கர்ப்பிணியாக நடிக்க மறுத்த நயன்தாரா!!

Nayanthara

கவர்ச்சியாக நடிக்க தயங்காத நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க மறுத்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. சேகர் கம்மூலா இயக்கத்தில் அனாமிகா என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படம் ஹிந்தி கஹானியின் ரீமேக்.

கர்ப்பிணியான வித்யாபாலன் தனது கணவரைத் தேடி வெளிநாட்டிலிருந்து கொல்கத்தா வருவதும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களுமே கஹானி படத்தின் கதை.

வித்யாபாலனின் கர்ப்பிணி வேடமும், அதன் பின்னேயுள்ள அவரின் நோக்கமும்தான் படத்தின் பிரதான த்ரில்லர் ஏரியா. அதனை நயன்தாராவுக்காக காவு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க மாட்டேன் என்றதால் புதிதாக திருமணமானவராக அவரை காட்டியிருக்கிறாராம். இந்த மாற்றத்தால் படத்தின் சுவாரஸியத்தில் கொஞ்சம் ஆவியாகிவிடும் என்பதை கஹானியை பார்த்த யாரும் ஒப்புக் கொள்வார்கள்.

டிசம்பர் மாதம் திரைக்கு வரவேண்டிய அனாமிகா சில காரணங்களால் தள்ளிப் போனது முக்கியமானது. இந்தப் படத்தில் பசுபதியும், வைபவும் நடித்துள்ளனர்.

 

மன்னார் மனிதப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!!(படங்கள்)

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை வரைக்கும் 18 மனித எலும்பு கூடுகள் மற்றும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றின் உத்தரவிற்கமைவாக மீண்டும் நேற்று காலை 8 மணிமுதல் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் சட்ட வைத்திய நிபுணர் டி. எல்.வைத்தியரட்ண ஆகியோர் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் கண்டபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆறு வயது மதிக்கத்தக்க ஒருவரின் எலும்புக்கூடும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று வரை 26 மனித எலும்புக்கூடுகள் கண்டபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித புதைகுழி தோண்டும் பணி இன்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

m1 m2 m3 m4 m5 m6

 

ஜனாதிபதி மஹிந்தவுக்கு பலஸ்தீனின் நட்சத்திரம் விருது!!

Mahinda

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீனின் நட்சத்திரம் (ஸ்டார் ஒப் பலஸ்தீன்) எனும் பலஸ்தீனின் அதியுயர் விருது பலஸ்தீன் அரசாங்கத்தால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் இலங்கை தூதுக் குழுவுடன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று காலை பலஸ்தீனம் சென்றடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ராஜபக்ஷ பலஸ்தீன பிரதம அமைச்சர் ராமி ஹம்தல்லா, இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் எச்.அல்-அக்ஹா, பலஸ்தீனததில் பதிற்கடமையாற்றும் இலங்கைப் பிரதிநிதி சிராஜ் அஹமட், பெத்தலஹேமில் உள்ள இலங்கையின் காவற் தூதர் மைக்கல் ஷோமாலி ஆகியோர் வரவேற்றனர்.

பலஸ்தீனத்தை அடைந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னாள் பலஸ்தீன ஜனாதிபதி, காலஞ்சென்ற யசிர் அரபாத்தின் சமாதிக்கு மலர்வளையம் சார்த்தி அஞ்சலி செலுத்தினார்.

 

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இருந்து வர்த்தகப் பிரிவில்18 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி!!(படங்கள்)

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இருந்து இவ்வாண்டு வெளியாகிய உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில், வர்த்தக பிரிவில் உயர் பெறுபேறுகளைப் பெற்று 18 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் செல்வி.உமா இராசையா தெரிவிக்கையில்..

கடந்த ஆண்டுகளைப் போன்று இம்முறையும் எமது கல்லூரியில் இருந்து வர்த்தகப் பிரிவின் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு 18 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு எமது பாடசாலையில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் சு.லவீனா என்ற மாணவி மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

எமது கல்லூரியில் இருந்து சு.லவீனா, சி.சுரேகா, ந.கீர்த்தனா, மு.இன்பஜோதி, கி.தட்சாயினி, பா.வினோதினி, தி.ஜனார்த்தி, உ.உமாசாலினி, உ.துஸ்யந்தி, க.மகிழ்தினி, சி.மறிற்பிரியங்கா, த.இந்துமதி, பா.சதுர்சா, சி.திருசிகா, இ.பிரமிகா, கே.தமிழினி, அ.சிவாஜினி, யூ.விசாலினி ஆகிய மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு வர்த்தகப் பிரிவின் ஊடாக தெரிவாகியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

வர்த்தகப் பிரிவு ஆசிரியர்களான திரு.பா.பாலஸ்ரீந்திரன், திருமதி சி.மகேந்திரராஜா, திருமதி அ.ரஞ்சன் ஆகியோர் இவர்களுக்கு பாடசாலையில் கற்பித்தமை குறிப்பிடத்தக்கது.

vavuniyavavuniya2

 

விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் : நாஸா நிறுவனம் தெரிவிப்பு!!

Nasaஎதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை தீவு ஒன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும்.

அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த நாட்டின் அமைப்புப் போன்றவை விண்வெளி ரொக்கெட்களின் மையமொன்றை அமைப்பதற்கு பெரிதும் பொருத்தமானது என்றும் நாஸா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

புயல்கள், சுழல் காற்றுக்கள் இல்லாதிருப்பதும் எப்போதுமே தெளிவான வான் பரப்பொன்றைக் கொண்டிருப்பதும் விண்வெளி ரொக்கெட் ஒன்றை விண்ணுக்கு ஏவும் போது எதிர்பாராத விதமாக வெடிப்பு ஏதும் நிகழுமானால் கடலில் விழும் நிலை காணப்படுவதால் இலங்கையின் அமைவிடம் பெரிதும் பாதுகாப்பானது என்றும் நாஸா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

யாழில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி!!

யாழ்ப்பாணம், அள­வெட்டிப் பகு­தியில் அண்மையில் ஆடொன்று ஈன்ற ஆட் டுக்­குட்டி வித்­தி­யா­ச­மான முக அமைப்­புடன் காணப்­ப­டுகின்­றது.

இரண்டு கண்­களும் அரு­க­ருகே ஒன்­றாக அமைந்­துள்ள நிலையில் பிறந்­துள்ள இவ் ஆட்­டுக்­குட்­டியை பார்­வை­யிட பெருந்­தொ­கை­யான மக்கள் வந்த வண்­ண­முள்­ளனர்.

aadu

-வீரகேசரி-

 

என்னை மானபங்கப்படுத்தி விட்டார்: பட அதிபர் மீது அனுராதா பரபரப்பு புகார்!!

Anuradhaதன்மீது பண மோசடி முறைப்பாடு கொடுத்த பட அதிபர் மீது மானபங்க முறைப்பாடு கொடுத்துள்ளார் புதுமுக நடிகை அனுராதா. இதனையடுத்து பட அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராயநகர், பத்மநாபன் தெருவில் வசிப்பவர் அனுராதா. இவர் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இவர் மீது ஸ்ரீதரன்(35) என்ற பட அதிபர், கடந்த மாதம் முறைப்பாடு செய்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்து விட்டார் என்று முறைப்பாட்டில் குறிப்பிட்டு இருந்தார்.

இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தோம். இதுமட்டுமல்லாமல் பணம், சொத்து, நகை என மொத்தம் ஒன்றைரை கோடிக்கு மேல் என்னிடம் இருந்து அனுராதா கறந்துவிட்டார்.

இப்போது அதை திருப்பி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பொலிஸ் கமிஷனரிடம் அளித்த புமுறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகார் மனு மீது விசாரணை நடந்து வரும் வேளையில் நடிகை அனுராதா, ஸ்ரீதரன் மீது பதிலடியாக பரபரப்பு முறைப்பாட்டு மனு ஒன்றை கொடுத்தார். தன்னை, சேலையை பிடித்து இழுத்து, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மானபங்கம் செய்தார் என்றும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு, அவமானப்படுத்திவிடுவேன் என்று, மிரட்டுவதாகவும், அனுராதா தனது முறைப்பாட்டில் தெரிவித்து இருந்தார்.

இந்த முறைப்பாட்டு மனு மீது பாண்டிபஜார் பொலிசார் சனிக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்காக வேளச்சேரியில் வசிக்கும் ஸ்ரீதரன் அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் இரவு 10.30 மணிக்கு தெரிவித்தனர்.

 

சினிமா படவிழாவில் புதுமை : நடிகர் மன்சூர் அலிகான் 50 வினாடிகளில்50 முட்டைகளை குடித்தார்!!

mansoorராஜாதி ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன், ராவணன், வாழ்க ஜனநாயகம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, என்னை பார் யோகம் வரும், லொள்ளு தாதா பராக் பராக் ஆகிய படங்களை தயாரித்த மன்சூர் அலிகான் அடுத்ததாக, அதிரடி என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது.

பட அதிபர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கலைப்புலி ஜி.சேகரன் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் வடிவில் பிரத்யோகமாக செய்யப்பட்ட மிகப்பெரிய கேக் வெட்டப்பட்டது. படத்தின் பெயருக்கு தகுந்தாற்போல் விழா மேடையில் மன்சூர் அலிகான் அதிரடியாக பல சாகசங்களை செய்தார்.

