நிலவில் காணப்படும் மர்மப் பொருள்!!

Moonபூமியை கூகுள் ஏத் படமெடுப்பது போல் நிலவை கூகுள் நிலா படமெடுத்து வந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட மர்மபொருள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது படங்களில் விழுந்தது.

முக்கோண வடிவில் இருந்த அந்த மர்மபொருளின் முனைகளில், ஒளிரும் தன்மை கொண்ட 7 சிறு புள்ளிகள் காணப்பட்டன என்பது, குறிப்பிடத்ததக்கது.

அண்டார்டிகா பகுதியில் கூட முன்னதாக ஒரு சமயத்தில் இது போன்ற மர்ம கட்டமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

நிலவை ஆராயச்சென்ற விண்கலமாக கூட இது இருக்க வாய்ப்புள்ளதாகவும் அல்லது நிலவின் அடித்தளத்தை மனிதர்கள் ஆக்கிரமித்து கொண்டதற்கான அறிகுறியாக இது இருக்கக்கூடும் என்றும் கூறிப்படுகிறது.

விவரிக்க முடியாத அளவிற்கு இப்பொருள் காணப்பட்டதாகவும், அதன் முனைகளில் ஏழு ஒளிரும் புள்ளிகள் உள்ளதாக இது தொடர்பான அமானுஷ்ய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ரீல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது நிலாவில் வடக்காக 22042´38.46N தீர்க்க ரேகையிலும் கிழக்காக 142034´44.52E தீர்க்க ரேகையிலும் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் சேர்க்கப்படுவர் : உதய பெரேரா!!

Udaya Pereraகிளிநொச்சியை போன்று யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

வெற்றிலைக்கேணி உணவத்தை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விஷேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

யாழில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒன்று இல்லை பாதுகாப்புக்காகவே இராணுவம் இங்கு நிலைகொண்டுள்ளது அங்கு இராணுவத்திற்கு தேவையான காணிகள் எடுக்கப்பட்டு ஏனையவை மக்களிடம் விரைவில் கையளிக்கப்படும்.

யாழில் இருந்த மினி முகாம்கள் தற்போது கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றது. விரைவில் அனைத்து மினி முகாம்களும் அகற்றப்பட்டு விடும்.

கிளிநொச்சியில் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை இணைத்து கொண்டது போல எதிர்காலத்தில் யாழ்ப்பாண தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றார்.

 

வீசா ஒழுங்குக்கு அப்பால் செயற்பட்டால் நாடு கடத்தல் : இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை!!

Australia Flagஇலங்கைக்கு செல்லும் அவுஸ்திரேலியர்கள் அங்கு வீசா ஒழுங்குகளுக்கு அப்பால் செயற்படக்கூடாது என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

அவ்வாறான நடவடிக்கையின் போது அவுஸ்திரேலியர்கள் நாடு கடத்தப்படும் நிலை ஏற்படும் என்றும் அந்த நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அத்துடன் அந்த அறிக்கையில் இலங்கையின் பல பகுதிகளிலும் டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளமையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் தமது பதிவுகளை அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.

 

3 அரிய சிற்பங்களை இந்தியாவிடம் திருப்பியளித்த அமெரிக்கா!!

Indiaஇந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, மூன்று அரிய சிலைகளை அமெரிக்கா திருப்பியளித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கைது விவகாரத்தில் ஒரு மாதமாக முடங்கியுள்ள இந்திய – அமெரிக்க உறவை புதுப்பிக்கும் வகையில் இந்த சிற்பங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நியூயோர்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இவ்விழாவில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் விஷ்ணுலட்சுமி சிலை, மணல் கல்லில் உருவாக்கப்பட்ட சிவபார்வதி சிலை, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புத்தர் சிலை ஆகியவற்றை இந்திய துணை தூதர் தியானேஷ்வர் முலாயிடம் ஒப்படைத்தனர்.

 

வவுனியாவில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் நினைவு உதைப்பந்தாட்டப் போட்டியில் மருதநிலா அணி சம்பியன்!!(படங்கள்)

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த 14ம் திகதி யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் நினைவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வவுனியா மருதநிலா உதைப்பந்தாட்டக் கழகம் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போட்டியில் 17 அணிகள் பங்குபற்றின. இதில் இறுதிப் போட்டியில் வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ் ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் கற்குழி மருதநிலா விளையாட்டுக் கழகமும் மோதியது. இதில் 1:2 என்ற கணக்கில் மருதநிலா வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கியது.

வவுனியா சம்மேளனப் பொருளாளர் ஏ.ஆர்.எம்.நரிஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் இறுதிப் போட்டியில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ரஞ்சித் ரொற்றிக்கோ உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

1 3 4 2

 

 

சிம்புவுக்கு அடுத்ததாக பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா!!

