விவேகானந்தரை தமிழகம் தான் உலக உச்சிக்கு கொண்டு சென்றது : நடிகர் விவேக்!!

Vivek

பெரியநாயக்கன் பாளையத்தில் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரை நிறைவு விழாவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வித்யாலயா செயலர் சுவாமி அபிராமனந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது..

விவேகானந்தர் துறவிகளில் மட்டுமல்ல, மனிதர்களுள் சிறந்தவரும் அவரே. பெண்மைக்கு முக்கியத்துவம் அளித்த முதல் புரட்சி சிந்தனையாளர். கல்வி, வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றால் இந்தியா உயர முடியும் என்று தீர்க்கமாய் நம்பியவர். 100 யானைகள் பலத்தையொத்த வலிமையும், சிங்க கர்ஜனை போன்ற வீரத்தையும் உடையவர்.

உண்மை, தன்னம்பிக்கை, ஆண்மையின் உருவமாக இவரை உலகம் பார்த்தது. எப்போதும் இளைஞராக உருவகிக்கப்படும் இவர் இளைஞர்களின் மனதில் நம்பிக்கை விதையை விதைத்தவர். தன்னுடைய வீர உரைகளால் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பல தலைவர்களை உருவாக்கியவர்.

பொதுவாக துறவிகள் என்றாலே சாந்தமாக, அமைதியாக பேசுவார்கள் தான் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் துடிப்பும், கத்தி போன்ற கூர்மையுடைய கருத்துக்களையும், வீரம் ததும்பும் வடிவையும் உடையவராக விளங்கினார் சுவாமி விவேகானந்தர்.

குறிப்பாக அனைத்து மதங்களையும் மதிக்கும் மனப்பான்மையை நம் மனத்தில் விதைத்த முதல் சம தர்மவாதி. இந்தியாவில் முதன்முதலாக தகுந்த ஊக்கத்தை வழங்கிய இந்திய அறிவியல் நிறுவனத்தினை ஆரம்பிக்க அடித்தளமிட்டவர் சுவாமி விவேகானந்தர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இந்த நிறுவனத்தில் இருந்து தான் நம்மால் ஒரு அப்துல் கலாமை பெற முடிந்தது. தமிழகத்தில் பிறந்ததினாலோ என்னவோ தேசிய கவியான பாரதிக்கு இது வரை முறையான தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் வங்காளத்தில் பிறந்த சுவாமி விவேகானந்தரை தமிழகம்தான் உச்சிக்கு கொண்டு சென்றது.

தமிழகத்துக்கு வரும் வரை இவரை கண்டு கொள்ளவில்லை. பாரதி சுதந்திரம் அடைவதற்கு முன்பே அதனை அடைந்து விட்டோம் என்று பள்ளு பாடினார். விவேகானந்தரும் இந்தியாவுக்கு 50 ஆண்டுகளில் சுதந்திரம் கிடைக்கும் என்றார். அது போலவே கிடைத்தது.

இருவருமே நாட்டின் அடித்தட்டு ஏழைகளைப் பற்றி சிந்தித்தனர். பெண்கள் உயர்விற்காக ஏங்கினர். ஏழைகளின் பட்டினியைப் போக்காத மதமோ, கடவுளோ நமக்கு தேவையில்லை என்றார்கள். இருவருமே ஒத்த கருத்துடைய புரட்சி சிந்தனையாளர்ளாக பரிணமித்தார்கள். அதனால் தான் விவேகானந்தர், காந்திஜி, ராஜாஜி பேன்ற தலைவர்களுக்கு வழிகாட்டியாக அமைய முடிந்தது.

இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விவேகானந்தர் ரதம் சென்றது. லட்சக்கணக்கான கிராம மக்கள் சாதி, மதம் பாராமல் வரவேற்பளித்ததே இந்தியாவின் உண்மையான தலைவராக இன்றும் விவேகானந்தரே இருக்கிறார் என்பதற்கு சான்றாக அமைந்தது என்றார்.

தொடர்ந்து அவர் விவேகானந்தரின் நிறைவு விழா ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது பெரிய நாயக்கன் பாளையத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் கோவை மாவட்ட எஸ்.பி.சுதாகர், ராமகிருஷ்ண மிஷன் துறவிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசல் பரீட்சை வழமைபோன்றே நடத்தப்படும் : பரீட்சைகள் திணைக்களம்!!

