பள்ளிக்கு செல்லும் குட்டி ஐஸ்..!

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் செல்ல மகள் ஆராத்யா.
இவரை தற்போது பிளே ஸ்கூலில் சேர்த்துள்ளார்கள்.

தினமும் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்து அழைத்து செல்வதுடன், வீட்டிலும் நிறைய விளையாட்டு பொருட்கள் வாங்கி வைத்துள்ளனர்.

பள்ளியில் மிஸ் சொல்லி கொடுக்கும் விஷயங்களை உடனே கிரகித்து கொள்கிறாளாம் ஆராத்யா.

இதே போன்றே ஆமிர்கான்- கிரண் ராவ் தம்பதியின் குழந்தையும் பிளே ஸ்கூலுக்கு செல்கிறதாம்.

குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ள பாடிகாட் ஒருவரையும் ஏற்பாடு செய்திருக்கிறாராம் ஆமிர்கான்.

முயற்சியை நம்புங்கள், வாழ்வில் உயரலாம்: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை..!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை கடந்த 33 ஆண்டுகளாக +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசிளித்து ஊக்கப்படுத்தி வருகிறது.
நேற்று சென்னை சர்.பிடி.தியாகராயர் அரங்கில் நடந்த 34வது ஆண்டு விழாவில் தமிழகத்தில் தரமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை இனம் கண்டு 25 மாணவர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாயை சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் இணைந்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், இந்த நிகழ்ச்சிகளை நாங்கள் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறோம். அப்பா செய்கிற உதவிகளைப் பார்த்து நாமும் செய்ய வேண்டும். அதுவும் கல்விக்கு செய்யும் உதவியே சிறந்தது என்று உணர்ந்தோம்.

அப்பாவை விட சில மடங்காவது அதிகம் செய்தால் தான் வளர்ச்சி. அகரம் பவுண்டேஷன் அப்பாவின் பொறுப்பை பகிர்ந்து கொண்டது.

தரமான மதிப்பெண்கள் பெற்ற அடித்தட்டு மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது என்று முடிவு செய்தது. தன்னாலான பணிகளைச் செய்து இதுவரை 650 மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கியிருக்கிறது.

மேலும் “விதை” திட்டத்தின் கீழ் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள் சமூகத்தை எதிர்கொள்ளும் பயிற்சியையும் அளித்து வருகிறது.

நான் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நம்நாட்டுச் சூழல் மாறாமல் இருப்பது வருத்தம்தான்.

இன்றும் மின்சார வசதி இல்லாமல், பணவசதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவ முடிகிறதே என்று சந்தோஷப்பட்டாலும் நிலைமை இன்றும் மாறாமல் இருப்பதில் வருத்தப்பட வேண்டியும் இருக்கிறது.

இந்தப் பணியை அகரம் எடுத்து நல்ல முறையில் செய்ய விரும்புகிறது. இதுவரையில் அகரம் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது.

ஒரு நடிகனாக நடித்தோம் போனோம் என்பதில் பெருமையில்லை. இதுமாதிரி செயல்கள் செய்வதால்தான் வாழ்க்கை முழுமை அடைவதாக உணர முடியும்.

நீங்கள் எல்லாருமே போராட்டங்களை சந்தித்து வந்திருக்கிறீர்கள். போராட்டங்களை விட்டுவிட வேண்டாம், போராட்டத்தை நம்புங்கள் சின்ன சின்ன முயற்சிகளை நம்புங்கள். அதற்கும் மரியாதை கொடுங்கள்.

என் அப்பா அறிவுரை கூறும் போது 25 வயதுவரை எதற்கும் அடிமையாகாமல் இருந்து விட்டால் அவன் எதற்கும் எப்போதும் அடிமையாக மாட்டான் என்று கூறுவார்.

இது பருவ வயது, உங்களுக்குள் பல விஷயங்கள் உள்ளே வந்து விழும். நல்லதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கெட்டவற்றை அணை போட்டு தடுத்து விடுங்கள்.

பழக்கம்தான் நம்மை அடையாளப்படுத்தும். பழக்கமாக நுழைந்த எதுவும் நம்மை அடிமைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் நல்ல பழக்கங்களுக்கு மட்டுமே அடிமையாக இருங்கள்.

இங்கே நிறைய மதிப்பெண் எடுத்தவர்கள் வந்திருக்கிறீர்கள். மதிப்பெண் எடுப்பது மட்டுமே சாதனை இல்லை. ஒழுக்கமும் முக்கியம். நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். பிறரை மதியுங்கள் உலகில் என்ன நடக்கிறது என்று காது கொடுத்து கேளுங்கள்.

