இதுவரை வீரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

Veeram

அஜித்தின் வீரம் படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் 31 கோடி வசூல் செய்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடி சேர்ந்த வீரம் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் திகதி வெளியானது.

நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜித் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வீரம் வெளியான அன்று மட்டும் தமிழகத்தில் 7 கோடி வசூல் செய்துள்ளது. வீரம் படத்திற்கு குட்டீஸ்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இப்படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் 31 கோடி வசூலித்துள்ளது.

வார இறுதி நாட்களில் தமிழகத்தில் மட்டும் 15.5 கோடி வசூலித்துள்ளது.

 

படப்பிடிப்பிற்காக தாதாவை சந்தித்த சந்தானம்!!

படப்பிடிப்புக்காக தாதாவை சந்தித்து அனுமதி வாங்கியுள்ளாராம் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கொமடி ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம்.

Santhaanamஸ்ரீநாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடப்பாவுக்கு பட குழு சென்றது. அப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால் உள்ளூர் தாதாவின் அனுமதி பெற்றால்தான் முடியும் என்று கூறியுள்ளனர்.

பிறகு சந்தானம் தானே அந்த ரிஸ்க்கை எடுப்பதாக கூறி தாதாவை அவரது வீட்டில் சந்தித்து அனுமதிகேட்டுள்ளார்.

அவரிடம் தாதா அனுமதி தரணும்னா ஒரு கண்டிஷன் என்றாராம். என்னன்னு சொல்லுங்க என சந்தானமும் பயத்துடன் கேட்க, படப்பிடிப்பு முடிந்து பட குழுவினர் ஊர் திரும்புவதற்கு முன் என் வீட்டிற்கு எல்லோரும் வந்து என்னுடன் அமர்ந்து சாப்பிட்ட பிறகுதான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

தாதாபோட்ட கண்டிஷனை கேட்ட சந்தானம் எங்களுக்கு நேரம் இருக்காது. ஆனால் உங்களுக்காக வருகிறோம் என்று பிகுகாட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாராம்.

 

ஸ்ரீதிவ்யா எடுத்த அதிரடி முடிவு!!

Sri Divya Portfolio Pics

கட்டுக்காவலை தளர்த்தெறிந்துவிட்டாராம் ஊதா கலரு ரிப்பன். வாலிபர் சங்கத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா தனது குழந்தை முகத்துடன் கூடிய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

அறிமுக படத்தில் கிடைத்த வெற்றியால் பல படங்களின் வாய்ப்புகளையும் பெற்று கோடம்பாக்கத்தில் நம்பர் வன் நடிகையாக வலம் வரும் இவர் படப்பிடிப்பு தளத்தில் மௌனதேவதையாம்.

யாருடனும் அதிகமாக பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவர் இனிமேல் அப்படி இருக்கக்கூடாது என்ற முடிவினை எடுத்துள்ளாராம்.

இந்த மௌனமானது வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதை புரிந்து கொண்ட அவர் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோக்களுடன் ஜாலியாக சிரித்து பேசி நேரத்தை செலவிடுகிறாராம்.

 

சௌரவ் கங்குலிக்கு டாக்டர் பட்டம்!!

Gangulyஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலிக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் சவுரவ் கங்குலி.

இரண்டாண்டுகளுக்கு முன் கங்குலிக்கு, அசாம் பல்கலைகழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நிலையில் மேற்குவங்கத்தின் சிப்பூர், பெங்கால் பொறியியல் கல்லூரி டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கான கங்குலியின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. பெப்ரவரி 25ம் திகதி நடைபெற உள்ள கல்லூரியின் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் வேந்தரும் மாநில ஆளுநருமான எம்.கே. நாராயணன், இப்படத்தை வழங்குவார்.

 

 

மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள தேவயானியின் தந்தை!!

Devyani

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தேவயானியின் தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

இவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தவல்கள் வெளியாகியுள்ளன, இதுகுறித்து கோப்ரகடே கூறுகையில், பல்வேறு கட்சிகளுடன் இதுபற்றி பேசி வருவதாகவும், எந்த கட்சியில் சேருவது என்பதை சரியான நேரத்தில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனது மகள் தேவயானியின் இரண்டு குழந்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவது பற்றி கேட்டபோது அடுத்த மாதம் டெல்லி வரும் குழந்தைகள் டெல்லியில் படிப்பை தொடருவார்கள் என்று பதிலளித்துள்ளார்.

 

முறியும் தருவாயில் த்ரிஷா – ராணா காதல்!!

