வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் கடமையினை பொறுப்பேற்றார்!!

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை, மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களின் இடம்மாற்றங்கள் இடம்பெற்றன.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் இன்று (03.04.2024) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதுடன் பின்னர் வவனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக தனது கடமைகளை ஆரம்பித்தார்.

புதிய பணிப்பாளர் ஜி.சுகுணன் இதற்கு முன்னர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் “வீட்டிலிருந்தே ஒன்லைனில் சம்பாதிப்பது எப்படி” இலவச கருத்தரங்கு!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை இல்லாப் பிரச்சனை இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை ஒன்றை பெற்றுக்கொள்வது என்பதும் பெரும்பாலும் எட்டாக்கனியாகியுள்ளது.

அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் கூட தமது அன்றாட செலவீனங்களை சமாளிப்பதில் திணறி வரும் இந்த வேளையில் “வீட்டிலிருந்தே ஒன்லைனில் சம்பாதிப்பது எப்படி” என்பது தொடர்பான இலவச தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா Tech Masters Campus ஆகிய நாம் வரும் சனிக்கிழமை (06.04.2024) காலை 10 மணியளவில் ஒழுங்கு செய்துள்ளோம்.

இவ் இலவச கருத்தரங்கில் “இணையத்தில் நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பது” தொடர்பான முழுமையான விளக்கங்களுடன் பயிற்சியும் வழங்கப்படும்.

இத் துறையில் பலவருட அனுபவம் கொண்ட பயிற்சியாளரால் பயிற்சி வழங்கப்படுவதுடன் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ள முடியும்.

இக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழுள்ள முகவரிக்கு நேரடியாக வருகைதந்து இலவச அனுமதி அட்டை ஒன்றை பெற்று உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

Tech Masters Campus
No 206 1/8 First Floor, Station Road, Vairavapuliyankulam, Vavuniya
(குருமன்காடு சந்தியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத நிலைய வீதியில்)

தொடர்புகளுக்கு
0740771235
0764416981
0244339886

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

 

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் மாற்றம்?

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் தீர்மானம் இல்லை என்று குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் தமது சங்கம் உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மூலப் பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலை சுகாதார தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்!!

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வவுனியா வைத்தியசாலையின் சுகாதார தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (02.04.2024) மதியம் ஆரம்பமான குறித்த பேரணி யாழ்வீதிவழியாக சென்று மீண்டும் வைத்தியசாலையினை அடைந்து நிறைவுபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்..

சுகாதாரத்துறையின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட கொடுப்பனவு அனைவருக்கும் வழங்கப்படவேண்டும், அத்துடன் முறையான பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை, இதேவேளை நிலுவைக் கொடுப்பனவுகள், சீருடைக் கொடுப்பனவுகள் போன்றன நீண்டகாலமாக வழங்கப்படவில்லை,

இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அதனால் எந்த பயனும் கிடைக்காத நிலமையே நீடிக்கின்றது.

எனவே எமது கோரிக்கையினை அரசாங்கம் செவிமடுக்காது விடில் நாளையதினத்திலிருந்து தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தாயாராகிவருவதாக தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சொந்த நாட்டில் வேலை செய்யும் எமக்கா இந்த நிலமை, அரசாங்கமே வீடு செல்,வாக்குறுதி அளித்தபடி பொருளாதார கோரிக்கைகளை நிறைவுசெய் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த பேரணியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

கொழும்பில் ஐபில் போட்டியால் உயிரிழந்த தமிழ் இளைஞன்!!

கொழும்பில் ,ஐபில் மேட்ச் பார்க்கவேண்டும் என்பதற்காக துவிச்சக்கர வணடியில் அதிவேகமாக பயணித்த இளைஞர் மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கொழும்பு கல்கிசையை சேர்ந்த 17 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். கடந்த முறை இடம்பெற்ற கா.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில், கிரிகெட் போட்டி மீதான மோகம் இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை அதீத சில ஈர்ப்புக்கள் இளையோரிடையே , அவர்களின் உயிருக்கு கூட ஆபத்தாகும் நிலமை தற்போது தோன்றியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் சமூகத்தில் இடம்பெறுகின்றமை பெரும் வேதனைக்குரியதொன்றாகும்.

இலங்கையில் முகநூல் மூலம் தவறான முறையில் நடத்தப்படும் இளம் யுவதிகள்!!

முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் 06 யுவதிகள் பாலியல் முறையில் தவறாக உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நேற்று (01) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான யுவதிகள் தனித்தனியாக முன்வைத்த 06 முறைப்பாடுகளை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சாமந்தி ரேணுகா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றததின் கவனத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.

மாத்தறை, தெனிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய பெண் ஒருவர் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய பெண் ஒருவர் தனது புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை முகநூல் கணக்கில் வெளியிட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக மற்றுமொரு முறைப்பாட்டை பலபோவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை அடையாளம் தெரியாதநபர் ஒருவர் தன்னை அவமதிக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை விடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்துரே பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா உட்பட வட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!!

வட மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வட மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல்களை யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாளை முதல் (03) வடக்கு மாகாணத்தின் வவுனியா,மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு, சின்னத்தம்பனை, பாலைப் பாணி, மூன்றுமுறிப்பு,

ஐயன் குளம், மடு,கீரி சுட்டான், தட்டாங்குளம், பகுதிகளில் பகல் காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை பகல் பொழுது வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் இனை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை (Heat Waves) வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரும் காலை 7.00 மணிக்கு முன்னரும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இம்மழை அதிகரிக்கும்.

வெப்பநிலையின் பாதிப்புக்களை தற்காலிகமாக தணித்து குறுகிய காலத்திற்கு மட்டுமே சௌகரியமான வானிலையை உருவாக்கும். முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டது போன்று, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்.

எனவே, அதிகரிக்கும் வெப்பநிலை, வெப்ப அலை தொடர்பிலும் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. அதிகரித்த வெப்பநிலையை கருத்தில் கொண்டு எமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வது உசிதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தோழியின் பிறந்தநாளுக்குச் சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்க்கப்பட்ட அதிர்ச்சி!!

கோவையில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 8 வயது சிறுமி வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் செண்பகவல்லி-வீரன் தம்பதி. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர்களுக்கு 10 வயது ஆண் குழந்தை மற்றும் 8 வயது பெண் குழந்தை கோகுலப்பிரியா ஆகியோர் உள்ளனர்.

நேற்று இரவு அதே பகுதியில் வசிக்கும் வான்மதி என்பவரது வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக சிறுமி கோகுல பிரியாவும் சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வான்மதி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது கோகுலப்பிரியா ஏற்கெனவே வீட்டிற்கு சென்று விட்டதாக வான்மதி கூறியுள்ளார்.

ஆனால் சிறுமி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டை சுற்றிலும் தேடி உள்ளனர். அப்போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே தண்ணீர் சிந்திக் கிடப்பதை பார்த்து கோகுல பிரியாவின் பெற்றோர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தண்ணீர் தொட்டியை திறக்கும்படி கூறிய போது, வான்மதி முதலில் மறுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரத்திற்கு பிறகு தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே கோகுலபிரியா சடலமாக மிதந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரது உடலை மீட்டு பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக செண்பகவல்லி, பேரூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை 25 முறை கத்தியால் குத்திக் கொலை : கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எடியூரில் வசித்து வருபவர் கிரீஷ் என்ற ரியான் கான். 35 வயதாகும் இவர் பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு கணவரை இழந்த 42 பரிதா கானத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.பெங்களூரு ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் பரிதா கானம் வேலை பார்த்து வந்தார். பரிதா கானத்திற்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய் முதல் மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், பரிதா கானத்தை திருமணம் செய்துகொள்ள கிரீஷ் முடிவு செய்தார். இதனையடுத்து ஜெயநகரில் உள்ள ஷாலினி பூங்காவில் வைத்து கிரீஷ் , பரிதா கானம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனார்.

கிரீஷ் மசாஜ் சென்டர் வேலையை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். இதற்கு பரிதா கானம் தனக்கு 2 பிள்ளைகள் உள்ளதால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த கிரீஷ், தான் மறைத்து வைத்திந்த கத்தியால் பரிதா கானத்தை 25 இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தானாகவே காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், எடியூரில் வசித்து வரும் கிரீசுக்கு திருமணமாகவில்லை.

