அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையக் கூடும்!!

Priceஅத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் மேலும் உயர்வடையக் கூடுமென மொத்த வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பருப்பு, சீனி, கருவாடு, நெத்தலி, பயறு, கடலை, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வடையக் கூடும் என மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பழனியாண்டி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி பத்து வீத்த்திலிருந்து பன்னிரெண்டு வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் செஷ் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாதம் 1ம் திகதி தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் என பழனியாண்டி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

 

ஹன்சிகாவை துரத்தி துரத்திக் காதலிக்கும் சிவகார்த்திகேயன்!!

Siva

ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலித்து வருவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறேன். வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் டாக்டராகணும், என்ஜினீயராகணும்னு கனவு இருக்கிற மாதிரி மான் கராத்தே படத்துல அழகா சிகப்பா ஒரு பெண்ணை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கனுங்கற கனவுல திரிவேன்.

அப்பதான் ஹன்சிகாவை கண்டுபிடித்து வெறித்தனமாக காதலிக்க ஆரம்பிக்கிறேன். அவுங்க நாயை விட கேவலமா விரட்டி விரட்டி விடுவாங்க. ஆனால நான் விட மாட்டேன்.

அதைவிட கேவலமான ஐடியா போட்டு அவுங்கள எப்படி இம்ப்ரஸ் பண்றேங்றதுதான் கதை. கடுமையான உழைப்பும் முயற்சியும் இருந்தா மொக்க பசங்களால கூட ஹன்சிகா மாதிரி அழகு பெண்களை காதலிக்க முடியும்னு தன்னம்பிக்கை கொடுக்குற படம் தான் மான் கராத்தே.

மீசையெல்லாம் எடுத்துட்டு கொஞ்சம் மார்டன் லுக்குல நடிச்சிருக்கேன். கதைப்படி ஹன்சிகாவுக்கு எல்லா விளையாட்டு மேலேயும் ஆர்வம். ஆனா ஒரு விளையாட்டுகூட விளையாடத் தெரியாது.

இந்த வீக்னசை கரெக்டா புடிச்சிக்கிட்டு எப்படி அவங்களோ மனசுல பட்டா போட்டு குடிபோறேன்றதுதாங்க கதை என்கிறார் சிவகார்த்திகேயன்.

 

நடிகையுடனான பிரான்ஸ் ஜனாதிபதியின் கள்ளத்தொடர்பு அம்பலம்!!

Franceநடிகையுடனான தொடர்பை அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹோலண்ட் (59). கடந்த 2007 முதல் பத்திரிகையாளரான வலேரி டிரியர்வேலர் 41 என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார்.

இருவரும் ஏற்கனவே திருமணமாகி முதல் துணையை விவாகரத்து செய்தவர்கள். இருவருக்கும் திருமண வயதில் பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே பிரான்ஸ் நடிகை, ஜூலி கயாட்டுக்கும், ஜனாதிபதி பிராங்காய்சுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக, சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன.

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான ஜூலிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இருவருக்குமிடையிலான உறவை, போட்டோ ஆதாரத்துடன் அந்நாட்டு குளோசர் பத்திரிகை, அட்டை பட செய்தியாக வெளியிட்டுள்ளது.

குளோசர் பத்திரிகையில் கூறியிருப்பதாவது, அதிபர் பிராங்காய்ஸ், பணி முடிந்த பின் வலேரியுடன் சென்று தங்குவது வழக்கம். ஆனால் புத்தாண்டு அன்று இரவு அதிபர் தன் மாளிகைக்கு செல்லாமல் நடிகையுடன் தங்கியிஇருந்தார்.

ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் சம்பவ தினத்தன்று ஒரே ஒரு பாதுகாவலருடன் சென்று, நடிகையுடன் தங்கியுள்ளார். இவ்வாறு அந்த பத்திரிகை, போட்டோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த செயல் பிரான்ஸ் அரசியல்வாதிகளின் கலாசாரத்தை உறுதி செய்துள்ளது. பத்திரிகை செய்தியை அதிபர் மறுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பது போல எனக்கும் சில அந்தரங்கம் இருக்கிறது.

இதை பகிரங்கப்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சிறையில் அடைக்கப்பட்ட கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்!!

Babyபாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்தவர் தமீர்ஷானின் (29). இவரது மனைவி ஹானா ஷானின் (26). கடந்த 2006ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன 3 மாதத்தில் தமீர்ஷானின் இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே அவரது புதுமனைவி கணவரை பிரிந்து பாலஸ்தீனத்தின் காஷா பகுதியில் குடியேறினார்.