தனது வயிற்றின் மீது 125 கிலோ எடையுள்ள ஒருவரை நிற்க வைத்து உடற்பயிற்சி செய்ய வைத்தார். 50 வினாடிகளில் 50 பச்சை முட்டைகளை உடைத்து குடித்தார். அதன்பிறகு, தனது வயிற்றில் பெரிய கற்களை வைத்து சம்மட்டியால் உடைத்தார். நெருப்பு வைத்து அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஓடுகளை கையினாலும், தலையினாலும் உடைத்தார்.

அதையடுத்து பீர்பாட்டில்களை வெறும் கையினால் உடைத்து நொறுக்கினார். படவிழாவையொட்டி இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. நிகழ்ச்சியில் மன்சூர் அலிகானின் மகன்களும், மகள்களும் கலந்து கொண்டு பாடினார்கள்.

 

தெலுங்கு நடிகர் உதய் கிரண் தூக்கிட்டு தற்கொலை!!

Utheyஆந்திராவை சேர்ந்த முன்னணி தெலுங்கு நடிகரான உதய் கிரண் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புஞ்சகட்டாவின் ஸ்ரீ நகர் கொலனியில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிபோட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவரது அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்த அவரது மனைவி விஷிதா மற்றும் அருகிலுள்ள வீட்டினர் அவரை மீட்டு ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

1980 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி பிறந்த கிரண் அவரது நீண்ட நாள் நண்பரான விஷிதாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை தனியாக இருந்த உதய் எதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார் என இதுவரை தெரியவில்லை.

தனிப்பட்ட பயணமாக மணிகொண்டா நகருக்கு சென்ற விஷிதா நேற்றிரவு பலமுறை உதய்யின் செல்போனை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்து அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து பார்ததபோது அவர் தூக்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது.

அவர் தெலுங்கில் சித்திரம், நுவ்வு நீனு, மனசந்தா நுவ்வெ மற்றும் ஸ்ரீராம் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

 

திடீர் உடல் நலக்குறைவால் நடிகை சுருதிஹாசன் வைத்தியசாலையில் அனுமதி!!

Shruti Hassan at CCL Curtain Raiser 2013

நடிகை சுருதிஹாசன் திடீர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடந்தது. வீட்டுக்குள் மர்ம மனிதர் அத்துமீறி நுழைந்து சுருதிஹாசனை தாக்கினார். பின்னர் அவனை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.

சுருதிஹாசன் தற்போது ஐதராபாத்தில் தங்கி இருந்து ரேஸ்குராம் என்ற படத்தில் நடித்து வந்தார். இவர் தெலுங்கில் நடித்துள்ள இன்னொரு படமான ஏவடு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

தெலுங்கு படப்பிடிப்பில் இருந்தபோது சுருதிஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடனடியாக அவரை ஐதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

 

ரஜனியின் கோச்சடையான் பாடல் பெப்ரவரி 15ம் திகதி வெளியாகிறது!!

Kochadayan

ரஜினிகாந்த் நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இயக்கும் படம் கோச்சடையான். இது முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோச்சடையான் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நடிகைகள் தீபிகா படுகோனே, ஷோபனா, நடிகர்கள் நாசர், ஜாக்கிஷெராப், சரத்குமார் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 12ம் திகதி ரஜினி பிறந்தநாள் அன்று கோச்சடையான் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில் நுட்ப பணிகள் முடிவடையாததால் அது தள்ளிப்போனது.

தற்போது ஓடியோ வெளியீடு திகதியை பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற பெப்ரவரி மாதம் காதலர் தினத்தில் மறுநாளான 15ம் திகதி ஒடியோ வெளியிடப்படுகிறது.

ஓடியோ ரிலீஸ் விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதில் ரஜினிகாந்த் மற்றும் படத்தில் நடித்த பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். ஓடியோ ரிலீசை தொடர்ந்து ஏப்ரல் அல்லது மே மாதம் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.

கோச்சடையான் படத்தின் டிரெய்லர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடும் எங்கே போகுது வானம் என்ற பாடல் மட்டும் இடம் பெற்று இருந்தது. இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

 

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் நிகழும் அதிசயம்!!(படங்கள், காணொளி)

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பகுதியில்அமைந்துள்ள அருள்மிகு மல்லிகை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றிலேயே இப் பெரும் அதிசயம் இடம் பெற்று வருகின்றது.

நிலத்தின் மேல் சுமார் இரண்டரை அடிக்கு உயரமாக அமைந்த கட்டுப்பகுதிக்கும் மேலாக கிணற்றில் இருந்த நீர் வெளியேறி வந்தது . இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களால் குளாய்களை வைத்து காற்று மூலம் நீர் வெளியேற்றப்பட்டது. நீர் குறைவடைந்து சென்றபோதும் மீண்டும் நீர் மேல் நோக்கியே வந்த வண்ணம் உள்ளது.

