சிறுவர் உரிமைகள், திறன் விருத்தி கலாசார மேம்பாட்டு நிகழ்வு..!

வவுனியா: எதிர்வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாட்டில் சிறுவர் உரிமைகள் மற்றும் திறன் விருத்தி கலாசார மேம்பாடு தொடர்பான விழா, வவுனியா நாகரசபை மண்டபத்தில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அதிகாரசபையின் அதிகாரி திரு த.செல்வகுமார் அவர்கள்,இன் நிகழ்விலே போர் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட பாடசாலைச் சிறுவர்களின் ஆளுமையை விருத்தி செய்வது தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு நடைபெறுவதோடு சிறுவர் உரிமைகள், வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.


இந்திய அணிக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான விருது..

 

dhoni_icc_top_rank_001

சர்வதேச கிரிக்கெட்சபையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் விருதை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுக் கொண்டுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெற்றமைக்காக முன்னாள் சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் மோகனால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறுவதற்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த கால எல்லை வரை (கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை) இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெற்றிருந்தது.

தரப்படுத்தலின் அடிப்படையில் இந்திய அணி 119 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், 116 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், 113 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா மூன்றாம் இடத்ததையும் பிடித்துள்ளன.


முட்டாளும் புத்திசாலியும்

 

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், ‘நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக் கேட்டது.

‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித் தவளை.

‘ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை நம்பவில்லை. ‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது’ என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து ‘நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.

அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

 


பருத்தொல்லை நீங்க வேண்டுமா?

pim

இளம்பெண்கள், இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் பருத்தொல்லையும் ஒன்றாகும். பருத்தொல்லையில் இருந்து காத்துக்கொள்ள பல வகையான கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவைகளில் பெரும்பாலானவற்றில் ரசாயனப் பொருட்கள் அதிகளவில் கலந்து இருக்கின்றன.

இதனால் உடனடியாக பலன் போன்ற தோற்றம் தோன்றினாலும் பிற்காலத்தில் தோல் நோய்களையும் தோல் சுருக்கத்தையும் தந்து விடுகின்றன.

இதை தவிர்க்க இயற்கை மருத்துவத்தில் மிக எளிமையான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது.

ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து முல்தானி மிட்டி ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து வாரம் இருமுறை அல்லது மூன்று முறை உபயோகிக்கவும். இதை அரை மணி நேரம் காயவிட்டு பின்னர் விரல்களை ஈரப்படுத்தி லேசாகத் தேய்த்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவவும். தீராத பருத்தொல்லை கூட இந்த முறையில் குணமாகும்.

ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி ஈரமான விரல்களால் தேய்த்து கழுவினாலும் பருக்கள் குறையும். கோதுமைத் தவிடு ஒரு தேக்கரண்டி சந்தனப் பவுடர் ஒரு தேக்கரண்டி, சிறிது பன்னீர் கலந்து முகத்தில் தடவிக் காய்ந்ததும் எடுத்து விடவும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஐஸ் கட்டிகளால் முகத்தை தேய்க்கவும். இது சருமத்திலுள்ள அதிகப் படியான எண்ணெய் பசையை அகற்றும்.

பருத்தொல்லைக்கு பொடுகும் ஒரு முக்கிய காரணம். கூந்தலை இளஞ்சூடான எண்ணெயால் மசாஜ் செய்து  தயிர் உபயோகித்துக் குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

 

 


பொடுகு இல்லாத பளபளப்பான கூந்தலுக்கு..

hair

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும்.
பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்புவே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.

ஷாம்புவை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய செம்பருத்தி பயன்படுகிறது.

இதேபோல் 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சீனி சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும்.

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

 


இப்படியெல்லாமா சைக்கிள் ஓட்ட முடியும்?

என்ன ஒரு கண்டுபிடிப்பு!! உக்கார்ந்து யோசிப்பாய்ங்களோ????


