அமெரிக்காவில் உள்ள கடற்கரை ஒன்றில் அலையில் அடித்துவரப்பட்ட இரும்புப் பெட்டி ஒன்று அமெரிக்கர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. டெக்சாஸில் உள்ள கடற்கரை ஒன்றில், அலையில் அடித்துவரப்பட்ட பணம், நகை போன்ற விலையுயர்ந்த பொருட்களை வைக்க பயன்படுத்தும் இரும்புப் பெட்டி ஒன்றை 49 வயதான Jace Tunnell என்ற அமெரிக்கர் கண்டெடுத்துள்ளார்.
ஏதோ பொக்கிஷம் கிடைத்துள்ளது என எண்ணிய குறித்த நபர், அதனுள் தங்கம், பணம் ஏதாவது இருக்கும் என்று எண்ணி, அதைத் திறக்க முயன்றுள்ளார். எனினும், அவரால் அதைத் தூக்கமுடியாததால், தன் மகன் உட்பட 3 பேரை வரவழைத்துள்ளார் Jace.
எவ்வளவோ முயன்றும் அந்தப் பெட்டியைத் திறக்கமுடியாததால், மின்சார அரம் கொண்டு அதை வெட்டித் திறந்துள்ளார்கள். இருப்பினும், திறந்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
காரணம், அந்தப் பெட்டிக்குள், ஈரப்பதத்தை அகற்றுவதற்கு பயன்படும் சிலிக்கா ஜெல் அடங்கிய பாக்கெட் ஒன்று மட்டுமே இருந்துள்ளது. எனினும், பெரிதாக ஏதோ கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தாலும், தன்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை என்று கூறி விழுந்து விழுந்து சிரித்துள்ளார் Jace.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரீட்டா சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 02 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க நேரிட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஏ.33-0-300 ஏர்பஸ் விமானமாகும். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 455 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடந்த 28ஆம் திகதி இரவு 08.20 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஆனால் இந்த விமானத்தின் சக்கர அமைப்பு வளைந்து செல்வதாக கணனி அமைப்பினால் சுட்டிக்காட்டாததால் விமானி 02 மணித்தியால 25 நிமிட பயணத்தின் பின்னர் மீண்டும் 28 ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க நடவடிக்கை எடுத்தார்.
எரிபொருளை சரியான முறையில் பயன்படுத்திய பின்னர் விமானம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பறந்து பத்திரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் 301 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.
எனினும் ஒருவருக்கும் எவ்வித பாதிக்கும் ஏற்படாத வகையில் 2 மணித்தியாலங்கள் வானில் வட்டமிட்டு தரையிறங்குவதென்பது மிகப்பெரிய சவாலாகும் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் விமானி தனது கடமையை சிறப்பான முறையில் முன்னெடுத்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. மற்ற விமானங்கள் மூலம் பயணிகள் ஜப்பானில் உள்ள நரீடாவுக்கு அனுப்பப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
யாழ் அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (29-06-2023) நண்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதான மகேஸ்வரன் மயூரன், அராலி மத்தியைச் சேர்ந்த 29 வயதான ஜெயசுந்தரம் சரோஜன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நேர் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் இருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விபத்தின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவில் படுகாயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடுமையான முயற்சித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இருவரது குடும்பங்கள், உறவினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மற்றும் நண்பர்களின் அழுகையும் துயரமும் வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவுப் பகுதியை சில மணி நேரம் அவல உணர்வை ஏற்படுத்தியது.
வடபகுதியில் உந்துருளி பயணம் மிகவும் அபாயகரமான செயல். அதிகரித்த வேகம், கவனக்குறைவு, என பல தவிர்க்கபட வேண்டிய விடயங்களில் அக்கறை கொள்வதில்லை.
