கனடாவில் மற்றுமொரு துயரம் : தீ விபத்தில் கருகிய குடும்பம் பரிதாபமாக பலி!!

கனடாவில் இலங்கையர் அறுவர் சுட்டுக் கொல்லப்படடு இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதற்கு முன்னரேயே மற்றுமொரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 7ம் திகதி நடந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், ராஜீவ் வாரிகோ(51), அவரது மனைவி ஷில்பா கோத்தா(47) மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் ராஜீவ் ஒன்டோரியோ அரசாங்கத்தின் சுகாதார துறையில் பணிபுரிந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆறு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் இந்த துயாரை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக் கொண்ட ஹலாம் பாத்திமா சனா (06) விருத்தோடு முஸ்லிம் கல்லூரியில் இந்த வருடம் முதலாம் தரத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமி. இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் கடந்த வருடம் திருமணம் செய்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 23 வயது தனுசியா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ச டலம் உடற்கூற்று சோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்னுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பேரூந்தில் சிக்குண்டு ஒருவர் பலி : சாரதி கைது!!

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்டவரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் இன்று (18.03.2024) காலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து குறித்த பேரூந்து தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் பேரூந்தில் ஏறுவதற்காக வீதியின் மறுபக்கத்திலிருந்து பேரூந்தின் முன்பக்கமாக வந்த முதியவரொருவர் பேரூந்தில் ஏற முற்பட்ட சமயத்தில் பேரூந்தினை சாரதி செலுத்தியமையினால் பேரூந்தில் சிக்குண்டு முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பேரூந்தின் சாரதியினையும் கைது செய்தனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டமையுடன் பேரூந்தினை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் எடுத்துச்சென்றனர். இவ் விபத்தில் பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடயை சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்தவராவர்.

 

வவுனியாவில் புகையிரதம் மோதி ஒருவர் மரணம்!!

வவுனியாவில் புகையிரதம் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி நேற்று (17.03) மாலை சென்ற கடுகதிப் புகையிரதம் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த போது புகையிரதக் கடவைக்குள் நுழைந்த ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜெயக்கொடி ஆராச்சி ராஜரட்ண என்பவரே மரணமடைந்தவராவார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் இளம் பெண்ணுக்கு எமனாக மாறிய நீர் இறைக்கும் இயந்திரம்!!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (18.03) தெரிவித்தனர்.

வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று (17.03) மாலை கிணற்று மோட்டரை இயக்க முயற்சித்த போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தொடர்ந்து மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெர்வித்துள்ளனர்.

சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் பேரனுக்காக குட்டி ஆட்டோ செய்த தாத்தா : குவியும் பாராட்டுக்கள்!!

தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார் என்பவர் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார்.

இவர் 34 வருடங்களாக முச்சக்கரவண்டி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

34 வருட அனுபவத்தை பயன்படுத்தி பேரனின் முதலாவது பிறந்ததினத்திற்கு பரிசாக இந்த முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளதாகவும் பொன்னையா உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது 3 பிள்ளைகளும் தன்னுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பேரனின் பெயரையும் பிறந்த திகதியையும் வைத்து இலக்கத்தகடினை உருவாக்கியுள்ளதாகவும் தான் எதிர்ப்பாராமல் தயாரித்த இந்த முச்சக்கரவண்டிக்கு தற்போது வெளிநாடுகளிலும் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முச்சக்கரவண்டி தற்போது சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் பேரனுக்காக தாத்தா எடுத்த முயற்சிக்கு பல்லரும் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம் கணவரே கொலை செய்தது அம்பலம்!!

ஆஸ்திரேலியாவில், ஹைதராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரின் விசாரணையில், கணவரே இளம்பெண்ணைக் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது.

மனைவியைக் கொலைச் செய்து விட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து தன்னுடைய மாமியாரிடம் குழந்தையை ஒப்படைக்க வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் கணவர். ஆஸ்திரேலியாவில், சைதன்யா தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் பக்லி நகரில் சாலையின் ஓரத்தில் சக்கர வண்டி ஒன்றில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலைச்செய்யப்பட்ட பெண் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்றும், 36 வயதான சைதன்யா என்பதும் தெரிய வந்தது.

இந்த செய்தி பரபரப்பான நிலையில், ஹைதராபாத்தில், இறந்த சைதன்யாவின் தொகுதி எம்எல்ஏ பண்டாரி லக்ஷ்மா ரெட்டி, அவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். சைதன்யாவின் அஸ்தியை ஹைதராபாத்துக்குத் திருப்பி அனுப்பக் கோரி உடனடியாக வெளியுறவு அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், சைதன்யாவின் கணவர் ஆஸ்திரேலியாவில் இருந்து ஹைதராபாத் பறந்து வந்து குழந்தையை சைத்தன்யாவின் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

தங்கள் மகள் சைதன்யாவைக் கொலைச் செய்ததை மருமகன் ஒப்புக்கொண்டதாக பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்தனர். தங்களது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு கதறுகின்றனர் சைதன்யாவின் பெற்றோர்.

ஒரே கல்லூரியில் 3 மாதங்களில் 25 பேர் தற்கொலை… சிக்கிய கடிதம்… குதித்து உயிர்விட்ட மாணவி!!

