இயக்குனர் திருக்குமரனின் இயக்கத்தில் வளர்ந்து வரும் மான் கராத்தே படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது.
பார்வையையே மறைக்கும் கடும் மூடுபனியும், போக்குவரத்தை சீர்குலைக்கும் மோசமான வானிலையும் அங்கு நிலவி வரும் போதிலும், நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை ஹன்சிகா மோத்வானியும் அங்கு இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானிலை தெளிவாக இல்லாத காரணத்தால் சண்டிகருக்கு வரும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் மூடுபனியால் எதிரில் இருப்பவற்றையே பார்க்கமுடியாத நிலை அங்கு நிலவுகின்றது. சண்டிகரிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே உள்ளது.
ஆனால் இந்தத் திரைப்படக்குழுவோ சண்டிகரிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் குறைந்த அளவில் வீடுகளைக் கொண்ட கோதுமை வயல்களில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது.
தினமும் சண்டிகரிலிருந்து இந்தக் குழுவினர் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இங்கு எடுக்கப்பட்டுவரும் ஒரு பாடல் காட்சிக்கு பிருந்தா மாஸ்டர் நடனக் காட்சிகளை அமைத்துள்ளார். இதில் ஹன்சிகா லுங்கி சட்டையுடன் நடனமாடும் காட்சி சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று தயாரிப்புக் குழு தெரிவிக்கின்றது.


சிரியாவில் நடைபெற்றுவரும் கலவரத்தால் 2 வார காலத்தில் சுமார் 1069 பேர் பலியானதாக மனித உரிமை நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
எதிர்பாராத இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணமடைந்துள்ளார் என அவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உலக கிண்ணத் தொடருக்கான 20- 20 போட்டியின் இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரத் ரத்னா விருதை வழங்கவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 19ம் திகதி யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து மாகாண சபை நிருவாகம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான சவுரவ் கங்குலி அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
பிரிட்டன் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் தேவைப்படுவதால் இந்தியாவிலிருந்து மருத்துவர்களை தெரிவு செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
உலகில் புகைப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 கோடி என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.