உந்துருளி பயணிக்கும் முன்னர் மிகவும் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானம் எடுக்க வேண்டும் அல்லது உந்துருளி பாவனையை கைவிட வேண்டும். என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற முல்லைத்தீவை சேர்ந்த இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக அதித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாட்களாக வேலைக்கு வராத காரணத்தால் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் விசுவமடு – இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது சிவகுமார் தர்சன் என்ற இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வறுமை காரணமாக சிவகுமார் தர்சன் வேலைக்காக கட்டாருக்கு சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் உயிரிழந்த மற்றைய இளைஞர் தொடபில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தமது குடும்ப வறுமையை போக்க வெளிநாட்டுக்கு வேலைதேடிச்சென்ற இளைஞர்கள் உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவரே சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை காட்சிப்படுத்தி உள்ளார். அந் நபரின் வீட்டு வீதியோரமாக பலரும் குப்பைகளை வீசி சென்றதனால் அவர் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்தவர், ஒரு பொம்மை ஒன்றினையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டிவைத்தார். அதோடு , “சூனியம் வைக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்” என பதாகையும் எழுதி அவர் காட்சிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் அவர் வைத்த பதாகையில் பின்னர் அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு (30.06) 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிகுளம் பகுதிக்கு ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினர் அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது, கிராம மக்கள் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைந்துள்ளனர்.
அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஜீப் வண்டியும் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து இரு வாள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்வம் தவேந்திரன் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பண்டாரிகுளம், மகாறம்பைக்குளம் மற்றும் வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(30.06.2023) அதிகாலை மதுரங்குளி – கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜிப் பெருநாள் திடல் தொழுகை பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கை குடா வயல் திடலில் இன்று (29.06) காலை இடம்பெற்றது.
முஸ்லிம்களின் தியாகத் திருநாளான புனித ஹஜ்ஜிப் பெருநாள் நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் வவுனியாவிலும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் விசேட தொழுகைகளுடன் கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜிப் பெருநாள் திடல் தொழுகை ஜமாத்தின் தலைவர் அஷ்ஷேய்க் ஸாதிகீன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டதுடன் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினை அடுத்து இரு அரச உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனுராதபுரம் பிரதேச செயலக உதவி முகாமையாளர் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக எழுதுவினையர் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் பதின்ம வயது தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சிறுமியின் சகோதரன் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் தனது நண்பருடைய வீட்டில் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார்.
இந் நிலையில் நண்பனுடைய தங்கையின் மீது போதைப் பொருள் வாங்க சென்றவருக்கு காதல் மலர்ந்தது. நெடு நாட்களாக மலர்ந்த காதல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சுமார் 15 வயது மதிக்கத்தக்க தங்கை வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புலத்சிங்கள பிரதேசத்தில் தனது மகள் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு எதிர்வரும் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் குறித்த பெண் தனது முன்னாள் காதலனிடம் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி பெறுவதற்காக சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
புலத்சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதி அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞருடன் சில காலமாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். சிறிது காலத்தின் பின்னர் அந்த உறவை நிறுத்திய இளம்பெண் வேறு பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞனுடன் மீண்டும் காதல் உறவை ஆரம்பித்துள்ளார்.
அதன் பின்னர் இரு தரப்பு பெற்றோரின் ஆசிர்வாதத்தையும் பெற்று அடுத்த மாதம் திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், குறித்த பெண் தனது பழைய காதலனை சந்தித்து தனது திருமணத்திற்கு அனுமதி கோர சென்றுள்ளார். அங்கு அவர் அவருடன் மூன்று நாட்கள் கழித்தார்.
எவ்வாறாயினும், மேலதிக தகவல்களைக் கேட்டபோது, நீண்ட விசாரணையின் பின்னர், பழைய காதலன் மற்றும் புதிய காதலன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, புதிய காதலன் பெண்ணை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததால் சம்பவம் சமரசம் செய்யப்பட்டுள்ளது.
பின்லாந்து நாடானது உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணிகள் கப்பலின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில், கடல் சோதனைகளுக்காக திறந்த நீரில் முதல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள Royal Caribbean International’s Icon of the Seas என்ற இந்த கப்பலானது 365 மீட்டர்கள் நீளம் கொண்டது.
குறித்த கப்பலானது 250,800 டன் பாரம் தாங்கக் கூடியது என்பதுடன், உலகின் மிகப்பெரிய நீர் பூங்காவையும் கொண்டுள்ளது. இதில் 5610 பயணிகள் மற்றும் 2350 பணிக்குழுவுக்கும் பயணிக்க வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது உலகில் இருக்கும் மிகப்பெரிய பயணிகள் கப்பல் Wonder of the sea ஆகும். 1188 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலான கடந்த வருடம் தனது பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள ஜனாதிபதியும் எதிர்பார்த்துள்ளார்.
அதன்படி, இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்புடன் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 15 இலட்ச அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் கடுமையான நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.