Grade 5அண்மைக்காலமாக பாரிய சர்ச்சைகளை எதிர் நோக்கிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி வழமை போன்றே இந்த ஆண்டும் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய வருடங்களில் வழமையாக வழங்கப்பட்டு வந்த 2 வினாத்தாள்களே இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள பரீட்சையின் போதும் வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை சரளமான முறையில் நடத்துவது தொடர்பில் தற்போது கல்வி ஆணைக்குழு, கல்வியமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய பரீட்சை முறையில் உள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பெற்றோர் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு பரீட்சைகள் சரளமாக்கப்படவுள்ளன.

கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

வீரம், அஜித், தல என விதவிதமாக விற்பனைக்கு வரும் வேஷ்டிகள்!!

Ajith

நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரம் படத்தில் அஜித், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து நடித்தார். அவரது அந்த நடையும் வேஷ்டியை மடித்துக்கட்டும் ஸ்டைலும் அவரது இரசிகர்களுக்கு மட்டுல்ல, கிராமத்து இளைஞர்களுக்கும் ரொம்பவே பிடித்து விட்டது.

வேஷ்டியிலிருந்து நீளக்காற்சட்டைக்கு மாறிக் கொண்டிருந்த இளைஞர்கள் இப்போது வேஷ்டிக்கு திரும்புவதை காண முடிகிறது.

தூய வெள்ளை வேஷ்ட்டி, சட்டை அணிவதை மரியாதையான ஒரு உடை என்பதை உணரத் தொடங்கி விட்டார்கள். அதனால் இப்போது கடைகளில் வேஷ்ட்டி விற்பனை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேஷ்ட்டி விற்பனை நடந்ததாக கூறுகிறார்கள். அதோடு தற்போது வேஷ்ட்டி தயாரிப்பு நிறுவனங்கள் வீரம் வேஷ்டி, அஜித் வேஷ்டி, தல வேஷ்டி என்ற பெயரில் வேஷ்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

 

மத உணர்வை புண்படுத்துவதாக புகார் : அனுஷ்கா, தமன்னா படத்துக்கு எதிர்ப்பு!!

Anuska-Tamanaஅனுஷ்கா, தமன்னா இணைந்து நடிக்கும் பாகுபலி படம் மத உணர்வை புண்படுத்துவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பிரபாஸ், ராணா, சத்தியராஜ் போன்றோரும் இதில் முக்கிய கரக்டரில் நடிக்கின்றனர்.

ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார். இவர் எற்கனவே நான் ஈ என்ற ஹீட் படத்தை எடுத்து பிரபலமானவர்.
சரித்திர படமாக இது தயாராகிறது. இந்த படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாயின. இதனை பார்த்த ஜெயின் சமூகத்தினர் அதிர்ச்சியானார்கள். தங்கள் மதத்தை புண்படுத்துவது போல் இப்படம் எடுக்கப்படுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

பாகுபலி என்பது ஜைன துறவியை குறிக்கும் பெயர் ஆகும். அமைதிக்காக பாடுபட்டவர். ஆனால் படத்தின் வீடியோவில் பாகுபலியாக வரும் பிரபாஸ் கையில் வாளுடன் சண்டையிடுபவராக போர்க்கள காட்சிகளில் வருகிறார்.
இது தங்கள் மதத்தை அவமதிப்பது போல் உள்ளது என்று ஜெயின் சமூகத்தினர் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளனர்.

ராஜ மவுலிக்கு அவர்கள் வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளனர்.
படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் தங்களிடம் அனுமதி பெற்ற பிறகே படத்தின் ஸ்டீல்களை வெளியிட வேண்டும் என்றும் நோட்டீசில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

பிரித்தானிய காதல் ஜோடியை பதம் பார்த்த யானை!!

B1

பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியையான 30 வயது சாரா ப்ரூக்சுக்கு தென் ஆபிரிக்காவை சேர்ந்த ஜோன்ஸ் டி கிளார்க்குடன் திருமணம் நிச்சயமானது.

திருமணம் நிச்சயமானவுடன் தனது வருங்கால கணவருடன் தென் ஆபிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு பூங்காவை காரில் சுற்றிப்பார்த்தபோது, மதம் பிடித்த யானை ஒன்று அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலினால் அவர்கள் காயமடைந்துள்ளனர். இது குறித்து பேசிய அப்பூங்காவின் பொது மேலாளர் வில்லியம் மபாசா தகவல் தருகையில்..

