போது கர்ப்பமாக இருந்து வரும் நிலையில், தனக்கு பிரசவம் பார்ப்பதற்கு உதவ வேண்டும் என்று நபர் ஒருவரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

குறித்த நபரும் தான் உதவுவதாக கூறியதோடு, அப்பெண்ணிற்கு தற்போதைய தேவைகளையும் நிறைவேற்றியுள்ளார்.

விமான நிலையத்தில் நடந்த சோகம்.. நகரும் நடைபாதையில் சிக்கி காலை இழந்த பெண்!!

பாங்காக்கில்..

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக விமானநிலையங்களில் நாகரீகத்தின் உச்சத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதை விமான நிலையத்தில் நகரும் நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் எதிர்பாராதவிதமாக பெண் பயணி ஒருவரின் கால் சிக்கிக் கொண்டது.

இதனால் அவரது காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாங்காக்கின் டான் முயாங் விமான நிலையத்தில் இருந்து ஒரு பெண் தெற்கு நாகோன் சி தம்மரத் மாகாணத்திற்கு விமான நிலையத்தின் டெர்மினல் 2க்கு செல்ல இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பெண் பயணியின் கால் நகரும் படிக்கட்டில் சிக்கிக் கொண்டது. இயந்திர படிக்கட்டுகள் இயக்கத்தில் இருந்ததால் அவரால் காலை வெளியே எடுக்க முடியவில்லை.

அவரது மூட்டு தசை, தசைநார் மற்றும் எலும்பு வரை சென்று விட்டது. இதனால் பெண் பயணி கத்தி கூச்சலிட்டார். சக பயணிகள், அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் அவசரகால பட்டனை அணைக்க தடுமாறினர்.

சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு மருத்துவக் குழு விரைந்து அப்பெண்ணை மீட்டு விட்டது. ஆனால் அதற்குள் அவரது கால் துண்டானது. மேலும் காலை இணைக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அந்த பெண் வேறு மருத்துவமனைக்கு தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் விபத்திற்கான காரணத்தை கண்டறிய விமான நிலைய அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்திலிருந்தே அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கு அதிகளவான விண்ணப்பங்கள் : ஜனாதிபதி அலுவலகம்!!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு இலங்கையில் வவுனியா மாவட்டத்திருந்தே அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவை 98.08 விகிதமாக காணப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் ‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500.00 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும் வழங்கப்பட இருப்பதோடு பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000.00 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது.

மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500.00 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000.00 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.

தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் 72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000.00 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000.00 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000.00 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உறுதிபடுத்தப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அதிகளவானவை வவுனியா மாவட்டத்திலிருந்து கிடைத்துள்ளதோடு 98.08 சதவீதமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர் எனவும்,

அடுத்தபடியாக கண்டியிலிருந்து 96.05 சத வீகிதமும் , கிளிநொச்சியிலிருந்து 96 சத வீகிதமும், யாழ்ப்பாணத்திலிருந்து 96 சத வீகிதமும் திருகோணமலையிலிருந்து 95.5 சதவீதமான விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 3,362,040 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக என ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தில் அஸ்வெசும திட்டத்தினால் பாதிகப்பட்ட பயனாளிகள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பதிவு!!

பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ திட்டத்தில் தெரிவு மற்றும் பதிவுகளில் முறைகேடுகள் நிலவுவதாக தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல மாவட்டத்தில் மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையுடன் வவுனியா மாவட்டத்திலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பதிவுகளை கிராம சேவையாளர் பிரிவின் அடிப்படையில் வவுனியா பிரதேச செயலக பிரிவிலுள்ள 42 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று தோணிக்கல், கூமாங்குளம், மூன்றுமுறிப்பு, வெளிக்குளம், கோவில்குளம் ஆகிய ஜந்து கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களின் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் என்பன வவுனியா பிரதேச செயலகத்தில் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஒன்லைன் மூலம் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.

இப் பதிவுகளை முன்னெடுப்பதற்காக 10க்கும் மேற்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளமையுடன் 300க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பயனாளிகள் தங்களது ஆட்சேபனைகளை முன்வைத்து தமது பதிவில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தனர்.

உறக்கத்தில் துடிதுடித்து பலியான இளம் பெண்!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த பார்கவி(23) என்கிற செவிலியர், இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரியில் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் பார்கவி (23). பார்கவி செவிலியர் பட்டயப்படிப்பு முடித்து விட்டு மாதர்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பார்கவியை 2 மணியளவில் பாம்பு ஒன்று கடித்து விட்டது. உடனே பார்கவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் பார்கவியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பார்கவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து பார்கவியின் உடல் ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வாசுதேவன் ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண் செவிலியர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இன்று முதல் வட்டி விகிதங்கள் குறைப்பு!!

இலங்கையில்..

நாட்டில் இன்று முதல் கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, வட்டி விகிதங்களைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பல வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ளன.

