வவுனியா நகர மண்டபத்தில் மின்பிறப்பாக்கி இன்மையால் நிகழ்வுகள் நடத்துவதில் சிரமம்!!

vavuniya UC Cultural hall

வவுனியா நகர கலாசார மண்டபத்தில் மன்பிறப்பாக்கி இன்மையால் நிழ்வுகளை ஒழுங்கமைப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள். திருமண நிகழ்வகள் இடம்பெற்று வரும்போது மின்சாரம் தடைப்படும் பொது மாற்று ஒழுங்கக்கான ஏற்பாடுகள் செய்யப்படாததுடன் மின் பிறப்பாக்கி இல்லாமையும் பெரும் மண்பத்தை வாடகைக்கு பெறுவோர் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் இவ் விடயம் தொடர்பாக வவுனியா கலைஞர்கள் வவுனியா நகரசபை செயலளாருக்கு வேண்டுகோள் விடுத்தபோதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் கலைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை அதிகளவான வாடகை நகரசபையால் பெறப்படும் நிலையில் மின்சாரம் தடைப்படும் பொது மின்பிறப்பாக்கி இன்மையால் மண்டபத்தை வாடகைக்கு பெறுவோர் கூடுதலான வாடகை செலுத்தி பிறதோர் இடத்தில் மின்பிறப்பாக்கியை பெறவேண்டியுள்ளதாகவும் மண்டபத்தை வாடகைகு பெறுவோர் விசனம் தெரிவித்தனர்.

இந் நிலையில் இவ் ஆண்டுக்கான நகரசபை பாதீட்டில் புதிய பிற்பபாக்கியை கொள்வனவு செய்து நகரசபை கலாசார மண்டபத்தினை திறப்பட நகரசபை நடத்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இலங்கைத் தமிழ்ப் பெண் லண்டனில் குழந்தைகளுடன் தற்கொலை : நடந்தது என்ன?

UK

கடந்த 9ம் திகதி இலங்கைப் பெண் லண்டனில் தனது இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகியது யாவரும் அறிந்ததே.

இப் பரிதாப மரணங்கள் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..

யாழ் வல்வெட்டித்துறை நெடியகாட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் வாகீஸ்வரன். அவரது மனைவி ஜெயவாணி(33), பிள்ளைகள் அனோபன்(5), நதீபன் (8 மாதம்) ஆகியோர் தந்தை வாகீஸ்வரனுடன் வடமேற்கு லண்டன் Harrow Woodgrange Close பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயவாணி தனது இரு பிள்ளைகளுடன் கடந்த 9ம் திகதி அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த தினம் கணவர் வாகீஸ்வரன் வேலைமுடிந்து வீடு திரும்பியதும் வீட்டில் பிள்ளைகள் உட்பட மனைவியும் உயிரற்று சடலமாக கிடந்ததைப் பார்த்தவுடன் பொலிஸ் மற்றும் அம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

சம்பவ தினத்தன்று காலை கணவர் வேலைக்கு புறப்படு முன்னர், அனோபனை பள்ளிக்கூடம் கூட்டிச் செல்லவில்லயா என்று கேட்டுள்ளார்.

ஆனால் மனைவி ஜெயவாணி கணவன் கேட்டதற்கு பதில் ஏதும் கூறாது இருந்ததோடு அன்று பள்ளிக்கூடம் செல்வதற்கான ஆயத்தம் எதுவும் செய்யவும் இல்லை. ஏன் இப்படி என்று யோசித்தவாறு கணவர் வாகீஸ்வரன் வேலைக்குச் சென்றுள்ளார்.

கணவர் வேலையில் இருந்து பல தடவை வீட்டு தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்திய போது அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை. கணவன் வீட்டை விட்டு வெளியேறியதும் வீட்டில் உள்ள தொலைபேசி வயரை ஜெயவாணி துண்டித்துள்ளார்.

சம்பவ தினத்திற்கு முதல் நாள் ஜெயவாணிக்கும் அவர் கணவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. ஒரு மாதத்தில் குறைந்தது 4 தடவையாவது இவர்களுக்கு மத்தியில் வாக்குவாதம் நடைபெறும் என்று குறித்த மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணையின் போது அயலவர்கள் கூறியுள்ளார்கள்.

