




வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கட்டங்கள் நகரசபையால் இடித்து அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபை செயலாளர் தெரிவித்தார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் கடந்த 2017 ஆம் ஆண்டுவரை வவுனியாவின் பிரதான அரச பேருந்து நிலையமாக செயற்ப்பட்டுவந்தது.

இந்நிலையில் வவுனியா யாழ் வீதியில் அனைத்து வசதிகளுடனும் கூடிய புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதுடன், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையமூடாகவே அரச தனியார் பேருந்துகள் சீரான முறையில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் பழைய பேருந்து நிலையப் பகுதியில் பயன்பாடற்று காணப்பட்ட பழமையான தரிப்பிடக் கட்டங்கள் நகரசபையால் அகற்றப்பட்டுவருகின்றது. அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், ஒரு குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்ததால் குழந்தையைக் காண முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த தாய், மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டது வேலூரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் விக்கேஷ்(28), இவரது மனைவி சுரேகா(23). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டு ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் கருவுற்ற சுரோகவிற்கு கடந்த 23 ம் தேதி பிரவச வலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அன்றிரவு சுரேகாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் ஒரு குழந்தை எடை குறைவாக இருந்ததால் 2 குழந்தையும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தையை செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். இதில் ஒரு குழந்தையை 2 நாட்களுக்கு முன்பு தாய் சுரேகாவிடம் கொடுத்துள்ளனர். மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சுரேகா தனது இன்னொரு குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். குழந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில், சிகிச்சையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குழந்தையைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த சுரேகா நேற்று மாலை 5.30 மணியளவில் பிரவச வார்டில் உள்ள 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயன்றுள்ளார்.
அப்போது, பிரவச வார்டு கட்டிடத்தின் போர்டிகோ மீது விழுந்துள்ளார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், படுகாயமடைந்த சுரேகாவை மீட்டு, அங்குள்ள அவரச சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுரேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தவமிருந்து பெற்ற குழந்தை பார்க்க முடியாத ஏக்கத்தில், 4 வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு செல்லும் கதவு எப்படி திறக்கப்பட்டிருந்தது என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது.
பிரசவ வார்டில் உள்ள தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள லிப்ட் பழுதாகியதாகவும் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால் மொட்டை மாடியில் கதவு திறக்கப்பட்டு இருந்தது என்றும் கூறினர்.
அப்போது சுரேகா நான்காவது மாடியில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார் அவரோடு அவரது தாயும் இருந்துள்ளார் என தெரிவித்தனர்.

நெசவாளி ஒருவர் 200 கிராம் தங்கத்தில் திருமண புடவை நெய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மாநிலமான தெலங்கானா, நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி தொழிலுக்கு புகழ்பெற்றது. இதனால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளது.
அந்தவகையில் திறமையான நெசவாளர்களில் ஒருவரான ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள சிரிசில்லாவைச் சேர்ந்த நல்ல விஜய் குமார் என்பவர் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தும் விதமாக தங்கப் புடவை நெய்து பேசப்பட்டு வருகிறார்.
இவர், ஏற்கெனவே பல விஐபிக்களின் புகைப்படங்கள், பாரதம், ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணர் படங்கள் ஆகியவற்றை புடவைகளில் நெய்து பாராட்டுக்கள் பெற்றுள்ளார்.
அந்தவகையில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக விஜய் குமாரிடம் தங்கப் புடவையை நெய்யுமாறு கேட்டுள்ளார்.
இதற்காக 200 கிராம் தங்கத்தைக் கொண்டு 10 முதல் 12 நாட்கள் வரை வடிவமைத்து புடவையை நெசவு செய்தார். 5.5 மீட்டர் நீளம் மற்றும் 49 அங்குல அகலம் கொண்ட இந்த புடவை மொத்தம் 900 கிராம் எடை கொண்டது.
செப்டம்பர் 17-ம் திகதி திருமணத்துக்காக நெய்யப்பட்ட இந்தப் புடவையின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். தங்கத்தால் புடவை நெசவு செய்யும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நெசவாளி விஜய் தனது வேலையில் செய்து காட்டியுள்ளார்.

ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானம் என்று குறிப்பிட்டிருந்த வருமான சான்றிதழானது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் மிக ஏழ்மையான குடும்பம் ஒன்று உள்ளது. புந்தேல்கண்டில் உள்ள சாகர் நகரில் இருக்கும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 என்று தாசில்தார் கையெழுத்துடன் வருமானச் சான்றிதழ் (income certificate) வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழானது பண்டா தெஹ்சிலில் உள்ள கோக்ரா கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் சாதருக்கு சொந்தமானது ஆகும். கடந்த 2014 -ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த சான்றிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவர்களின் குடும்பத்தில் இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று மொத்தம் 5 பேர் இருக்கின்றனர். குடும்ப வறுமையின் காணமாக கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களின் இளைய மகன் பல்ராம், 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பள்ளியில் ஸ்காலர்ஷிப் பெறுவதற்காக வருமான சான்றிதழை கொடுத்துள்ளார்.
பின்னர், உதவித்தொகை வராததால் ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அப்போது ஆசிரியர்கள் சரிபார்த்த போது சான்றிதழில் குறிப்பிட்டுள்ள வருமானம் தவறானது என தெரிய வந்தது.
இதுபற்றி பல்ராம் கூறுகையில், “வருமான சான்றிதழை CSC மையத்தில் இருந்து பெற்றதாகவும், குடும்ப வருமானம் ரூ.40,000 என தெரிவித்திருந்தும் அதில் ரூ.2 என குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் சான்றிதழில் தவறாக இருந்ததை ஊழியர்களோ, சான்றிதழில் கையெழுத்திட்டு வழங்கிய தாசில்தாரோ கவனிக்கவில்லை.
இதையடுத்து, அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு ரூ.40,000 வருமான சான்றிதழ் வருமான வழங்கப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழ் வழங்கிய தாசில்தார் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாடசாலை ஒன்றில் ஆசிரியையினால் ஒரு மானவியிடம் கேள்வி கேட்டவாரு எடுக்கப்பட்ட கானொளி ஒன்று முகநூலில் இன்று போடப்பட்டு ஏராலமான பரிதாபங்கள் பகிரப்பட்டன.
ஆசிரியர் காலை உணவு என்னவென்று கேட்டதற்கு தண்ணீரில் சீனி கலந்து குடித்தேன் என கூறினால்.
பகிரப்பட்ட காணொளி மூலம் சில மனிதநேயம்கொண்ட உறவுகள் அந்த மாணவிக்கு உதவி செய்கிறார்கள்.

கொழும்பு களுபோவில பிரதேசத்தில் 13 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முகங்கொடுத்து மிகவும் திறமைச் சித்தியடைந்த இரட்டைச் சகோதரர்கள் தொடர்பிலான செய்தியொன்று பதிவாகியுள்ளது.
நுகேகொட களுபோவில அன்டர்சன் வீதி பகுதியில் வசிக்கும் இந்த இரண்டு இரட்டை சகோதரர்களில் பெண் பிள்ளையான டபிள்யூ.பி.பி. நித்திகா சத்யா, நுகேகொட, சென்.ஜோன்ஸ் (மகளிர்) கல்லூரியில் 8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் போது, அண்மையில் நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கு முகம்கொடுத்து, பரீட்சையில் ஏழு திறமைச் சித்திகளையும் ஒரு சாதாரண சித்தியையும் பெற்றுள்ளார்.
மேலும், அவருடன் அதே பரீட்சைக்கு முகம்கொடுத்த கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் இவரது சகோதரன் டபிள்யூ.பி.பி. நிஷான் சஹாஜித் என்ற மாணவனும் இதே போன்று சித்தி பெற்றுள்ளார்.
சிறுவயதிலேயே சாதாரணதர பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில் இரு பிள்ளைகளும் குறித்த பாடசாலைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேறிய நிலையில், தனியார் கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் இந்தச் சாதனையை எட்ட முடிந்ததாக இரட்டைச் சகோதரர்களின் தந்தை டபிள்யூ. பி. பி.நிஷாந்த தெரிவித்தார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து கட்டளைகளையும் வழங்கியுள்ளது.
எனவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போதுமான எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் வாரந்தோறும் திட்டமிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான தீர்மானங்கள் வெளிப்படைத் தன்மையுடன் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்ற தரப்பினரால் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலையை குறைக்க முடியாது, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திற்குள் பெரிய அளவிலான எரிபொருள் சலுகைகளை வழங்குவது சாத்தியமில்லை.
எனவே, தற்போதுள்ள சூத்திரம் மற்றும் சட்டத்தின்படி அண்மைய எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஒரேயடியாக பாரிய சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை எனவும், இதன் காரணமாக, வரிசைகள் உருவாகும் நிலை ஏற்படும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் குடும்பப் பெண்ணொருவர் காணாமல் போனதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று (01.10.2024) காலை 10 மணியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகபாரம் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த அழகராசா லக்சுமி (வயது 50) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இவர் தொடர்பான விடயங்களை தெரிந்தவர்கள், கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
கணவன் – 0779855412
மகன் – 0767061231