கிரெடிட் கார்ட்களுக்கான 36 சதவீத வட்டி விகிதம் அடுத்த மாதம் முதல் 34 சதவீதமாக குறைக்கப்படும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கடந்த வாரம், நாட்டில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பான தரவுகளை மத்திய வங்கி வெளியிட்டது.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் நாட்டில் செயற்பாட்டில் உள்ள கிரெடிட் கார்ட்களின் எண்ணிக்கை 1,929,984 ஆக இருந்தது. அதேசமயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மொத்தம் 1,952,991 கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் இருந்தன.

அதன்படி, நாட்டில் செயல்பாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை சில மாதங்களில் 23,000க்கும் மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வியக்கத்தக்க வாழைமரம் : ஒரு மரத்தில் இத்தனை குலைகளா!!

நுவரெலியாவில்..

நுவரெலியா – ஐபொரஸ்ட் கந்தப்பொலயிலுள்ள தோட்டத்திலேயே வாழைமரம் ஒன்று பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

இந்த வாழைமரம் குலை போட்டுள்ளதுடன் அந்தக் குலையின் கீழ் பகுதியில் மேலும் 4 குலைகள் தோன்றியுள்ளது.இந்நிலையில் இந்த விசித்திர வாழைமரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் அமைந்துள்ளது.

இந்நிலையில் அந்த வாழைமரத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இலங்கையில் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் செயல்.. கண்ணீரில் உறவினர்கள்!!

இலங்கையில்..

இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தனது தாய் உயிரிழந்த போதும், பாடசாலை அணிக்காக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கொழும்பு இசிபத்தன கல்லூரியை சேர்ந்த ஹேஷான் ரந்திமால் என்ற மாணவனே வேதனையுடன் கல்லூரிக்காக வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது.

கொழும்பு இசிபத்தன கல்லூரி அணிக்கும் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி அணிக்கும் இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.இந்தப் போட்டியில் ஹேஷான் ரந்திமால் பங்கேற்ற இசிபத்தன கல்லுரி வெற்றி பெற்றுள்ளது. போட்டி முடிவடைந்ததும் அணியின் சக மாணவர்களை ஹேஷானுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனைவரும் இணைந்து அவரைஅழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் மைதானத்திலிருந்து இருந்த ஏனைய மாணவர்களுக்கு வேதனை அளித்திருந்தது. எனினும் தாய் உயிரிழந்திருந்த போதும் கல்லூரியின் வெற்றிகாக விளையாடிய மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, இனிபத்தன மற்றும் புனித சூசையப்பர் அணியின் வீரர்கள் ஹேஷானின் வீட்டுக்கு சென்று அவரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர்.ஹேஷானின் தாயார் நேற்று காலமானதுடன், அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளது.

இலங்கை மாணவிக்கு தென் இந்திய தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பு!!

இந்தியாவில்…

இந்தியாவின் பிரபல தென் இந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவுள்ள பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவியான ஆஷினி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி இன்று தமிழகம் நோக்கி புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி ஆஷினி இயல்பாகவே சிறப்பாக பாடும் திறனை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நயப்பன தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க கூட்டத்தின் நிகழ்வொன்றின்போது குறித்த மாணவி பாடிய பாடல் வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

மலையகத் தமிழர்களின் அடையாளமாக அதுவும் பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குறித்த இசை நிகழ்வில் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை என சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆண் ஒருவரின் புதிய உலக சாதனை!!

ஸ்பெய்னில்..

ஸ்பெய்னை சேர்ந்த ஆண் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை கிறிஸ்டியன் ரொபர்ட்டோ லோபஸ் ரொட்ரிகஸ் என்பவரே படைத்துள்ளார்.

பெண்களின் 2.76 அங்குலம் குதி உயர்ந்த (ஹை ஹீல்ஸ்) பாதணிகளை அணிந்த நிலையில் 100 மீற்றர் தூரத்தை 12.82 விநாடிகளில் ஓடி முடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை ஜேர்மனியை சேர்ந்த அன்ட்ரே ஓர்டோல்வ் 2019 ஆம் ஆண்டில் 14.02 விநாடிகளில் ஓடியமையே, ஹை ஹீல்ஸ் ஓட்டத்தில் இதுவரை சாதனையாக இருந்தது.

இவர் பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், குதி உயர்ந்த பாதணியுடன் வேகமாக ஓடுவதற்கு தயாராகுவது சவாலாக இருந்தது என கூறியுள்ளார்.

மனிதர்களை பொறாமைப்பட வைத்த நாரைகளின் காதல் கதை.!!

நாரைகள்..

மனிதர்கள் மட்டுமல்ல உயிருள்ள அத்தனை உயிரினங்களுக்கு உணர்வுகள் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. மனிதர்கள் தான் காதலிப்பார்கள், காதலை தியாகம் செய்வார்கள், காதலுக்காக போராடுவார்கள் என்று ஒரு விடயமில்லை.

அந்தவகையில் காதலுக்கு நாம் ரோமியோ -ஜீலியட் மற்றும் முந்தாஜ், சாஜகான் ஆகியவர்களை கூறுவோம். ஆனால் நாம் தற்போது பார்க்க போகும் கதையில் காதலர்களாக இருப்பவர்கள் மனிதர்கள் இல்லை நாரைகள்.

