ஜூலை மாத ராசி பலன்கள் – மிதுனம்

mithunam

ஆண்டுக் கிரகங்களான, குரு பதினோராமிடத்தில் சஞ்சரிப்பது மிகவும் நல்லதாகும். தொழிலில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு, பதவி உயர்வு முதலியவை கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். பழைய கடன்கள் அடைபடும்.

ராகுவின் சஞ்சாரத்தால் சில விரயச் செலவுகள் ஏற்படலாம். ஆனால் பதினோராமிடத்து குருவால், ராகுவினால் ஏற்படும் கெடு பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும் வாய்ப்புண்டு.

சனியின் நாலாமிடத்து சஞ்சாரம் குடும்பத்தைவிட்டுப் பிரியும் சூழ்நிலையை ஏற்படுத்தும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றாலும்கூட, தாமதமாகலாம். ஆனால், எல்லாவற்றையும் சரிக்கட்டும் நிலையில் குருவின் சஞ்சாரம் இருக்கும்.

ஆனால், மாதக் கிரகங்களின் சஞ்சாரம் சகல சுகங்களையும் இந்த ஜூலை மாதம் கொடுக்கும். நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல உறக்கமென்று நல்லபடியாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சுபச் செலவுகள் குடும்பத்தில் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு எதிரிகளால் அவமானம் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும் மொத்தத்தில் இம்மாதம் ஒரு நல்ல மாதமாகவே இருக்கும்.

ஜூலை மாத ராசி பலன்கள் – ரிஷபம்

rishabam

உங்கள் ராசிக்கு 9, 12க்குரிய குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். கேது இரண்டாமிடத்திலும், ராகு எட்டாமிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவான் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இனி மாதக் கிரக சஞ்சாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மன தைரியம் மேலோங்கும்.

வெளியூரில் வேலை செய்யும் சிலருக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இரண்டாமிடத்து சுக்கிரன் மூலம் சிலருக்கு எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொஞ்சம் விரயச் செலவுகளும் ஏற்படும். சிலருக்கு கண் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

வீட்டில் உறவினர் வருகை அதிகமாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைத்துவிடும். எதிர்பார்த்த கடனுதவியும் கிடைக்கும் . சொல்வாக்கு, செல்வாக்கு, அதிகாரம், கௌரவம் கிடைக்கும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கணவன்- மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு முழுவதும் ஜென்ம குருவின் சஞ்சாரத்தால் மனக் கிலேசமும் ஏதாவதொரு சஞ்சலமும் இருந்தவண்ணம் இருக்கும். ராகு , கேது சஞ்சாரமும் சரியில்லை என்பதால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது, நல்லது. சனியின் ஆறாமிடத்து சஞ்சாரம் மிகவும் நல்லது.

ஆனால், சனி கொடுக்கும் பலன்களை முழுவதுமாக அடையவிடாமல் தடுப்பது குரு,ராகு, கேது முதலிய கிரக சஞ்சாரங்களே. ஆனால், மாதக் கிரக சஞ்சாரங்களின் மூலம் நற்பலன்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாழக் கிழமைதோறும், குரு பகவானுக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் ராகு கேதுக்களுக்கும் வழிபாடு செய்யவும்.

அமெரிக்காவின் புதிய பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மைதிலி ராமன்!!

Mythili Raman

அமெரிக்காவில் புதிய பதில் உதவி சட்டமாஅதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் பகுதியை சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய, ஏ.தர்மரத்தினத்தின் மகளும், இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேத்தியுமாவார்.

மைதிலி ராமனின் பெற்றோர் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்தவர்களாவர். அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் மைதிலி ராமன் குற்றப்பிரிவு பதில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் Yale பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம்பெற்றவர்.

குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள சமஸ்டி குற்றவியல் வழக்குகளை கையாளும் சுமார் 600 அரச சட்டவாளர்களுக்குத் தலைமை தாங்கவுள்ளதுடன் குற்றவியல் சட்டங்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருப்பார்.

