கடன் தொல்லையால் அவஸ்தைப்படும் விஜய் சேதுபதி..!

நடிகர் விஜய் சேதுபதி முன்பு போல் யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை. அத்துடன் இவர் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றி விடுகிறார்.

“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்கு கையடக்க காலண்டர் அடித்துக் கொண்டு கோலிவுட் வீதிகளில் அகப்படுபவர்களிடமெல்லாம் அன்பொழுக பேசி அந்த காலண்டரை கையில் திணித்து இந்த வருஷம் நம்ம வருஷமாக வாழ்த்துங்கள் என ஆசி பெற்ற விஜய் சேதுபதியா இது..?

இவ்வாறு அவரது மாற்றம் கண்டு மூக்கின் மேல் விரல் வைப்பவர்களின் கனிவான கவனத்திற்கு.. :

“தென்மேற்கு பருவக்காற்று” படத்தை தொடர்ந்து அவர் நடித்த “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, “பீட்சா”, “சூது கவ்வும்” உள்‌ளிட்ட படங்களின் ஹாட்ரிக் வெற்றி தானே அப்புறம் இவருக்கு எப்பிடி இவ்வளவு கடன்..?

ஆம்..சில வருடங்களுக்கு முன், காலம் தவறிய விஜய் சேதுபதியின் அப்பாவும் அவர் வாங்கிய கடன்களும் தான் காரணமாம்.

விஜய் ‌சேதுபதியிடம், “அப்பா கொஞ்சம் பணம் தரணும் தம்பி” என கையில் அத்தாட்சியுடனும், அத்தாட்சி, தகுந்த சாட்சி எதுவும் இல்லாமலும்‌ நிறைய பேர் வீட்டு வாசலில் கியூ கட்டி நிற்காத குறையாக வந்து போக ஆரம்பித்து விட்டனராம்.

சென்னை வடபழநி பகுதியில் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினசில் சில பல லட்சங்கள் நஷ்டப்பட்டு போன விஜய் சேதுபதியின் அப்பா சிலரிடம் கடன்பட்டிருந்தது உண்மைதான்.

என்றாலும் ஆளாளுக்கு என்று வந்து நின்றதில் மனிதர் விக்கித்துப் போய்விட்டாராம், அதன் விளைவுதான், விஜய் சேதுபதியின் போக்கில் இப்படி நிறைய மாற்றங்கள் என்கிறது விவரமறிந்த வட்டாரம்..!

வவுனியாவில் தியாகிகள் தினம்..!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் (ஈ.பி.ஆர்.எவ்.எவ்) அனுஷ்டிக்கப்பட்டுவரும் தியாகிகள் தின 23ஆவது ஆண்டு நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நேற்று (30) இந்நிகழ்வு இடம்பெற்றது.

தியாகிகள் தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் க.பத்மநாபாவின் உருவப் படத்திற்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.

பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றன.

இதன்படி வீ.ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சர்வேஸ்வரன், குலசேகரம் என பலரும் அஞ்சலி உரையாற்றினர்.

இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச, நகர சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பெருந்தொகையானோர் பங்கேற்றிருந்தனர்.

thiakikal

பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ கேர்ணல் தர பயிற்சி தேவையா?

பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று (30) காலை உயிரிழந்த நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி ரந்தம்பை என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிநெறியில் உடற்பயிற்சிக்காக காலையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்ற நியதிக்கமைய,

நேற்று காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிபர் திடீர் சுகவீனமுற்று வைத்தியாசலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

உயிரிழந்த 52 வயதான டபிள்யு.ஏ.எஸ். விக்கிரமசிங்க, ரத்தெலுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர்.

அதிபர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும் என்று ஆசியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இலங்கை ஆசிரியர் சங்கம், இந்த சம்பவத்துடனாவது இந்தப் பயிற்சியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயற்சி என்ற பெயரில், அரசு இராணுவ தர பயற்சி வழங்கிவருகிறது.

இதே மாதிரியான திட்டத்தின்கீழ், பாடசாலை அதிபர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கி கப்டன், லெப்டினன், லெப்டினன் கேர்ணல் என்ற தரத்திலான படிநிலைகளையும் அரசு வழங்கிவருவதாகவும் ஆசிரியர் சங்கம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

(BBC)

உகண்டாவில் எண்ணெய் லொறியுடன் கார் மோதல்: தீயில் கருகி 29 பேர் பலி..!

உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள முக்கிய சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய லொறி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் லொறியின் மீது மோதியது.

உடனே லாரியில் இருந்து வழிந்தோடிய பெட்ரோலை வழித்தெடுக்க ஒரு கூட்டத்தினர் சம்பவ இடத்தை நெருங்கினர். அப்போது தீடீரென அந்த லொறி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் எண்ணெய் சேகரிக்க வந்தவர்கள் உள்பட 29 பேர் தீயில் கருகி பலியாயினர்.

பாதிக்கப்பட்ட20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 20 மேற்பட்ட மோட்டர் சைக்கிள்கள் எரிந்து சாம்பாலாயின. மூன்று பக்கங்களிலும் ருவாண்டா, புரூண்டி, டி.ஆர். காங்கோ ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள உகாண்டாவின் கம்பாலா நகரம் முக்கியப்பகுதியாக விளங்குகிறது.

ஆபிரிக்க நாடுகளில் எண்ணெய் லாரிகள் விபத்துக்குள்ளாகும் போது வழிந்தோடும் எண்ணெயை சேகரிக்க வரும் மக்கள் இதுபோன்று பாதிப்புக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றாகும்.

uganda

இனிமேல் வருஷத்துக்கு 2 படங்கள் தான்: விமல் அதிரடி..!

சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த அதிரடியான முடிவை எடுத்துள்ளாராம் விமல்.
கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் மற்றும் விதார்த்தின் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

ஆனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டோ எகிறிக் கொண்டிருக்கிறது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நானும் தானே நடித்தேன். அப்படி இருக்கையில் இந்த சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்படி பெயர் கிடைத்தது என்று புலம்பித் தள்ளுகிறாராம் விமல்.

இதனால் இனி கண்ட கம்பெனிகளின் படங்களில் எல்லாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.

ஆண்டுக்கு 2 படங்கள் அதுவும் பெரிய இயக்குனர், பெரிய நிறுவனத்தின் படங்களில் மட்டும் தான் நடிப்பது என்று தீர்மானித்துள்ளாராம்.

தேசிங்கு ராஜா படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக விமல் நடித்துள்ளார். இந்த படம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம்.

சிறுவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு..!

வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ். விஸ்வரூபன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இது தொடர்பான வைபவம் நடைபெற்றது.

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கினார்.

முல்லைத்தீவு- வவுனியா- கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யுத்தத்தினாலும் குடும்ப வறுமையினாலும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து பின் பெற்றோரிடம் இணைத்துக்கொள்ளப்பட்ட 150 மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

cycle

இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு மலேசியா பூரண ஒத்துழைப்பு..!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு மலேசியா பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

தன்சானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த மலேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தன்சானியாவில் இடம்பெற்ற மாநாட்டிற்காக சென்ற மலேசிய பிரதமரை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேசியுள்ளார்.

தன்சானியாவுக்கான விஜயத்திலிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து சீசெல்ஸிற்கான இரண்டு நாட்கள் சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மூளை செயல்பாடுகளை விளக்கும் டிஜிட்டல் 3டி மாதிரி வடிவமைப்பு..!

brain

மனித மூளையின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் மூளையின், டிஜிட்டல் 3டி மாதிரியை, விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள், கடந்த, 15 ஆண்டுகளாக மனித மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதன் பயனாக, மனித மூளையின் வடிவம் மற்றும் செயல்பாடுகள் குறித்த, டிஜிட்டல் 3டி மாதிரியை வடிவமைத்துள்ளனர். 65வயது பெண்ணின் மூளையைக் கொண்டு, இந்த புதிய டிஜிட்டல் 3டி மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனித மூளையை, 7,400 சிறு துண்டுகளாக பிரித்து, அதன் மூலம் மூளையின் பல்வேறு நுணுக்கமான நரம்புகளின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு இதில் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மயிரிழையில் பாதி அளவு தடிமன் கொண்ட நரம்புகளின் செயல்பாடுகளையும், எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், இந்த தொழில் நுட்பத்தில் அளித்துள்ள செயல் விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.

