மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் எலி சடலம் கிடந்து சம்பவ ம் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்ட பனிக்கட்டி ஒன்றில் உறைந்த நிலையில் எலி சடலம் இருந்துள்ளது.
சம்பவம் குறித்து வாட்ஸ் ஆப் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உள்ளிட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதிகாரிகள் , இந்த ஐஸ் கட்டிகள் விநியோகம் செய்யப்பட்ட இடங்கள், ஐஸ்கட்டி தொழிற்சாலைகள் உட்பட தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் காதலி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்து 50ஆவது நாளில் காதலனும் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞன் அவரது இல்லத்தில் நேற்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வெப்ப அதிகரிப்பு, சாத்தியமான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவதோடு வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் இதில் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்.
எனவே, மக்கள் நீரேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கவும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்க நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்னதாக, ஐரோப்பிய காலநிலை மையத்தின் தகவல்களின்படி, கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாண பகுதியில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றையதினம் (10.04.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் (41 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உடல் கூற்று சோதனைக்கு பிறகு குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மொரட்டுவை – முராவத்தை தொடருந்து கடவைக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவை க்ளோவியஸ் மாவத்தையை சேர்ந்த நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் எம்.ஆர்.ரந்தரு என்ற சிறுவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்து நகர்ந்து கொண்டிருந்த போது குறித்த சிறுவன் தனது துவிச்சக்கரவண்டியினை தண்டவாளத்தின் ஊடாக செலுத்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சிறுவன் தொடருந்தில் மோதியதில், சுமார் 13 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 14 வயதான சிறுமியொருவர் தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து இளம் மகளிர் அணிக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் 14 வயதான சமோதி பிரபோதா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 48.4 ஓவர்களில் 226 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
223 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலளிக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளம் மகளிர் அணி 23.3 ஓவர்களில் 118 ஓட்டங்களைக்கு சகல விக்கெட்டுகளையு இழந்து தோல்வியடைந்தது.
இதற்கமைய இலங்கை இளையோர் மகளிர் அணி 108 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுரைச்சோலை நகரில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர் நுரைச்சோலை கொய்யாவாடிய பகுதியைச் சேர்ந்த சமிர லசந்த பெர்னாண்டோ (26) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர் எனத் தெரிய வந்துள்ளது. கல்பிட்டியில் இருந்து தேங்காய் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
இளைஞன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேங்காய் லொறியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார்.
தமிழ் சிங்களப் புத்தாண்டு விடுமுறை தினங்களில் வருவதன் காரணமாக 15ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கடந்த திங்கட் கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவித்து அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் இன்று (10.04) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளமையுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதினை அவதானித்துள்ளார் . இதனையடுத்து அவர் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குளக்கட்டின் மேற்பகுதியில் காலணியும் காணப்படுவதினால் இச் சம்பவம் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சடலமாக காணப்படும் நபர் மஞ்சல் நிற மேற்சட்டையுடன் சாரமும் அணிந்துள்ளமையுடன் 55 தொடக்கம் 60 வயதுக்குட்டவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா சிவபுரம் பகுதியில் கப்ரக வாகனம் இரு துவிச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளியதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கப்ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் பம்பைமடு பகுதியிலிருந்து நெளுக்குளம் நோக்கி வீதியோரமாக பயணித்த இரு துவிச்சக்கரவண்டி மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு கோட்டையில் கட்டடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று உடைந்து வீழ்ந்தத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
செத்தம் வீதியில் அமைந்துள்ள பழைய கட்டிடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று வீதியில் நடந்து சென்றவரின் தலையில் விழுந்ததில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். குறித்த நபர் நேற்று பிற்பகல் இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காயமடைந்த நபரின் அடையாளம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
வடக்கு அமெரிக்காவை நேற்று (08.04.2024) கடந்து சென்ற பூரண சூரிய கிரகணத்தை மில்லியன் கணக்கான மக்கள் கண்டு களித்துள்ளனர்.
பூமிக்கும் சூரியனுக்கு நடுவிலான பாதையில் சந்திரன் பயணித்து, பூமியின் பார்வையிலிருந்து சூரியனை முழுமையாக மறைக்கும் போது பூரண சூரிய கிரகணம் ஏற்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் 32 மில்லியன் அளவிலான மக்கள் நேற்று ஏற்பட்ட இந்த பூரண சூரிய கிரகணத்தை முழுமையாகவும் ஏனையோர் பகுதியளிவிலும் காணக்கூடியதாக இருந்துள்ளது.
இந்நிலையில், பெருமளவிலான மக்கள், பூரண சூரிய கிரகணத்தை முழுமையாக பார்ப்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்றுகூடியுள்ளனர்.
அத்துடன், அமெரிக்க நாட்டில் இது போன்றதொரு அரிய சூரிய கிரகணம் மீண்டும் 2044ஆம் ஆண்டளவிலேயே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல் வைத்தியசாலையில் பிறந்ததாகவும், இதன் பின்னர் தான் ஜேர்மனிய தம்பதியினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது பிறப்புச்சான்றிதழில் உள்ள இலங்கை பெயர் வாசனா மல்காந்தி எனவும், மூன்று மாத குழந்தையாக இருந்தபோது தனது பெற்றோர் ஜேர்மனிய தம்பதியினரிடம் தத்துக்கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், தனது பிறப்புச் சான்றிதழின் படி, தாய் கம்பஹா மாகாணத்தில் வசிப்பதாகவும், கண்டியில் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தந்தை மொரந்துடுவ பிரதேசத்தை சேர்ந்த நபர் எனவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையின் பின்னர் அவர் தந்தை இல்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல நகரங்களில் தனது தாயை தேடி வருவதாகவும், வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் தகவல் வெளியிட்டும், அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
14 வருடங்களாக தாயை தேடி வருவதாகவும், தான் ஒவ்வொரு முறையும் இலங்கைக்கு வரும்போதும் தனது தாயார் இருப்பார் என்ற நம்பிக்கையில் வைத்தியசாலைக்கு செல்வதை மறப்பதில்லை எனவும் கூறியுள்ளார்.
அம்மாவை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், தன்னை பெற்ற தாயின் குறையை உணர்ந்து அவரை ஒருமுறை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பலர் தனது தாய் எனக்கூறி முன்வருவதால், டி.என்.ஏ பரிசோதனை செய்து உறுதிப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
எனவே தன்னை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0711 31 78 33 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுக்க (Padukka) அங்கமுவ பிரதேசத்தில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விமானப்படை ரக்பி அணியில் கடமையாற்றிய விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அங்கமு பிரதேசத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உயிரிழந்த நபர் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த நபர் பொலிஸாரின் உத்தரவையும் மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதுடன் பொலிஸாரை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹொரண, தல்கஹவில பிரதேசத்தில் நேற்றுமுன் தினம் (07) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குறித்த நபர் பிரதான சந்தேகநபர் எனவம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் நகரங்களுக்கு வரும்போது சாரதிகள் தங்களது வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நாட்களில் வாகனங்களை திருடும் கும்பல் புறநகர்ப் பகுதிகளில் சுற்றித்திரிவதனால் நகரங்களில் வாகனங்களை நிறுத்தினால் பூட்டி விட்டு செல்லுமாறு சாரதிகளிடம் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியார் வாகனங்களை நிறுத்துமாறும் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புத்தாண்டுக் காலத்தில் கடைகளின் பாதுகாப்பு தொடர்பில் வர்த்தகர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.