அத்துடன் அந்தந்த மாவட்டங்களில் குற்றவியல் விவகாரங்களை விசாரணை செய்யும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தும் 93 அமெரிக்க சட்டவாளர்களுடனும் இவர் நெருக்கமாகப் பணியாற்றுவார். மைதிலி ராமன் கடந்த 2008ம் ஆண்டு தொடக்கம் குற்றவியல் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

2009 செப்ரெம்பம் 2ம் நாள் தொடக்கம் இவர் பதில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர் 2013 மார்ச் 1ம் நாள் முதன்மை பிரதி உதவி சட்டமா அதிபர் மற்றும் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மைதிலி ராமன் 1996ல் அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் இணைந்து, குற்றவியல் பிரிவில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் முன்னிலையாகி வந்தார்.

1999 தொடக்கம் 2008 வரை மேரிலான்ட் மாவட்டத்தில், சட்டமாஅதிபர் பணியகத்தில் உதவி அமெரிக்க சட்டவாளராக பணியாற்றினார். இதன்போது போதைப்பொருள் தடுப்பு, நிதிமுறைகேடு, வன்முறைகள், சிறார் கடத்தல், குடியியல் உரிமை வழக்குகளில் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ஜூலை மாத ராசி பலன்கள் – மேஷம்

mesha

உங்கள் ராசிக்கு 9, 12க்குரிய குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். கேது இரண்டாமிடத்திலும், ராகு எட்டாமிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவான் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இனி மாதக் கிரக சஞ்சாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மன தைரியம் மேலோங்கும்.

வெளியூரில் வேலை செய்யும் சிலருக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இரண்டாமிடத்து சுக்கிரன் மூலம் சிலருக்கு எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொஞ்சம் விரயச் செலவுகளும் ஏற்படும். சிலருக்கு கண் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

வீட்டில் உறவினர் வருகை அதிகமாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைத்துவிடும். எதிர்பார்த்த கடனுதவியும் கிடைக்கும்  . சொல்வாக்கு, செல்வாக்கு, அதிகாரம், கௌரவம் கிடைக்கும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கணவன்- மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு முழுவதும் ஜென்ம குருவின் சஞ்சாரத்தால் மனக் கிலேசமும் ஏதாவதொரு சஞ்சலமும் இருந்தவண்ணம் இருக்கும். ராகு , கேது சஞ்சாரமும் சரியில்லை என்பதால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது, நல்லது. சனியின் ஆறாமிடத்து சஞ்சாரம் மிகவும் நல்லது.

ஆனால், சனி கொடுக்கும் பலன்களை முழுவதுமாக அடையவிடாமல் தடுப்பது குரு,ராகு, கேது முதலிய கிரக சஞ்சாரங்களே. ஆனால், மாதக் கிரக சஞ்சாரங்களின் மூலம் நற்பலன்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாழக் கிழமைதோறும், குரு பகவானுக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் ராகு கேதுக்களுக்கும் வழிபாடு செய்யவும்.

முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் யுவதியைக் கரம் பிடித்த இலங்கை இராணுவ வீரர் !!

army

முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது.முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23வது காலாட்படை முகாமைச் சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார என்ற 22 வயது இராணுவ வீரருக்கும், மேரி திரேசா என்ற 20 வயது தமிழ் யுவதிக்குமே திருமணம் இடம்பெற்றது.

இருவருக்கும்டையில் ஏற்பட்ட காதல் தொடர்பினையடுத்து, வீட்டாரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதாக முல்லைத்தீவில் இருந்து தெரியவந்துள்ளது.

உலகக் கிண்ணம் மற்றும் டெஸ்ட் சம்பியன் போட்டிகள் இந்தியாவில்..

india

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 20 ஓவர் உலக கிண்ணம் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன.

இதன்படி 2016ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி 2021-ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ளது.

இதேபோல், நான்காவது முறையாக 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் 2015 – 2023 வரையிலான உலகளாவிய போட்டிகள் குறித்த அட்டவணையில் இந்தியாவுக்கு இந்த சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது.

