காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் காலநிலை தொடர்பான முதலாவது அமர்விலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு இலங்கை காலநிலை நாடாளுமன்றம் உள்ளக அமைப்புகளுடனும் ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படும் என எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.
இதேவேளை, 2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலநிலை மாற்றம் ஒரு சதவீத இழப்பை ஏற்படுத்தும் என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் விவசாயத் துறை பில்லியன் கணக்கான டொலர்களை இழக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், வெப்ப மண்டல பாதை முயற்சி, காலநிலை நீதி முன்முயற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சி மற்றும் சர்வதேச காலநிலை பல்கலைக்கழகம் போன்ற சுற்றுச்சூழல் நட்பு மேம்பாட்டுத் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்தில் மேலும் அதிகரித்துள்ளது. 6.6 சதவீதத்தினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக உயர்வடைந்துள்ளது. அதன்படி, ஜப்பானிய யெனுக்கு நிகராக 14.2 சதவீதமும்,
ஸ்ரேலிங் பவுண்ட்ஸிற்கு நிகராக 7.3 சதவீதமும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. மேலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 6.7 சதவீதமும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உயர்வடைந்துள்ளது.
பாணந்துறை பகுதியில் உயிரிழந்த தொழிலதிபர் ஒருவரின் சடலத்தினை அவரது இரண்டு மனைவிகளும் உரிமைக்கோரியதனால் மலர்சாலையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை வலான பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வர்த்தகருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும், அவர் இறக்கும் போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் முதல் மனைவி சட்டத்தரணி என்றும், இரண்டாவது மனைவி பிரதேச செயலக உத்தியோகத்தர் எனவும், இருவருக்கும் பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கமைய, பாணந்துறை மரண விசாரணை அதிகாரி துமிந்த அதிகாரம் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது சட்டத்தரணி மனைவி இறந்த கணவரின் உடலை தனது வீட்டில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும்,இறுதி அஞ்சலியை தடையின்றி நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு இரண்டாவது மனைவி,உறவினர்கள்,நண்பர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமான நிலைக்கு வராமையினால், பொலிஸாரின் தலையீட்டில் மலர்சாலையில் சடலம் வைக்கப்பட்டு பின்னர் புதைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இறந்தவரின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் வரை எவ்வித மோதலுமின்றி இரு தரப்பும் செயற்பட இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாவத்தகம பிரதேசத்தில் பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் குறித்த சிறுமி பாடசாலை மாணவர்களுக்காக சிசுசெரிய பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த தனது மகள் யாரோ ஒருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமியின் தாயார் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய, நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில் அவர் கடந்த 16ஆம் திகதி விடுமுறையில் வந்திருந்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மட்டும் உள்ள பாடசாலை பேருந்தில் கடற்படை சிப்பாய் ஒருவர் சாதாரண பயணியாக பயணிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய காதலைத் தொடர்ந்து கண்டித்து வந்த கணவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து அதிர வைத்திருக்கிறார் மனைவி.
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிங்கனோடி தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு நாயக்(38). பாஜக பிரமுகரான இவரது மனைவி சினேகா(26).
இவர்களது கிராமத்தில் கோயில் கோபுரம் கட்டும் பணிக்காக வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள வந்திருந்தனர். இதில் ஒருவருடன் சினேகாவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சினேகாவின் இந்த பழக்கத்தினால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகாத உறவைக் கைவிடுமாறு தனது மனைவியிடம் வலியுறுத்தினார். அதையும் மீறி சினேகா, வடமாநில தொழிலாள்லியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரைக் கொலை செய்ய முடிவு செய்த சினேகா, ராஜு நாயக் குடிக்கும் மதுவில் நேற்றிரவு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைப் போட்டுள்ளார். அதைக் குடித்த ராஜு நாயக் சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.
கணவர் மயங்கி விழுந்ததும், அவரது கழுத்தை நெரித்து சினேகா கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று ராஜு நாயக் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சினேகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் அதிக வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் தொடர்ந்து மோசடிகள் மற்றும் இணைய மோசடிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசரகாலத் தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
தற்போது Meta, Messenger என அழைக்கப்படும் Facebook போன்ற சமூக ஊடக தளங்களில், பிரமிட் திட்டங்களுக்கு மக்கள் பணத்தை வைப்பிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக நட்பு கோரிக்கைகளை அனுப்பும் மோசடி செய்பவர்கள் சில போட்டிகளுக்கு வாக்களிக்குமாறு தனிநபர்களை கேட்டு மோசடி செய்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நண்பர் கோரிக்கையை ஏற்கனவே அவர்களின் Facebook நண்பர் பட்டியலில் உள்ள ஒருவரின் தொடர்புள்ளவர் மூலம் அனுப்பப்படலாம். போட்டிக்கு வாக்களிக்க ஒரு குறியீடாக நான்கு இலக்க எண்ணை அந்த நபருக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கலாம்.
நான்கு இலக்க குறியீட்டு எண் ஒரு முறை கடவுச்சொல் (OTP) ஆகும். இது கடவுச்சொற்களை மாற்றுவது போன்ற செயல்களுக்காக பேஸ்புக் நிறுவனத்தால் அனுப்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்பிய பிறகு, அசல் பேஸ்புக் உரிமையாளர் தனது கணக்கை இழப்பார் என தெரியவந்துள்ளது. எனவே, OTP குறியீடுகளை யாருடனும் பகிர வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மூத்த தகவல் பாதுகாப்புப் பொறியாளர் கேட்டுக் கொண்டார்.