Trisha-Rana

நடிகை த்ரிஷாவுக்கும் அவரது காதலர் ராணாவுக்கும் இடையே பிரச்சினை என்றும், அவர்களின் காதல் முறியும் தருவாயில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

த்ரிஷாவுக்கு எப்பொழுது கல்யாணம் என்று தான் பலரும் கேட்கின்றனர். அவரது அம்மா உமாவும் தனது மகளுக்கு சின்சியராக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக வேறு பல காலமாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் நடந்த விருது விழா ஒன்றில் த்ரிஷாவும், ராணாவும் ஓவர் நெருக்கமாக இருந்தது பெரிதாக பேசப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் கோவாவில் ஒன்றாக சுற்றியதும் அவர்கள் காதலர்கள் தான் என்பதை உறுதிபடுத்தின.

ராணாவுக்கும் த்ரிஷாவுக்கும் இடையே காதலும் நெருக்கமும் ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தியும் பலமுறை வந்துவிட்டது.

த்ரிஷாவுக்கும், ராணாவுக்கும் இடையே பிரச்சினை என்றும், அவர்களின் காதல் முறியும் நிலையில் உள்ளது என்றும் தற்போது கூறப்படுகிறது.

முன்பெல்லாம் விருது விழாக்களுக்கு ராணாவுடன் கைகோர்த்து வரும் த்ரிஷா தற்போது தனியாக வருகிறாராம். ஆனால் இது குறித்து இருவருமே வாய் திறக்க மாட்டேன் என்று உறுதியாக உள்ளனர்.

ராணா தற்போது எஸ்.எஸ். ராஜமவுலியின் பாகுபலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நடிக்கும் அனுஷ்காவுடன் சேர்த்தும் அவரது பெயர் அடிபட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

நடிகையுடன் தொடர்பை துண்டியுங்கள் : ஜனாதிபதியின் மனைவி அதிரடி!!

Franceபிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி வேலரி தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த், பிரபல நடிகையான ஜூலி கேயட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாக புகைப்பட ஆதாரங்களுடன் கடந்த 10ம் திகதி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜனாதிபதியின் மனைவி வேலரி, மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்கையில், தானும் தன்னுடைய வாழ்க்கை துணையும் மிக மோசமான பாதையை கடந்து வந்ததாக வேலரி ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் ஒலாந்த் நடிகையுடன் உள்ள தொடர்பினை துண்டித்தால் மட்டுமே மன்னித்து ஏற்றுக் கொள்வேன் என வேலரி கூறியதாக உறவினர்கள் பத்திரிக்கைகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், மிச்ஷெலும் தன் வாழ்க்கை துணையுடன் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்!!

ASIA CUP2014ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆடுகளங்களை தயார்படுத்துமாறு ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

2014 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அது இன்னும் உறுதியாகவில்லை என ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் குறிப்பிட்டுள்ளது.

பங்காதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையால் கடந்த சில மாதங்களில் மாத்திரம் 150 பேர் உயிரிழந்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் பங்களாதேஷில் இப்போட்டியை நடத்துவது சந்தேகத்திற்குரியது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் தங்கியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் ஹோட்டலுக்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து வீரர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் தற்போது பங்களாதேஷில் காணப்படும் அரசியல் சிக்கல் நிலை நிறைவுக்கு வந்தால் ஆசிய கிண்ண போட்டி அங்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 பெப்ரவரி 28 தொடக்கம் மார்ச் 8ம் திகதிவரை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

“துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்” கவிதைநூல் வெளியீட்டு விழா!!(படங்கள்)

வெற்றிச்செல்வி (செல்வி வேலு சந்திரகலா) அவர்களின் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் கவிதைநூல் தை மாத முழுநிலா நாளன்று நேற்று (15.01.2014) மன்னார் கலையருவி மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் எழுத்தாளர் பேரவையினர் ஒழுங்குபடுத்திய இன் நிகழ்வு, மன்னார் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் துரையூரான் திரு.எம்.சிவானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் முதல் பிரதியை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை பகுதிநேர விரிவுரையாளர் திரு.ம.ந.கடம்பேஸ்வரன் (காப்பியதாசன்) அவர்கள் வெளியிட்டுவைக்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மன்னார் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் எனும் கவிதைநூலின் மதிப்பீட்டுரையினை ஊடகவியலாளர் திரு.பொ.மாணிக்கவாசகம் அவர்கள் நிகழ்த்தினார்.

வெற்றிச்செல்வியின் ஏனைய நூல்கள் பற்றிய உணர்வுப் பகிர்வுகளையும், பார்வைப் பகிர்வுகளையும் நாவலாசிரியர் திரு.எஸ்.ஏ.உதயன், சைபர்சிற்றி பதிப்பக உரிமையாளர் திரு.சதீஸ், எழுத்தாளர் கானவி, கவிஞர் வேல் லவன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நூல்களின் ஆசிரியர் செல்வி வெற்றிச்செல்வி அவர்கள் நிகழ்த்தினார்.