 

கௌதமியை நான் ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்- ஸ்ருதி ஹாசன்

Sruthi Hasan

எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்க வேண்டும் என ஸ்ருதி ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல் ஹாசன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்தநிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார்.

இந்தநிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில்,

பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் எனக்கு நல்ல நெருக்கம் உள்ளது.

இருப்பினும் என் தாயுடன் தான் அதிக நெருக்கம். நாங்கள் தோழிகளுக்கும் மேல் என்றார். நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று கேட்டதற்கு,

நான் ஏன் அப்படி கூப்பிடணும். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

வவுனியா சுந்தரபுரத்தில் வயோதிபரின் சடலம் மீட்பு

dead

வவுனியா, சுந்தரபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பாங்கான பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியா, சுந்தரபுரம் காட்டுப்பகுதியில் சடலம் ஒன்றைக் கண்ட கிராமவாசிகள்  பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

4ஆம் வட்டாரம் சுந்தரபுரத்தைச் சேர்ந்த ஜேமிஸ் ஜேசுதாசன் (வயது 63) என்பவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர்  கடந்த வாரம் வீட்டில் முரண்பட்டுக்;கொண்டு சென்றிருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பை எதிரித்து மதிமுக பொதுச் செயாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தடை நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்தது. இந்த தடை நீட்டிப்பு சரி தானா என்பது குறித்து ஆய்வு நடத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

அந்த தீர்ப்பாயம் டெல்லி, சென்னை, ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி தடை நீட்டிப்பு சரி தான் என்று 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஒரு ஆண்டுக்கு முன்பே முடிந்தாலும் தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எலிபி தர்மாராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோர் இன்று (01) வழங்கினர்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரி தான் என்ற தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தவறு ஒன்றும் இல்லை.

அதனால் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தட்ஸ் தமிழ்)

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் குறும்படம்..!

ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும்.

இத்தலைப்பானது எமது பிரதேசங்களில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள்.

உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.

இக்குறும்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை வலைப்பதிவரும் எழுத்தாளருமான ம.தி.சுதா எழுதி இயக்க முக்கிய பாத்திரங்களாக ஜெயதீபன், ஏரம்பு, செல்வம், செல்லா மற்றும் சுதேசினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை செல்லா அவர்கள் மேற்கொள்ள படத் தொகுப்பை கே.செல்வமும் இசையை அற்புதனும் வழங்கியிருக்கிறார்கள். குறும்படத் தயாரிப்பை ரஜிகரன் மேற்கொள்ள படத்திற்கான பட வடிவமைப்புக்களை மதுரன் அமைத்திருக்கிறார்.

படம் தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள போதும் வரும் மாதம் நடுப்பகுதியில் இக்குறும்படம் வெளியிடப்பட இருக்கிறது.

 

thulaikko poriyal poster

 

வவுனியா பூந்தோட்டத்தில் விபத்து – இருவர் காயம்..!

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த பிரசன்னா எனவும் மற்றொருவர் பூந்தோட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் எனவும் தெரியவருகிறது.

காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

(திரு)

acc1

 

acc2 acc3

பிளாஸ்டிக் போத்தல்களால் கட்டப்படும் அதிசய வீடுகள்..

பொலிவியா மக்கள் பாவனை முடிந்ததும் குப்பையில் வீசப்படும் தண்ணீர் குளிர்பான போத்தல்களைக் கொண்டு வீடு கட்டுகிறார்கள். தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளது.

இதனால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட ஆரம்பத்துள்ளனர். பொலிவியாவில் உள்ள சாண்டா குரூஸ் நகரில் வசித்து வரும் இன்கிரிட் வாகா டியாஸ் என்ற பெண்மணியே இந்த புதுவிதமான மாற்றீடினை கண்டுபிடித்துள்ளார்.

