இந்தி நடிகர் சல்மான் கான் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். 48 வயதான அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் எனக்கு திருமணத்திலோ அல்லது பெண் தோழிகளை வைத்து கொள்வதிலோ விருப்பம் கிடையாது. நான் தனிமையில் வாழவே விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டாக தனிமையில் வசித்தே பழகிவிட்டேன். தனிமையை தான் விரும்புகிறேன்.
தனிமையாக வசிப்பதால் செய்ய வேண்டியவற்றை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் செய்ய முடியும். அதை பற்றி விவரித்து கூற வேண்டியதில்லை. நான் யாரிடமும் பொய் பேச வேண்டிய அவசியமும் இல்லை.
யாராவது என் வாழ்வில் குறுக்கிட விரும்பினால் தாராளமாக வரலாம். ஆனால் எதையும் எதிர்பார்க்காதீர்கள். நான் பெண்களை மதிப்பவன். அவர்கள் மீதான மதிப்பை இனியும் தொடருவேன். நான் ஒருமுறை கூட யாரிடமும் பொய் பேசியதே கிடையாது என்று கூறினார்.
மீரட் அருகே பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமூகத் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே 40 வயதுடைய ஒருவர் தனது 16 வயது மகளை 7 மாதங்களாக தொடந்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.
இதில் பயந்துபோன அந்த சிறுமி இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.
நாளடைவில் சிறுமி கர்ப்பமடையவே நடந்த சம்பவத்தை தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர், சிறுமியின் தந்தையை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஒற்றையாட்சியை கைவிட்ட புதிய அரசியலமைப்பு தேவையென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்தானது தனித் தமிழீழக் கொள்கையை இன்னமும் இவர்கள் கைவிடவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
வடக்கு ஆளுநரை வெளியேற்றும் வரை மத்திய அரசுடன் வடமாகாண சபை மிதவாதப்போக்கினை கடைபிடிக்குமென்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்..
நாட்டின் தற்போதைய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டுமென்ற விவாதம் பல்வேறு தரப்புகளால் மேலெழுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதனை பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வைத்து செய்துவிட முடியாது.
மாறாக மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டியது அவசியமாகும். இதன்போது நிச்சயம் பெரும்பான்மை இனத்தவரின் அபிலாஷைகளுக்கமையவே புதிய அரசியலமைப்புகளுக்கு ஆதரவு கிடைக்கும். அது ஒற்றையாட்சியை ஆதரிப்பதாகவே அமையும்.
ஒற்றையாட்சிக்குள், பிளவுபடாத நாட்டுக்குள், அதிகாரப்பரவலாக்கலை ஏற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இன்று கூட்டமைப்பின் முதலமைச்சர் ஒற்றையாட்சி கைவிடப்பட்ட அதிகாரப்பரவலாக்கலுடனான புதிய அரசியலமைப்பே தேவையென்கிறார்.
அப்படியானால் இதன் உள்ளார்ந்தம்தான் என்ன, கூட்டமைப்பினர் இன்னமும் தமிழீழக் கொள்கையை வைவிடவில்லையென்பதே ஆகும். எதிர்காலத்தில் எப்படியாவது தனித் தமிழீழத்தை உருவாக்குவதே இவர்களது ஒரே இலக்காக இருக்கின்றதென்பதை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பரவலாக்க முடியும். அதன் கீழேயே நாடு பிரியாது பாதுகாக்கப்படும். நாட்டின் ஒற்றுமையை விரும்பாதவர்களே ஒற்றையாட்சியை எதிர்க்கின்றனர்.
இவ்வாறான நிலைப்பாடுகள் தலைதூக்கும் போது எவ்வாறு இனங்களிடையே நல்லிணக்கத்தை, நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
தமிழீழ இலக்கை அடைய தடையாகி இருப்பவர் வடமாகாண ஆளுநர். எனவே, ஆளுநரை வெளியேற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதியுடன் முதலமைச்சர் மிதவாதப்போக்கை கடைப்பிடிக்கின்றார்.
