நடுக்கடலில் தங்கக்கட்டிகளை வீசி எறிந்த கடத்தல்காரர்கள்… 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு!!

ரோந்து போலீசாரைப் பார்த்ததும், கடத்தல்காரர்கள், நடுக்கடலில் தங்கக்கட்டிகளை தூக்கி வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரோந்து போலீசார், தங்கக்கட்டிகளை கடலில் தேடி, 6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளைக் மீட்டெடுத்துள்ளார்கள்.

இலங்கையில் இருந்து படகு மூலம் தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்கத்துறை உதவியுடன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்றனர்.

இந்த ரோந்து படகை பார்த்த கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளுடன் வேகமாக தப்பியோட முயன்றனர். இதை பார்த்த அதிகாரிகள் அவர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை கடலில் வீசியுள்ளனர்.

பின்னர் படகில் ஏறிய அதிகாரிகள், அதில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் ரோந்து படகை பார்த்ததும் கடலில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்தனர்.

எனவே நேற்று காலை முதல் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் வேதாளை-மண்டபம் இடையே முயல் தீவு அருகே கடல் பகுதியில் கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக இந்திய கடலோர காவல்படையின் எஸ்.பி.ஏ. டைவிங் மற்றும் நீச்சல் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் பார்சலை கைப்பற்றப்பட்டது.

இதில் சுமார் 6 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் ராமநாதபுரம் சுங்கச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மொத்தம் 6 கிலோ தங்கக் கட்டிகளா? அல்லது வேறு தங்கப் பொட்டலங்கள் இன்னும் கடலில் கிடக்கின்றனவா? வேறு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை கடத்தி வந்து அதிகாரிகளின் பார்வையில் கடலில் வீசுவது போன்ற சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.

Alexa மூலம் குரங்கிடம் இருந்து சாதுர்யமாக தப்பித்த 13 வயது சிறுமி.. குவியும் பாராட்டுக்கள்!!

திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கிடமிருந்து Alexa சாதனம் மூலம் 13 வயது சிறுமி தப்பித்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது.

இந்திய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற 13 வயது சிறுமி அவாஸ் விகாஸ் காலனியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு, வீட்டில் உள்ள உறவினர்கள் வேறு ஒரு அறையில் இருந்தனர்.

அப்போது, நிகிதா தன் சகோதரியின் ஒரு வயது மகளுடன் முதல் தளத்தில் உள்ள சமையலறை அருகே விளையாடி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சமையலறைக்குள் திடீரென குரங்கு நுழைந்தது.

வீட்டில் உள்ள மற்றவர்கள் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்தது அவர்களுக்கு தெரியவில்லை. சமையலறைக்கு வந்த குரங்கு பாத்திரங்களை எடுத்து வீச ஆரம்பித்தது.

 

பின்பு, நிகிதாவையும், குழந்தையும் நோக்கி குரங்கு நகர்ந்ததால் என்ன செய்வதென்றே தெரியாமல் சிறுமி இருந்தார். அப்போது குழந்தையும் அலற தொடங்கியது.

அங்கிருந்த ஃபிரிட்ஜின் மீது Alexa (எலக்ட்ரானிக் சாதனம்) இருப்பதை பார்த்த நிகிதா, அலெக்ஸ்சாவிடம் குரங்கை பார்த்து குரைக்குமாறு கூறினார். பின்னர், அலெக்ஸாவும் குரங்கை போலவே குரைக்க, அதை கேட்ட குரங்கு பயத்தில் தப்பியது.

இதனால், நிகிதாவின் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து நிகிதாவின் உறவினர்கள் கூறும்போது, Alexa -வை நிகிதா பயன்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது என்றனர்.

கோவிலுக்குள் இளம்பெண், இளைஞரை சுட்டுக்கொன்ற நண்பர்.. அடுத்து அவர் எடுத்த விபரீத முடிவு.. அலறிய பக்தர்கள்!!

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் தீபக் ஜாட் (25). இவரும் தூரத்து உறவினர் பெண்ணான சினேகா ஜாட்டும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர்.

அபிஷேக் யாதவ் (26) என்பவர் இவர்களுக்கு பொதுவான நண்பராக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தீபக் பயங்கரத்தை அரங்கேற்றியுள்ளார்.