இதில், மனித மூளையில் உள்ள கோடிக்கணக்கான, நியூட்ரான்களின் செயல்பாடுகள் தத்ரூபமாக விளக்கப்பட்டுள்ளதால், மருத்துவத் துறையில் இது ஒரு புதிய சகாப்தம் படைக்கும்´ என,பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த டிஜிட்டல் 3டி மாதிரியை, உலகின் அனைத்து நாடுகளில் உள்ள டாக்டர்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக, இதை வடிவமைத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மருத்துவத் துறையில் மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் பால் பிளேச்சர் தெரிவித்துள்ளார்.

அமீருக்கு ஜோடியான மிர்த்திகா..!

யோகி படத்திற்கு பிறகு அமீர் நடித்து வரும் திரைப்படம் பேரன்பு கொண்ட பெரியோர்களே.
அரசியல் கலந்த கொமடி படமாக உருவாகும் இப்படத்தை சீன ராமசாமியிடம் தொழில் பயின்ற சந்திரன் இயக்குகிறார், அமீரிடம் உதவி இயக்குநராக இருந்த ஆதாம் பாலாதான் தயாரிக்கிறார்.

இதில் அமீருக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் யாரும் நடிக்க ஒப்புக் கொள்ளாததால், இறுதியில் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த சுர்வினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அவரோ அர்ஜுனின் ஜெயஹிந்த் 2 பட வாய்ப்பு கிடைத்ததால், அமீர் படத்தை கண்டுகொள்ளவில்லையாம்.

இந்நிலையில் சசியின் 555 படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான மிர்த்திகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

ரஷ்யாவைத் தாக்கிய இராட்சத விண்கல் பற்றிய திடுக்கிடும் தகவல்..!

rushya

கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் வரையில் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது. அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது அந்த இராட்சத எரிகல்லினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் இரண்டு முறை பூமியை சுற்றிவந்துதான் பிறகு மறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அணுகுண்டு சோதனை செய்தால் அதன் விளைவுகளைத் துல்லியமாக கண்டறியும் சென்சார்கள் உள்ளது. அந்த சென்சார்களைக் கொண்டு இது கண்டறியப்பட்டது என்றும், இந்த வலைப்பின்னலில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிகழ்வு இது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ரஷ்யாவின் செலியாபின்ஸ்கில் இந்த இராட்சத எரிகல் நெருப்புடன் சென்ற காட்சி பல சென்சார்களில் பதிவானது.

அணுகுண்டு சோதனை செய்தபிறகு ஏற்படும் ஒலி அலைகளின் நுணுக்கங்களை துல்லியமாக பிடிக்கும் சென்சார்கள் இந்த இராட்சத எரிகல்லின் அதிர்ச்சி அலைகளின் பாதையையும் விளைவையும் பதிவு செய்துள்ளது.இந்த இராட்சத எரிகல்லின் தாக்கம் 460 கிலோ டன்கள் டி.என்.டி.க்கு சமம் என்று பிரான்சில் உள்ள அணுசக்தி ஆணையத்தின் அலெகிசிஸ், லீ பைச்சான் என்பவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

1908ஆம் ஆண்டில் சைபீரியாவை நாசம் செய்த மிகப்பெரிய, இராட்சத எரிகல் நிகழ்வுக்குப் பிறகு இவ்வளவு பெரிய நிகழ்வு பதிவானது இப்போதுதான். உண்மையில் அன்று பூமியில் எதுவேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம். ஏன் நிகழவில்லை என்பது பற்றி விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சீனாவில் மீண்டும் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல்..!

சீனாவின் மேற்குப் பிராந்தியமான ஷின்ஜியாங்கில் மோட்டார் சைக்கிள்களில் பட்டாக் கத்திகளுடன் வந்த நூற்றுக்கும் அதிகமானோர் அங்குள்ள ஒரு பொலிஸ் நிலையத்தைத் தாக்கியதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலகுவில் சென்றடைய முடியாத ஹோடன் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பிராந்தியத்தில் தொடரும் வன்செயல்களில் இறுதியாக நடந்திருப்பதாகும்.

இந்த மாகாணத்தின் மற்றுமொரு பகுதியில் இந்த வார முற்பகுதியில் இன்னுமொரு பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தப் பிராந்தியத்தில் சீனா காட்டமாக நடப்பதாக அந்தப் பகுதியில் உள்ள உய்குர் சிறுமான்மையினர் மிகவும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

(BBC)

முக்கோணத் தொடரிலும் தொடருமா இந்திய அணியின் ஆதிக்கம்?