அதன் பின்னர் மத்திய அரசுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழீழ இலக்கை நோக்கிப் பயணிப்பது நிச்சயமாகுமென்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
வடமாகாண சபையின் பெயரால் மக்கள் தொடர்பாளர் பதவிக்கென போலியாகத் தயாரிக்கப்பட்ட நியமனக் கடிதங்கள் நேற்று தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் வைத்து 15 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஆனால் இவை முதலமைச்சரால் வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறான நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண சபையால் நடத்தப்படவில்லை என்றும் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மன்மதராசா தெரிவித்தார்.
வடமாகாண சபையின் இணைப்புச் செயலாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய செ.தனுபன் என்பவரே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார். குறித்த 15 பேருக்கும் வவுனியால் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமனம் வழங்குவார் என முன்னர் மோசடி நபர் தெரியப்படுத்தி உள்ளார்.
ஆனாலும் அது இடமாற்றம் செய்யப்பட்டு நேற்றுப் பிற்பகல் 3 மணிக்குத் தெல்லிப்பழையில் நடைபெறும் என அவர் பின்னர் கூறியுள்ளார். நேற்றுப் பிற்பகல் அங்கு சென்ற 15 இற்கும் மேற்பட்டவர்களுக்கு குறித்த நபர் வேறு சிலருடன் இணைந்து கடிதங்களை வழங்கியுள்ளார்.
குறித்த கடிதம் வடமாகாண சபையின் கடித தலைப்பின் கீழோ முதலமைச்சரின் இறப்பர் முத்திரையோ இன்றிக் கையளிக்கப்பட்டது. இதனால் கடிதங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் சந்தேகம் கொண்டு, வடமாகாண சபை உறுப்பினர்களிடம் தெரியப்படுத்தி உள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற வடமாகாண உறுப்பினர்கள் இது தொடர்பில் விசாரணை நடத்தியபோது இந்தப் போலி நாடகம் அப்பலமாகியது.
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழியை சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப்பின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கொண்டு வரவுள்ளது.
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை 26 எலும்புக் கூடுகள் முழுமையாகவும், சில எலும்புக்கூடுகள் துண்டு துண்டாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இலங்கை வந்தடைந்த சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவரை இன்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.
இதன்போது மன்னார் புதைகுழி விவகாரத்தை ஸ்ரீபன் ஜே.ராப்பின் கவனத்திற்குத் தாம் கொண்டு வருவோம் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று தெரிவித்தார்.
மன்னார் ஆயர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை உடன் தேவை என்று சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவரிடம் தாம் இன்று வலியுறுத்தவுள்ளோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியை அமெரிக்காவின் உயர் குழுவினர் நேரில் சென்று பார்வையிடவேண்டும் என்றும் அவரிடம் தாம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மனிதப் புதைகுழி, மாபெரும் மனிதப் புதைகுழியாக, இனப்படுகொலையின் சான்றாக இருக்கின்றது. எனவே, அதிலிருந்து மீட்கப்படும் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவை இலங்கை அரசு உடன் அழைக்க வேண்டும்.
அப்போதுதான் உண்மைகள் கண்டறியப்படும். உள்நாட்டு நிபுணர் குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி மாவட்டம், கண்ணொருவ பிரதேசத்தில் கராஜ் உரிமையாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
தங்களது நண்பரின் பஸ் வண்டியின் திருத்த வேலைகள் தாமதமடைவது தொடர்பில் விசாரிப்பதற்காக கண்ணொருவையிலுள்ள கராஜ் ஒன்றுக்குச் சென்ற கராஜ் உரிமையாளரை உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சார்ஜன்ட் ஒருவரும் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த இருவரையும் கிராமவாசிகள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து பேராதனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த கராஜ் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குரிய அங்கியை அணிந்திருந்தார் என்று கூறி ஒரு சிறுமியை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
எட்டு வயதே இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்ற அந்தச் சிறுமி, ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு பொலிஸ் சோதனைச் சாவடியைத் தாக்க முயன்றபோது பிடிபட்டார் என்று உள்துறை அமைச்சகத்தின் பேச்சாளார் ஒருவர் தெரிவித்தார்.