அபிஷேக் தன்னை கோவிலுக்கு வருமாறு அழைத்ததாக தீபக்கிடம் கூறிய சினேகா, அவருடன் சேர்ந்தே சென்றுள்ளார். மூவரும் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அப்போது தீபக் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தனது நண்பர்களை சுட்டுத்தள்ளியுள்ளார். இதில் சினேகா, அபிஷேக் இருவரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தனர்.

அதன் பின்னர் தீபக் தன்னைத் தானே சுட்டு கோவில் வளாகத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த பக்தர்கள் பயத்தில் அலறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரின் உடல்களையும் கைப்பற்றினர். பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிர சிகிச்சையில் பிரபல தமிழ்பட நடிகை கவலைக்கிடம்… கண்டுக்கொள்ளாத திரையுலகம்!!

வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சாலை விபத்தில் சிக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கடந்த 3 வாரங்களாக உயிருக்குப் போராடி வருகிறார்.

மருத்துவமனை சிகிச்சைக்கான செலவுகளுக்கு உதவுமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தும், திரையுலகினர் யாரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

2015-ல் வெளியான ‘பொங்கி எழு மனோகரா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருந்ததி நாயர். அதனைத் தொடர்ந்து ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன்பின், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனிடையே 2018-ல் வெளியான ‘ஒட்டக்கொரு கமுகன்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானர்.

தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வரும் இவர், திருவனந்தபுரம் கோவளம் அருகே சாலை விபத்தில் சிக்கினார். தனது சகோதரருடன் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்து விட்டு, திருவனந்தபுரம் கோவளம் அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது வாகனம் ஒன்று மோதி விட்டு, நிற்காமல் சென்றது. சாலை ஓரத்தில் ஒரு மணி நேரமாக ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை சிலர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மூன்று வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறார். செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தினமும் ரூ.2 லட்சம் செலவு ஆவதாகவும், இதுவரை ரூ.40 லட்சத்துக்கு மேல் செலவு செய்யப்பட்டு விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்னை காப்பாத்தாதீங்க… கழுத்தில் பேட்ஜ் உடன் மரணத்திற்கு காத்திருக்கும் இளம் பெண்!!

வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜோராயா டெர் பீக். 28 வயதான அழகிய இளம்பெண், அடுத்த மாதம், மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

மன நல ஆலோசகராக வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஸொராயா, மன அழுத்தத்தாலும், ஆட்டிஸக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் தனது கல்விப் படிப்பை முடிக்க முடியவில்லை.

பத்து ஆண்டுகளாக எல்லா வித சிகிச்சை முறைகளையும் முயன்று பார்த்தும் எந்த பலனும் கிடைக்காததால் மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள ஜோராயா முடிவு செய்துள்ளார்.

இதற்காகஅவர், தனது கழுத்தில் ஒரு badge ஒன்றை அணிந்துள்ளார். அதில், ‘do-not-resuscitate’ என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, தன் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம் என்பதாகும்.

அதாவது, தான் எங்காவது சுயநினைவில்லாமல் விழுந்துகிடப்பதை யாராவது கண்டால், உயிர் காக்கும் சிகிச்சையளித்து, தன்னை காப்பாற்ற முயற்சிக்கவேண்டாம் என்கிறார் ஸொராயா.

மரணத்தை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது என்று கூறும் ஸொராயா, அது எப்படி இருக்கும், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாதே, அதனால்தான் பயம் என்கிறார்.

தனது நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால், மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்வது என்பதில் தான் எப்போதுமே உறுதியாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

2002-ம் ஆண்டிலிருந்து, நெதர்லாந்தில், Euthanasia என்னும் மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு சட்டப்படி அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மாயமான கணவன்.. விதியின் விளையாட்டால் பசியுடன் குழந்தைகளுடன் சுற்றிய தாய்.. அடுத்த நொடி நடந்த விபரீதம்!!

கணவன் காணாமல் போனதால் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் பணத்தை திருடிய சம்பவத்தால் அவர்கள் விபரீத முடிவை எடுத்தனர்.

சென்னை: கணவன் மாயமானதால் தனது 2 குழந்தைகளுடன் பசியுடன் சுற்றித் திரிந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரண திருட்டு சம்பவம் எப்படி ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் விளங்குகிறது.