இதனை பார்வையிட மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

 

kandavalaikandavalai2

 

இன்று முதல் சகல பாடசாலை மாணவர்களுக்கும் உடற்பயிற்சி!!

School

நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று முதல் தேக அப்பியாச வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.

இதற்கிணங்க பாடசாலை நாட்களில் தினந்தோறும் காலை 10 நிமிடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்தில் அனைத்து மாணவர்களதும் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பிலான சுற்றறிக்கை அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிரு ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பாடசாலை தேக அப்பியாச வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இப்பாகமுவ மத்தியமகா வித்தியாலயத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்கள் ஏதாவதொரு விளையாட்டில் பங்கேற்கவேண்டியது, அமைச்சரவையினால் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இலவச கல்வி பெறும் ஒவ்வொரு மாணவரும் காலையில் உடற்பயிற்சி பெறவேண்டியது அவசிய மெனவும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.

ஆரோக்கியமான உடல் மற்றும் உள வளம் கொண்ட பரம்பரையினரை உருவாக்குவதே மஹிந்த சிந்தனையின் நோக்கம் என்பதன் காரணமாகவே பாடசாலை மாணவர்களுக்கு தேக அப்பியாசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் கூறினார்.

இந்த வேலை திட்டத்திற்கு அவசியமான வீடியோ இறுவெட்டுகள், இசை நாதம், ஆசிரியர் கையேடு ஆகியன தற்போது அனைத்து பாடசாலைகளுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதுடன் ஆசிரியர்களுக்கும் இது தொடர்பிலான பயிற்சிகள், வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

கொழும்பு சொகுசு ஹோட்டல் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை சடலமாக மீட்பு!!

Swimingகொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய மலேசிய பிரஜையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10 மணி அளவில் நீர் தடாகத்தில் ஒருவர் மிதப்பதை கண்ட சுத்திகரிப்பு ஊழியர்கள் உடனே ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்து அந்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அவர் உயிரிழந்திருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

காதல் போட்டியால் உயிரை பறிகொடுத்த வாலிபர்!!

Murderகாதலிப்பதில் ஏற்பட்ட போட்டியால் தஞ்சை அருகே கழுத்தை அறுத்து பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை தில்லை நகரை சேர்ந்தவர் சுகுமாறன். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மகன் மனோஜ்குமார் (19). தஞ்சை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

அதே தெருவில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவரிடம் மனோஜ்குமார் பழகினார். அதே மாணவியிடம் அண்ணா கொலனியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான 25 வயது வாலிபர் ஒருவரும் அடிக்கடி பேசிவந்துள்ளார். இது தொடர்பாக அந்த வாலிபருக்கும் மனோஜ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 28ம் திகதி மனோஜ்குமார் திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் மதியம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு தாலிவெட்டி ஆற்றில் மனோஜ்குமார் சடலமாக மிதந்துள்ளார். மேலும் அவரது கழுத்து அறுக்கப்பட்டு, மார்பில் கத்திக் குத்து காயங்கள் இருந்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், மாணவியை காதலிக்கும் போட்டியில் அண்ணா கொலனி சென்ட்ரிங் தொழிலாளியும், அவரது நண்பர்களும் தான் மனோஜ்குமாரை கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

 

இருவர் சம்மதத்துடன் நடக்கும் உறவு பலாத்காரமாகாது : டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Delhi_High_Courtதிருமணத்துக்கு முன்பாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவினை, பலாத்காரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் மீது, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லி பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முறைப்பாடு தெரிவித்தார்.

அதன்பேரில் அந்த இளைஞர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வீரேந்தர் பட் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவினை பலாத்காரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தார்.

படித்துவிட்டு அலுவலகம் செல்லும் அந்த பெண் சுய விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளார். வாக்குறுதி அளித்தபடி அந்தப் பெண்ணை அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது.

தனது செயலால் ஏற்படும் பின்விளைவுகளை அந்தப் பெண் உணர்ந்து பார்த்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஒரு நபர் அளிக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

சம்பந்தப்பட்ட ஆண் வாக்குறுதியை நிறைவேற்றலாம், அல்லது நிறைவேற்றாமலும் போகலாம். அனைத்து மதச் சித்தாந்தங்களுக்கும் எதிரான ஒழுக்கமற்ற செயலில், ஈடுபடுகிறோம் என்பதை அந்தப் பெண் உணர்ந்திருக்க வேண்டும்.

உலகில் எந்த மதமும் திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவு வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞரை விடுவித்து அவர் உத்தரவிட்டார்.