பாவித்துவிட்டு குப்பைகளில் வீசப்படும் பழைய பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துள்ளார்.இதனையடுத்து பலரும் இம்முறையில் வீடு கட்டும் முயற்சியை ஆரம்பித்துள்னர்.

தற்போது பொலிவியாவில் மட்டும் இதுவரையில் பத்துக்கும் அதிகமான வீடுகளை பிளாஸ்டிக் போத்தல்களால் குறைந்த செலவில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் வெற்றிபெற்றுள்ளமை தனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் வாகா.

ஆம்! வீடு கட்டுவதற்கு கல் மட்டுமல்ல- சிமெந்து மணல் போன்ற மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாட்டை போக்குவதற்கு இந்த பிளாஸ்டிக் போத்தல் வீடமைப்பு முறை மிகவும் சிறந்தது தான் .எவ்வித செலவுமின்றி மிகவும் சுலபமாகவே வீட்டைக் கட்டலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

p1

p3

வடிவேலுவுக்கு 42 மனைவிமார்..!

திரையுலகிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடித்து வரும் புதிய படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்துள்ளது.

இதில் தெனாலிராமன் கெட்டப்பில் வடிவேலு நடித்த முதல் காட்சியை படமாக்கினர்.

இக்காட்சியில் அவருக்கு 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி உள்ளனர்.

குறிப்பாக இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொண்ட வடிவேலு, தன் அம்மாவை பார்ப்பதற்காக மதுரைக்கு சென்று விட்டாராம்.

HIV நோயாளர்களுக்கு புதிய சிகிச்சை முறை..!

HIV கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை உலக சுகாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது.

எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க இந்த புதிய விதிமுறை உதவும் என அவர்கள் அது தெரிவிக்கிறது.

ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் அதாவது நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த மாத்திரை ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உலக சுகாதாரக கழகம் பரிந்துரைக்கிறது.

வளர்ந்துவரும் நாடுகளில் HIV கிருமித் தொற்று ஏற்பட்டு எய்ட்ஸ் நோய் தாக்கம் வருவதைத் தள்ளிப்போட மருந்து சாப்பிடுகின்ற நபர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே அறுபது லட்சத்திலிருந்து இரண்டு கோடியே அறுபது லட்சமாக இந்த புதிய மருத்துவ முறை அதிகரிக்கும்.

ஆனாலும் விலை மலிவான சிகிச்சையாகவே இந்த புதிய மருத்துவமுறை அமையும் என உலக சுகாதாரக் கழகம் நம்புகிறது. மலேசியாவில் ஆரம்பிக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்த புதிய மருத்துவ முறைக்கான பிரச்சாரம் ஆரம்பிக்கும்.

இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்..!

CRICKET-JAM-WIS-IND

மேற்கிந்தியா, இலங்கை, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில நடந்து வருகிறது. இதில் நேற்று கிங்ஸ்டனில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய அணிகள் மோதின.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தற்காலிக தலைவர் வெய்ன் பிராவோ காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். தலைவர் பதவியை பொல்லார்ட் கவனித்தார். நாணய சுழற்சியைவென்ற மேற்கிந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஏமாற்றம் அளிக்கும் வகையில் 10 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கெமார் ரோச் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை பெற்றது. 230 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 47.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்த்து.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஜொன்சன் சார்ள்ஸ் 97 ஓட்டங்களையும் பிராவோ 55 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்ட நாயகனாக ஜொன்சன் சார்ள்ஸ் தேர்வு செய்யப்பட்டார்

குரங்குக் குட்டியை தாயாக அரவணைக்கும் சிறுத்தை (வீடியோ இணைப்பு)..!

உணவுக்காக ஒரு குரங்கை அடிக்கிறது ஒரு சிறுத்தை, அடித்த பிறகு தான் தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி ஒன்று! ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற வேதனை பசியை மறக்கசெய்கிறது. ஒரு தாயாக குட்டி குரங்கை அரவணைக்க முயல்கிறது.

செய்த பாவங்களுடன் குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு இந்த விலங்குகளே மேல் என்று தோன்றுகிறது.