இந்த ஊக்க உதவி செயல்களை எடுத்து நடத்த முடியும் என்பது பெரிய ஆசீர்வாதமாக உணர்கிறேன். இதே பணியை என் மகளும் செய்து இந்த ஆசீர்வாதங்களை பெற ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன் உத்தரகாண்ட் பேரழிவு நிவாரணத்துக்காக பிரதமர் நிவாரணநிதியாக 10 லட்ச ரூபாய் வழங்குவதாகவும் சூர்யா அறிவித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் கார்த்தி அனைவரையும் வரவேற்று அறக்கட்டளை வளர்ந்த வரலாற்றை எடுத்துக் கூறினார்.

சிவகுமார் பேசும் போது, படித்து மேதையான அப்துல்கலாம், சீனிவாச சாஸ்திரி பற்றியும் படிக்காது மேதையான காமராஜர், எம்.ஜி.ஆர், இளையராஜா போன்றவர்கள் பற்றியும் விளக்கினார்.

சிவகுமார் அறக்கட்டளை–அகரம் அமைப்புகள் மூலம் வாழை என்ற அமைப்புக்கு 2 லட்ச ரூயாயும், பேராசிரியர் கல்விமணி என்கிற கல்யாணி திண்டிவனத்தில் நடத்தும் தாய் தமிழ்ப் பள்ளிக்கு ஒரு லட்சரூபாயும் வழங்கப்பட்டன.

ஆல் இன் அழகு ராஜாவில் பாவனா..!

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் பாவனா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சகுனி, அலெக்ஸ் பாண்டியன் என தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கார்த்தி.

இந்நிலையில் அவர் ஒரே நேரத்தில் பிரியாணி, ஆல் இன் அழகு ராஜா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பிரியாணியில் ஹன்சிகாவுடனும், அழகு ராஜாவில் காஜல் அகர்வாலுடனும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அழகு ராஜா படத்தில் பாவனாவும் இணைகிறாராம்.

படத்தில் புதுசாக பாவனாவை உள்ளே கொண்டு வந்திருப்பது கார்த்தி தானாம்.

படமே முடிந்த பின்பும் கதையில் மேலும் பல திருத்தங்கள் செய்து இப்போது இருபது நாட்கள் ஷுட்டிங் கிளம்புகிறார்களாம்.

இதற்காக பாவனா தொடர்ச்சியாக இருபது நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்கும் எஸ்.ஜே.சூர்யா..!

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசையமைக்கும் படம் இசை.
இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இசை படம் முழுவதும், இசைஞானி இளையராஜா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.

இதில் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இசைஞானி என்பதில் ஞானியைத் தூக்கிவிட்டு இசை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளாராம் சூர்யா.

படத்தில் இளையராஜாவை ரசிகர்கள் கடவுளாக நினைத்து வணங்கியது, போஸ்டர் அடித்து ஒட்டியது உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெறுள்ளதாம்.

மேலும் வைரமுத்துக்கும், இளையராஜாவுக்கும் இடையேயான பிரச்னைகள் மற்றும் மெல்லிசை மன்னனுடனான உறவு குறித்த காட்சிகளும் படத்தில் வருகிறதாம்.

குறிப்பாக அந்த காலத்தில் ராமராஜன், மோகன் ஆகியோர்களின் படங்கள் ஓட இளையராஜாவின் இசை தான் காரணம் என்பதையும் கூறியிருக்கிறாராம் சூர்யா.

காட்டுதீயை அணைக்க சென்ற அமெரிக்க வீரர்கள் 25 பேர் உடல் கருகி பலி..!.

கலிஃபோர்னியாவை அடுத்து அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீ அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 25 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்.

அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய காட்டு தீயை, அருகே உள்ள நகரங்களுக்கு செல்லாமல் தடுக்க தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள்.

கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.

அதிக வெப்பம் காரணமாக உள்ளூர்வாசிகள் எல்லோரும் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இப்போது சுமார் 1000 ஏக்கர் அளவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 200 பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

THE BLACK FOREST FIRE CONTINUES TO BURN NORTHEAST OF COLORADO SPRINGS, CO.

பாகிஸ்தானில் மசூதி அருகே மனித குண்டு வெடித்து 30 பேர் பலி..!

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதி அருகே குண்டு வெடித்தது. தற்கொலைப்படை தீவிரவாதி மனித குண்டாக வந்து இந்த தாக்குதலை நடத்தினான்.

அதில் 9 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 30  பேர் பரிதாபமாக இறந்தனர். 70–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் அருகில் இருந்த பல வீடுகள், கடைகளும் சேதம் அடைந்தன.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு லஷ்கர்–இ–ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.இதுதவிர பெஷாவர் மற்றும் சில இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.

