தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (02) மாலை 7 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
லொறியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்தது.
லொறியின் சாரதி மயக்கமடைந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் குழு மற்றும் திம்புல்ல பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து பெரும் பிரயத்தனத்தின் பின்னர் சாரதியை காப்பாற்றியுள்ளனர்.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக அதிகரித்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
இன்றைய (03.09) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 747,072 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 கரட் தங்க கிராம் 26,360 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 210,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,170 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 193,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,070 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 184,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
எனினும் , வேலை செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது தம்மை பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்கிறார்கள் மாணவர்கள். இந்நிலையில் ஆசிய நாடுகளில் இருந்து கனடா சென்றுள்ள மாணவர்கள் இதனால் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவிசாவளை, கெட்டஹெத்த பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை ஆயுதத்தால் அடித்துக் கொன்றுவிட்டு, பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திவுரும்பிட்டிய, கெட்டஹெத்த பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான பெண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு
சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கல்லூரி தண்ணீர் தொட்டியில் இருந்து அழுகிய நிலையில் மூன்று குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திட்யுள்ளது.
நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட சிரமதானி பணியின் போதே குரங்குகளின் சடலம் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கல்லூரியில் நடைபெற்ற சிரமதான பணிகளில் பெற்றோர்கள் குழு ஒன்று வந்து தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது , குரங்குகளின் பிணங்கள் கிடைத்துள்ளன.
அதேவேளை குறித்த பாடசாலையில் சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்ரு வரும் நிலையில், அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த 3 மாதங்களாக குடிநீர் பெற்று வந்துள்ளதாக க்கூறப்படுகின்றது.
தண்ணீர் தொட்டியின் மேல்பகுதி மூடாமல் இருந்தமையால் , 3 குரங்குகளும் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்திருந்திருந்தகாக கூறப்படுகின்றது.
தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்த குரங்குகள் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளன. தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து, கிருமி நாசினி திரவத்தை தெளித்து, வீடுகளுக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர், தொட்டியின் மூடியை பொருத்தும் பணியை, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றில் ஏற்பட்ட தலைமுடி உதிர்வு சம்பவம் தொடர்பில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் டி தேனபந்து தேடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நேற்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் வகைகளை சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் நுகர்வோர் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றுக்கு தலைமுடியை சீர்செய்வதற்காக சென்ற பெண்ணொருவர் திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டு கம்பஹா பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொரகொடவத்தை பகுதியைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய பெண் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னர் அழகு நிலைய உரிமையாளரும் அவரது உதவியாளர்களும், அழகு நிலையத்தை மூடிவிட்டு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சீகிரியாவின் சுவரோவிய குகைக்கு அருகில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய பிரித்தானிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு பிரஜை அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சீகிரியாவை பார்வையிட வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் சீகிரியாவில் ஏறும் போது திடீரென சுகவீனமடைந்து சீகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். எப் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் துலான் சாதனை படைத்துள்ளார்.
எப் 64 போட்டியில் சமித்த துலான், 67.03 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். எனினும் எப் 44 பிரிவில் ஏற்கனவே சமித்த துலான் நிலை நாட்டியிருந்த உலச சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதுடன், அவுஸ்திரேலியா வெள்ளி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில், எப் 44 பிரிவில் சமித்த துலான் வெண்கல பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தளம், உடப்புவ மற்றும் மதுரங்குளிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளம் காதல் ஜோடி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 30 மற்றும் 31ஆம் திகதிகளில் இந்த காதல் ஜோடி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உடப்பு சின்னப்பாடுவ பகுதியை சேர்ந்த கவீஷ லிவேரா என்ற 19 வயதுடைய இளைஞனும், மதுரங்குளிய பெட்ரிக் மாவத்தையை சேர்ந்த நிம்சானி பிரமோதிகா என்ற 19 வயதுடைய யுவதியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் பாடசாலை காலத்தில் இருந்தே காதல் தொடர்பில் இருந்ததாகவும், பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 30ஆம் திகதி பிற்பகல் இளைஞன் உயிரிழந்த நிலையில், அடுத்த நாள் 31ஆம் திகதி மாலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
தூக்கில் தொங்கிய மகளை மீட்ட தந்தை, முந்தலம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இருவரின் மரணம் தொடர்பில் மர்மம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் மரணம் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் யாழ் செம்பியன்பற்று வடக்கு பகுதியை சேர்ந்த 63 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (01.09) காலை தேவாலயத்துக்கு சென்று விட்டு மகனுடன் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.
போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் பெண்ணின் மரணம் தொடர்பில் இன்று (02) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார்.
தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால் நகரில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
குறித்த சம்பவம் இன்று (03.09) காலை இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 30) ஒருவர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறி கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றுள்ளதாகவும் அவரை சேர்த்து வைக்குமாறே இவ்வாறு மரத்தில் ஏறி போராடியிருந்தார்.
நீண்ட நேரமாக மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. பின்னர் பொலிசார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளிற்கிணங்க அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்றிருந்தார்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
விபத்தில் முச்சக்கர வண்டி நொருங்கியுள்ளதுடன், பேரூந்தின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மனைவி மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் அவரது சமாதி மீது இதய வடிவிலான நினைவுச் சின்னத்தை கணவர் உருவாக்கியுள்ளார்.
இந்திய மாநிலமான தெலங்கானா, அனுமகொண்டா மாவட்டம் கனபர்த்தியை சேர்ந்த தம்பதியினர் சிவராஜ் மற்றும் மானசா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மனைவி மானசா மீது கணவர் சிவராஜ் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
இந்நிலையில், மனைவி மானசாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் சிவராஜ் மனதளவில் பெரிதும் பாதிப்படைந்தார்.
உடல் ரீதியாக தனது மனைவி வெகு தூரம் சென்றுவிட்டதை அறிந்த சிவராஜ் அவரது சமாதியில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இதற்காக அவரது சமாதியில் தன்னை பதிக்கும் வகையில் காதல் சின்னமான 8 அடி உயர இதய வடிவிலான நினைவு சின்னம் ஒன்றை நிறுவினார். அங்கு, தனது மகள்களுடன் தினமும் சென்று வணங்கி வருகிறார்.
இதுகுறித்து சிவராஜ் கூறுகையில், “ஷாஜகான் தனது மனைவியின் நினைவாக தாஜ் மஹால் கட்டியுள்ளார். நான் மனைவியின் நினைவு என்றும் நிலைத்திருக்க காதல் நினைவுச்சின்னம் அமைத்துள்ளேன்” என்றார்.
இந்தியாவில் தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இளம் வேளாண் விஞ்ஞானி அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். ICAR எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்தவர் இளம் விஞ்ஞானி அஸ்வினி.
அஸ்வினியும் அவரது தந்தையும் சத்தீஸ்கரில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது மஹபூபாபாத் மாவட்டம் புருஷோத்தமய குடேமில் உள்ள அகுரு ஓடையின் பாலத்தில் டாக்டர் அஷ்வினி சென்று கொண்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அந்த இறுதி நேரத்தில் அஸ்வினியும் அவரது தந்தையும் உறவினர்களை தொலைபேசியில் அழைத்து காரில் தண்ணீர் நிறைந்து வருவதையும் தங்களால் வெளியே வரமுடியாத பரிதாப நிலையையும் கூறியுள்ளனர்.
இதன் பின்னர் தான் அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அந்த பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அஸ்வினியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருமகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹருல்லா (50). ஆட்டோ ஓட்டுநரான இவருடைய மனைவி யாஸ்பின் (47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இம்ரான், உதகை வண்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது – நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன்(22) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு வீட்டாரிடம் தெரிவித்தனர்.
முதலில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரு வீட்டாரும், பின்னர் சம்மதித்து இம்ரானும், ஆஷிகா பர்வீனுக்கும் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிகளுக்கு, 2 வயதில் குழந்தை உள்ளது.
மாமியார் யாஸ்பினுக்கும், மருமகள் ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி மர்மமான முறையில் ஆஷிகா பர்வீன் இறந்துள்ளார்.
அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து உதகை மேற்கு போலீசார் ஆஷிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், காபியில் ஆஷிகாவுக்கு சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், வரதட்சனையாக ரூ.20 லட்சம் கேட்டு தராததால் இந்தக் கொடூர செயலில் ஆஷிகாவின் மாமியார் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து யாஸ்பின், இம்ரான், முக்தார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நகைக் கடையில் சயனைடு விஷம் வாங்கி கொடுத்த யாஸ்பின் குடும்ப நண்பரான உதகையை சேர்ந்த காலிப் என்பவரும் கைது செய்யப்பட்டார்.