அவர் அணிந்திருந்த தற்கொலைத் தாக்குதல் அங்கியில், வெடிக்கச் செய்யவதற்குரிய விசையை அவரால் கையாள முடியவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்தத் தாக்குதலை மேற்கொள்ளும்படி, தாலிபான்களின் ஒரு முக்கியமான தளபதி என்று கருதப்படும் அந்தச் சிறுமியின் சகோதரரே அவரை ஊக்குவித்தார் என்று பொலிஸார் கூறுகிறார்கள்.
பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறுமி இப்போது மாகாணத் தலைநகரான லஷ்கர் காஹ்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் தில்லியில் நடைபெற்ற விழாவின்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்..
தேவயானியை அமெரிக்கா நடத்திய விதம் வேறு எந்த நாட்டு அதிகாரிக்கும் நடக்கக் கூடாது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் வியன்னா மாநாட்டு தீர்மானத்தின்படி தூதரக அதிகாரிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றார்.
முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஷார்யார் எம். கான் கூறுகையில், தூதரக அதிகாரியை அமெரிக்கா இந்த அளவுக்கு மோசமாக நடத்தியிருக்கக் கூடாது.
வியன்னா மாநாட்டு தீர்மானத்தில் எந்த ஒரு தூதரக அதிகாரியையும் கைது செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன என்றார்.
வடக்கில் இயங்கி வந்த பாரியளவிலான பாதாள உலகக் குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். “ஹவா குரூப்” என்ற பாதாள உலகக் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கும்பலிடமிருந்து கைக்குண்டுகள், போதைப் பொருள், வாள்கள், வேறும் ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றன மீட்கப்பட்டுள்ளன.
தென் இந்திய திரைப்படங்களில் காண்பிக்கப்படும் தாதாக்களைப் போன்று இவர்கள் வடக்கில் செயற்பட்டுள்ளனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குமரேசன் வினோதன் என்ற இளைஞரே இந்தக் கும்பலுக்கு தலைமை வகிக்கின்றார். இள வயதுடைய 20 தமிழர்கள் இந்த பாதாள குழுவில் அங்கம் வகிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கைகளை வெட்டி காயப்படுத்தியவர்கள் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஓராண்டுக்கு மேல் இந்த பாதாள கும்பல் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலைக்கு கிழக்கு கடற்பரப்பில் உருவாகியிருந்த தாழமுக்க நிலையினால் தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவாகியிருந்த பதற்றமான சூழல் இரண்டாவது நாளாகவும் நீடித்துள்ளது.
யாழ்.குடாநாட்டின் பெருங்கடல் பிரதேசங்கள் குறிப்பாக வடமராட்சி கிழக்கு மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களில் கரையோர கிராமங்களுக்கு கிராமசேவகர்கள் மூலம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடலில் விடப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் கரைக்கு ஏற்றப்பட்டதுடன் மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லவில்லை.
மேலும் கடல் நேற்றும் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கரையை நோக்கி கடல்நீர் பெருமளவுக்கு உள்நுழைந்திருந்ததுடன், உயரமான அலைகளும் ஏற்பட்டிருந்தது.
இதேபோன்றே முல்லைத்தீவு மாவட்டத்திலும் கடல் மிக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.
இங்கேயும் கடல் கரையை நோக்கி பெருமளவு உள்வாங்கியிருந்ததாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இரு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை.
மேலும் யாழ்.மாவட்டத்தில் இடப்பெயர்வுகள் எவையும் இடம்பெற்றிருக்காத நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15குடும்பங்கள் இடம்பெயர்ந்து, கள்ளப்பாடு கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் தஞ்சம் பெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர்களுக்கு மாவட்டச் செயலகம் ஊடாக உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்திருக்கின்றன.
எனினும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை, இன்னமும் விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் தொடர்ச்சியான மழை வடமாகாணத்தில் பெய்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கைப் பிரஜைகள் 6 பேர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் எடையுள்ள 65 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், இலங்கை, சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் இருந்து வந்த அனைத்து விமான பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கொழும்பு, சிங்கப்பூரில் இருந்து வந்த 4 விமானங்களில் வந்த 6 பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 6 பேருமே இலங்கையை சேர்ந்தவர்கள். சுற்றுலா பயணிகளாக சென்னை வந்திருந்தனர்.