ஒரு தனிநபரின் தேசிய அடையாள அட்டை, இலங்கை கடவுச்சீட்டின் தகவல் பக்கம் மற்றும் ஓட்டுநர் உரிமங்களின் பிரதிகள், கையொப்பங்கள் உள்ளிட்டவற்றின் தெளிவான நகல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் பாடசாலை மாணவர்கள் கதறி அழுத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலே இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்கள் ஆசிரியர் இடமாற்றம் காரணமாக பாடசாலையை விட்டு பிரிந்து செல்லும் போது அவரின் பிரிவை தாங்காது கண்ணீரால் வழியனுப்பி வைத்த காணொளி வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் சமீபத்தில் கிராம மக்கள் உட்பட காண்போரை ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு திருமணம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த திருமணத்திற்காக 50 விலை உயரந்த காரைகளை ஏற்பாடு செய்து மானிப்பாய் முதல் திருமணம் இடம்பெறும் இடம் வரை நகரம் வழியாக செல்லாமல் கிராமத்திற்கு ஊர்வலமாக செலுத்தி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பின்ஓய மேல் பிரிவில் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வீடொன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதையடுத்து சிறுவனின் தந்தையும் தோட்டத்தில் வேலை செய்பவர்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, சிறுவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த பிக் பாஸ் கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் கன்னட ஓடிடி சீசனில் பங்கேற்று புகழ் பெற்றவர் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா. பெங்களூருவைச் சேர்ந்த இவர் சமூக ஊடகங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான நடிகையாவார். இவர் சமீபத்தில் சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுமியுடன் உள்ள வீடியோவை அடிக்கடி சமூக ஊடகங்களில் சோனு கவுடா பகிர்ந்து வந்தார். ஏற்கெனவே குழந்தைகள் தத்தெடுப்பு விவகாரம் தொடர்பாக சோனு கவுடா மீது குழந்தைகள் நலத்துறை சார்பில் படரஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சோனு கவுடாவை பெங்களூருவில் உள்ள படரஹள்ளி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். ஜே.ஜே. சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சோனு கவுடாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக சோனு வெளியிட்டுள்ள வீடியோவில், ஏழைச்சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தேன் என்று பாராட்டுங்கள். இல்லையென்றால் அமைதியாக இருங்கள். எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் குறித்து சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
மாத்தறையின் கெகனதுர வெஹரஹேன வீதியில் உள்ள காணி ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சொகுசு பேருந்துகள் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவமானது இன்று (22.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது தீயில் எரிந்த இரு சொகுசு பேருந்துகளும் அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுபவை என கூறப்படுகிறது.
இரு சொகுசு பேருந்துகளும் தீப்பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீட்டை காலி செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண்ணை தாக்கியதில் கருகலைந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மீது புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்ட இளம் தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சென்னை அண்ணாநகர் வ.உ.சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில் மாதம் 9 ஆயிரம் வாடகைக்கு, விக்னேஷ்-கவிதாவர்ஷினி தம்பதி குடியிருந்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் கவிதாவர்ஷினி கருவுற்று இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. 2வது மாடி வரை படி ஏறக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மாடிப்படிகள் ஏறக்கூடாது என்பதால் வீட்டை காலி செய்வதாக வீட்டின் உரிமையாளர் சுரேஷிடம் விக்னேஷ் கூறியுள்ளார்.
அதற்கு மூன்று மாதம் வாடகையை பிடித்து கொள்வதுடன் சுண்ணாம்பு அடிக்க ரூ.8,000 போக, நீங்கள் தான் ரூ.4000 தர வேண்டும் என்று சுரேஷ் கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், முன் பணமாக 40 ஆயிரம் ஆயிரம் கொடுத்துள்ளேன். எதற்காக 3 மாதம் வாடகை பிடித்தம் செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அட்வான்ஸ் பணம் தரமுடியாது, மீதம் 4 ஆயிரம் தந்துவிட்டு வீட்டை காலிசெய்யும்படி சுரேஷ் மிரட்டியுள்ளார். தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது விக்னேஷை தாக்கும்போது குறுக்கே வந்த அவரது மனைவி கவிதாவர்ஷினியை கர்ப்பிணி என்று பாராமல் தள்ளிவிட்டார். இதனால், அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மீது கவிதா விழுந்ததில், வயிற்றில் அடிபட்டு வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
இதனை பார்த்து பதறிபோன விக்னேஷ் உடனே மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் கருக்கலைந்து விட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதி, இது குறித்து டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர் வெங்கடேசன் இருவரும் வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் புகாரை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட தம்பதியை வற்புறுத்தி உள்ளனர்.
மேலும் வீட்டு உரிமையாளர் கொடுக்கும் புகாரில் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் போலீஸார் வீட்டு உரிமையாளர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட தம்பதி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய உதவி ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானதில் எரிபொருள் வீதி முழுவதும் ஓடியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்து.
இதன் காரணமாக வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது .விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.
விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. மேலும் விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வழங்கப்பட்ட தான நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் வருகைத்தந்துள்ளார்.
எனினும் சைக்கிள் டயரின் காற்று வெளியேறியதனால் அவர் அக்குரஸ்ஸ நகரை நோக்கி மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றுள்ளார். இதன் போது உஷ்ணம் மற்றும் சோர்வு காரணமாக சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் 72 வயதான வர்த்தகர் மற்றும் நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வர்த்தகரே இந்த நிலைக்குள்ளாகியுள்ளார்.
அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்கு 1990 ஆம்புலன்ஸ் வந்த போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால், பிரேத பரிசோதனை செய்வதற்காக, சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மாத்தறை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர், இதயத்தின் உயிரணுக்கள் குறைந்தமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலைக்கு முகங்கொடுக்கும் நோயாளர்கள் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதன் மூலம் இவ்வாறான திடீர் மரணங்களை குறைக்க முடியும் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டவராவார். அவரிடம் இருந்த ரி56 துப்பாக்கி ரவகைகள் 13 உடன் 1005 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரனைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.