ஒரே நாளில் நடைபெற்ற இந்த தாக்குதல்களில் மொத்தம் 53 பேர் உயிர் இழந்தனர். சுமார் 140பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

தலீபான்களுடன் சமரச பேச்சு நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பாகிஸ்தான் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தி பலரை பலி கொண்டுள்ளனர்.

pakistan_bomp

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் – எச்சரிக்கை..!

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.

“Trojan:JS/Febipos” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Commentமற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது.

அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.

இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து கிரான் சந்தியில் ஆர்ப்பாட்டம்..!

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கிரான் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டப் பேரணியில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

களுவாமடு எனுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பத்தில் 5 விவசாயிகள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதான முஸ்லிம் விவசாயிகள் 5 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாதூறு ஒயா நீர்த்தேக்கத்திலிருந்து வாகனேரி குளத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள நீரை சிலர் அணை போட்டு திருப்பியுள்ள நிலையில், அந்த தடுப்பு அணைகளை அகற்றி விட்டு திரும்பும் போதே குறித்த விவசாயிகள் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத அணைகளை தங்களது அனுமதி பெற்றே விவசாயிகள் அகற்றியதாக நீர்ப்பானத் திணைக்களம் தெரிவிக்கிறது.

வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அந்தப் பகுதிகளில் தொடரும் சட்டவிரோத வேளாண்மைச் செய்கைகள் தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் வாசக அட்டைகளை ஏந்தியிருந்தார்கள்.

விவசாயிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான இரா. துரைரெத்தினம், கி.துரைராஜசிங்கம் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

(BBC)

ஜூலை மாத ராசி பலன்கள் – கும்பம்

kumbam

குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. ராகுவின் சஞ்சாரத்தால் சில நன்மைகளும் கேதுவின் சஞ்சாரத்தால் சில சோதனைகளும் ஏற்படலாம். சனிபகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிப்பதும் நல்லதல்ல. இருப்பினும் குருவின் பார்வை கிடைப்பதால், சனி பகவானின் தீய பலன்களை அடக்கி வைக்கப்படும்.

இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரத்தால், புத்திரப்பேறு இல்லாத சிலருக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தாயார் மேன்மை அடைவார்கள். உறவினர்களால் நன்மை உண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வாகனங்களையும், விவசாயிகள் புதிய கால்நடைகளையும் வாங்கும் யோகம் ஏற்படும். கேளிக்கை, விருந்து, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழும் வாய்ப்புகள் ஏற்படும்.

தந்தை மேன்மை அடைவார். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். சொல்வாக்கு, செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் உயரும். உங்களுடைய துணிச்சலான, புத்திசாலித்தனமான செயல்பாடுகளால், புகழும் கீர்த்தியும் கூடும். புத்திர புத்திரிகள் மேன்மை அடைவார்கள். அவர்களுக்கான சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு.

உடல்நலத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது. எதிரிகளின் தொல்லை அவ்வப்போது இருந்துகொண்டு இருக்கும். மனதில் இனம்புரியாத கவலையும் பயமும் கவலையும் இருக்கும். இருப்பினும் கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள் – மகரம்

makaram

குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. அதுபோல 11மிடத்திலுள்ள ராகு பகவான் சில நன்மைகளைச் செய்தாலும்கூட 5மிடத்திலுள்ள கேதுவினால் உங்களுக்கு நன்மை ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதும் நல்லதல்ல.

இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரப்படி இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதமாக இருக்கும். இதுவரை உங்களை வாட்டிவந்த கடன் தொல்லைகள் தீரும். இதுவரை உங்களுக்கு தொல்லை ஏற்படுத்திவந்த எதிரிகளின் தொல்லை இப்போது குறையும். உங்களை வாட்டிவந்த நோய்கள் நீங்கி உடல்நலம் பெறுவீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகள் தீர்ந்துபோகும்.

இதுவரை மனதில் இருந்துவந்த துக்கங்களும் தொல்லைகளும் நீங்கிவிடும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். தந்தை மேன்மை அடைவார். அவருக்கு உடல் நலம் பெறும். அவ்வப்போது செய்யும் காரியங்களில் தடைகளும் கால தாமதங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் விரோதங்களும் ஏற்படும்.

புத்திர புத்திரிகளின் போக்கு மனதில் கவலையை ஏற்படுத்தும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தைப் பிரிக்கவோ அல்லது விற்கவோ வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். குடும்பத்தாரின் தேவைகளை காலமறிந்து பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். அதன் காரணமாக குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடுகள் , சண்டை சச்சரவுகள் ஏற்படும். பெண்களால் அவமானம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். கணவன்-மனைவி உறவு எதிபார்த்த அளவு இருக்காது.