கொழும்பை சேர்ந்த ஹைதரூஸ் (34), 3 பட்டரிகள் பயன்படுத்தும் பெரிய டொர்ச் லைட்டில் பட்டரிகளுக்கு பதிலாக 400 கிராம் தங்க கட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே விமானத்தில் வந்த கொழும்பை சேர்ந்த காசிம் முகமது (30), மிக்சியின் அடிப்பகுதியில் 500 கிராம் தங்கக்கட்டியை வைத்திருந்தது தெரியவந்தது. அதையும் பறிமுதல் செய்தனர்.
கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் கொழும்பை சேர்ந்த ஹயாத் அலி (29), என்பவரிடம் சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை. அவரை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றுக்குள் மாத்திரை வடிவத்தில் தங்கம் இருந்தது தெரிந்தது. மருத்துவ குழுவினர் உதவியுடன் எனிமா கொடுத்து அந்த தங்க மாத்திரைகளை வெளியில் எடுத்தனர்.
மொத்தம் 15 தங்க மாத்திரைகள் இருந்தன. ஒன்றின் எடை 20 கிராம் என மொத்தம் 300 கிராம் தங்க மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சசிதரன் (38), ஆசனவாயில் மறைத்து வந்த 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் கண்டி பகுதியை சேர்ந்த முகமது (40), ஹமீது (27) ஆகியோரது சூட்கேசில் தலா 300 கிராம் தங்க பிஸ்கட்டுகள் சிக்கின. அவற்றுக்கு கருப்பு பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. அவற்றையும் பறிமுதல் செய்தனர்.
6 பேரிடம் இருந்தும் 65 லட்சம் மதிப்புடைய 2 கிலோ 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் இவர்கள் 6 பேரும் தங்க கடத்தல் கும்பலிடம் குருவியாக செயல்பட்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தாலியின் வடமேற்கு கரையோர பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த 18 வயது யுவதி ஒருவர் அவருடைய தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையின் கலாசாரத்தை பின்பற்றுமாறு கோரிய போதும், தமது மகள் ஐரோப்பிய கலாசாரத்தை பின்பற்றி வருவதை அடுத்தே, குறித்த தந்தை தமது மகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.
ஜெனோவா ரிப்பப்லிக்கா என்ற செய்திதாளின் தகவல்படி, குறித்த யுவதி பல தடவைகளாக தமது தந்தையாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாதுகாப்பு கருதி தாம் வீடு திரும்பமுடியாது என்று சிகிச்சைப்பெற்று வரும் யுவதி மருத்துவமனை தரப்பினரிடம் கூறியுள்ளதாக செய்திதாள் குறிப்பிடடுள்ளது.
டுவிட்டரில் ஜாலியாக விளையாடி விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இளையதளபதி விஜய்யுடன் தான் ஜாலியாக ஆடிப்பாடி பொழுது போக்குவதாகவும் கூடவே “ஐ லவ் யூ ப்ரோ” என்றும் ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் உடனே தனுஷிடம் அப்படியென்றால் விஜய்யை எங்களுக்கு ஒரு ஹாய் சொல்லச்சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சில நிமிடங்களில் தன்னுடன் விஜய்யும் இணைந்து நிற்கும் படத்தை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
அதில் தனுஷின் பின்பக்கம் நிற்கும் விஜய், ரசிகர்களுக்கு ஹாய் சொல்வது மாதிரி இருந்தது.
அதன் கீழே உங்களைப்போல பல ரசிகர்கள் கேட்டதற்கு இணங்க இளையதளபதி இப்போது உங்களுக்கு லைவ் ஆக ஹாய் சொல்கிறார் என ஸ்டேட்டஸும் போட்டுள்ளார் தனுஷ்.
நேரம் படத்தில் நிவின் என்ற மலையாள நடிகருடன் நடித்தவர் நஸ்ரியா. அந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு நஸ்ரியா தமிழில் பிசியாகி விட்டார். ஆனால், நிவினுக்கு அதன்பிறகு சரியானபடி படமில்லை.