இருப்பினும் ஜெயவாணி கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் சில மாதங்களின் முன்னர் அனோபனுக்கு 5வது பிறந்த தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடியதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையின் கையைக் கட்டிவிட்டு அச் சிறுவனின் தலையில் கறுப்பு நிற பொலித்தீன் பையை போட்டு மூடிக் கட்டியுள்ளார். இதன் காரணமாகவே அச் சிறுவன் இறந்துள்ளான். 8 மாதம் நிரம்பிய மற்றைய கைக் குழந்தையும் இவ்வாறே பொலித்தீன் பை தலையில் போட்டு கட்டி இறக்கப்பட்டுள்ளான்.

பின்னர் ஜெயவாணி தூக்கிட்டு தற்கொலை செய்யவில்லை. கயிறு அல்லது அதுபோன்ற பொருள் ஒன்றை எடுத்து தனது கழுத்தை இறுக்கியே தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் மது அருந்தினாரா , எவ்வாறு தன்னை மாய்த்துக்கொண்டார் என்பதுபோன்ற விடயங்கள் பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே உறுதிசெய்யப்படவுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாட்டைச் சேர்ந்த சக்திவேல் வாகீஸ்வரன் 10 வருடத்திற்கு முன்னர் லண்டன் வந்துள்ளார். லண்டனில் உள்ள South Bank University இல் கல்வி கற்றுள்ளார். தற்பொழுது Vaasi Accountancy என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

எனது மனைவி இவ்வாறு நம் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்யக்கூடியவளா என என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. என்னால் அந்த வீட்டுக்குள் செல்ல மனமே இல்லை என வாகீஸ்வரன் அழுதவண்ணம் உள்ளார் எனவும் ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயவாணிக்கு என்று நெருக்கமான நண்பிகள் எவரும் கிடையாதாம். மேலும் அவர் தனக்கு ஏற்படும் கஷ்டங்களை, எவரிடமும் சொல்பவரும் அல்ல. ஒரு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் கூட அதனை வெளியே சொல்லி ஆறுதல் அடைய கூட வாய்ப்புகள் அவருக்கு இருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இப் பரிதாபகர மரணங்கள் தொடர்பில் இதுவரையில் 3வது நபர்கள் இருப்பார்களா என பொலிஸார் சந்தேகிக்கவில்லை. இருப்பினும் விசாரணைகள் தொடர்கின்றன.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கணவன் பொலிசாருக்கு தெரிவித்த தகவலின் பிரகாரமே இவ்வாறு லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

சிக்கலில் அனுஷ்காவின் படம்!!

Anuska

அனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் பாகுபலி படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் பாகுபலி படத்தினை ராஜ்மவுலி இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த ஜெயின் சங்க அமைப்பினர் பாகுபலி என்ற பெயரை பட தலைப்பாக பயன்படுத்தக்கூடாது என்று இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அதில், பாகுபலி எனப்படும் கோமதேஸ்வரா பெயரை புனித பெயராக நாங்கள் மதிக்கிறோம். வன்முறையில் எங்கள் மதத்தினருக்கு உடன்பாடு கிடையாது. வன்முறையை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒரு படத்துக்கு இப்பெயரை வைக்க கூடாது.

மேலும் எங்கள் சமுதாயத்தின் அனுமதி இல்லாமல் இந்த பெயரை சினிமாவில் பயன்படுத்தக்கூடாது. 10ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெயினர்களின் ஆதிபுராணத்தில் பாகுபலி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே படத்தில் இவரது வாழ்க்கை வரலாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறதா அல்லது படத்தின் தலைப்பாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதா என்று விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இப்பெயரை பயன்படுத்தாமல் வேறு பெயரை படத்துக்கு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

அமெரிக்காவில் சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு சிறைத் தண்டனை!!