ஜூலை மாத ராசி பலன்கள் – தனுசு

thanusu

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இது மிகவும் சிறப்பானதாகும். அதேபோல ராகு,கேதுக்களின் சஞ்சாரமும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. ஆனால், சனிபகவான் கர்மச் சனியாக உங்கள் ராசிக்கு பத்தாமிடமான கன்னியில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பற்ற நிலை . ஆனால் ஐந்தில் சஞ்சரிக்கும் குருவின் சஞ்சாரமும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு விழுவதாலும் சனியின் பாதிப்பு உங்களுக்கு அதிகம் இருக்காது என்று நம்பலாம்.

இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரங்களின்படி இந்த மாதம் உங்களுக்கு தொழில் வியபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாக கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு.

கணவன்-மனைவியரிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும்கூட அது நீடிக்காது. எடுத்த காரியங்கள் மற்றும் செய்யும் முயற்சிகள் அத்த்னையிலும் உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றியே அடைவீர்கள். சகல செல்வாக்கினையும் சௌபாக்கியங்களையும் அனுபவிப்பதற்கான யோகம் உண்டு.

புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பலவழிகளிலிருந்தும் நன்மைகள் வந்துகொண்டிருக்கும். இருப்பினும் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாக உங்களுக்கு மனதில் ஒரு சோகம் இருந்துகொண்டு இருக்கும்.

பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு மார்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மேலதிகாரிகள், பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரும். அவர்களுடைய விரோதம் வந்து சேரும். பழைய கடன்களில் சில அடைபடும்.

ஜூலை மாத ராசி பலன்கள் – விருச்சிகம்

viruchikam

குரு பகவானின் ஆறாமிடத்து சஞ்சாரம் உங்களுக்கு நல்லதல்ல. ராகு,கேதுக்களின் சஞ்சாரமும் நற்பலன்களைக் கொடுக்க வாய்ப்பில்லை. சனிபகவானின் பதினோராமிடத்து சஞ்சாரம் மட்டும் நற்பலன்களைத் தரவல்லது. மற்ற கிரகங்களால் வரக்கூடிய கெடு பலன்களையும் சரிசெய்யவல்லது. இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரத்தால், இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் சோதனை நிறைந்த மாதமாக இருக்கிறது.

ஆகவே கொஞ்சம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருப்பது நல்லது.மனைவியின் உடல் நலம் பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவுகள் அதிகமாகும், கண், வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சில சமயங்களில் நண்பர்கள்கூட பகைவர்களாகும் வாய்ப்புகள் உண்டு. எனவே நண்பர்களிடம் கவனமாக நடந்துகொள்வது நல்லது.

விரயச் செலவுகள் அதிகமாகும். அலைச்சல்கள் அதிகமாகும். அதன் காரணமாக சரியாக தூக்கம் இல்லாமல் போகும். கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இருப்பினும் அவை உடனுக்குடன் சரியாகிவிடும்., பயணங்களின்போது கவனத்துடன் இருப்பது நல்லது. சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.

எடுக்கும் முயற்சிகள் செய்யும் காரியங்கள் அத்தனையிலும் தடங்கல்களும், இடையூறுகளும், காலதாமதங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. உற்றார் உறவினர்களுடன் விரோதங்கள் ஏற்படலாம். எனவே இறைவனை வணங்கி இந்த மாதத்தை இனிய மாதமாக்கிக்கொள்ளுங்கள்.

ஜூலை மாத ராசி பலன்கள் – துலாம்

thula

குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதனால் நற்பலன்களுக்கு குறைவிருக்காது. ராகு, கேதுக்களின் சஞ்சாரமும் சனி பகவான் விரயச் சனியாகச் சஞ்சரிப்பதும் அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி பகவான் பனிரண்டாமிடமான கன்னியில் சஞ்சரிப்பதன் காரணமாக பல தொல்லைகளும், தடைகளும் தாமதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ராஜயோகாதிபதி 12ல் மறையக்கூடாது. ஆனாலும் மாதக் கிரகங்களின் சஞ்சாரத்தால் இந்த மாதம் உங்களுக்கு சென்ற மாதம் இருந்த பாதிப்புகளிலிருந்து கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் புதிய ஆடைகள் வாங்குவர். சிலருக்கு ஆபரணங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

தொழில் வியாபாரம் மேன்மை அடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான சூழ்நிலை நிலவும். சகல சம்பத்துக்களையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் அனைவரும் இப்பொது ஒழிந்து போவார்கள்.

இருப்பினும் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவருக்கு வயிறு கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பயணங்களின்போது கவனத்துடன் இருக்காவிட்டால், சிறுசிறு விபத்துகள் ஏற்படும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அத்தனையிலும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். அதற்கான பலனும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஜூலை மாத ராசி பலன்கள் – கன்னி

kanni
உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் குரு சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. அதுபோல ராகுவின் சஞ்சாரம் நன்றாக இருந்தபோதும், கேதுவின் சஞ்சாரத்தை திருப்தியாகச் சொல்ல முடியாது. சனிபகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம சனியாக சஞ்சரிப்பதையும் சிறப்பில்லை என்றுதான் கூற வேண்டும். இப்படியாக ஆண்டுக் கிரகங்கள் சரியாக இல்லை என்றாலும் மாதக் கிரகங்களின் சஞ்சாரப்படி இந்த மாதம் உங்களுக்கு ஓரளவுக்கு நற்பலன்களாகவே நிகழும்.

தொழில் ,வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். நாகரீகமான பொருட்களை வாங்கி அனுபவிக்கும் யோகம் உண்டாகும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடையும் பாக்கியம் ஏற்படும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் சில நண்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பல வகையிலும் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சிலருக்கு சுப காரியங்கள் நிகழும். சிலருக்கு வாகனச் சேர்க்கை ஏற்படும். சிலர் நிலம், வீடு,மனை வாங்கும் வாய்ப்பினைப் பெறவார்கள். பெண்களால் நன்மை ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலர் பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பினை பெறுவார்கள். இந்த மாதம் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புண்டு.

இருப்பினும் உடல் நலத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். விரயச் செலவுகள் ஏற்படும். செய்யக்கூடிய காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும்கூட கொஞ்சம் அவமானமும், நாணயக் குறைவும் ஏற்படும்.

ஜூலை மாத ராசி பலன்கள் – சிம்மம்

simmam

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிக நல்ல பலன்களாக நடக்கும். சனியின் சஞ்சாரமும், ராகுவின் சஞ்சாரமும் அவ்வளவு நல்லதல்ல. கேதுவினால் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். இந்த குரு பகவான் உங்களுக்கு மற்ற கிரகங்களினால் ஏற்படும் தீய பலன்களையும்கூட அடித்து வீழ்த்தி விடுவார்.

இனி மதக் கிரகங்களின் பலன்களை ஆராயுமிடத்து தொழில், வியாபாரம் மேன்மை அடையும். எதிபார்த்த வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. மனோபலம் அதிகரிக்கும்.

சகோதர உதவியும் உண்டு. மேலும் சகோதரர்கள் மேன்மை அடைவர். பெண்களால் நன்மை உண்டு. வாழ்க்கைத் துணை நலம் பெறுவர். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

சிலருக்கு புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு திருமணம் கூடிவரும். வேலை வாய்ப்பு கிடைக்கும் யோகமும் ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் சில நன்மைகளும் ஏற்படும்.

எதிரிகளும் போட்டியாளர்களும் இருந்த இடம் தெரியாமல் ஓடி மரைவார்கள்.சிலருக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும்..வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிலர் தற்போது சொந்த ஊருக்குத் திரும்பி வருவார்கள்.

ஜூலை மாத ராசி பலன்கள் – கடகம்

katakam

இப்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலை அல்ல. சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்லதே. இப்போது ராகு பகவானால், சில தொல்லைகள் இருக்கும்.. கேதுவின் சஞ்சாரம் ஒருவகையில் சாதகமாகவே உள்ளது.

இந்த நிலைமைகளையும் மாதக் கிரகங்களின் சஞ்சாரத்தையும் வைத்துப் பார்க்கும்போது, தேவைக்கேற்ற பண வரவு இருந்துகொண்டுதான் இருக்கும். சொல்வாக்கு, செல்வாக்கு, கௌரவம் மேன்மை அடையும். சிலருக்கு பூமி லாபம் ஏற்படும். புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள்.

உடல் நலத்தில் கவனம் தேவை. பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலர் சொந்த ஊரைவிட்டோ, சொந்த இடத்தைவிட்டோ வெளியேறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள். மனதில் ஏதோ ஒரு சோகம் இருந்துகொண்டு இருக்கும்.

சில தீய நண்பர்களால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே எவரிடமும் கொஞ்சம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. தேவைக்க்ற்ற பணவரவு இருந்தாலும், விரயச் செலவுகள் அதிகமாகும். வாகனங்களாலும் விரயச் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.