2026 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க கிரீன் கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது. இந்த திட்டமானது இன்று (02), மதியம் 12 மணிக்கு தொடக்கம் நவம்பர் 5, வரை ஒன்லைன் பதிவுக்காக திறந்திருக்கவுள்ளது. ஆண்டுதோறும் 55,000 நபர்களுக்கு அமெரிக்காவில் வசிக்க இந்த விசா வழங்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த திட்டத்தின் மூலம் குறைந்த குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அமெரிக்க குடியேற்ற விசாவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.
மேலும் இந்த விண்ணப்பத்திற்காக http://dvprogram.state.gov என்ற இணையத்தளத்திற்குள் நுழைய முடியும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

வங்கி மோசடி நடவடிக்கைகள் குறித்து தமது வாடிக்கையாளர்களுக்கு சம்பத் வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பத் வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”வங்கி மோசடி நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கும்போது, பின்வருவனவற்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
உங்கள் தனிப்பட்ட தகவலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் கடவுச் சொற்கள், PIN இலக்கங்கள், OTP இலக்கங்கள் போன்ற இரகசிய தகவல்களை எந்த சூழ்நிலையிலும் மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதை தவிர்க்கவும்.
கணக்கு உள்நுழைவுக் கட்டுப்பாடு, உங்கள் கணக்குகளை இயக்க மூன்றாம் தரப்பினரை அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அதிகாரமளிக்கப்படாத கொடுக்கல்வாங்கல்கள் நிகழும் பட்சத்தில் நீங்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டியதுடன் சட்ட அமுலாக்கல் முகவராண்மைகளுடன் ஒத்துழைக்க வேண்டப்படுவீர்கள் என்பதை தயவு செய்து கருத்திற்கொள்ளவும்.”என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சமூக நலன்புரி திட்டங்களை முன்னெடுக்க சம்பத் வங்கிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290 ரூபாய் 30 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது.
முன்னதாக கடந்த 2023 ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 298.91 ரூபாவாக காணப்பட்டது. இந்தநிலையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி ரூ 300ஐ விட வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 399 ரூபாய் 22 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 333 ரூபாய்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபாய் 21 சதம், விற்பனைப் பெறுமதி 356 ரூபாய் 61 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 79 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 48 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 62 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 65 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 8 சதம்.

துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராம பாடசாலையாகிய மு/ ஐயன்கன் குளம் மாகாவித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இன்பராசா நிலாயினி என்ற மாணவி 9A சித்தியினை பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இக்கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் வழிகாட்டலின் கீழ் வளர்ந்து இப்பெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.
கிழக்கு,மத்திய மற்றும் வடமத்தியமாகாணங்களிலும்பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி மெல்போர்ன் யெல்லிங்போ பகுதியில் மாலை 4.40 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞனால் காரை கட்டுப்படுத்த முடியாமையால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
பேர்விக் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஸ்டீபன் என்ரூ என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான சம்பள உயர்வு சாத்தியமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
சம்பள அதிகரிப்பு எந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்பதும் பல கட்டங்களில் செய்யப்படுமா என்பதும் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம்.
எனினும், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.