இந்து மதத்தை சேர்ந்த அவர் 2011ல் முஸ்லிம் மதத்திற்கு மாறி தனது பெயரையும் ரியான் கான் என மாற்றிக் கொண்டார். கிரீசுக்கும், அவரது தங்கைக்கும் திருமணத்துக்கு வரன் கிடைக்காததால் மீண்டும் இந்து மதத்திற்கு கிரீஷ் மாறினார்.

இந்நிலையில் 2022ல் கிரீசுக்கு பரிதா கானத்துடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. திருமணத்திற்கு பரிதா கானம் மறுப்பு தெரிவிக்கவே அவரை 25 முறை கத்தியால் குத்தி கிரீஷ் கொடூரமாக செய்துள்ளார். இதனை வாக்குமூலமாக அளித்து கிரீஷ் தானாகவே காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இளம்பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் ஃபெலீஸ் நசீர் (31).

கோழிக்கோடு ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் கேஇ ஃபெலிஸ் நசீர் (31) நேற்று மாலை, தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

ஃபெலிஸ் பொது அறுவை சிகிச்சை துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். தூக்கில் தொங்கிய நிலையில், ஃபெலிஸைக் கண்டதும், அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

இளம்பெண் மருத்துவர், தான் பணிபுரிந்த மருத்துவமனை குடியிருப்பு பகுதியிலேயே தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஃபெலிஸ் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப் பதிவு செய்து, ஃபெலிஸ் மரணத்திற்கான காரணம் குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

காதலன் விபத்தில் பலி.. பிரிவை தாங்கமுடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பூங்கா நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருடைய மகள் தர்ஷினி வயது 21 இவர் நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் சோமனூர் திவாகரும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயது 24. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். திவாகர், தனது நிறுவனத்தில் பணியை முடித்து விட்டு சிங்காநல்லூர் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென எதிரில் வந்த வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் திவாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை அறிந்த அவரது காதலி தர்ஷினி கதறி அழுதுகொண்டே மருத்துவமனைக்கு சென்று திவாகர் உடலை பார்த்தார். அவருடைய உறவினர்கள் எத்தனையோ ஆறுதல் கூறியும் தர்ஷினி கதறியதை நிறுத்தவே இல்லை.

அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற தர்ஷினி தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததால் காதலி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, மகன், மகளை கொலை செய்து உடல்களுடன் 3 நாட்கள் உறங்கிய கணவர்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தின் ரத்தன்பூர் கிராமத்தில் வசித்துவருபவர் ராம் லகன் கவுதம். இவர் மார்ச் 15ம் தேதி தனது மனைவி ஜோதி, 6 வயது மகள் பயல் , 3 வயது மகன் ஆனந்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஜோதிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கௌதம் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன் மும்பை கல்யாண்பூரில் பணிபுரிந்து வந்த ஜோதியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் லக்னோவில் வசித்து வந்த நிலையில் சரோஜினி நகர் கவுரி பஜார் பகுதியில் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். அதே பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர். மார்ச் 28ம் தேதி வியாழக்கிழமை தம்பதிகளிடையே பெரும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரத்தில் கௌதம் நீண்ட நேரம் திட்டிக் கொண்டே இருந்துவிட்டு தூங்கிவிட்டார். நள்ளிரவு எழுந்து தூங்கிக் கொண்டிருந்த ஜோதியை சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

தனது கைகளால் பாயல் மற்றும் ஆனந்த்தையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மறுநாள் காலை அவர் கதவை பூட்டிவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, அடுத்த 3 நாட்களுக்கும் அதே போல தினமும் காலை வேளைக்கு சென்று திரும்பினார். இவரது வீட்டில் இருந்து 2 நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையில் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர்.

ஆனால் கொத்தனார் வழக்கம் காலை வேலைக்கு சென்றதையும் பார்த்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது அவரது மனைவியும் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் பிணமாக காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கொத்தனார் தனது மனைவி, மற்றும் 2 குழந்தைகளை கொன்று, 3 நாட்கள் அவர்கள் உடல்கள் கிடந்த அதே அறையில் உறங்கிவிட்டு, தினமும் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். போலீசார் அறையின் பூட்டை உடைத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண்ணை கொலை செய்து போலீசில் சரணடைந்த காதலன்!!

பெங்களூருவில் தனது காதலியை பட்டப்பகலில் பொதுவெளியில் குத்தி கொலை செய்திருக்கிறார் கார் டிரைவர். கொலை செய்ததும் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்து வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.