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத்தீவுகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

2-வது லீக் ஆட்டம் ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான இந்தியா- பிராவோ தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது. இதனால் இந்தப்போட்டியில் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. இந்திய அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்குமா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் ஆடு களங்கள் மிதவேகம் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கலாம். வேகப்பந்தில் புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ் சிறப்பாக வீசக்கூடியவர்கள். துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர் ஷிகார் தவான் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. சம்பியன்ஸ் டிராபியில் அதிக ஓட்டங்களை குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார்.

ரோகித்சர்மா, தினேஷ் கார்த்திக்,வீராட் கோலி, கேப்டன் டோனி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். மேற்கிந்தியத்தீவுகள் அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்தியாவிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. இலங்கையை தொடக்க ஆட்டத்தில் எளிதில் வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

கிறிஸ் கெய்ல், டாரன் பிராவோ,பொல்லார்ட், அணித்தலைவர்பிராவோ, டரன் சமி, சுனில் நரேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகளுமே முழு திறமையை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

கமல் படத்தில் காஜல் நடிக்க மறுத்தது ஏன்?

நாயகிகள் அனைவருக்குமே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர வேண்டும் என ஆசைப்படுவதுண்டு.
அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சம்பளத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

ஆனால் காஜல் அகர்வாலோ அதற்கு நேற்மாறாக இருக்கிறாராம், சம்பள விடயத்தில் மிகவும் கறாராக இருக்கிறாராம்.

சமீபத்தில் கமல்ஹாசனின் புதிய படமான உத்தம வில்லன் படத்தில், கமலுக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அவர் எதிர்பார்த்த சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து கமல்ஹாசன் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் மறுத்துவிட்டார்.

இதேபோன்று சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாணுடன் கப்பர்சிங்-2 படத்தில் வாய்ப்பு கிடைத்தும், சம்பள பிரச்னையால் நடிக்க மறுத்து விட்டாராம்.

முன்னணி நடிகர்களுடன் நடித்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும், அப்போது சம்பளத்தை கண்டுகொள்ள கூடாது என நெருங்கிய வட்டாரங்கள் காஜலுக்கு தொடர்ந்து அறிவுரை கூறிய வண்ணம் உள்ளனராம்.

தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை இளைஞர்கள் கைது..!

தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த இலங்கை இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அகதிகளுக்கென சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கை அகதிகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் முறையான அனுமதி பெற்று செல்லவேண்டும் என விதிகள் உள்ளன.

இந்நிலையில் திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் இளைஞர்கள் 12 பேர் கள்ளத்தோணி மூலம் கடலூர் வழியாக அவுஸ்திரேலியா செல்வதாக திருச்சி க்யூ பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

திருச்சி கே.கே.நகரில் ஒரு இலங்கை இளைஞர்களை ஏற்றி கொண்டு வேன் கடலூர் புறப்பட்டு செல்ல தயாரானது தெரிய வந்தது. இதை தொடர்ந்து க்யூ பிரிவு பொலிஸார் அங்கு சென்று வேனை மடக்கினர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸார் வேனில் இருந்த 5 பேரையும் கைது செய்தனர். கைதான 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு 5 பேரும் அங்கு அடைக்கப்பட்டனர். மேலும் 7 பேர் குறித்து க்யூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியா பஸ் நிலைய வர்த்தக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்..!

வவுனியா பஸ் நிலைய வர்த்தக நலன்புரிச் சங்கம், டெங்கொழிப்பு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்து நகரசபை மற்றும் சுற்றுச்சூழல் பொலிஸாரின் அனுசரணையுடன் இச்சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக வவுனியா பஸ் நிலையத்தில் வர்த்தகர்கள் எதிர்நோக்கி வந்த பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இதன்போது தீர்வு காணும் பொருட்டு பொலிஸாருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

Vavuniya  bus stand

அவுஸ்திரேலியா செல்ல தயாரான வவுனியா குடும்பத்தினர் காத்தான்குடியில் கைது

arrest

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் விடுதி ஒன்றில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (30) அதிகாலை 12.30 மணியளவில் கிரான்குளத்திலுள்ள விடுதி ஒன்றில் வைத்து இரு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை உட்பட ஆண்கள் மற்றும் பெண்கள் என ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யதுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடிப் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுத்திப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து சட்டவிரேதமாக விற்கு செல்வதற்கு முற்பட்ட 23 பேர் பொலிஸாரினாலும் இராணுவத்தினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.