சென்னை ஓஎம்ஆர் சாலையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வரலட்சுமி. இவரது கணவர் அண்மையில் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸார் அவரது கணவரை தேடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, கணவன் இல்லாததால் குடும்ப வருமானம் அப்படியே நின்று போனது. வீட்டிற்கு வாடகை கூட தர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் வீட்டை காலி செய்த வரலட்சுமி, தனது 16 வயது மகன் மற்றும் 15 வயது மகளுடன் சென்னையை விட்டு வேறு எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். பின்னர் கேரளாவிற்கு செல்ல தீர்மானித்த வரலட்சுமி, வீட்டில் இருந்த சில நகைகளை விற்று பணம் ஆக்கினார். பின்னர் தனது பிள்ளைகளுடன் கேரளா செல்லும் ரயிலில் ஏறி பயணித்துள்ளார் வரலட்சுமி.

ஆனால், விதியின் விளையாட்டாக வரலட்சுமி கொண்டு வந்த பணத்தையும், உடைமைகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால் கையில் எந்த பணமும் இல்லாததால், கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 பேரும் இறங்கியுள்ளனர்.

ஒருவேளை உணவு வாங்கி சாப்பிட கூட பணம் இல்லாமல் அவர்கள் தவித்துள்ளனர். பின்னர் பசி மயக்கத்தில் சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் உணவு கேட்டுள்ளனர்.

பார்க்க பரிதாபமாக இருந்ததால், அந்த நிறுவனமும் அவர்களுக்கு உணவு வழங்கியுள்ளது. பின்னர் அங்கேயே ஒரு ஓரத்தில் சிறிது நேரம் அவர்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து, மாலையில் அங்கிருந்து வெளியேறிய அவர்கள், அங்கிருந்த கால்போன போக்கில் நடந்து சென்றுள்ளனர். கணவனும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் 2 குழந்தைகளை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாத நிலையில், அங்கு வந்த ஒரு ரயிலுக்கு முன்பு குழந்தைகளுடன் பாய்ந்துள்ளார் வரலட்சுமி.

இதில் அவர்களின் உடல்கள் சிதறி பறந்தன. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், வரலட்சுமி உள்ளிட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீண்ட விடுமுறை : அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும்(Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான பணிகளை செய்து புத்தாண்டை கொண்டாட பொதுத்துறையினருக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நீண்ட விடுமுறையின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் கழிவுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து அரச உத்தியோகத்தர்களும்(Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான பணிகளை செய்து இந்நாட்டின் முக்கிய கலாசார அம்சங்களில் ஒன்றான புத்தாண்டை கொண்டாட பொதுத்துறையினருக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும் எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் குழந்தை : விசாரணையில் வெளியான தகவல்!!

கொழும்பு – மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒப்பந்தத்தின் மூலம் நான்கு வயது குழந்தையை வேறு தரப்பினருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏனையவர்களில் குழந்தையை தத்தெடுக்க ஒப்புக்கொண்ட 45 வயதுடைய பெண்ணும், அவரது 19 வயது மகள் மற்றும் 15 வயது மகனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாளிகாவத்தை லக் செவன அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்த மொஹமட் ரிப்கான் ஹைசா என்ற குழந்தையே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. இதற்கமைய, கைது செய்யப்பட்ட நால்வரிடமும் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

280 ரூபாய்யை எட்டும் டொலர் பெறுமதி : வர்த்தகர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், அதன் பலன்களை மக்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களை பயன்படுத்துமு் நுகர்வோருக்கு அதன் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அமெரிக்க டொலர் பெறுமதி 280 ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக திறைச்சேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை குறைக்க வர்த்தகர்கள் தவறினால், பொருட்களின் மீது விலைக் கட்டுப்பாட்டை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் வருமானம் என்பன ரூபாயின் பெறுமதி அதிகரிப்பிற்கு காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் இறக்குமதிக்கான போட்டி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான யோசனைக்கு வர்த்தக அமைச்சு இன்று அமைச்சரவை ஒப்புதல் பெற உள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய,, இந்த வருடம் பெப்ரவரி 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி 4.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சந்தையில் கோதுமை மா, சீனி, வெங்காயம், பருப்பு மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான வர்த்தகப் போட்டியை அதிகரித்து சந்தையில் விலையை குறைத்து வைத்திருக்கும் திட்டத்திற்கு வர்த்தக அமைச்சு இன்று அமைச்சரவை ஒப்புதலை பெறவுள்ளது.

​​துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் போது பொருட்களின் விலைகள் மற்றும் உள்நாட்டு சந்தைக்கு பொருட்கள் சென்றடையும் போது இறுதி விலையை நுகர்வோருக்கு அதிகப் பயன் அளிக்கும் வகையில், பொருட்களின் விலைகளை பரவலாக விளம்பரப்படுத்த ஒப்புதல் கோரப்பட்டது.

கடந்த சில மாதங்களாக ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் மாற்று வீதம் வீழ்ச்சியடைந்த போதிலும், அதன் விலை உயர்வாகவே காணப்பட்டதாலும், அதன் பலன்கள் நுகர்வோரை சென்றடையவில்லை.

இந்நிலையில் சந்தைப் பகுப்பாய்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சில வியாபாரிகள் விலையை மாற்றத் தவறியதன் மூலம் கூடுதல் இலாபத்தை பெறுகின்றனர்.

இறக்குமதி விலையை குறைப்பதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்குவதற்கான அமைப்பை தயாரிக்குமாறு வர்த்தக அமைச்சகத்திற்கு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மனைவியை கொன்று உடலை 200 துண்டுகளாக வெட்டிய கணவன் : பிரித்தானியாவில் இடம்பெற்ற சம்பவம்!!

பிரித்தானியாவில் லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து பின்னர் உடலை 200 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன் என்ற நபரே தனத மனைவியான ஹோலி பிராம்லி (வயது 26) என்பவரை இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு திருமணமாகி 1 ½ ஆண்டுகள் ஆகின்றதோடு, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று நிக்கோலஸ் மெட்சன் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 200-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி சமையல் அறையில் உள்ள குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார்.

பின்னர் மனைவியின் உடல் பாகங்கள் இருந்த பிளாஸ்டிக் பைகளை ஆற்றில் வீசியுள்ளதோடு இதற்கு அவரது நண்பன் ஒருவர் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றிய பொலிஸார் நிக்கோலஸ் மெட்சனை கைது செய்துள்ளனர். இதன்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

இன்று (08.04.2024) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களுடன் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை இவ்வாறு அதிகரித்து காணப்படக்கூடும் என அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பணி முடிந்து கணவருடன் வீடு திரும்பிய தாதிக்கு நேர்ந்த சோகம்!!

கொழும்பு – பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணி முடிந்து கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த களுபோவில போதனா வைத்தியசாலையின் தாதி மீதே லொறி மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிலியந்தலை, ஜாலியகொட விஜய மாவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷா கிரிஷாந்தி லியனகே என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்தில் அவரது கணவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தாதியின் கணவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தொழில்நுட்ப முகாமையாளராகக் கடமையாற்றுகின்றார் என்றும், பணியை முடித்துக் கொண்டு களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அருகில் சென்று மனைவியையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவர் சென்றிருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அநுராதபுரம் – கெபிதிகொல்லேவ – கொல்பெந்த குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 58 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் இன்று கூறியுள்ளனர்.

2024இல் நிலவும் வெப்பநிலையை அன்றே கணித்த பாபா வங்கா!!

2024 ஆம் ஆண்டில் நடக்கும் சில விஷயங்கள் குறித்து பாபா வங்கா சில கணிப்புகளை கணித்து வைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன.

உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன் கூறிய சில கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பற்றியும் அவர் சில கணிப்புகளைச் கணித்து வைத்துள்ளார். அதன்படி 2024-ல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

உலக வெப்ப அலைகளின் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவியல் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. இந்த வெப்ப அலைகளின்போது உச்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது.

மேலும் 1979 முதல் 1983 வரையிலான உலகளாவிய வெப்ப அலைகளின் சராசரி காலம் 2016 முதல் 2020 வரை 8 நாட்களில் இருந்து 12 நாட்களாக அதிகரித்துள்ளது என்று ஆய்வு காட்டுகிறது.

2024 ஆம் ஆண்டு வெப்ப சாதனையை முறியடிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 1996 இல் பாபா வங்கா இறந்தபோது, ​​​​இன்டர்நெட் அதன் ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால், அதைப் பற்றியும் அற்புதமான கணிப்புகளைச் அவர் கணித்துள்ளார். அதில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று அவர் கணித்துள்ளார்.

முக்கியமான உள்கட்டமைப்பு மீதான இந்த தாக்குதல்கள் சர்வதேச பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். உலகப் பொருளாதார சக்தியின் கட்டமைப்பு மாறும் என்றும், உலக நாடுகளிடையே அரசியல் பதட்டங்களும் கடன்சுமைகளும் அதிகரிக்கும் என்றும் வங்கா கணித்துள்ளார்.

இவை அனைத்தும் 2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கனவே பணவீக்கத்தின் பிடியில் இருப்பதாக அலையன்ஸ் லைஃப் கணக்கெடுப்பு சொல்கிறது.

பூமியையே இருளாக்க போகும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்!!

இந்த ஆண்டிற்கான முதல் முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இதனால் 4 நிமிடங்கள் மற்றும் 9 நிமிடங்களுக்கு சில பகுதிகளில் இருளில் மூழ்கியிருக்கும்.

இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் தெரியும். கடந்த ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தை விட இந்த ஆண்டு நிகழும் கிரகணத்தின் நேரம் அதிகமாக இருக்கிறது.

3 நாடுகளில் மட்டுமே இந்த கிரகணத்தை காண முடியும் என்பதால் இது எத்தனை அரியது என்பதை தெரிந்து கொள்ளலாம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் ஏற்படுகிறது.

இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெறுகிறது. சூரிய கிரகணத்தை காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் அருகே லட்சக்கணக்கானோர் கூடுவர் என தெரிகிறது.

இது போன்ற ஒரு கிரகணம் பசிபிக் பகுதியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இந்த கிரகணத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.37 மணிக்கும் அமெரிக்க நேரப்படி மதியம் 2.07 மணிக்கும், பின்னர் பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பமாகும்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில் காணப்படும். இதனால் சந்திரன், பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும். இதனால் சூரிய கிரகணத்தின் போது இருள் இருக்கும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி செய்த சாதனை!!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி ஒருவர் முட்டைக்கோவாவை பயிரிட்டு பெருமளவு இலாபத்தை பெற்றுள்ளார்.

நுவரெலியாவில் வளரும் முட்டைக்கோவாவை அனுராதபுரம் மாவட்டத்தின் மஹஇலுப்பள்ளம் பகுதியில் பயிரிட்டு வெற்றிகரமான அறுவடையை பெற்றுள்ளார்.

மஹஇலுக்பள்ளம் மஹாமிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் டி.எம்.சஞ்சீவ கெலும் திஸாநாயக்க என்ற 29 வயதுடைய இளைஞரே இதனை மேற்கொண்டுள்ளார்.

முழு இளைஞர் சந்ததியினருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் சஞ்சீவ, கோவா மூலம் மூன்று மாதங்களில் 15 இலட்சம் ரூபாவை பெற திட்டமிட்டுள்ளார்.

எள்ளு, சோளம், கடலை போன்றவை பயிரிடப்படும் வயல்வெளியில் நுவரெலியாவில் வளரும் முட்டைக்கோவா விதைகளை விதைத்துள்ளார்.

அனுராதபுரத்தில் மிகவும் வறண்ட காலநிலை நிலவுகின்ற போதும் இந்த இளைஞனின் முட்டைக்கோவாவை தோட்டம் நுவரெலியா தோட்டம் போன்று காட்சியளிக்கின்றமை விசேட அம்சமாகும்.

சிறு வயது முதல் விவசாயத்தின் மீது விரும்பம் கொண்டுள்ள அவர், வித்தியாசமான முறையில் பயிர்களை பயிட முயற்சித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, புதிய கலப்பின முட்டைக்கோவா விதை வகையை தேர்வு செய்து பயிரிட்டுள்ளார்.

அவர்களின் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் தான் முதன்முறையாக வெளிப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற முட்டைக்கோவாவை வெற்றிகரமாக பயிரிட்டதாக அவர் கூறினார்.

இந்தப் பயிர்ச்செய்கையை குறித்த இளைஞன் மிகவும் வெற்றிகரமாகச் மேற்கொண்டுள்ளதோடு, மூன்று மாத கடின உழைப்பின் பலனாக பதினைந்து லட்சம் ரூபா இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ்ப் பெண்!!

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர் என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான S. உமாசங்கர், ஓய்வு பெற்ற ஆசிரியை ரசிகா நில்மினி உமாசங்கர் அவர்களது மகளாகிய பூஜா உமாசங்கர்.

சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விமான பொறியியல் துறை பட்டம் பெறவுள்ள நிலையில் அவரின் அந்த துறையிலான அசாத்திய திறமை காரணமாக இன்று பேசு பொருளாக மாறியுள்ளர்.

இது பெண்களுக்கு மட்டுமல்ல எமது மண்ணுக்கே பெருமையாகும். விமான துறையில் சாதிக்க விரும்புவர்களுக்கு இவரின் சாதனை ஒரு உந்துசக்தியாக அமையும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.