 

நாவுக்கு சுவையும் உடலுக்கு ஆரோக்கியமும் தரும் முருங்கைக்கீரை குழம்பு..

murungai

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த முருங்கைக்கீரை – 3 கைப்பிடி,
பாசிப்பருப்பு – 150 கிராம்,
துவரம்பருப்பு – 50 கிராம்,
புழுங்கலரிசி – 150 கிராம்,
சின்ன வெங்காயம் – 200 கிராம்,
உப்பு, மஞ்சள் தூள் – கால் மேசைக் கரண்டி .

அரைப்பதற்கு..

காய்ந்த மிளகாய் – 6,
மல்லி – 1 மேசைக் கரண்டி,
பெ.சீரகம் – 1 மேசைக் கரண்டி,
சீரகம் – 1 மேசைக் கரண்டி,
தேங்காய் – 1 மூடி.

தாளிக்க…

சீரகம் அரை மேசைக் கரண்டி
காய்ந்த மிளகாய் – 2,
சின்ன வெங்காயம் – சிறிது,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை

பாசிப்பருப்பை வெறும் பாத்திரத்தில் வாசனை வரும் வரை வறுத்து, துவரம்பருப்புடன் சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். குக்கரில் வேக வைப்பதைவிட, சாதாரண பாத்திரத்தில் வேக வைத்தால் ருசி கூடும். அரிசியை வெறும் பாத்திரத்தில் பொரியும் வரை வறுக்கவும். பிறகு அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, தேங்காய் தவிர்த்து வெறும் பாத்திரத்தில் வறுக்கவும். கடைசியில் மஞ்சள் தூள் சேர்த்துப் பிரட்டி, அரைக்கவும். எடுக்கும் போது, வறுத்து வைத்துள்ள அரிசியைச் சேர்த்து, ஒரே ஒரு சுற்று சுற்றி, மணல் மாதிரி அரைக்கவும்.

அரிசியைச் சேர்த்ததும் வாசனை வருவதை உணரலாம். பின் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து, இரண்டே நொடிகள் சுற்றி எடுக்கவும் (வெங்காயம் முழுவதும் அரைபடக் கூடாது). அவிந்த பருப்பில் முருங்கைக்கீரையை குறுக்கும், நெடுக்குமாக நறுக்கிச் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதித்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய் துருவல் சேர்த்து, இன்னும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு, உப்பு சேர்த்து இறக்கவும். மொத்தமாக 5 நிமிடங்களுக்கு மேல் கொதிக்கக் கூடாது. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துக் கீரையில் கொட்டவும்.


செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி?

prawn

தேவையான பொருட்கள்..

இறால் – 400 கிராம்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
அரைத்த பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 5
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு

எப்படி செய்வது?

இறாலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீருடன், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும். வடிகட்டிய பின் ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.

பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்றாக பேஸ்ட் போல் அரைக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.

வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். தேங்காயை வறுத்த அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும் பின் அதில் தக்காளி, உள்ளி மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.

பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி..

 


மலேசிய விமானத்தில் பறவை மோதியது!கட்டுநாயக்காவில் சம்பவம்!

 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த பயணிகள் விமானம் ஒன்றில் பறவையொன்று மோதியுள்ளது.

மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே பறவை மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.L.C.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தினால் விமானத்திற்குச் சேதம் ஏற்பட்ட போதிலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

விமானத்தைத் தரையிறக்குவதற்கு தயாரான போது சுமார் 50 மீற்றர் உயரத்தில் பறவை விமானத்தின் முற்பகுதியில் மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

விமானத்தைத் திருத்துவதற்குத் தேவையான உதிரிப் பாகங்களை தருவிப்பதற்கு விமான சேவை நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 


கொழும்பு பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது…!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட மாணவி ஒருவர் டெங்கு நோய் தாக்கி இறந்துபோனதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, டெங்கு பரவுகை காரணமாக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகள் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

டெங்கு தொடர்பான துப்பரவு பணிகளுக்காக ஒரு வார காலத்துக்கு பல்கலைக்கழகத்தின் கலை, சட்ட, முகாமைத்துவ வளாகங்கள் வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் வாழக்கூடிய பல இடங்கள் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக பரீட்சைகள் கூட ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.


