
நடிகர் அஜித்துடன் நடிகை தமன்னா இணைந்து நடித்து பொங்கலுக்கு வெளிவந்துள்ள வீரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியுடன் தனது அடுத்த இருமொழித் திரைப்படமான மகாபலியின் தயாரிப்பை தமன்னா ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்.
நான் ஈ படப்புகழ் இயக்குனரான ராஜமௌலி இயக்கவுள்ள மகாபலி தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளது. இதில் தெலுங்கு நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
அனுஷ்கா முக்கிய வேடத்தில் தோன்றுவது குறித்து அவரிடம் கேட்டபோது இந்தப் படத்தைப் பொறுத்தவரை தான் இயக்குனர் ராஜமௌலியை நம்புவதாகத் தெரிவித்தார். அவரது இயக்கத்திலும், பெரிய பட்ஜெட் படமான மகாபலியிலும் நடிப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய தமன்னா ஒரு படத்திற்கு கையெழுத்திடும் முன்னர் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி மட்டுமே தான் யோசிப்பதாகக் கூறினார்.
இரட்டை வேடத்தில் தோன்றும் நடிகர் பிரபாசுடன் தனக்கும் காட்சிகள் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார். வரலாற்றுப் படமான இதில் தன்னுடைய கதாபாத்திரம் தனக்குப் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்ட தமன்னா படப்பிடிப்பு துவங்கும் காலத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னுடன் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பு வைத்தமைக்காக ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார். இது குறித்து டோனி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்..



இந்திய அணியின் அசத்தலான இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பது உறுதி என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயன் சப்பல் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் நான் சேரவில்லை என்று நடிகர் விஜய் பேட்டியளித்துள்ளார்.


சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வடபகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக தைப்பொங்கல் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
வவுனியா – திருநாவற்குளம் 3 ஆம் ஒழுங்கை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் நோயாளியை சிகிச்சைக்காக அரச வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.