Nayanthara

நயன்தாரா என்றாலே சர்ச்சைதான் என்கிற அளவுக்கு நாளுக்கு நாள் எதாவது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிகர் சிம்புவுடன் கொஞ்ச காலம் காதலில் இணைந்திருந்தவர் பின் என்ன காரணத்தாலோ அவரை விட்டு பிரிந்தார்.

படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். அதன் பின் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று, பின் நின்று போனது. அப்போதும் அப்செட்டான நயன் திரைப்படங்களில் நடிக்காமல் விலகியிருந்தார்.

தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி நிறைய படங்களுக்கு ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதுவும், இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பத்தில் மறுத்தவர் பிறகு சம்மதித்தார்.

அதே போல தற்போது பிரபுதேவா இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார்.

 

தமிழ் நிபுணர்களின் மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது!!

Tamilதமிழகத்தில் இயங்கும் தமிழ் கலாசாரத்துக்கான நிலையம் மூன்று நாள் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதில் உலகளாவிய ரீதியில் செயற்படும் 35 தமிழ் நிபுணர்கள் பங்கேற்கின்றனர் என்று தமிழ் கலாசாரத்துக்கான நிலையத்தின் நிறுவுனர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இருந்து ஆர் கார்த்திகேசு, சண்முக சிவா, முத்து நெடுமாறன், கனடாவில் இருந்து ஏ முத்துலிங்கம் மற்றும் சீரன், அவுஸ்திரேலியாவில் இருந்து எஸ் பொன்னுத்துரை, பிரான்ஸில் இருந்து நாகரத்னம் கிருஸ்ணா, ஜெர்மனில் இருந்து உல்ரிச்சி நிக்கலொஸ், சீனாவில் இருந்து கலைமகள், சிங்கப்பூரில் இருந்து சீதாலக்சுமி, அழகையா பாண்டியன் ஆகியோர் இந்த பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டின் போது 7 அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் சர்வதேச ரீதியாக தமிழ் இலக்கியம், ஊடகம் தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளன என்று மாநாட்டு ஏற்பாட்டாளரான சிரேஸ்ட ஊடகவியலாளர் மாலன் தெரிவித்துள்ளார்.

 

யாழில் இரு மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை!!

Abuseதந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தனது 13, 14 வயதுடைய இரு பிள்ளையையும் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரு சிறுமிகளும் நீதிமன்றக் கட்டளைக்கமைய வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரான்ஸ் ஜனாதிபதியின் கள்ளக் காதலால் மனைவி தற்கொலை முயற்சி!!

France

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி வலேரி டிரைர்வைலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலண்டே, 41 வயதான ஜூலி காயட் என்ற நடிகையுடன் தொடர்பு வைத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதனால் ஜனாதிபதியின் மனைவி வலேரி டிரைர்வைலர் அதிகமான மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகையுடன் ஏற்பட்ட தொடர்பால் அதிபர் ஹாலண்டே, 48 வயதான தனது மனைவிக்கு பிரிவு ஒப்பந்தத்தை அனுப்பினார். அதற்குள் வலேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த திட்டம் முறியடிக்கப்பட்டது.

நடிகை ஜூலி காய்ட்டுடன் தான் ஜனாதிபதியாவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாக தொடர்பு ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள ஹாலண்டே மேலும் அது பற்றி கருத்து கூற மறுத்துவிட்டார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள மனைவியைக் காண பிரான்ஸ் ஜனாதிபதி இதுவரை செல்லவில்லை. எனினும், பூங்கொத்துக்களை அனுப்பினார்.

 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி!!

Aus

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பிரிஸ்பேனில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்து திணறியது. அதன் பின் மோர்கன் அதிரடியாக விளையாடி சதம் அடித்து சரிவில் இருந்து மீட்டார்.

அவரது சதத்தில் 4 பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் எடுத்தது. மோர்கன் 106 ஓட்டத்திலும், பட்லர் 49 ஓட்டத்திலும் ஆட்டம் இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து 301 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 301 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 

 

யாழ் ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை, 12 பேர் விளக்கமறியலில்!!

Jailயாழில் கைதான ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் நடைபெற்ற வாள் வெட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, ஆவா எனும் குழுவைச் சேர்ந்த 13 பேரை கடந்த 6 ம் திகதி கோப்பாய் பொலிசார் கைது செய்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் நேற்று நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டன. விசாரணைகளின் போது ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது. ஏனைய 12 பேரையும் எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஆவா குழுவை சார்ந்த ஏனையவர்களையும் பொலிசார் தொடர்ந்தும் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற பெண் ஒருவர் உள்ளிட்ட ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விசாரணைகள் முடிந்த பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்ற ஆவா குழுவை சார்ந்தவர்களின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 30க்கும் அதிகமானவர்களே ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ் வழக்கு தொடர்பான செய்திகளோ படங்களோ ஊடகங்களில் வெளியாக கூடாது என்றே அவர்கள் மிரட்டியுள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியை கண்டதும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டனர்.

இவ் மிரட்டல் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முதல் இன்னிங்சில் 428 ஓட்டங்களை விளாசியது இலங்கை அணி!!

Dilruwanபாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது இலங்கை அணி.

நேற்று முன்தினம் துபாயில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இலங்கை சார்பில் டில்ருவன் பெரேரா 95 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 91 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

வவுனியா பம்பைமடுவில் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தொருக்கான சுகாதார பராமரிப்பு நிலையத் திறப்பு விழா!!(படங்கள்)

முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தொருக்கான சுகாதார பராமரிப்பு நிலையத் திறப்பு விழா நிகழ்வு இன்று 17.01 வவுனியா பம்பைமடு ஆயர்வேத மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது.

இன்நிகழ்வு கலந்து கொண்ட வடமாகான முதல் அமைச்சர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் விசேட தேவைக்குட்பட்டோரை மையப்படுத்தி அவர்களின் தேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தல் அமைக்கப்பட்ட “வைகறை” நிலையத்தை திறந்துவைத்தார்.

இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவசத்திஆனந்தன் மற்றும வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன், கல்வி பண்பாட்டு அமைச்சர் குருகுலராஜா உட்பட வவுனியா வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கனக்கானோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

v1 v2 v3 v4 v5 v6 v7 v8 v9

 

 

வவுனியா மாணவர்களுக்கு வங்கி வைப்பு புத்தகங்களையும், கற்றல் உபகரணங்களையும் வழங்கிய பா. உ. சிவசக்தி ஆனந்தன்!!(படங்கள்)

வவுனியா குருக்கள் புதுக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கிந்துஜா பாலச்சந்திரன் (142 புள்ளிகள் -2009ம் ஆண்டு) விஜயகுமார் யனோசன் (168 புள்ளிகள் – 2013ம் ஆண்டு) இருவருக்குமான கௌரவிப்பு பாடசாலை சமுகத்தால் 16.01.2014 நேற்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பதக்கங்கள் அணிவித்தும், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவித்ததோடு, சிறந்த பெறுபெறுகளைப்பெற்றுக்கொண்ட 11 மாணவர்களுக்கு தலா 3,000 ரூபா வீதம் வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகங்களையும், 1 முதல் 11ம் தரம் வரையான மாணவர்களுக்கு ரூபா 30,000 பெறுமதியான கற்றல் உபகரணங்களையும் வழங்கினார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரிடம், அதிபர் ஆசிரியர்களால் பாடசாலையின் வளப்பற்றாக்குறைகளை விளக்கி தேவைகள் அடங்கிய கோரிக்கை மனுவும், பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்தால் பாடசாலைக்கென தனியான பாலர் பாடசாலை அலகு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் வெங்கலச்செட்டிக்குள கோட்டக்கல்வி அதிகாரி க.நித்தியானந்தன், வவுனியா தெற்கு வலயப்பிரதிநிதி இ.மாதவன், குருக்கள் புதுக்குளம் கிராம அலுவலர் ச.இராசரெத்தினம் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களுமாக இணைந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பித்த ஆசிரியர் திருமதி .இராசரெத்தினத்தை பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசில்களை வழங்கியும் கௌரவித்ததோடு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

1 2 3 5 6 9 10 11 12

 

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை!!

MURDERகிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் யூன் மாதம் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற கிளிநொச்சி பளையை சொந்த இடமாகவும், கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் (35) என்பவரே 16.01.2014 அன்று அவுஸ்ரேலியாவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேதீஸ்வரன் குறித்த தினத்தன்று தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் சிலர் இளைஞர்கள் வீட்டின் கதவினை தட்டியுள்ளனர். இதன்போது வீட்டு உரிமையாளர்கள் கதவினைத் திறந்து போது உள் நுழைந்த இளைஞர்கள் கேதீஸ்வரன் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இறந்தவரின் உடலினை கிளிநொச்சியில் உள்ள அவரின் வதிவிடமான ஊற்றுப்புல கிராமத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கேதீஸ்வரன் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மனைவியும் சிறு குழந்தைகளும் ஊற்றுப்புலத்தில் வசித்து வருகின்றனர்.

 

யாழில் பெண்ணொருவரின் நெஞ்சுப் பகுதியை வெட்டியவர் கைது!!

Arrestயாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியில் சேஷ்டை செய்ய முற்பட்டபோது, தடுத்த பெண்ணொருவரின் நெஞ்சுப் பகுதியை வெட்டிய நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கரவெட்டி தெற்கைச் சேர்ந்த இந்திரன் நிமல்சன் (33) என்பவரே நேற்று கைது செய்யப்பட்டதாக நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரட்ண மாவட்டகே தெரிவித்தார்.

கடந்த 14ம் திகதி புற்களை வெட்டிக் கொண்டிருந்த குறித்த பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்ட குறித்த சந்தேக நரை அப்பெண் அடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெண்ணின் கையிலிருந்த கத்தியைப் பறித்து நெஞ்சுப் பகுதியை வெட்டிவிட்டு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.