 

கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள் இதை கொஞ்சம் படியுங்கள்..

home-made-face-mask-Bharatmoms

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்பளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்.

முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.

சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும்.

கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

நன்கு கனிந்த வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர நிறம் பளிச் என்று மாறும்.


 

ஒரு இளம்பெண் பிரசவத்திற்கு 40 வைத்தியர்கள் கூடிய அதிசயம்..

 

one_girl_birth_002

செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.

கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செகோஸ்லோவேக்கியாவை சேர்ந்த அலெக்சாண்டிரா கினோவா என்ற 23 வயதுப் பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நேற்று அறுவை சிகிச்சை முறையில் நடைபெற்ற பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகளையும் 1 பெண் குழந்தையையும் இவர் பெற்றெடுத்தார்.

இயற்கையான முறையில் கருத்தரித்த இந்த 5 குழந்தைகளும் 1.05 கிலோவுக்கும் 1.34 கிலோவுக்கும் இடைப்பட்ட எடையில் நல்ல நிலையில் பிறந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர் .

480 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இதுபோல் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறக்கும் அரிய வாய்ப்புள்ளது என்பதால் பிரசவத்தின்போது சுமார் 40 வைத்தியர்கள் பணியாற்றியதாக மருத்துவமனையின் நிர்வாகம் கூறியுள்ளது.


 

ரஷ்ய சிறைக்குள் செல்போனை கடத்திய பூனை கைது

cat_summging_002

ரஷ்யாவிலுள்ள சிறை ஒன்றுக்குள் செல்போனை கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது.

சிறை காவலர்கள் அதன் மீது சந்தேகப்பட்டு பிடித்து பார்த்தனர். அப்போது தான் அதன் வயிற்றுப் பகுதியில் செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பொலிசார் அந்த பூனையை கைது செய்தனர். சிறைக்குள் மேலும் என்னென்ன பொருட்கள் கடத்தி வரப்பட்டன என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பிரேசில் நாட்டு சிறை ஒன்றுக்குள் சென்ற பூனையின் உடம்பில் செல்போன், பேட்டரிகள், பிளேடுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


 

மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு 60 ஆண்டுகால சிறைத்தண்டனை

மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 60 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பலவந்தமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் தந்தை மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குற்றச் செயலில் ஈடுபட்ட நபருக்கு அறுபது ஆண்டு கால சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதப் பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கேகாலை உயர்நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர அறிவித்துள்ளார்.


 

சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்…!

சிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ”சரின்” என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன.

ஒரு சம்பவத்தில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கம் இந்த வகையிலான ”சரின்” வேதிப் பொருள் தாக்குதலை நடத்தியதற்கான உறுதியான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது.

தாக்குதலுக்கு உள்ளானவர்களின் இரத்த மாதிரியில் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது இரத்தத்தில் அந்த சரின் வேதிப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் லோரண்ட் ஃபபியஸ் கூறியுள்ளார்.

இந்த முடிவுகள் தற்போது ஐநாவுக்கு கையளிக்கப்படுகின்றன. சிரியாவில் இந்த வையிலான இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவிப்பதற்கு முன்னதாக மேலும் ஆதாரங்கள் தேவை என்று அமெரிக்கா கூறுகிறது.

வடக்கு நகரான அலெப்போவில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கிளர்ச்சிக்காரர்களும், அரசாங்கமும் மாறி மாறிக் குற்றஞ்சாட்டுகின்றனர்.


 

வெள்ளவத்தையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது..!!

வெள்ளவத்தை – வேலுவனாராம வீதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து குறித்த பெண் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் எடையுள்ள 86 ஹெரோயின் பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.