மலினா – கிளிப்படன் என இரண்டு நாரைகள் மனித இனத்தையே மாற்றியமைக்கக்கூடிய வகையில் வாழ்ந்து காட்டியுள்ளது. சுமார் 17 வருடங்கள் இணைந்து வாழ்ந்து 66 குழந்தைகளுக்கு பெற்றோர்களாக இருந்துள்ளன.

இவைகளின் காதலை தெரிந்துக் கொண்ட அந்த நாட்டு அரசாங்கம் கிளிப்படனனின் வருகைக்காக காத்திருந்த சம்பவம் உலக மக்களிடையயே அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. அந்த வகையில் அரைகுறையுமாக தெரிந்து கொண்ட மலினா – கிளிப்படன் காதல் கதையை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.

இலங்கையில் ஆயிரம் ரூபாவை எட்டிய பச்சை மிளகாயின் விலை!!

சந்தையில்..

காய்கறி சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலையும் 800 முதல் 900 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பச்சை மிளகாயின் அளவு பெருமளவில் குறைந்துள்ளமையால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரங்களில் 350 முதல் 500 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகாய், தற்போது ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் நாட்களில் பச்சை மிளகாயின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வறுமையிலும் சாதித்து காட்டிய கிளிநொச்சித் தாய்.!!

இலங்கையில்..

போசாக்கு பற்றாக்குறையின் அடிப்படையில் இலங்கையானது உலகளலாவிய ரீதியில் 6ஆவது இடத்திலும், தெற்காசியாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டை சந்திக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததால் ஒவ்வொருவரின் உணவு முறையும் பாதிக்கப்பட்டது அதிலும் வறிய குடும்பத்தில் உள்ள குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு போசாக்கில்லாமல் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களுக்கு கிளிநொச்சியில் வசித்து வரும் ஒரு தாய் சொந்தமாக சத்துமா செய்துக் கொடுத்து வருகிறார். இலங்கையில் கிளிநொச்சி, ஆனந்தநகர் பகுதியில் தாய் தன் சொந்த முயற்சியில் அனைவருக்கும் 10 ஆண்டுகளாக சத்துமா விற்பனை செய்து வருகிறார் வில்வரட்ணம் ராசலட்சுமி.

இடம்பெயர்ந்து வந்த பிறகு கடன் கொடுத்து மேலதிகமாக சோளம், பசளை என்பவற்றைக் கொடுத்து உதவியிருக்கிறார்கள். அவ்வாறு விளையும் சோளத்தை வேறு எங்காவது விற்பதற்கு பதிலாக நாங்களே அனைத்து சத்துக்களும் கொண்ட இந்த சோளத்தில் அனைவருக்கும் பயன்படும் வகையில் சத்துமா செய்யலாம் என்று யோசனை வந்து இதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : நாளைமுதல் குறையும் மின்கட்டணம்!!

இலங்கையில்..

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அதன்படி புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு அலகிற்கு 30 ரூபாய் என வசூலிக்கப்படும் கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அந்த பிரிவிற்கு வசூலிக்கப்படும் நிலையான கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

60 அலகுகளுக்கு குறைவான பிரிவில் அலகிற்கான கட்டணம் 42 ரூபாயிலிருந்து 32 ரூபாவாகவும், அந்த பிரிவினருக்கு 650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர கட்டணம் 300 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 91 முதல் 120 அலகுகளுக்கு இடைப்பட்ட பிரிவுக்கு அலகு கட்டணம், 42 ரூபாயில் இருந்து 35 ரூபாய் ஆகவும், மாதாந்திர நிலையான கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவை நோக்கி பாத யாத்திரையாக பயணித்த பௌத்த பிக்குகள்!!

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி வணக்கத்திற்குரிய கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று (30.06) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது.

அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியை கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது.

குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் மறைந்த பௌத்த பிக்குகளின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் போயா தினத்தன்று விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.

பௌத்த கலைகலாசார பாரம்பரியத்துடன் குறித்த பாதயாத்திரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் 400 மில்லியன் டொலர் முதலீட்டில் 200 ஏக்கர் காணியில் சீனி உற்பத்தி நிலையம் : அமைச்சரவை அங்கீகாரம்!!

முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் சீனி கைத்தொழிலை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக தாய்லாந்தின் Sutech Sugar Industries Ltd நிறுவனத்திற்கு வவுனியா மாவட்டத்தில் பரந்த நிலப்பரப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த முக்கியத் திட்டமானது 20% அல்லது 120,000 மெட்ரிக் தொன் சீனியை உற்பத்தி செய்வதன் மூலம் இலங்கையின் சர்க்கரைத் தேவையின் கணிசமான பகுதியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

200 ஹெக்டேர் பரப்பளவில் குறுங்காடுகளால் சூழப்பட்ட இந்த நிலம் , பசுமை வயல் சர்க்கரை மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடித்தளமாக நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.