
சென்னையில் தானாக உடலில் தீப்பிடிக்கும் குழந்தை மீண்டும் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா நெடிமலையனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி கருணா, இவர்களது குழந்தை ராகுல். பிறந்த 9வது நாளில் இருந்து குழந்தையின் வயிறு, கால்கள் மற்றும் தலைப்பகுதியில் தானாக தீப்பிடித்து எரிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த யூன் மாதம் குழந்தையை சேர்த்தனர்.
குழந்தையின் தோலில் தீப்பிடித்து எரிவதற்கான வாயு வெளியேறுகிறதா என ரத்தம், வியர்வை, சிறுநீர் உள்ளிட்ட பல கட்ட பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்தனர். இதில் குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிந்தது.
தீவிர சிகிச்சைக்கு பிறகு குழந்தையை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவர்கள், 3 மாதத்துக்கு பிறகு குழந்தையை மீண்டும் சிகிச்சைக்கு அழைத்துவரவேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இதன்படி நேற்று காலை குழந்தை ராகுலுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் நாராயணபாபு, பேராசிரியர்கள் ஜெயச்சந்திரன், சத்தியமூர்த்தி, தீக்காய சிகிச்சை பிரிவு நிபுணர் ஜெகன் மோகன் ஆகியோர் பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து மருத்துவர் நாராயணபாபு கூறுகையில், இது ஆரோக்கியமான குழந்தை. தீக்காய புண் ஆறிவிட்டது. தழும்புகள் மறைவதற்கு கான்ட்ரா லுபகஸ் என்ற ஒயின்ட்மென்ட்டை தடவுமாறு சொல்லியிருக்கிறோம்.
அல்ட்ரா சவுன்ட், இசிஜி, எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது என்றும் இதில் குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
தீக்காய நிபுணர் ஜெகன் மோகன் கூறுகையில், குழந்தை வளரும்போது தழும்புகளும் விரிவடையும். இதை போக்க குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்தாவது வயதில் பிளாஸ்டிச் சர்ஜரி செய்யவேண்டிவரும் என்று கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரி டீன் ராமகிருஷ்ணன், மனநல மருத்துவர் ராஜரத்தினம் ஆகியோர் குழந்தையின் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுத்தனர்.







புதுவை அருகே வேகவைத்த முட்டையை ஒருவர் விழுங்கியபோது, தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் குலசேகரா விலகியுள்ளார்.
போராட்டங்கள் நடந்தாலும் திட்டமிட்டபடி ஆசிய கிண்ண போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் கடுமையான மழை பெய்து வருகின்றது. காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக வடமாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பத்து ரூபா நாணயக்குற்றிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இலங்கையின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த நாணயக்குற்றிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் இராணுவக் குவிப்பு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் சமமாக இராணுவத்தினரை பங்கீடு செய்யலாம். அதைவிடுத்து வடக்கு, கிழக்கிற்கு மட்டும் அதிகளவான இராணுவத்தினர் தேவையற்றதொன்று என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையில் சிறைக் கைதிகளின் சம்பளங்களை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்துப் பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு வரவேற்கத்தக்கது.
மீனவர் பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய மத்திய அரசின் அழைப்பின்பேரில் இந்தியா செல்லவுள்ள இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தமிழ்நாட்டு மீனவர்களை டில்லியில் சந்தித்துப் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண் போன்று முகத்தை மறைத்து பர்தா உடை அணிந்து அரச வங்கியில் கொள்ளையிட முயற்சித்த வேளை கைது செய்யப்பட்ட இராணுவ கெப்டன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடூழிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.