Tracher

அமெரிக்காவில் சிறுவன் ஒருவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் வசித்து வரும் 28 வயதானவர் அலிசியா கிரே திருமணமானவர். அவர் அங்குள்ள மோண்ட்கோமரி பாடசாலையில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தன்னிடம் படிக்கும் 14 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின் போது வாக்குமூலம் அளித்த பாதிக்கப்பட்ட மாணவன் கூறுகையில், 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் அவனுக்கும் அலிசியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும், நாளடையில் அது மிகவும் நெருக்கமடைந்த காரணத்தால் தனது வீட்டில் தாங்கள் இருவரும் பாலியல் உறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும் அலிசியாவின் நிர்வாண புகைப்படத்தை அடிக்கடி செல்போன் மூலம் தனக்கு அவர் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

இதனையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள் அலிசியாவிற்கு 6 மாத சிறைதண்டனையும், 5 வருட காலத்திற்கு நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் அவரது ஆசிரியர் சான்றிதழையும் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டனர். அவருக்கு நன்னடத்தை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரால் இனி சிறுவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது.

அலிசியா கைது செய்யப்பட்ட போது அவருக்கு மிகவும் உறுதுணையாகவும், ஆறுதலாகவும் அவரது கணவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இணையத்தில் கசிந்த சூப்பர் ஸ்டாரின் படம்!!

Mohanlal

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மோகன்லால், மீனா, நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும் த்ரிஷ்யம் தொடர்ந்து திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்லாக ஒடிக் கொண்டிருக்கிறது.

படத்திற்கு வரவேற்பு இருப்பதால் திருட்டு விசிடிக்கள் வெளிவந்திருக்கிறது. இணையதளத்திலும் அப்லோட் செய்துவிட்டார்கள். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அண்டனி பெரம்பாவூர் கேரள டி.ஜி.பி பாலசுப்பிரமணியத்திடம் நேரில் புகார் அளித்துள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் பொலிசார் படத்தை இணையத்தில் விட்டவரை தேடியபோது ஒரு பேஸ்புக் பக்கத்திலும் படம் அப்லோட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பேஸ்புக் முகவரியை தேடியபோது அது கொட்டாரக்கராவைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் என்பது தெரியவந்தது. பேஸ்புக்கில் படத்தை அப்போட் செய்ததை அவன் ஒத்துக் கொண்டான். அவனது பேஸ்புக்கில் மட்டும் 10 ஆயிரம் பேர் படத்தை பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் வீட்டில் இருந்து கணனி, ஹார்ட்டிஸ்க், நிறைய புதுப்பட சி.டிக்கள், பென் டிரைவ்களை கைப்பற்றி உள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 16ஆவது ஆண்டு விழா!!

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 16ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மாருதம் சஞ்சிகை வெளியீடும் எதிர்வரும் 15ம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

கலாநிதி அகளங்கன் தலைமையில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் க.அருள்வேல், வவுனியா பிரதேச செயலளார் கா.உதயராசா, வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.பேர்ணாட், வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, வவுனியா நகர சபை செயலாளர் க. சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

து. நந்தீஸ்வரியின் வவேற்புரையுடன் ஆரம்பமாகும் நிகழ்வுகளில் மாருதம் சஞ்சிகையின் முதற் பிரதியை அருட் கலைவாரிதி கலாபூஷணம் ஸ்தபதி சு.சண்முகவடிவேல் பெற்றுக்கொள்ள அறிமுகவுரையினை கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் அ.சத்தியானந்தன் ஆற்றவுள்ளார்.

இதனையடுத்து முருகேசு நந்தகுமாரின் இருட்டு மனிதர்கள் நாவல் வெளியீட்டில் கௌரவ பிரதியை பி.ஏ.சி. ஆனந்தராசா குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள அறிமுகவுரையினை கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் உப தலைவர் ந.பார்தீபன் வழங்கவுள்ளார்.

இதனையடுத்து பேராசிரியர் சி. மௌனகுரு நேர்காணல்கள் நூலின் தொகுப்பினை கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் வழங்க அறிமுகவுரையினை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கவுள்ளார்.

Kalai Ilakkiya

 

உலகக் கிண்ணங்களை மாற்றிக்கொண்ட டோனி -கபில்தேவ்!!

Cup

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் சார்பில் வருடந்தோறும் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு இம்முறை கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் மும்பையில் நடந்த விழாவில் இவருக்கு விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

கடந்த 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கிண்ணத்தை வென்று தந்த கபில் தேவ், 131 டெஸ்ட்(5248 ஓட்டங்கள், 434 விக்கெட்), 225 ஒருநாள் (3783 ஓட்டங்கள், 253 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

பாலி உம்ரிகர் விருது

கடந்த சீசனில்(2012-–13) சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை அஷ்வின் பெற்றார். இவர் இந்த காலக்கட்டத்தில் 8 டெஸ்டில் 43 விக்கெட் வீழ்த்தினார்,18 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றினார். இவருக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

திலிப் சர்தேசாய் விருது

சமீபத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா, இந்தியாவின் சிறந்த வீரருக்கான(2013-–14) திலிப் சர்தேசாய் விருது பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் சச்சின், லட்சுமண், கங்குலி, டோனி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவின் போது தாங்கள் வென்ற உலக கிண்ணத்துடன் வந்து கபில்தேவ், டோனி அசத்தினர். பின்னர் இருவரும் தங்களது கிண்ணத்தை மாற்றிக் கொள்ள, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர்.

 

சூர்யாவுடன் நடிக்க ஆசைப்படும் ஈரான் நடிகை!!

Maryam Zakaria

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஈரான் கவர்ச்சி நடிகை மரியம் ஸ்காரியா.

இவர் தமிழில் சுந்தர்.சி. இயக்கிய நகரம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடல் பெரிய அளவில் ஹிட்டாகாததால் இவர் தமிழ் நாட்டில் பிரபலமாகமால் போய்விட்டார். இருந்தாலும் பொலிவுட்டில் குத்துப்பாடல்களுக்கு நடனமாடுவதில் முன்னணி நடிகையாகியுள்ளார்.

சூர்யா நடிக்கும் இந்த படத்தில் படுகவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்டுள்ள இவர், சூர்யாவுடனும், லிங்குசாமியுடனும் நெருங்கி பழகிவிட்டாராம். இதுகுறித்து அவரிடம் கேட்கும்போது..

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் குத்தாட்டம் ஆட என்னிடம் கேட்டார்கள். சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். சூர்யாவுடன் ஆடியபோது நாம் வேலை செய்கிறோம் என்ற சோர்வே தெரியவில்லை. அவர் என்னிடம் ரொம்பவும் நட்பாக பழகினார். இவருடம் ஆட்டம் போட்டபோது அவருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டாயிற்று என்று கூறினார்.

 

 

பிரித்தானியர்களின் நெஞ்சை உலுக்கிய சிறுமியின் கடிதம்!!

B1நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் கடிதம், பெற்றோர்கள் மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவரையும் உலுக்கியுள்ளது.

பிரிட்டனின் டென்னஸ்சி பகுதியில் வசித்து வரும் டிம் ஸ்மித்தின் மகள் டெய்லர் ஸ்கவுட் ஸ்மித். 12 வயது நிரம்பிய இச்சிறுமி கடந்த ஞாயிறன்று நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

அவரது அறையை பெற்றோர்கள் சுத்தம் செய்த போது அச்சிறுமி தனக்கு தானே எழுதிய கடிதம், அவளது பெற்றோர்களை மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களின் நெஞ்சையும் உலுக்கும் படி செய்துவிட்டது.

10 வருடங்கள் கழித்து தனக்கே அக்கடிதம் வந்துசேரும் வகையில் அவர் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

டியர் டெய்லர் வாழ்க்கை எப்படி உள்ளது. தற்போது வாழ்க்கை சாதாரணமாக உள்ளது(அதாவது 10 வருடங்களுக்கு முன்). நான் இக்கடிதத்தை முன்னரே எழுதிவிட்டாலும், தாமதமாகத்தான் உன்னிடம் அது வந்திருப்பது எனக்கு தெரியும்.

பாடசாலை படிப்பில் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்கள், இதுவரை பட்டம் பெறவில்லையெனில் அதற்கு மீண்டும் முயற்சி செய், பட்டத்தை பெற்றுவிடு. நீ கல்லூரியில் இருக்கிறாயா, அப்படி இல்லையென்றால் அதற்கு நல்ல காரணம் இருக்கும் என நம்புகிறேன். இப்படி நெஞ்சை உலுக்கும்படி அமைந்துள்ள இக்கடிதம் இன்னும் நீண்டுகொண்டே போகின்றது.

ஆனால் இதை எழுதிய அந்த சிறுமி தற்போது உலகத்தில் இல்லை என்பது அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல இக்கடிதத்தை படிக்கும் அனைவருக்கும் கவலையை அளிக்கின்றது.

B2

 

தேவயானி திரும்பினால் கைது : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு!!

Devyaniஅமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் தேவயானி திரும்ப வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் இந்திய துணை தூதராக பணியாற்றியவர் தேவயானி. இவர் மேல் விசா மோசடி குற்றம் சாட்டி, தெருவில் கைவிலங்கிட்டு, அமெரிக்கா கைது செய்தது. இந்த கைதுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் தேவயானி மீதான நடவடிக்கையை கைவிடவேண்டும் என்றும் அமெரிக்கா மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்தது.

இந்த கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க அரசு, இந்திய தூதர் மீது வழக்கு விசாரணை தொடரும் என்று அறிவித்தது. இதனால் இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. தூதரகங்களில் தனிப்பட்ட முறையில் வர்த்தக ரீதியில் செய்யப்பட்ட வணிகங்களை உடனே நிறுத்துமாறும் உத்தரவிட்டது.

இந்நிலையில் தேவயானி உடனே அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று முன்தினம் அமெரிக்க அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக இந்தியா திரும்பினார். இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரை 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், தேவயானி தூதராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார், எதிர்காலத்தில் அவர் அமெரிக்கா வருவதை கண்காணிக்க அவரது பெயர் இமிக்ரேஷன் பட்டியலில் வைக்கப்படும்.

மேலும் புறப்படும் முன்னர் அவரிடம் கைது வாரண்ட் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்க தூதர் வெளியேற்றப்படுவது வருத்தமளிக்கிறது, இதனால் இந்திய அமெரிக்க உறவில் பின்னடைவு ஏற்படாது என்றும் இதுகுறித்து இந்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி, இருநாட்டு உறவை புதுப்பிக்கும் என்று நம்புகிறோம் எனவும் கூறியுள்ளார்.

 

தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இந்திய வீரரின் வீடியோ வெளியானதால் பரபரப்பு!!(வீடியோ)

Headபாகிஸ்தான் எல்லை பகுதியில் அந்நாட்டு ராணுவத்தால் இந்திய வீரர் ஹேம்ராஜ் தலையை வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை விளக்கும் காணொளி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்திய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் அருகே ஹேம்ராஜ் என்ற இந்திய வீரர், பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றிய காணொளி காட்சி பேஸ்புக், யூடியூப் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் இந்திய வீரர் ஹேம்ராஜை தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் அருகில் டோர்ச் லைட் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் சிதறி கிடந்த காட்சியும் காணொளியில் உள்ளது.

இது தொடர்பாக ஹேம்ராஜ் மனைவி, தர்மாவதி, தாயார் மீனா தேவி ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் பாகிஸ்தான் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, இது வருந்ததக்க விடயமாகும். சமீப காலமாக போலியான காணொளி காட்சிகள் வெளியாகி வருகிறது என்றும் இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்த பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சிந்திக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

 

வவுனியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி தேவை!!

Pavitharanவவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற 14 வயது சிறுவனுக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்துவருகின்றார்.

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் இம் மாணவன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பெரும் துன்பங்களுக்கு மத்தியில் தந்தையாரை இழந்த நிலையில் தாயாருடன் வாழ்ந்து வருகின்றார்.

இந் நிலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்கைக்கு அதிகளவான நிதி தேவைப்படுவதனால் அந் நிதியை திரட்டமுடியாதுள்ளமையினால் கருணையுள்ளம் உள்ளவர்களிடம் இருந்து பண உதவியை எதிர்பார்த்துள்ளார்.

எனவே உதவி புரிய விரும்புவோர் 040 200 251 615 866 என்ற வவுனியா மக்கள் வங்கி கணக்கில் தங்களால் முடிந்த உதவியை பணமாக வைப்பிலிடுமாறு தாயாரான திருமதி ராஜசிறி ஜெகதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு 0775278620 என்ற அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

Vavuniya

 

7வது ஐபிஎல் அணிகளில் நீடிக்கும் வீரர்கள் யார் யார்?

IPL77வது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகியவை தலா 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12ம் திகதி நடக்கிறது. இதில் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் விடப்படுகிறார்கள்.

அதே சமயம் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக தங்கள் அணியில் முந்தைய சீசனில் விளையாடிய 5 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திரசிங் டோனி, அஸ்வின், ஜடேஜா, பிராவோ, ரெய்னா

மும்பை இண்டியன்ஸ்

ரோகித் ஷர்மா, மலிங்க, ராயுடு, ஹர்பஜன்சிங், பொலார்ட்

ராஜஸ்தான் ரோயல்ஸ்

வட்சன், அஞ்சு சாம்சன், பின்னி, ரஹானே, ஃபால்க்னர்

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஸ்டெய்ன், தவான்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

டேவிட் மில்லர், வோரா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கௌதம் கம்பீர், நரைன்

டெல்லி டார்டெவில்ஸ் எந்தஒரு வீரரையும் தக்கவைக்க விரும்பவில்லை என்றும், புதிதாக ஓர் அணியை தெரிவுசெய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.

 

யாழில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு அந்தரங்கத்தைக் காட்டியவர் கைது!!

Arrestயாழ்ப்பாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு தனது அந்தரங்கத்தை காட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடமைக்குச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வீதியில் நின்றிருந்த நபர் தனது அந்தரங்கத்தை காட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண் உத்தியோகத்தர் யாழ்.பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்க்கு கொண்டுவந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்!!(வீடியோ)

Deadஇறந்து போனதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் 15 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் திரும்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.

கென்யாவின் நைரோபி அருகேயுள்ள நவியாஷா மாவட்டத்தின் லிமுரா நகரை சேர்ந்தவர் பால் முட்டோரா(24). திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையான முட்டோராவுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்து போனார்.

வாழ்வதற்கு சாவதே மேல் என முடிவு செய்த முட்டோரா, பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கி குடித்து விட்டார். இதனால் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த முட்டோராவை பார்த்த அவரது தந்தை, பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

எவ்வளவோ போராடி பார்த்த மருத்துவர்கள், கடந்த 8ம் திகதி நள்ளிரவு இறந்து விட்டதாக அறிவித்து விட்டனர். இதனால் துடிதுடித்து போன உறவினர்கள் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வேண்டி மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர்களோ பிரேத பரிசோதனை முடியாமல் சடலத்தை தரமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்நிலையில் பிணவறையில் இருந்து சத்தம் வருவதை கேட்ட காவலாளி, பதறியபடி ஓடிச்சென்று மருத்துவர்களுக்கு தகவல் அளித்தார்.

இதற்குள் தானாகவே எழுந்து முட்டோரா நடந்து வருவதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தகுந்த சிகிச்சைகள் மேற்கொண்டு உயிர் பிழைக்க வைத்தனர்.

இச்சம்பவத்தின் போது பணியில் இருந்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஷகிலாவின் சுயசரிதையில் வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!!

Shakila

மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலா தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதியுள்ளார்.

ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகை தனது கவர்ச்சியால் கலக்கிய ஷகீலா இன்று சின்னச் சின்ன கொமடி வேடங்களில் நடித்துவருகின்றார்.

இந்நிலையில் அவர், தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதியுள்ளார். ஒலிவ் புக்ஸ் வெளியிட்டுள்ள அந்த நூலில் பல சுவாரஸ்யத் தகவல்களைக் கூறியுள்ளார்.

அதில் பிரபல நடிகை ஒருவரின் தம்பி தன்னை தீவிரமாக காதலித்ததாகவும், ஆனால் திடீரென பாதியிலேயே தன்னைக் கைகழுவி விட்டதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் மலையாள உலகில் தனக்கு ரொம்பப் பிடித்த ஹீரோ திலீப் என்றும் அவருடன் ஒரு காட்சியிலாவது இணைந்து நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த நூல் தனது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.