ஆண் யானையான அதற்கு மதம் பிடித்தவுடன் அதன் சுய பலத்தை போல் 60 மடங்கு அசுர பலம் ஏற்பட்டதால் சாராவின் காரை அடித்து துவம்சம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சாராவிற்கு பொம்பேலாவிலுள்ள மெடி-கிளினிக் மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதன் பின் அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது காயங்கள் ஆற இன்னும் 3 வார காலம் ஆகுமென்றும், அதுவரை இருவரும் அந்நாட்டிலேயே தங்க நேரிட்டுள்ளது என்றும் தெரிகிறது.

சாராவை தாக்கிய யானை ஏற்கனவே பலமுறை மதம் பிடித்ததால், பல காளைகளை அடித்து கொன்றுள்ளதாகவும், இந்த சம்பவத்திற்கு பின் அது கொன்றழிக்கப்பட்டு விட்டதாகவும் மபாசா தெரிவித்தார்.

B2

 

 

தனது 9 மாத சிசுவை கழுத்து வெட்டிக் கொன்ற தந்தை தப்பியோட்டம்!!

Babyவலஸ்முள்ள – மித்தெனிய பிரதேசத்தில் தனது பெண் சிசுவை கழுத்து வெட்டி கொலை செய்த தந்தையை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வயது 9 மாதமுடைய பெண் சிசு நேற்று இரவு இவ்வாறு கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது. மனைவியை விட்டு பிரிந்திருந்த கணவர் நேற்று இரவு வீட்டுக்கு வந்து சிசுவை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மனைவிக்கு அழைப்பை எடுத்து குழந்தை வேண்டுமாயின் தேக்கவத்த பிரதேசத்திற்கு வரும்படி கூறியுள்ளார். எனினும் மனைவியின் உறவுக்கார சகோதரர் ஒருவர் சிசுவை அழைத்துச் செல்ல சென்றபோது சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

கம்பியில்லா முறையில் மின்சார இணைப்பை பெறும் வழி : அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!!

Power

கம்பியில்லா முறையில் மின்சாதனங்களுக்கு மின்இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை வயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில்..

மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் கம்பி இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.

மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள கொயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும்.

செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி பெரிய அளவிலான மின் சாதனங்களுக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

 

சிக்னலை மீறி காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய நாய்!!

Dog

அமெரிக்காவில் தற்செயலாக காரை இயக்கிய வளர்ப்பு நாய் ஒன்று, சிகப்பு விளக்கு சிக்னலை தாண்டிச் சென்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

ஜாசோன் மார்டினெஸ் என்பவர் தனது செல்லப் பிராணியான நாயுடன் கடைக்குச் சென்றார். அப்போது நாயை காருக்குள் வைத்து விட்டு கடைக்கு சென்றிருந்த போது நாய் எதிர்பாராதவிதமாக கியரை போட்டு காரை இயக்கிவிட்டது.

இதனால் கார் கட்டுப்பாடு இன்றி ஓடி சிகப்பு விளக்கு சிக்னலை தாண்டி சென்றது. எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் அதை ஓட்டி வந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த பெண் தனக்கு காயமடைந்ததைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாத வகையில் கார் ஓட்டுநர் இருக்கையில் நாய் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

 

வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்களும் வேலை நிறுத்தம்!!(படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (16) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்ற இப்போராட்டத்தில் 6-2006 சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்து, சகல தற்காலிக மற்றும் அண்மைய ஊழியர்களை நிரந்தரமாக்கு, 8 மணித்தியால காலவரையறைக்கு மேலதிகமாக கடமைக்கான உரிய கொடுப்பனவை பெற்றுக்கொடு, சீருடை கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்கு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் நோயாளர்களின் உறவினர்களே அவர்களை வைத்தியசேவைக்கு அழைத்தும் சென்றிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.

மதியம் 12 மணிவரை இடம்பெற்ற இப்போராட்டத்திற்கு உரிய பலன் கிடைக்காத பட்சத்தில் தொடர்ச்சியாக தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிற்றூழியர்கள் தெரிவித்தனர்.