1 2 3 4 5 6 7 8 9 10

 

 

விஜய்யை வைத்து குடும்பப் படம் எடுக்க முடியாது : ஆர்.பி. சௌத்ரி!!

Vijay_new

நடிகர் விஜய்யை வைத்து கலைப்படமோ குடும்பப்படமோ எடுக்க முடியாது என, ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படம் கடந்த 10ம் திகதி வெளியாகி வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.

படம் கேரளாவில் வசூலில் புதிய சாதனையே படைத்துள்ளது. இந்நிலையில் ஜில்லா வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆர்.பி. சௌத்ரி கூறுகையில்..

விஜய்யை வைத்து படம் எடுக்கையில் அவருக்கு இருக்கும் ஏராளமான இரசிகர்களையும் மனதில் வைத்து தான் படம் எடுக்க வேண்டும். அவரின் இரசிகர்களை திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம்.

விஜய்யை வைத்து கலைப் படமோ, குடும்ப படமோ எடுக்க முடியாது. ஏனென்றால் அத்தகைய படங்களில் விஜய் நடித்தால் அதை அவரது இரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இரசிகர்களை திருப்திபடுத்த விஜய்யை வைத்து கமர்ஷியல் படங்கள் மட்டும் தான் எடுக்க முடியும். ஜில்லா படம் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.

 

மனைவியைக் கொன்றவனை குத்தி கொன்று, எரித்து, மாமிசத்தை உண்ட நபர்!!

Murderமத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில் சமீபத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதில்,1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந் நிலையில் தலைநகர் பெங்குயியில் நடந்த கலவரத்தில் கிறிஸ்தவர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி அவரது கணவனின் தங்கை மற்றும் குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இதனால் அந்த நபர் கடும் ஆத்திரத்துடன், வெறியுடன் இருந்தார். தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை கொன்றவரை பழிக்கு பழிவாங்க காத்திருந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவியை கொன்றவர் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றதை அறிந்தார். உடனே, தனது ஆதரவாளர்கள் 20 இளைஞர்களை திரட்டி கும்பலாக சென்றார்.

பின்னர் அந்த பஸ்சை வழி மறித்து நிறுத்தினார். தனது மனைவியை கொடூரமாக கொன்ற அந்த நபரை பஸ்சில் இருந்து வெளியேற்றினார்.

அவரை தெருவில் தரதர வென இழுத்து வந்து கத்தியால் குத்தி கொன்றார். அதை தொடர்ந்து அந்த நபரின் உடலை தீ வைத்து எரித்தார். இருந்தும் அவரது ஆத்திரம் தீரவில்லை. கொலை செய்யப்பட்ட நபரின் கால் மாமிசத்தை தின்று தனது பழிவாங்கும் வெறியை தணித்துக் கொண்டார்.

கொடூரமாக நடந்து கொண்ட அவர் தனக்கு தானே ‘‘பைத்தியக்கார நாய்’’ என பெயரிட்டு கொண்டார்.

 

தொழிலுக்காக வெளிநாடு சென்ற 3000 இலங்கையர்கள் நாடு திரும்ப முறைப்பாடு!!

Arabic

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

ஒப்பந்த காலப்பகுதிக்குள் எவருக்கும் நாடு திரும்ப முடியாது என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கல ரந்தெனிய கூறுகின்றார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வபர்களுக்கான ஒப்பந்த காலம் 2 வருடங்களாக இருப்பதுடன் இந்த காலப்பகுதியில் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் நாடு திரும்ப முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிடுகின்றது. இது தொடர்பில் மக்கள் தெளிவடைய வேண்டும் என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் கூறுகின்றார்.

கடந்த வருடம் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் இவர்களுள் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இது தொடர்பில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் தெளிவூட்டப்பட்ட போதிலும் அங்கு சென்ற பின்னர் சிலர் மீண்டும் நாட்டிற்கு வர முயற்சிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

 

வவுனியாவில் நடைபெற்ற ஒளவையாரின் நினைவு தினம்!!(படங்கள்)

தமிழ், சைவப் புலவர் ஒளவையாரின் நினைவு தினம் வரலாற்று பதிவுகளாக இல்லாத நிலையில், தை பௌர்ணமி தினமான இன்றைய (15) தினத்தை நினைவு தினமாக கொண்டு வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கருகில் அனுஸ்டிக்கப்பட்டது.

குமாரசாமி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், ஒளவையாரின் சிலைக்கு மலர் மாலை மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஒளவையார் பற்றிய உரைகளும் இதன்போது இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.சத்தியசீலன், குமாரசாமி நற்பணி மன்றத்தின் தலைவர் தேசமான்ய சு.குமாரசாமி, கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் எஸ். கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

a1 a2 a5

 

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினரின் தைப்பொங்கல் விழா!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் நேற்று காலை தைப்பொங்கல் விழாவை பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கொண்டாடினர்.

அதிகாலையில் ஒன்று சேர்ந்த பிரதேச இளைஞர்கள் பொங்கலிட்டு படைத்து தமது நன்றிக்கடனை சூரியபகவானுக்கு செலுத்தினர்.

11 12 13 14 15 16 17

 

ஆர்ப்பாட்டம் குறையாத அமலாபால் : அதிருப்தியில் படாதிபதிகள்!!

Amala Paul

அமலாபாலை தலைவா தடுக்கி விட்டபோதும், அம்மணியின் ஆர்ப்பாட்டம் குறையில்லையாம். படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததுமே கரவனுக்குள் சென்று கையடக்கத் தொலைபேசியை ஓன் செய்பவர் அதன்பிறகு ஷாட் ரெடியாகி விட்டது என்ற தகவலை சொல்ல உதவி இயக்குனர்கள் வந்து கரவன் கதவை தட்டினாலும் கண்டுகொள்வதே இல்லையாம். அவரது மொத்த கவனமும் அழைப்பிலேயே இருக்கிறதாம்.

இதனால் வாசலிலேயே காத்திருந்து விட்டு பேக் அடிக்கும் உதவி இயக்குனர்கள், விசயத்தை இயக்குனரின் காதுக்கு கொண்டு செல்ல, அவர்கள் வந்து டென்சனை காட்டிய பிறகுதான் கரவன் கதவையே திறந்து வெளியே எட்டிப்பார்க்கிறாராம் அமலாபால்.

அதன்பிறகும் பெரிதாக பரபரப்பை காட்டாமல் சாவகாசமாகத்தான் கமரா முன்பு வருகிறாராம். பின்னர் அவருக்கு வசனங்கள் சொல்லிக்கொடுத்து இரண்டு டேக் எடுப்பதற்குள் லஞ்ச் பிரேக் வந்து விடுகிறதாம்.

இதன்காரணமாக தற்போது மேற்படி நடிகையை வைத்து படம் தயாரிக்கும் படாதிபதிகள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

தற்போது தான் தயாரிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலாபாலை ஒப்பந்தம் பண்ணியுள்ள தனுஷ்கூட, அடுத்து தான் எதிர்நீச்சல் டீமை வைத்து தயாரிக்கும் படத்திற்கும் அமலாபாலைதான் முதலில் ஒப்பந்தம் பண்ணுவதாக இருந்தார்.

ஆனால் வேலையில்லா பட்டதாரிக்கு அவர் சரியானபடி ஒத்துழைப்பு கொடுக்காததால், அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து தான் தயாரிக்கும் படத்தில் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டார்.

அதனால், அடுத்து அந்த வாய்ப்பு தமன்னாவுக்கு செல்லவிருந்தது. ஆனால், அவர் எக்குத்தப்பாக சம்பளம் கேட்டதால் இப்போது ஸ்ரீதிவ்யாவை மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜேடியாக்குகிறார்கள்.

ஆக அமலாபாலின் அட்டகாசத்தினால் அவரது படவாய்ப்புகளை இப்போது ஸ்ரீதிவ்யாவுக்கு சென்று விட்டது போல், ஏற்கனவே ஒரு வாய்ப்பு நஸ்ரியாவுக்கும் சென்றிருந்தது. இதுபோன்று படவாய்ப்புகள் நழுவிப்போனபோதும் அமலாவின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லையாம்.

இதையடுத்து ஜெயம்ரவியுடன் நடித்துள்ள நிமிர்ந்து நில் படம் இருப்பதால் அதை முன்வைத்து ஜாஸ்தியாகவே பேசி வருகிறாராம்.

அதனால் அவருக்கான மேலும் சில வாய்ப்புகள்கூட லட்சுமிமேனன் உள்ளிட்ட நடிகைகள் பக்கம் தாவிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு அமலாபால் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் கோலிவுட் படாதிபதிகள்.

 

ஹைதராபாத்தில் பொங்கல் கொண்டாடிய தனுஷ்!!

Danushகே.வி

.ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பொலிவுட் அழகி அமீரா நடிக்கிறார்.

நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தனுஷ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்னும் சில நாட்கள் நடைபெறவிருப்பதால் இந்த வருட பொங்கலை அனேகன் யூனிட்டுடன் ஹைதராபாத்தில் கொண்டாடினார் தனுஷ்.

ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.