உலக முடிவில் விழுந்த இளைஞனின் வாழ்வு முடிவு!!

World Endஉடுதும்பர, நவதகல பிரதேசத்தில் சிறிய உலக முடிவு என அழைக்கப்படும் மலையில் இருந்து கீழே விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவதகல, ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வட மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்!!(படங்கள்)

வட மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல் கைதடியிலுள்ள பேரவைக்கட்டிடத்தினில் நேற்று காலை நடைபெற்றிருந்தது.

பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பணியாளர்கள் சகிதம் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.பேரவையின் முகப்பு வாசலில் பொங்கல் பொங்கி பிரார்த்தனையும் இடம்பெற்றிருந்தது.

v1v2v3v4v5

 

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நாளை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழா!!

1

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நாளை (16.01) மதியம் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.க.தனபாலசிங்கம் தலைமையில் தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சீ.சத்தியசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக உதவி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி.சுகந்தி செபஸ்ரியன் அவர்களும் கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.S.அன்ரன் சோமராஜா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள இவ் விழாவில் தமிழர் பாரம்பரிய மற்றும் மரபைப் பறைசாற்றும் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள். இவ் விழாவிற்கு வவுனியா நெற் இணையம் ஊடக அனுசரணை வழங்குகின்றது.

2

 

5 பெண்கள் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இலங்கையில் கைது!!

Arrestedவிசா விதிமுறைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐவர் பெண்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொரளை பகுதியில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதியில் பணிபுரிந்த 5 இந்திய பெண்களை நேற்று பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் குறித்த பெண்களை பணிக்கு அமர்த்திய களியாட்ட விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்கள் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து பணிபுரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்கென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

 

 

வவுனியாவில் புதையல் அகழ்ந்த ஐவர் கைது!! (படங்கள்)

வவுனியா, மகாகச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள புராதன விகாரைக்கு அருகாமையில் புதையல் அகழ்ந்த ஐவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புராதன விகாரைப் பகுதியில் அமைந்துள்ள பகுதியில் பற்றைக்காடுகள் காணப்பட்ட நிலையில் அங்கு மறைவாக இருந்து புதையல் அகழ்ந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமாக சிலர் புராதன விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சென்று வருவதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 12 13

 

 

தந்தையைக் கொன்றவர்களை பழி தீர்க்காமல் விடமாட்டேன் : ஹிருணிகா!!

Haranika

எனது தந்தையைக் கொலை செய்தவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தமை தொடர்பிலும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக ஹிருணிகா பிரேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு ஜனாதிபதி வாய்ப்பளித்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.

 

பொங்கல் பண்டிகை சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பம் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!!

Mahindaபொங்கல் பண்டிகையானது நாட்டில் சமாதானத்திற்காகவும், மக்கள் மத்தியிலான நல்லிணக்கத்திற்காகவும் நன்றி செலுத்தும் சந்தர்ப்பம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த பண்டிகை, சூரிய பகவானின் ஆசிர்வாதத்துடன், வாழ்க்கையில் புதிய சந்தர்ப்பங்களுக்கான ஆரம்பமாக திகழ்வதாக ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைத்திருநாள் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையே பலமான பிணைப்பை ஏற்படுத்துவதுடன், நாளாந்த வாழ்விலும், தெய்வ வழிபாட்டிலும் மக்களினதும், சமூகங்களினதும் ஐக்கியத்தை அடையாளப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த அறுவடைக்காக சூரிய பகவானுக்கு தைத்திருநாளில் மக்கள் நன்றி செலுத்தி தொடர்ச்சியான வெற்றிகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொங்கல் பண்டிகை மனிதர்களிடையே நட்புறவையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான ஒரு உன்னத சந்தர்ப்பம் என பிரதமர் டி.எம் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சூரிய பகவானை வழிபடும் சிறந்ததொரு ஆன்மீக ரீதியிலான முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் தைப்பொங்கல் பண்டிகை, அனைவருக்கும் சௌபாக்கி்யம் நிறைந்த மகிழ்ச்சியான பண்டிகையாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார்!!

Aniruthஇசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவர் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

தற்போது வாயை மூடி பேசவும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸ் வாங்கி விட்டு பிறகு இசையமைக்க மறுத்து விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் வருண்மணியன் குற்றம் சாட்டி உள்ளார். அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது..

வாயை மூடி பேசவும் படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அவருக்கு 5 லட்சம் அட்வான்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஒப்புக் கொண்டபடி படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை. இதனால் அனிருத்துக்கு பதில் ஷான் ராகவேந்திரா இசையமைத்தார்.

எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் அனிருத் திருப்பி தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

 

ஜில்லா, வீரம் படங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி : நடிகர் விஜய்!!

Vijayவிஜய் நடித்த ஜில்லா படம் கடந்த 10ம் திகதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

நடிகர் விஜய், இயக்குனர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் இமான், காமெடி நடிகர் சூரி மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஜில்லா படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் பேசும்போது துப்பாக்கியை விட ஜில்லா படம் அதிக வசூல் ஈட்டியுள்ளது என்றனர். இவ் விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது..

ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தியேட்டர்களில் ரசிகர்கள் காலை 3 மணிக்கே திரண்டு பனி, குளிரையெல்லாம் பொருட்படுத்தாமல் கொடி தோரணம் அமைத்தனர். தியேட்டர்களை அலங்காரம் செய்தார்கள். சிரமங்களை பொருட்படுத்தாமல் கடுமையாக வேலை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோவில் பார்த்து நெகிழ்ந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. ரசிகர்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன். ஜில்லா படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த 5 படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இசையமைப்பாளர் இமான் ஜில்லா படத்துக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையில் ஜில்லாவுடன் அஜித்தின் வீரம் படமும் ரிலீசாகியுள்ளது. வீரம் படமும் நன்றாக ஓடுவதாக கேள்விப்பட்டேன். இது ஆரோக்கியமானது. அஜித்துக்கும் அப்படத்தின் இயக்குனர் சிவாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொங்களுக்கு வந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

விநியோகஸ்தர்கள் ஜில்லா படம் அதிகம் வசூல் ஈட்டியுள்ளதாக இங்கே பேசினர். விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி அடைந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான் என்று விஜய் பேசினார்.

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி பேசும்போது ஜில்லா’படம் அதிக நேரம் ஓடுவதாக கூறினர். இதனால் 10 நிமிட காட்சிகளை குறைத்தோம். ஒரு பாடல் காட்சியையும் நீக்கினோம். ஆனால் அந்த பாடல் படத்தில் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தினர். இதனால் அப்பாடல் மீண்டும் படத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது என்றார்.

 

குழந்தைகளே எனக்கு உலகம் : பிரபுதேவா!!

Prabu Deva

பிரபுதேவா இந்தியில் பிசியான இயக்குனராகியுள்ளார். சம்பளமும் அதிகம் வாங்குகிறார் அவர் அளித்த பேட்டி வருமாறு..

என்னை கமர்ஷியல் பட இயக்குனர் என்று சொல்லிக் கொள்வதில் மகிழச்சியடைந்தேன். படம் தயாரிக்க சொல்லி என்னை அணுகும் பட அதிபர்களுக்கு உண்மையாக இருக்கிறேன். அவர்கள் தான் பெரிய தொகையை முதலீடு செய்து படத்தை எடுக்கிறார்கள்.

திகில் படங்களையும் சீரியஸ் கதையம்சம் உள்ள படங்களையும் எடுக்க எனக்கும் விருப்பம் உள்ளது. ஆனால் அவற்றை மற்றவர்கள் பணத்தில் எடுத்து பரிசோதிக்க தயாராக இல்லை என் சொந்த பணத்தை முதலீடு செய்து படம் எடுக்கும் நிலை வரும் போது அப்படிப்பட்ட படங்களை எடுப்பேன்.

ரீமேக் படங்களையே நான் எடுக்கிறேன் என்று சொல்லப்படுகிறது. அது தானாக அமைந்து விட்டது. இனிமேல் நான் எடுக்கப் போகும் படங்கள் எனது ஒரிஜினல் கதைகள். தமிழில் நான் நடித்த களவாடிய பொழுதுகள் படம் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. அது நல்ல காதல் கதை. அப்படம் விரைவில் ரிலீசாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

எனது உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள நடனம் எனக்கு உதவுகிறது. காலை 6.30 மணிக்கு எழுந்து விடுகிறேன். நள்ளிரவுவரை பணி செய்கிறேன். கதா நாயகர்களுக்கு பிடித்தமான இயக்குனர் என்று என்னை சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கதாநாயகர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுப்பது இல்லை. அவர்களுடன் நட்புறவுடன் இருப்பேன். நேரம் முக்கியம் காலை 9 மணிக்கு சூட்டிங் ஆரம்பிப்பேன். மதியம் 1 மணிக்கு உணவு இடை வேளை மாலை 5.55 மணிக்கு படப்பிடிப்பை முடித்து விடுவேன்.

சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை என் குழந்தைகள்தான் எனக்கு உலகம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னை வந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகிறேன். புத்தாண்டுக்கு குழந்தைகளை மைசூரில் உள்ள துராகிரடாமத்துக்கு அழைத்து சென்றேன். அது தான் என் சொந்த ஊர். அங்கு பூர்வீக சொத்துக்கள் மற்றும் பண்ணை வீடு உள்ளது. உறவினர்களும் இருக்கிறார்கள் என்று பிரபுதேவா கூறினார்.

 

இயக்குனர் கெளதம் மேனன் மீது மோசடிப் புகார்!!

Kowtham menanதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆன கெளதம் மேனன் போட்டோன் கதாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் இவருடன் மேலும் நான்கு பேர் பங்குதாரர்களாக உள்ளனர். இவர் கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சிம்பு மற்றும் நடிகை திரிஷாவை வைத்து இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா பெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தினை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் ஆர்.ஜெயராமன் என்பவருக்கு ஹிந்தியில் ஏக் தீவானா தா என்ற ரீமேக் படமாக செய்து தருவதாகக் கூறி கெளதம் மேனன் பெருந்தொகையை முன்பணமாகப் பெற்றுள்ளார். ஆனால் ஒப்புக்கொண்டபடி அவர் படத்தை முடித்துத் தராமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சி.டி.செல்வம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனரிடம் இதுகுறித்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் மோசடியை ஊர்ஜிதம் செய்தால் அது குறித்த விபரம் இரு தரப்பினருக்கும் வெளியிடப்படும் என்று மனுதாரர் சார்பில் பி.ரமேஷ் பாபு என்ற வக்கீல் தெரிவித்தார். இந்த உத்தரவு கடந்த சனிக்கிழமை அன்று வெளிவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தலைப்பொங்கல் கொண்டாடும் நடிகர்–நடிகைகள்!!

Barathதமிழ் பட உலகில் கடந்த வருடம் இயக்குனர்கள், நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட 34 பேருக்கு திருமணம் நடந்துள்ளது. எல்லோரும் இந்த வருடம் தலைப்பொங்கலை கொண்டாடுகிறார்கள். நடிகர் பரத்-ஜெஸ்லி ஜோடிக்கு இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சென்னையில் தலைப் பொங்கலை கொண்டாட உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பின்னணி பாடகி சைந்தவிக்கும் கடந்த ஜுன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களும் தலைப் பொங்கலை கொண்டாட தயாராகிறார்கள்.

வைகாசி பிறந்தாச்சு படத்தில் பிரபலமான நடிகை காவேரி, ராகேஷ் திருமணம் ஜூலை மாதம் நடந்தது. இதே மாதத்தில் நடிகர் நந்தா–வித்யரூபா ஜோடிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கும் இது தலைப் பொங்கல். ஜெயம்ரவி ஜோடியாக இதயதிருடன், ஜீவன் ஜோடியாக மச்சக்காரன், லாரன்சுடன் ராஜாதிராஜா படங்களில் நடித்து பிரபலமான காம்னா ஜெத்மலானி–சுராஜ் ஜோடி திருமணம் செப்டம்பரில் நடந்தது.

சாமுராய் படத்தில் விக்ரமுடன் நடித்த அனிதா ரோகித் ஷெட்டி திருமணம் அக்டோபரில் நடந்தது. பரத் ஜோடியாக யுவன் யவதி படத்தில் நடித்த ரீமாகல்லிங்கல், மலையாள இயக்குனர் ஆஷிக் அபு திருமணம் நவம்பரில் நடந்தது.

காமெடி நடிகர் பிளாக்பாண்டி, உமேஸ்வரி பத்மினி திருமணம் டிசம்பரில் நடந்தது. நடிகை பூர்ணிதா–ரோகித் திருமணமும், இஷ்டம் படத்தில் நடித்த நிஷா அகர்வால்–சரன்வாலச்சா திருமணமும் கடந்த மாதம் நடந்தது. இவர்களுக்கும் இது தலைப்பொங்கல்.

 

தமிழ் திரையுலகில் கலக்கும் புதுமுக கதாநாயகிகள்!!

Actதமிழ் திரையுலகில் புதுமுக கதாநாயகிகள் கலக்குகிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அவர்கள் வந்துள்ளனர். மும்பை, கொல்கத்தாவில் இருந்தும் சிலர் வந்து இருக்கிறார்கள். இளம் கதாநாயகர்கள், புதுமுக நடிகைகளுடன்தான் ஜோடி சேர ஆர்வம் காட்டுகின்றன். ஓரிரு படங்களிலேயே இந்த நடிகைகள் உச்சத்துக்கு போய் உள்ளனர்.

சம்பளத்தையையும் கணிசமாக ஏற்றி இருக்கிறார்கள். இந்த நடிகைகள் பட்டியலில் முதன்மையாக இருப்பவர் லட்சுமிமேனன். இவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு ஆகிய 4 படங்களுமே வெற்றிகரமாக ஓடின. தற்போது விஷால் ஜோடியாக நான் சிவப்பு மனிதன், விமலுடன் மஞ்சப்பை, சித்தார்த் ஜோடியாக ஜிகர்தாண்டா, கவுதம் கார்த்தியுடன் சிப்பாய் படங்களில் நடிக்கிறார்.

இவருக்கு அடுத்து வேகமாக வளர்பவர் ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமானார். அப்படம் ஹிட்டானதால் படங்கள் குவிந்துள்ளது. விதார்த் ஜோடியாக காட்டுமல்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், அதர்வாவுடன் ஈட்டி, விஷ்ணு ஜோடியாக வீரதீர சூரன் படங்களில் நடிக்கிறார்.

நஸ்ரியாவும் இவர்களுக்கு இணையாக முன்னேறியுள்ளார். நேரம் படம் இவரை பிரபலபடுத்தியது. பின்னர் ஆர்யா ஜோடியாக ராஜாராணி படத்தில் நடித்தார். ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்கா மற்றும் வாய் மூடி பேசவும் படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

அட்டகத்தியில் அறிமுகமான நந்திதாவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். எதிர்நீச்சல் படத்தில் இவர் கரக்டர் பேசப்பட்டது. ப்ரியா ஆனந்த் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருந்தாலும் இளம் கதாநாயகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறியுள்ளார்.

விக்ரம் பிரபுவுடன் அரிமாநம்பி, கவுதம் கார்த்திக்குடன் வை ராஜா வை மற்றும் அதர்வாவுடன் இரும்புக் குதிரை விமலுடன் காதல் கொஞ்சம் கம்மி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக நடித்த சுரபி, கடல் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்த துளசி, பீட்சா படத்தில் வந்த ரம்யா நம்பீசன், ராஜபாட்டையில் அறிமுகமாகி தற்போது வேட்டைமன்னன் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் திக்ஷாசேத், சரஸ்வதி சபதம், ஜில்லா படங்களில் நடித்த நிவேதாதாமஸ் மெய்யழகி படத்தில் நடித்த ஜெய்குவே தனி, நடுவுலகொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி போன்றோரும் ரசிகர்களை கவர்ந்த புது வரவுகள்.

கடந்த வருடம் மட்டும் இதுபோல் நாற்பது புதுமுக நடிகைகள் தமிழ் படங்களில் அறிமுகமாகியுள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களால் முன்னணி நடிகைகள் மார்க்கெட்டில் பாதிப்பு ஏற்படவில்லை. நயன்தாரா, திரிஷா, காஜல்அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா போன்றோர் பெரிய ஹீரோக்களுடன் பிசியாகவே நடித்து வருகிறார்கள்.

இவர்களில் நயன்தாரா நம்பர் வன் இடத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில் நடித்த எல்லா படங்களும் ஹிட்டாகியுள்ளன. தமிழ் படங்களில் அதிகம் சபம்ளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

 

வீட்டுப் பணிப்பெண்களை பாதுகாக்க இலங்கை – சவுதி அரேபியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!!

Panippenkalஇலங்கை அரசு, சவூதி அரேபியாவுடன் முக்கிய தொழில்சார் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தொழில்-இடம், கூடுதல் சம்பளம் மற்றும் உரிமைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்கு இந்த இருநாட்டு ஒப்பந்தம் அடிப்படையாக அமைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெருமளவிலான தொழிலாளர்கள் சவுதி அரேபியாவுக்கே செல்கின்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புள்ளிவிபரங்களின் படி, இலங்கைத் தொழிலாளர்கள் சுமார் நாலரை லட்சம் பேர் சவுதியில் உள்ளனர். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் பெண்கள்; குறிப்பாக, வீட்டுப் பணிப்பெண்கள்.

இலங்கைத் தொழிலாளர்கள் பெருமளவில் தொழில்புரியும் சவுதி அரேபியாவின் ரியாத், தமாம் மற்றும் ஜெட்டா ஆகிய மூன்று நகரங்களிலும் இலங்கைத் தூதரக அலுவலகங்களால் தொழிலாளர் பாதுகாப்பு நிலையங்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய கூறினார்.

கடந்த காலங்களில் வீட்டுப் பணிப்பெண்கள் பலர் சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வீட்டு எஜமானர்களால் சித்திரவதைகளுக்கு உள்ளாகி இலங்கை திரும்பியுள்ளனர்.

பெண்கள் பலர் மர்மமான முறையில் உயிரிழந்து சடலங்களாகக் கூட இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளதாக உறவினர்கள் முறையிட்டனர்.

வெளிநாட்டு தொழில் முகவர்கள் என்ற பேரில் போலி முகவர்களும் இடைத்தரகர்களும் இலங்கையின் மலையகத் தோட்டங்களை இலக்கு வைத்து அதிகளவில் படையெடுத்து வருவதாக உள்ளூர் செய்தியாளர்கள் தமிழோசையிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசு முதலில் உள்ளூர் தொழிற் சட்டங்களை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் சமூக ஆர்வலர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-

 

பேச்சுவார்த்தை இல்லையேல் போர் : பாகிஸ்தான் எச்சரிக்கை!!

Pakistanஅரசின் பேச்சுவார்த்தை முயற்சிக்கு தலிபான் தீவிரவாதிகள் உடன்பட மறுத்தால் போரை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் செüத்ரி நிஸார் அலி கான் திங்கள்கிழமை கூறியதாவது:

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அரசின் முக்கிய செயல்திட்டமாக உள்ளது. அதன்படி, அந்தத் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால் இதற்கு உடன்படாவிட்டால் அவர்கள் போரை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

எங்களுடைய நோக்கம் பாகிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே. குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் அமைதி சூழ்நிலை உருவாக வேண்டும். அவர்கள் தங்களின் உரிமைகளை பெறுவதற்காக தேவையற்ற கடும் போரை சந்தித்துள்ளனர்.

அந்த மக்களை ரத்தம் சிந்துவதில் இருந்தும், துப்பாக்கிக்கு பலியாவதிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
அந்நிய சக்திகளின் சுய நோக்கத்திற்காக இந்தப் பிராந்திய மக்கள் முடிவில்லாத போரில் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பல்வேறு தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அவர்கள் பயங்கரவாத செயல்களில் இருந்து வெளியே வருவர் என்று நம்புகிறோம் என்று செத்ரி நிஸார் அலி தெரிவித்தார்.

 

அதிக சம்பளம் கேட்டு பாகிஸ்தான் வீரர்கள் போர்க்கொடி!!

Pak

சம்பள உயர்வு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, விரைவில் ஒப்பந்த வீரர்களின் பட்டியலை வெளியிட உள்ளது.

இந்நிலையில் 35 சதவிகித சம்பள உயர்வு கோரி வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தலைமையில் சில மூத்த வீரர்கள் சபைத் தலைவர் நஜம் சேத்தியை சமீபத்தில் சந்தித்து ஊதிய உயர்வு கோரிக்கையை வைத்தனர்.

சந்திப்பின்போது மிஸ்பா கூறுகையில் சமீப காலமாக வீரர்களுக்கு முறையாக ஊதியம் தரப்படுவதில்லை. அனைத்து நாட்டு கிரிக்கெட் சபைகளும் நல்ல சம்பளம் தருகிறார்கள், நமது வீரர்களுக்குத்தான் சரியான சம்பளம் தரப்படுவதில்லை.

எனவே நமது வீரர்களுக்கு 30 முதல் 35 சதவிகித ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்போம் என நஜம் சேத்தி உறுதியளித்துள்ளார்.