அதனால் மலையாளத்தில் மட்டும் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்தநிலையில், கே.எஸ்.அதியமான் இயக்கும் ஒரு படத்தில் அடுத்து அதே நிவினுடன் நடிக்கிறார் நஸ்ரியா.
தற்போது முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருவதால் மீண்டும் நிவினுடன் நடிக்க அவர் தயங்குவாரோ என்று அதுபற்றி நஸ்ரியாவிடம் கேட்டபோது, தமிழ்-மலையாளம் இரண்டிலும் எனது முதல் ஹீரோ நிவின்தான்.
அதனால் அவருடன் மீண்டும் ஜோடி சேருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.
மேலும் இதே படத்தில் இன்னொரு நாயகியாக அமலாபாலும் இருக்கிறார் என்று அடுத்த செய்தியை அவரிடம் சொன்னார்களாம். அதைக்கேட்டு சற்று தடுமாறினாராம் நஸ்ரியா.
அவர் என்னைவிட சீனியர். அதோடு விஜய்யுடனெல்லாம் டூயட் பாடி விட்டார். அதனால் அவரைத்தானே முதன்மைப்படுத்த வேண்டும் என்பார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று என்னை பின்தள்ளிவிட்டால் என்ன செய்வது என்று தனது நிலையை சொன்னாராம்.
அதற்கு படத்தில் அமலாபால்-நஸ்ரியா நடிக்கும இரண்டு கரக்டர்களுக்குமே சம அளவு முக்கியத்துவம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், அதுகுறித்து அஞ்சவேண்டாம் என்று டைரக்டர்தரப்பு நஸ்ரியாவிடம் விளக்கியபோது சம்மதித்தாராம்.
இருப்பினும் ஆரம்பத்திலேயே தடுமாற்றத்துடன் அப்படத்தை ஏற்றுக்கொண்ட நஸ்ரியா, படப்பிடிப்பு தளத்தில் என்னென்ன அதிருப்திகளை வெளிப்படுத்தப்போகிறாரோ என்ற கவலை படக்குழுவுக்கு உள்ளதாம்.
பிரான்ஸ் நாட்டில் தனது மனைவியை தீ வைத்து கொளுத்தி விட்டு 3 வயது மகனுடன் 9வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். பிரான்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது பர்கண்டி நகர்.
இதன் அருகே டிஜான் என்ற ஊரில் செனோவே என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொலிஸ் அதிகாரி மார்ரி கிறிஸ்டினே கூறியதாவது..
மாடியில் இருந்து குதித்து யாரோ தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்றோம். அங்கே 25 வயது வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
அவரது உடலுக்கு அருகே படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 வயது குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலன் இன்றி குழந்தையும் இறந்தது. விசாரணையில், அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்.
இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மனைவி வீட்டுக்கு நேற்று சென்று வாலிபர் தகராறு செய்துள்ளார். பின்னர் மனைவியை தீ வைத்து கொளுத்தினார். தனது 3 வயது மகனை எடுத்து கொண்டு, மனைவி வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் 9வது தளத்துக்கு சென்று அங்கிருந்து குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவல் அறிந்து அந்த வீட்டுக்கு சென்று தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளோம் என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
சவுதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உறுப்புகள் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெடாவின் முஸ்ரேபா பகுதியில் மனித உறுப்புகள் சிதரிக்கிடப்பதாக பொலிசாருக்கு காலை 2.30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதற்கட்ட விசாரணைக்கு பின் தவறுதலாக நாட்டின் எல்லையை தாண்டும் நபர்கள் சிலர் தப்பிக்க விமானத்தின் சக்கரம் வழியாக முற்பட்டிருக்கலாம், அவ்வாறு செய்யும்போது யாரேனும் உயிரிழந்திருக்கலாம், இது அவ்வாறு இறந்தவர்களின் உடல் உறுப்புகளாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
மேலும் விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறுவது சவுதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது. இங்குள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் உன்னிப்பானதாக இல்லை என்பதும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது.