திருமணம் செய்து விட்டு தலைமறைவான காதலன்.. விரக்தியில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சுரேஷ். இவரது மகள் ஹேமலதா (19). இவருக்கும் சிலமலைக் கிராமத்தைச் சேர்ந்த சந்துருவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

சந்துருவின் தாத்தா சேதுராமன் வீட்டில் சில நாட்கள் தங்கினார்கள். ஒரு கட்டத்தில் கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், ஹேமலதாவும், சந்துருவும் மைனர் என்பதால், அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சந்துருவின் பெற்றோர், சந்துருவை பெங்களூரு அழைத்து சென்று தலைமறைவாக வைத்து இருப்பதாக, ஹேமலதா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சந்துருவை தேடி வந்தனர். இந்நிலையில், கணவரை காணவில்லை என்ற மன உளைச்சலில் ஹேமலதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இறந்த ஹேமலதாவின் தாயார் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, காதலித்து மகளுடன் குடும்பம் நடத்திய சந்துருவையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். பின்னர், அங்கிருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

12 வயது சிறுமிக்கு 63 வயது மதபோதகருடன் நடைபெற்ற திருமணம்!!

தொழில் நுப்ட வளர்ச்சியால் உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பாரம்பரியம், பழக்க வழக்கம் மூட நம்பிக்கைகள் இவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

குழந்தை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 12 முதல் 15 வயதுக்குள் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பதை செய்து விடுகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் மத நம்பிக்கையில் ஊறிய ஒரு சமூகத்தில், வழக்கமான சடங்கு என்ற பெயரில் இந்த அவலம் அரங்கேறி இருக்கிறது.

63 வயது மதபோதகர் ஒருவர் 12 வயது சிறுமியை, திரளான விழா மற்றும் சடங்குகளின் மத்தியில் விமர்சையாக திருமணம் செய்திருக்கிறார். அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை மேலும் கூட்டியுள்ளது.

குறிப்பிட்ட பிரிவின் மதவழிபாட்டுத் தலைவராக 63 வயதாகும் நுமோ போர்க்டே லாவ் ட்சூரு என்பவர் உள்ளார். இவர் 2 தினங்களுக்கு முன்னர் (மார்ச் 30) கானாவின் குரோவூரில் உள்ள நுங்குவாவில் நடைபெற்ற விழாவில் 12 வயதாகும் சிறுமியை தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துக்களோடும் பகிரங்கமாக திருமணம் செய்து உள்ளார்.

பாரம்பரிய திருமணத்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, அது அவருக்கு பெரும் விமர்சனத்தை உண்டாக்கி உள்ளது.

திருமண விழாவின் புகைப்படங்கள் வெளியானதில் கானா நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மதபோதகரை விசாரிக்க வேண்டும் என்று பலர் கூறியுள்ளனர். கானா சட்டம் வழக்கமான திருமணங்களை அங்கீகரிக்கும், ஆனால் அதே வேளையில், கலாச்சார நடைமுறை என கூறி நடத்தப்படும் குழந்தை திருமணங்களை தடை செய்கிறது. கானாவில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

கானாவில் குழந்தை திருமண விகிதம் குறைந்து வருகிறது, ஆனால் இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது என்று பிபிசி தெரிவித்துள்ளது. கானாவில் 19 சதவீதம் பெண்கள் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

5 சதவீதம் பேர் தங்கள் 15வது பிறந்தநாளுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் வழங்கிய ஆலோசனை : இலங்கையில் கொலை செய்யப்பட்ட தந்தை!!

மாத்தறை பிரதேசத்தில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் பணிபுரியும் பிள்ளைகளின் வீடியோ அழைப்பு அறிவுறுத்தலின் பேரில் தாய் கொலையை செய்ததாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிகம தெனிபிட்டிய கொஸ்கஹஹேன பிரதேசத்தை சேர்ந்த பிரேமகுமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு அருகில் உள்ள கம்பத்தில் மனைவியால் கணவன் கட்டி வைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை பலமுறை துன்புறுத்தியுள்ளார். மனைவி, அயல் வீட்டாரின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

வீட்டின் முன் நாற்காலியில் அமரவைத்து விட்டு கணவனை கம்பத்தில் கட்டிவைத்தனர். இதற்கிடையில் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் வீடியோ அழைப்பு மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்தனர்.

தொந்தரவு செய்யும் தந்தையைத் தாக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். அதற்கமைய, மனைவி மற்றும் ஏனையோரால் கணவர் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் வெலிகம வாலான அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். கழுத்தில் கட்டப்பட்ட கயிறு மாட்டிக் கொண்டதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், உயிரிழந்தவரின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் பாடசாலை ஒன்றில் நடந்த அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

மஸ்கெலியாவில் உள்ள கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப் பயன்படும் கொங்கிரீட் குழாய்களை பாடசாலை வளாகத்தில் இறக்கி வைத்துள்ளனர்.

இதன்போது சில மாணவர்கள் குறித்த கொங்கிரீட் குழாய்கள் மீது ஏறி விளையாடியபோது குழாய் ஒன்று மாணவர் ஒருவர் மீது சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவர் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா சித்திரைக் கலை விழாவில் இருந்து நீக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர்!!

வவுனியா மாவட்ட சித்திரைக் கலை விழாவில் இருந்து வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார பேரவை இணைந்து நகரசபை மைதானத்தில் நேற்றும் (04.04) இன்றும் (05.04) சித்திரைக் கலை விழா நிகழ்வை நடத்தின.

இதன்போது, நேற்று (04.04) காலை அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த காட்சிக் கூடம் ஒன்றில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் வைக்கப்பட்டு அதன் பெயர் பொறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் புதூர் நாகதம்பிரான் மற்றும் புத்தர் சிலை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சித்திரைர கலை விழாவில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கஸ்வரர் என ஊடகங்களில் செய்தியும் வெளியாகி இருந்தன.

இருப்பினும் மாலை குறித்த ஆதி லிங்கேஸ்வரரை பார்வையிட சென்ற பலரும் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். வர்ணப் பூச்சு மூலம் ஆதி லிங்கேஸ்வரரின் பெயர் அழிக்கப்பட்டு வெறும் லிங்கம் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, உயர்மட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த பெயர் நீக்கப்பட்டதாக அங்கு கடமையில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியாவில் மாணவன் மீது ஆசிரியை தாக்குதல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுப்பு!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் நேற்று முன்தினம் (03.04) பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து பெற்றோர் சிறுவனை நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுவனின் நெற்றியில் காயமும் தலை மற்றும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தேன் என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என குறித்த ஆசிரியர் பெற்றோருக்கும் தெரிவித்துள்ளமையுடன் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் எவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதியாத போதிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர் சொந்த பிரேரனை மூலம் இவ் விடயத்தினை கவனத்தில் கொண்டு வந்தமையுடன்,

நேற்றையதினம் (04.04.2024) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு நேரடி களவிஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவனிடம் வாக்குழூலத்தினை பெற்றுக்கொண்டமையுடன் தொடர்ச்சியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவரொருவர் திடீரென உயிரிழப்பு!!

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்று (05.04.2024) அதிகாலை பதிவாகியுள்ளது. திடீர் சுகவீனம் காரணமாக அவர், இன்று அதிகாலை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாரதி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவன்!!

நீர்கொழும்பில் (Negombo) இருந்து கண்டி (Kandy) செல்லும் பேருந்தில் கையடக்க தொலைபேசியை விட்டு சென்ற மாணவனை தேடி ஒப்படைத்த பேருந்து சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

மாவனல்லையில் (Mavanalla) தனியார் பல்கலைக்கழகம் செல்வதற்காக நீர்கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் ஏறிய மாணவன் தனது கையடக்க தொலைபேசியை மறந்து விட்டு சென்றுள்ளார்.

கையடக்க தொலைபேசி தொலைந்து போனதை அறிந்த மாணவன், தனது நண்பரின் கையடக்க தொலைபேசியில் இருந்து அழைத்தபோது, ​​சாரதி தன்னிடம் கையடக்க தொலைபேசி இருப்பதாகவும், மாநகர பேருந்து நிலையம் அருகே வந்து எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் தனது விரிவுரைகள் ஆரம்பமாகி விட்டதாக கூறிய மாணவன், போது மீண்டும் நீர்கொழும்பு செல்வதால் கையடக்க தொலைபேசி மாவனல்லைக்கு கொண்டு வந்து கொடுப்பதாக சாரதி வாக்குறுதியளித்துள்ளார். அதற்கமைய, அவர் அதனை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட உன்னதமானவர்கள் இன்னும் நம்மிடையே இருப்பது நமது அதிர்ஷ்டம் எனவும் இந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கையடக்க தொலைபேசியை பெற்றுக் கொண்ட மாணவனின் தந்தை பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி இன்று(05.04.2024) நண்பகல் 12.12 அளவில் பலப்பிட்டி, எல்பிட்டி, மொரவக்க மற்றும் திஸ்ஸமஹாராமை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இன்று முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கையில் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி பெருந்தொகை பணமோசடி : சந்தேகநபர் தப்பியோட்டம்!!

இலங்கையில் ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோரை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நபரின் வங்கிக் கணக்குகளை தடை செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோசடி விசாரணைப் பணியகத்தின் (Fraud Investigation Bureau) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான நலன்புரிச் சங்கமொன்றை ஆரம்பித்து, அவர்களுக்காக பணத்தைச் சேகரித்து, அந்த பணத்தினை சந்தேகநபர் மோசடி செய்துள்ளார்.

சந்தேகநபர் வாக்குறுதியளித்தபடி நன்மைகளை வழங்காததால், ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோர்கள் அவருக்கு எதிராக மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கமைய, சந்தேகநபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஏற்கனவே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணையில்.

தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்!!

ஆனமடுவ(Anamaduva) பகுதியில் பாடசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட போது, லொறி மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனமடுவ-ரதனபால தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே நேற்று(04.04.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹவுஸ்வெவ வெலேவவ வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத்தின் மூத்த பிள்ளையான, ஈக்ஷனா காயத்மி என்ற 13 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவி பாடசாலையில் அகில இலங்கை நடனப் போட்டிக்கான பயிற்சியில் கலந்துகொண்டு, வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறுவதற்காக நடைபாதை வழியாக ஓடிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. படுகாயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞர்கள் : உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

டுபாயில் பணியாற்றிய நிலையில், உயிரிழந்த இளைஞர்கள் இருவரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் டுபாயில் பணியாற்றிய இருவர் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆராச்சிக்கட்டு நல்லதரன்கட்டு கிரிவேல்கெலேயைச் சேர்ந்த எஸ். எம். ஜி. தோட்டத்தில் வசிக்கும் பி. எம். 28 வயதான சந்துன் மதுசங்க என்ற திருமணமாகாத இளைஞரும், ஆராச்சிக்கட்டு அண்டன்வில்வத்தை இலக்கம் 343 இல் வசிக்கும் மொஹாந்திரம்லைச் சேர்ந்த ரமேஷ் உதர திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குருநாகலில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் இருந்து டுபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தினமும் தமது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ள நிலையில், உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தமது உறவினர்களிடம் தாம் சுகவீனமுற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததையடுத்து உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அரசு தலையிட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வந்து, முறையான விசாரணைகளை நடத்தி, மரணத்திற்கான காரணங்களை கண்டறியுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தனித்தனியாக 12 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவாகும் எனவும், இது தொடர்பில் அரசாங்கம் உதவுமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனை செய்யுமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் வினவியபோது, ​​சட்டரீதியாக வெளிநாட்டில் மரணம் ஏற்பட்டால், அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான குறிப்பிட்ட தொகையை வெளிவிவகார அமைச்சு வழங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிப்பு!!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (04.04) விடுவிக்கப்பட்டது.

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த நெடுங்கேணி பாெலிசார் அங்கு இருந்த 8 பேரை கைது செய்ததுடன் ஆலயத்தில் இருந்த பாெருட்களையும் எடுத்துச் சென்றிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தாெடர்ந்து நீதவான் நீதிமன்றின் அனுமதியோடு பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு!!

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா, நகரசபை மைதானத்தில் நேற்று (04.04) இடம்பெற்ற சித்திரை கலை விழா நிகழ்வின் போது குறித்த சாகச நிகழ்வு இடம்பெற்றது.

கண்டியில் இருந்து அழைத்து வரப்பட்ட பயிற்றப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்கள், இராட்டினத்தில் சுற்றுதல், தலையில் நீர் கொண்டு செல்லல், சிறுவர்களை இராட்டினத்தில் ஏற்றி சுற்றுதல், மோட்டார் சைக்கிளில் பயணித்தல்,

வளையத்தின் ஊடாக பாய்தல், நெருப்பு வளையத்தின் ஊடாக பாய்தல், துப்பாக்கி சூடு நடத்தியவரை விரட்டிப் பிடித்தல் போன்ற பல சாகச நிகழ்வுகளை மோப்ப நாய்கள் மேற்கொண்டிருந்தன. மோப்ப நாய்களின் சாகசத்தை பார்பதற்காக பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை மைதானத்தில் சித்திரைக் கலைவிழா கோலாகலமாக ஆரம்பம்!!

வவுனியாமாவட்ட கலாசார அதிகாரசபை நடாத்தும் சித்திரைக் கலைவிழா நேற்று (04.04.2024) கோலாகலமாக ஆரம்பமாகியது.

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரச அதிபர் சரத் சந்திர நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதில் மாவட்ட கலாமன்றங்களின் கண்காட்சிக் கூடங்கள், மாணவர்களின் சித்திரக் கண்காட்சி, சமுர்த்தி பயனாளிகளின் விற்பனை மற்றும் கண்காட்சி நிலையங்கள், உள்ளூர் உற்பத்தியாளர்களின் காட்சிப்படுத்தல்கள், இராணுவம் மற்றும் பொலீஸ் பிரிவுகளின் சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை குறித்த நிகழ்வு இன்றயதினமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.