பெங்களூருவில் கால் டாக்சி ஓட்டுநராக இருக்கிறார் 35 வயதான கிரிஷ். சிரிஷ் பெங்களூரு ஜெயாநகரைச் சேர்ந்தவர். இவர் 42 வயதான மேற்கு வங்க பெண்ணான பரிதா கத்துன் என்பவரை காதலித்து வந்தார். இந்த பெண் பெங்களூருவில் இருக்கும் ஒரு ஸ்பாவில் பணி செய்துவந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்த கிரிஷ் கடந்த 2011ல் அவரது தங்கைக்கு மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சில வருடங்களில் தனது உண்மையான பெயரான கிரிஷ் என்கிற பெயரிலேயே சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை மேற்கொண்டு இருக்கிறார்.

கிரிஷ் காதலித்த பரிதா ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். சொந்த மாநிலமான மேற்கு வங்கம் சென்றிருந்த பரிதா கடந்த மார்ச் 26 அன்று அவரது மகள்களுடன் பெங்களூரு திரும்பினார். மார்ச் 29 கிரிஷின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமெனவும் நினைத்திருக்கிறார் பரிதா.

மேலும், மூத்த மகளுக்கு கல்லூரியையும் தேடியிருக்கிறார் பரிதா. சம்பவம் நடந்த நாளன்று, பரிதா மற்றும் அவரது மகள்களை கிரிஷ் ஷாப்பிங் மற்றும் உணவு சாப்பிட அழைத்து சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அன்று மாலை, ஷாலினி கிரௌண்ட்ஸ் என்கிற இடத்தில் கிரிஷ் தனது காதலை பரிதாவிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் கிரிஷ் பரிதாவிடம் கேட்டு இருக்கிறார். ஆனால், பரிதா திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இது இருவருக்கும் வாக்குவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உடனே ஆத்திரமடைந்த கிரிஷ் கத்தியால் பல முறை பரிதாவை குத்தி இருக்கிறார். அதில், சம்பவ இடத்திலேயே பரிதா பரிதாபமாக இறந்திருக்கிறார். கொலை செய்த கையேடு ஜெயாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் கிரிஷ். அந்த வகையில், கிரிஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.

இரவு 8:30 மணியளவில் ஷாலினி கிரௌண்ட்ஸ் படியில் பெண்ணின் உடல் இருப்பதாக போலீசுக்கு அழைப்பு வந்துள்ளது. அதன்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து பரிதாவின் உடலில் இருந்த காயங்களை பார்த்தார்கள். இந்த கொலை செய்ததற்க்காக விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

கிரிஷ் மற்றும் பரிதா கடந்த பாத்து ஆண்டுகளாக உறவில் இருந்திருக்கிறார்கள். ஆனால், பரிதா கிரிஷை திருமணம் செய்ய மறுத்திருக்கிறார். இதுவே கொலைக்கான காரணமாக இருக்கும் என்கிறார்கள் போலீசார்.

மேலும், சம்பவம் நடந்த இடத்திலும் இருவரும் தங்கியிருக்கும் இருப்பிடத்தில் இருப்பவர்களிடமும் விசாரணையை மேற்கொண்டு இருக்கிறார்கள் போலீசார். மேலும், இந்த கொலைக்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்குமா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் பொலிஸார்!!

கனடாவில் வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த பெண் எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற 26 வயதான பெண்ணே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவதாக இந்தப் பெண் இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

இந்நிலையில் அதிகமானோர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும், மோசடியில் சிக்கியோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலி தாங்க முடியவில்லை… யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 65 வயதான கோபால் புஸ்பராசா என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் சில காலங்களுக்கு முன்னர் கீழே விழுந்த நிலையில் 2 கால்களிலும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இவருக்கு கண் வலியும் காணப்படுகிறது.

இந்த நிலையில் 2 வலிகளும் தாங்க முடியாத நிலையில் அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு கொண்டுள்ளார். குறித்த நபரை அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வேளை இடையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிள் வீட்டுக்குள் நுழைந்தது : இருவருக்கு நேர்ந்த கதி!!

யாழ் இராசாவின் தோட்டப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாசல் கதவினை பிரிந்து உள்ளே நுழைந்தது விபத்துக்குள்ளானது.

யாழ் ஆரியகுளப் பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த வீட்டின் மூடிய வாயில் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.