11 1312

 

 

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா!!(படங்கள்)

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்று (16.01) தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா பாடசாலையின் அதிபர் திருமதி கே.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி செ. அன்ரன் சோமராஜா கலந்து சிறப்பித்தார்.

தரம் ஒன்று மாணவர்களை தரம் 2 மாணவாகள் பாரம்பரிய முறைப்படி பாடசாலைக்கு அழைத்துச்செல்லும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

படங்கள் -பாஸ்கரன் கதீசன்

s s2 s3 s1

 

வவுனியா புகையிரத நிலையத்திற்கு தாமதமாக வரும் புகையிரதங்களால் மக்கள் அவதி!!

Vavuniya

வடக்கு மக்களின் பிரதான புகையிரத நிலையமாக வவுனியா புகையிரத நிலையம் செயற்படுகின்றது. நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக ்கான பிரயாணிகள் வவுனியா ஊடாக தமது பயணத்தை மேற்கொள்கின்றனர்.

கொழும்பிற்கும், கிளிநொச்சிக்கும் இடையில் பிரதான மார்க்கமாக வவுனியா காணப்படுகின்றது. வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு தினமும் நான்கு புகையிரத சேவைகளும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேலதிகமாக ஒரு சேவையும் காணப்படுகின்ற அதேவேளை வவுனியாவிலிருந்து தினமும் கிளிநொச்சிக்கு மூன்று சேவைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேலதிகமாக இரு சேவைகளும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் புகையிரத நேர அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்திற்கு புகையிரதங்கள் வராத காரணத்தால் வவுனியா புகையிரத நிலையத்தில் காத்திருக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றார்கள்.

சில நேரங்களில் சில மணித்தியாலங்கள் வரை புகையிரதங்கள் தாமதமாக வருவதாகவும் அதனால் தாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படுவதாகவும் இவ் விடயத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

-பாஸ்கரன் கதீசன்-

 

ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லை : அடித்துக் கூறும் விஞ்ஞானிகள்!!

senceஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

ஒரு மாற்றம் ஏற்படும்போது மக்களால் அதைப் பார்க்க இயலவில்லை என்றபோதும் உணரமுடியும் என்று இவர்களின் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

உதாரணத்திற்கு ஒருவருடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் உணரும்போதும் அந்த மாற்றம் அவர்களுடைய தலைமுடி திருத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்டது என்பதை நாம் உணரமுடியாமல் இருக்கும் என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள உளவியல் ஆராய்ச்சிப் பள்ளியின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் பியர்ஸ் ஹோவே இதுபற்றி கூறுகையில்,

மாற்றங்களை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் மனிதனால் உணரமுடியும் என்பதை உறுதிப்படுத்தும் முதல் ஆராய்ச்சி இது என்று குறிப்பிடுகின்றார்.

பொதுவாகக் குறிப்பிடப்படும் ஐம்புலன்களை சார்ந்து இல்லாமல் மனதின் மூலம் மாற்றங்களை உணரமுடியும். இதுவே இதுநாள்வரை ஆறாவது அறிவு என்று குறிப்பிடப்பட்டு வந்தது என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார்.

இந்த உண்மையை சிறிய சோதனைகள் மூலமும் இந்த விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த ஆய்வறிக்கைகள் பிளோஸ் வன் என்ற இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

 

லண்டனில் தாய் மற்றும் 2 குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது!!

UK1லண்டன் ஹரோ Woodgrange Close பகுதியில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு குழந்தைகளின் இரட்டைக் கொலை குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று புதன்கிழமை வெளியாகியுள்ளது.

இந்த மரணங்கள் மூச்சுத் திணறலால் ஏற்பட்டது என்பதும், அவர்களின் தாயினால் கொலை செய்யப்பட்டு உள்ளமையும் பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர்.

இதனை லண்டன் ஈவினிங் ஸ்ரான்ட்டட் பத்திரிகை நேற்றைய மாலை 18.17 மணியளவில் வெளியிட்ட தகவலில் உறுதிப்படுத்தியுள்ளது.

திரு. திருமதி. வாகேஸ்வரன் ஜெயவாணி தம்பதிகளின் பிள்ளைகளான, 5 வயதான அனோபனும், 7 மாதங்களான நதீபனும் பேர்ன்ற் வீட்டில் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இவர்களது சடலங்களுக்கு அருகில் இருந்த 33 வயதுடைய தாய் ஜெயவாணியின் சடலமும் மீட்கப்பட்டது.