இதற்கிடையே இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமீரை சந்திக்கவும் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், சிறையில் இருக்கும் தமீர்ஷானின் உயிரணு பாலஸ்தீனத்துக்கு மறைமுகமாக கடத்தப்பட்டது.

பின்னர், அது அவரது மனைவி ஹனாவின் கரு முட்டையுடன் இணைத்து செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அக்கரு ஹனாவின் கருப்பைக்குள் வைத்து வளர்க்கப்பட்டது.

இதன் மூலம் கர்ப்பிணியான ஹனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே அவர் காஷா சிட்டியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஹாசன் என பெயரிட்டுள்ளார். இது பாலஸ்தீன சிறை கைதிகளுக்கு கிடைத்த வெற்றி என கருதப்படுகிறது.

இஸ்ரேல் சிறையில் 5 ஆயிரம் பாலஸ்தீன கைதிகள் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இதே முறையில் குழந்தை பெற முடிவு செய்துள்ளனர்.

 

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

logo

சென்றவார தொடர்ச்சி..

201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
தலைவன்

202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
வெளவால்

203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
முஃடீது

204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
போனம்

205. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன்

206. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?
அப்துல் ரகுமான்

207. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?
சுரதா

208. “நாடு” எனும் நூலின் ஆசிரியர்?
வாணிதாசன்

209. அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
அகம், அக்கா, அசதி, அச்சம்

210. எல்லை, எத்தன், எண், எலி, எஃகு – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
எஃகு, எண், எத்தன், எலி, எல்லை

211. ”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
காலப்பெயர்

212. “சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
தொழிற்பெயர்

213. “கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
கெடு

214. “சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
சா
215. “பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம்?
செய்தி வாக்கியம்

216. “காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம்?
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்

217. வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று?
வலப்பக்கச் சுவரில் எழுதாதே

218. அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
அவன் கவிஞன் அல்லன்

219. ”திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்?
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்

220. மாதவியின் மகளின் பெயர்?
ஐயை

221. பாலை நில மக்களின் பாட்டு?
வேட்டுவவரி

222. செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
எட்டாவது இடம்

223. ”தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது?
தமிழ் எழுத்துக்கள்

224. சிந்து, வைகை, யமுனை, கங்கை – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
கங்கை, சிந்து, யமுனை, வைகை

225. அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது?
எதுகை

226. “கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஒளவையார்

227. ”கரி” எனும் சொல் உணர்த்துவது?
யானை

228. மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8

229. சிங்கத்தின் இளமைப் பெயர்?
குருளை

230. ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்?
கனியன் பூங்குன்றனார்

231. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?
தொல்காப்பியம்

232. ”தழல்” எனும் சொல்லின் பொருள்?
நெருப்பு

233. “ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்?
புதிய ஆத்திச்சூடி

234. “திணை” எனும் சொல்லின் பொருள்?
ஒழுக்கம்

235. கவிமணி எழுதிய நூல்கள்?
மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி

236. ”தணித்தல்” என்பதன் பொருள் என்ன?
குறைத்தல்

237. முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?
அனிச்சம்

238. பத்துப்பாட்டு நூல்களில் அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?
நெடுநல்வாடை

239. ”குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?
அகநானூறு

240. ”சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்?
மணிமேகலை

241. தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்

242. குமரகுருபரர் இயற்றிய நூல்?
நீதி விளக்கம்

243. பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்?
10

244. ”பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்?
சேக்கிழார்

245. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
ஜி.யூ.போப்

246. ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?
குறிஞ்சிப் பாட்டு

247. நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி?
முச்சீர்

248. வெண்பாவின் வகைப்பாடு?
6

249. புறத்தினை வகைப்பாடு?
12

250. மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

தொடர்ந்து வரும்..

62 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்!!

Abuseமத்திய பிரதேசத்தில் 62 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரேதச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள டோம்ரா கிராமத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி ஒருவர் 17 வயது சிறுவன் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார்.

மூதாட்டி அளித்த புகார் மனுவில் , எங்கள் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான். அதனால் அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

 

 

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் காலாவதியான சீனி மூடைகள் பறிமுதல்!!

Sugarவவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் காலாவதியான சீனி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொங்கல் கால விற்பனைக்காக சுந்தரபுரம் கிளையினால் சீனி தேவை என சங்கத்தின் தலைமையகத்திற்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டதையடுத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சியசாலையில் இருந்து கடந்த 7 ஆம் திகதி சுந்தரபுரம் கிளைக்கு 5 மூடை சீனி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் சங்கத்தின் முகாமையாளர் இரவு 7 மணிக்கு சீனி மூடைகள் வந்தமையால் அதனை இறக்கி விட்டு மறுநாள் ஏற்கனவே இருந்த சீனியை விற்பனை செய்துள்ளார்.

இந்தநிலையில் சீனி இறக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் சுந்தரபுரம் சங்க கிளைக்கு பரிசோதனைக்காக சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள், அங்கு உடைக்கப்படாமல் இருந்த 5 மூடை சீனியும் காலாவதியாகியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து சுந்தரபுரம் கிளையின் முகாமையாளருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் பிரசன்னமாகுமாறும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அறிவித்தல் வழங்கியுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகர மேற்பார்வை பொது சுகாதார பரிசாகரிடம் கேட்டபோது, அவ்வாறு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும் நாளைய தினமே முழு விபரங்களையும் அறியத்தர முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளரிடம் கேட்டபோது நடைபெற்ற சம்பவங்களை உறுதிப்படுத்தியதுடன் சீனி மூடைகள் சங்கங்களின் சமாசத்திடம் இருந்தே கொள்வனவு செய்ய்பட்டதாகவும், அவை பாவனைக்கு உகந்தவையா என்பதனை பரிசோதிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் பொங்கல் காலம் நெருங்கி வருவதனால் வவுனியா நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு சிறந்த பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஆவன செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற மஹாயாகம்!!

Sivan templeருத்திர பாராயண மஹாயாகத்தாலும் தேவார பாராயணத்தாலும் கோவில்குளம் சிறப்புற்றது

திருக்கைலை யாத்திரை சென்று திருப்பியோரால் ருத்திரயாகத்தாலும், திருமுறை வேதத்தாலும் வவுனியா கோயில் குளம் அதிர்ந்தது.

“நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” என்பது அனைத்துச் சைவத் தமிழர்க்கும் நன்கு தெரிந்ததே. அண்மையிலே தெய்வ நம்பிக்கை, தன்னம்பிக்கை, துணிவு, தெளிவு, சமூக சேவை, ஆலயத்திருப்பணிகள், திருமுறையீடுபாடு, அறப்பணிகள், கல்விப்பணிகள், சிவதீட்சை, முதியோர் பராமரிப்பு, கோசாலை, அருளகம் பராமரிப்பு, திருவாசகம் முற்றோதல், பிரதோஷ வழிபாடு என்பனவற்றையே தமது பிறப்பின் தெளிவான நோக்கம், பயன் என உணர்ந்து வாழும் ஒரு ஐந்து பேரது திருக்கைலையாத்திரையின் பயனாக மிகச் சிறப்பான முறையிலே ஏகதச ருத்திரயாகம் நிகழ்ந்தேறியது.

வவுனியா, கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் டிசம்பர் மாதம் 30, 31 ஆம் திகதிகளிலே ஏகாதச ருத்திராபிஷேக மஹாயாகம் பெரு பக்திபூர்வமாகவும், கிரியாபூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் திருமுறைபூர்வமாகவும் கோயில் மூலம் பிரதேசமே அதிர்ந்தது.

மஹலயாக மந்திரங்களினாலும், திருமுறைப் பாராயணத்தினாலும், கிரியா பக்குவத்தினாலும் இந்தயாக கைங்கரியம் வெகு விமர்சையாகவே நிகழ்ந்தேறியது. எத்தனையோ பேர் திருக்கைலாயம் சென்று திரும்பியுள்ளனர். கைலாய யாத்திரையே ஒரு கண்டம் தான். ‘முத்திப்பேறு’ சைவ சித்தாந்தம் கூறும் பலாபலன் ஆகும்.

ஆனால் சைவம் கூறும் நெறி ‘தனிமனித முத்தியே’ அல்ல. தனிமனித உயிரின் முயற்சி விகசித்து வியாபித்து விரிந்து சமூகப்பயன் செய்யும் போதுதான் சைவத்தின் மாண்பும் மகத்துவமும் துலக்கமுறும். இத்தத்துவமே சைவ சமயாசாரியர் நால்வர் கண்ட பக்திநெறி. ‘திருவருள்’ மகிமை, ‘திருவருள் மகிமை’ என்று பேசும் பலர் நினைக்கிறார்கள் அது இறைவனின் கருணைதான் என்று அது தவறு. ‘திருவருள் உயிர்ப்பு இயக்கமாக நிகழ்வதே’ நால்வர் கண்டு காட்டிய சைவநெறி இவை அத்தனைக்கும் தெளிவான விளக்கமாகவே நிகழ்ந்தேறியது ருத்ராபிஷேக மகாயாகம்.

உலக நலன் வேண்டியும் எங்கும் அமைதியும் அன்பும் நிலவி மக்கள் சுகமாக வாழப் பிரார்த்தித்தும் இந்த யாகம் நடத்தப்பெறுகிறது என்பது திடசங்கற்பமாக இருந்தது.

வவுனியா கோவில் குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோயிலின் அறங்காவலர் சபையின் தலைவர் சிவமணி மு.சபாநாதன் பொருளாளர் சிவமணி ஆ.உமாதேவன் உறுப்பினர் வை.செ.தேவராசா ஆகிய மூவரும் திருக்கோயிலின் சார்பிலேயும் அன்பர் திரு. க.நவரட்ணம் அவர்கள் இணைந்தும் திருக்கைலாய யாத்திரையை மேற்கொண்டனர்.

இக்குழுவினர் சிவாலயத்தின் முன்னால் யாத்திரைக்கு முன்னர் சிவனுக்கும் அறங்காவலர் சபையின் செயலாளர் சிவமணி ஆ.நவரெத்தினராசா அவர்களிடம் செய்து கொண்ட சத்தியம் ஒன்றுண்டு. “தாம் திருக்கைலை யாத்திரை செய்துவிட்டுத் திரும்பி வருமிடத்து உலக நன்மை கருதி ருத்திராபிஷேக மஹாயாகம் ஒன்றைச் செய்வோம்” என்பதே சத்தியமாகும்.

வெற்றிகரமாக யாத்திரையை முடித்துக் கொண்ட இவர்கள் உபயமாக அமைந்து முடிந்ததே ஏகாதச ருத்திராபிஷேக மஹாயாகமாகும்.”

“மஹாயாக” ஏற்பாடுகளில் முக்கியமானது யாகசாலை அமைப்பு, அடுத்துத் தகுதி வாய்ந்த வேதாகம விற்பன்னமிக்க சிவாச்சாரியவர்கள், மேலும் திருமுறை ஓதத்தக்க தேவார மூர்த்திகள், இன்னும் கிரியா முறையிலே அனுபவமும் தேர்ச்சியும் பெற்று வழிநடத்தும் சாதகாசிரியர்கள் இந்த நான்கு சிறப்பான ஏற்பாடுகளும் இந்த யாகத்திலே செய்து முடிக்கப்பட்டிருந்தமை மிகுந்த மனமகிழ்ச்சியையும், வெற்றியையும் தந்தது. சர்வயேதகம், சர்வ சாதகம் செய்யவல்ல வேதாகமக்கிரியை வல்ல சிவாச்சாரியப் பெருமக்கள் முன்னின்று இம்மஹா யாகத்தை நிகழ்த்தினார்கள்.

சிறப்புற அமைக்கப்பட்டிருந்த யாகசாலையிலே சிவஸ்ரீ ஸ்ரீநிவாச இரகுநாதக் குருக்கள் அவர்களது நல்லாசியுடன் ஆலைய பிரதம குரு சிவஸ்ரீ இரகுநாத கமலேஸ்வரக் குருக்களுடன் மேலும் பதினொரு சிவாச்சாரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

சர்வ சாதகாசிரியர்களாக நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானத்தின் ஆதீன குரு சிவஸ்ரீ பாலசந்தரக் குருக்கள் பாலகணேசக் குருக்கள் அவர்களும், மட்டுவில் சிவஸ்ரீ ப. சனாதன சர்மா அவர்களும் முன்னின்று மஹாயாகத்தை வழி நடத்தினார்கள். இரு தினங்களும் சிவாச்சாரியார்களின் மந்திர ஒலியும், அறங்காவலர் சிவமணி ஆர் உமாதேவன் அவர்களது கம்பீரமான கணிரென்ற குடிலிலே ஒலித்த திருத்தாண்டவத் திருமுறைகளும் கோயில் குளம் பிரதேசத்தையே அதிர வைத்தன.

முதல் நாள் இடம்பெற்ற கிரியைகளில் ஒன்று கங்காதீர்த்த சங்கிரணம் என்பது இந்தியப் புண்ணிய தீர்த்தங்களும், பாலாவி கீரிமலை, பாவநாசம் தீர்த்தங்களும் இணைந்த விதத்திலே ருத்திராபிஷேக ஏற்பாடுகள் அமைந்தன. யாகத் திரவியங்களும் திருப்திகரமாகவே கொண்டு வரப்பட்டிருந்தன. மிகப்பெரியளவிலே 4 ஆழமான முப்பரிமாணத்துடன் அமைந்த வர்ணம் பூசப்பட்ட பிரம்ம, விஷ்ணு, ருத்திர குண்டம் அமைக்கப்பட்ட மகாயாகம் அமைந்திருந்தது.

நிகழ்ச்சிக்கு மங்கள வாத்தியக் குழுவினரான வீ. கரன் குழுவினர் தவில், நாதஸ்வரம் வாசித்தனர். நிகழ்வில் காரைநகர் தவில் மேதை வீராசாமி அவர்களும் தவில் வாசித் தார். பூமாலை அலங்கார வேலைப் பாடுகளை கெளரீஸ்வர நாதன் மேற்கொண்டிருந்தார். 30 போத்தல் தேன் கருப்பஞ்சாறு, விஸ்திரம், சமித்துகள் தாராளமாகவே யாகத்தில் அக்கினி குண்டத்தில் சொரியப்பட்டன.

மூலவருக்கு 31 ஆம் திகதி யன்று ஏகாதச ருத்திர பாராயணத்துடன் ஏகாதசி ரவ்ய அபிஷேகம் ருத்திர திரிசதி அர்ச்சனை என்பனவும் சிறப்பாக நடந்தேறின. அறங்காவலர் செயலாளர் சிவமணி ஆ.நவரெத்தினராசா அவர்கள் முன்னின்று வழிநடத்தினார். ஒவ்வொரு சைவ மகனும் உணர வேண்டியதொரு செய்தி இந்த யாகத்தினாலே பெறப்பட்டது. அதாவது தனிமனித முத்தி என்பதல்ல நோக்கம்” சமூகத்தின் ஷேமம் நலன் என்பதே சைவ சாரம்” என்பதை இந்த மஹாயாகம் தெட்டத் தெளிவாக உணர்த்திவிட்டது.

 

மேல்,தென் மாகாண சபைகள் கலைப்பு!!

Sothernஇலங்கையின் மேல் மற்றும் தென்மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளன. விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு மாகாணசபைகளும் இதுவரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி!!

SL

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் அரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 8 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்த வகையில் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 63.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இனிங்சில் 388 ஓட்டங்களை பெற்று 223 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி தனது சகல விக்கெட்டுகளையும் இழந்து 359 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு 137 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

137 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக திமுது கருணாரத்ன மற்றும் கௌசல் சில்வா ஆகியோர் களமிறங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடி இருவரும் அரைச்சதங்களை கடந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

கௌசல் சில்வா 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க கருணாரத்ன 62 ஓட்டங்களுடனும் குமார் சங்கக்கார 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டார்.

 

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறும் பிரச்சனைகள் குறித்து ஆராய கூட்டம்!!

Sathiyalingam

வவுனியா மாவட்டத்திலுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்று 13 ஆம் திகதி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் பணிப்புரைக்கு அமைய இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

நுவரெலியாவில் 12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன்!!

Pragnant12 வயது சிறுமியொருவரை கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருளைவெளி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் அவரை வைத்தியரிடம் அழைத்துசென்று சோதித்த போது மகள் நான்கு மாதக் கர்ப்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மகளிடம் விசாரித்த போது நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தை பெற்றோரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்தே அக்கரைப்பத்தனை பொலிஸார் சிறுவனை கைது செய்துள்ளனர். கர்ப்பிணியான சிறுமி மன்றாசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

112 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு : திணறும் அறிவியல் அறிஞர்கள்!!

Light

சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்டே நாம் ஆச்சர்யப் படுவதுண்டு.

ஆனால் 112 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா, ஆம் நம்பித்தான் ஆகவேண்டும்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் என்ற தீயணைப்பு நிலையத்தில் தான் இந்த அதிசய மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மின்விளக்கை உருவாக்கியவர் அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்.

அடோல்ப் சைலெட் 2.5 வருடங்கள் கடுமையாக உழைத்து இந்த விளக்கை கண்டுபிடித்தார். இந்த விளக்கைப் போல மற்றொரு விளக்கை இனிமேல் யாரும் உருவாகவே கூடாது என்று நினைத்த அவர் அதன் தயாரிப்பு குறிப்புகளை எரித்துவிட்டார்.

மேலும் அவர் தனது குறிப்பில் இதைப் போன்ற வேறொரு விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்கமுடியாது என்று எழுதி வைத்துள்ளார்.

இந்த விளக்கைப் போல இன்னொரு விளக்கை உருவாகும் முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் அடங்கிய ஒரு குழு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

அடோல்ப் சைலேடால் 1901 ஆம் ஆண்டு எரிய வைக்கப்பட்ட இந்த மின்விளக்கு கடந்த 112 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது.

 

நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார்!!

Manoramaபல கோடி ரூபாய் பெறுமானமுள்ள பூர்வீக சொத்துக்களை அபகரித்து விட்டதாக நடிகை மனோரமா மீது அவரது அண்ணன் மகன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னை தியாகராயநகரில் வசிக்கிறார். அவர் மீது அவரது அண்ணன் மகன் காசிநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது..

தமிழக மக்களால் நேசிக்கப்படும், அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்படும் நடிகை மனோரமா எனது அத்தை ஆவார். எங்களது பூர்வீகம் மன்னார்குடி. மனோரமாவுக்கு ஆறுமுகம், கிட்டு என்ற 2 அண்ணன்கள் உண்டு. அண்ணன்கள் இருவரும் தற்போது இறந்து விட்டார்கள்.

நான் கிட்டுவின் மகன். எனது உடன் பிறந்தவர்கள் 4 பேர் உள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் நான் குடும்பத்துடன் வசிக்கிறேன். நாங்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையில் இருக்கிறோம். நான் வாடகை கார் ஓட்டி பிழைக்கிறேன்.

எனது தங்கை வீட்டு வேலை செய்கிறாள். எனது அண்ணன் கொத்தனார் வேலை செய்கிறான். மனோரமா அத்தை மிகவும் நல்லவர். எங்கள் குடும்பத்திற்கும், எங்கள் பெரியப்பா குடும்பத்திற்கும் நிறைய நல்லது செய்துள்ளார்.

எங்கள் பாட்டி ராமாமிர்தம் பெயரில் சென்னை எம்.எம்.டி.ஏ. கொலனியில் ஆறரை கிரவுண்டு நிலம் இருந்தது. அந்த நிலம் 1965ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிலம் பல கோடி மதிப்புடையது. கார் சர்வீஸ் நிறுவனம் அதில் உள்ளது. அதை மாதம் 1 லட்சத்திற்கு அத்தை மனோரமா வாடகைக்கு விட்டுள்ளார்.

பாட்டி பெயரில் இருந்த அந்த நிலம் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சொந்தமானது. அந்த நிலத்தை யாருக்கும் சொல்லாமல், அத்தை மனோரமா அவரது பெயரில் மாற்றிக்கொண்டார். இது சட்ட விரோதமானது. பாட்டி பெயரில் அந்த நிலம் இருந்ததற்கான ஆதாரங்கள், உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.

எனவே அத்தை மனோரமா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன். நான் போலீசில் புகார் கொடுத்தது தெரிந்து, எனக்கு போனில் பேசி நிறைய கொலை மிரட்டல் வருகிறது. போலீசார்தான் எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு காசிநாதன் தெரிவித்தார். அவர் கொடுத்துள்ள புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காசிநாதன் கொடுத்த புகார் மனு பற்றி நடிகை மனோரமாவிடம், செய்தியாளர்கள் கேட்டபோது அவர் ஆக்ரோஷமாக பதில் அளித்தார்.

காசிநாதன் எனது அண்ணன் மகன்தான். நான் சம்பாதித்த சொத்தை, நானே அபகரித்து விட்டேன் என்று சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். யாரும் நம்பாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னிடம் பணம் பறிப்பதற்காக, இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்று நடிகை மனோரமா தெரிவித்தார்.

 

15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச்சென்று பலாத்காரம் செய்த சகோதரர்கள்!!

Abuseஉறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் – அளுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பகல் அரிசி இடிக்கச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை இடையில் வழிமறித்த சகோதரர்கள், பலாத்காரமாக அவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

ஜிமெயில் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி!!

gmail -Logoமின்னஞ்சல் அனுப்புவதில் முதற்தர சேவையை வழங்கும் ஜிமெயில் ஆனது தனது பயனர்களுக்கு புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி இரண்டாம் நிலையில் காணப்படும் கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்திலுள்ள நண்பர்களுக்கு ஜிமெயிலில் இருந்தே நேரடியாக மின்னஞ்சல்களை அனுப்பும் வசதியை தந்துள்ளது.

இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் Primary டேப்பில் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Gmail