 

ஜெயவானியின் மரணமும் கழுத்து நெரிவின் காரணமாக ஏற்பட்டது எனவும், வேறு எவரும் கொலை செய்ததாக தம்மால் சந்தேகிக்கப்படவில்லை எனவும் ஸ்கொட்லன்ட் யாரட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவரது பிள்ளைகளின் மரணங்கள் கொலை என்ற கோணத்திலேயே பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.

இந்த வகையில் மூவரது மரணங்கள் குறித்து முறைப்படி. பிரேத பரிசோதனைகள் மூலம் இன்று அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

பிள்ளைகளின் தந்தையும் ஜெயவாணியின் கணவருமான வாகேஸ்வரன் Woodgrange Close இல்லத்திலேயே தனது கணக்கியல் நிறுவனத்தை பதிவு செய்து நடத்தி வந்துள்ளார்.

அவர் வெளியில் சென்று வீடு திரும்பிய போது மாலை 5.20 அளவில் மனைவியும் குழந்தைகளும் மரணித்து சடலங்களாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததனை அடுத்து அவர்களின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொலைகளிற்கான காரணம் மிகத் தெளிவாக புலப்படுவதாக ஸ்கொட்லன்ட்யாட் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இருந்த போதும் மூவரினதும் மரணத்திற்கு முந்திய இரவில் அவர்களின் வீட்டில் சச்சரவுகள் நிலவியதனையும், வாய்த்தர்க்கங்கள் புரிந்ததனையும் அவதானிக்க முடிந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அயலவர்களின் கருத்துக்கள், பிரேத பரிசோதனைகள், கணவர் வாகேஸ்வரனின் வாக்குமூலம், அந்த வீட்டில் இவர்களுடன் 2 வருடங்களாக வாழ்ந்த நண்பரின் வாக்குமூலங்கள், உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து ஸ்கொட்லன்ட்யாட் பொலிசார் விசாரணைகளை நிறைவு செய்துள்ளனர்.

எனினும் 3 பேரின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இந்த வாரம் பாணற் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இதன் பின்பே 3 மரணங்கள் குறித்த முழுமையான காரணங்கள் நீதிமன்றின் தீர்ப்பாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெளிநாட்டிலிருந்து திரும்புவோரிடம் கொள்ளையிடும் கும்பல் கைது!!

Arrestவெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக சென்று திரும்புவோரிடம் கொள்ளையிடும் கும்பலைச் சேர்ந்த நால்வரை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கட்டுநாயக்க மற்றும் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்தே இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கார், ஆட்களை மயக்கும் குளிசைகள் 6, வெளிநாட்டு சாறிகள், புகைப்படக் கருவி, வெளிநாட்டு பணம் உள்ளிட்டவையே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று வியாழக்கிழமை மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

இலங்கை- மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை!!

Proஇலங்கைக்கும் மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவு பெண்களை இலங்கையிலும், இலங்கைப் பெண்களை மாலைதீவிலும் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய மடபாத்த சதுரானி என்ற இலங்கைப் பெண் மாலைதீவில் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த பெண்ணை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவைச் சேர்ந்த சுகுர் என்ற நபரும் இந்த வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் வர்த்தகம் தொடர்பிலான விசாரணை ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 20 மாலைதீவு பெண்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மாணவர் வீசாக்களில் மாலைதீவு பெண்களை இலங்கைக்கு அழைத்து, சொகுசு தொடர்மாடி வீடுகளில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மசாஜ் பார்லர் ஒன்றிற்கு இலங்கைப் பெண்களை அழைத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை மாலைதீவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா வீசா மூலம் இலங்கைப் பெண்கள் மாலைதீவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பெண்கள், நடுத்தர வயதுடைய மாலைதீவு பெண்களுடன் ஓரினச் சேர்க்கையில் பங்கேற்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

மூன்று சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனுக்கு பொலிஸார் வலைவீச்சு!!

Abuseசிலாபத்தில் 10 வயதுடைய மூன்று சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ஒரே வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாடசாலை முடிந்து விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளை அயலில் வசிக்கும் குறித்த சிறுவன் தொடர்ச்சியாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தொடக்கம் இது இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் கூறியுள்ளனர். தமக்கு நடந்தவற்றை ஒரு சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சிறுமிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.