ஒரே கல்லூரியைச் சேர்ந்த 25 பேர், கடந்த 3 மாதங்களில் தற்கொலைச் செய்து கொண்டு உயிர்விட்ட பரிதாபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளின் தொடர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம் காரணமா என்கிற ரீதியிலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹிம்பரம் ஷிவானி ஜூனியர் கல்லூரியில் படிக்கும் மாணவி சாகித்யா, கல்லூரி வளாகத்தில் மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவி சாகித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி தனது தோழி ஒருவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த கடிதத்தில், “உன்னிடம் சொல்லாமல் போனதற்கு என்னை மன்னித்துவிடு. நீ தான் என் உயிர் தோழி. கடந்த 3 மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை.

என் மூளை ஒட்டுமொத்தமாக இறந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் எல்லாம். உன்னுடன் நட்பாக பழகிய யாரும் உன்னை விட்டு பிரிந்து செல்ல நினைக்க மாட்டார்கள் என உருக்கமாக தனது தோழி குறித்து கடிதத்தில் எழுதி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி சாகித்யா உட்பட கடந்த 3 மாதங்களில் மட்டும் அந்த கல்லூரியில் 25 பேர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. போலீசார் இது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளராக யாழ் மாதுலன்!!

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக இணைந்துகொண்டுள்ளார்.

இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் மாதுலன் இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 117ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் சார்பாக பந்துவீசிய மாதுலன், எதிரணி வீரர் தகுதாஸ் அபிலாஷை இரண்டாவது இன்னிங்ஸில் யோக்கர் பந்தின் மூலம் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார்.

அவரது பந்துவீச்சுப் பாணி லசித் மாலிங்கவின் பந்துவீச்சை ஒத்ததாக இருந்ததுடன் மாதுலன் வீசிய யோக்கர் பந்து சமூக ஊடகங்களில் பரவியது. இதனை அடுத்து இளம் வீரர் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை பார்க்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். தோனி விரும்பியதாக செய்தி வெளியாகியது.

இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களால் குகதாஸ் மாதுலன் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் இருக்கும் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுநர் குழாம் அவதானித்து வருவதடன் அவருக்கு தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருவதாக அறியக் கிடைக்கிறது.

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சு இலங்கை பயிற்றுநர்களினதோ தெரிவாளர்களினதோ கண்களில் படாமல் போன நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். தோனி கண்ணில் பட்டுள்ளது..

கடும் வெப்பம்.. மக்களே அவதானம்.. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய கிழக்கு, வடமேற்கு, வடமத்திய, மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று(15.03.2024)சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும்.

இந்த வெப்பமான காலப்பகுதியில் குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் TREKKING சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

Trekking சென்ற இளம்பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் வேமுரு உஜ்வாலா (23). மருத்துவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த மார்ச் 2-ம் தேதி இவர், ஆஸ்திரேலியாவில் உள்ள லாமிங்டன் தேசிய பூங்காவில் உள்ள யான்பாகூச்சி நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அனைவரும் ஆங்காங்கே இருந்து போட்டோ எடுத்துக்கொள்ளவே, இவரும் தான் கொண்டுபோன Tripod-ஐ பயன்படுத்தி போட்டோ எடுத்துள்ளார். அந்த சமயத்தில் அந்த Tripod-ஐ சுமார் 20 மீட்டர் ஆழமுள்ள விழுந்துள்ளது. இதனை கண்ட அந்த இளம்பெண், தாமாகவே எந்த உதவியும் இன்றி எடுக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் கால் இடறவே, சட்டென்று சரிந்து பள்ளத்தில் விழுந்துள்ளார்.

முதல் 10 மீட்டரில் சிக்கிய அவர், சில நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் நிரம்பிய மீதமுள்ள 10 மீட்டரில் சரிந்து மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து இவரது நண்பர்கள் தேடி அழையவே, வேமுரு உஜ்வாலா பள்ளத்தில் விழுந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உஜ்வாலாவின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த உஜ்வாலா, மருத்துவ படிப்பு முடித்து தற்போது அங்கிருக்கும் பெண்கள் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகிறார். இவரது குடும்பமும் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி போட்டும் இளம்பெண் மரணம் : கதறும் பெற்றோர்!!

தெருநாய் ஒன்று கடித்ததில், உடனே மருத்துவமனைக்கு சென்று முறையாக தடுப்பூசிகள் அனைத்தையும் போட்ட நிலையிலும் 21 வயதேயான சிருஷ்டி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் சிருஷ்டி (21). இவர் பவுசிங்ஜி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, செல்போனில் வந்த அழைப்புக்கு பதிலளிக்க சாலையில் நின்றிருந்த போது, ​​தெருநாய் ஒன்று அவரது காலில் கடித்துள்ளது.

நாய் கடித்த பின்பு, உ டனடியாக ஸ்ருஷ்டி மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பு மருந்தின் ஐந்து டோஸ்களையும் எடுத்துக் கொண்டார். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, ஸ்ருஷ்டிக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டது.

அவரது இரண்டு கால்களும் வலிமையை இழந்த நிலையில், மீண்டும் வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பல சோதனைகள் நடத்தப்பட்ட பின்பும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

பரிசோதனை அறிக்கையில் அவருக்கு ரேபிஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஷிண்டே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மறுநாள் அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சிருஷ்டி ஷிண்டேவின் மரணம், உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பும், அவருக்கு எப்படி ரேபிஸ் வந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ரேபிஸ் தடுப்பூசி தேவையான வெப்பநிலையில் வைக்கப்படவில்லையா என்று அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த தம்பி.. ஆத்திரத்தில் பெண்ணை கொலை செய்த அக்கா!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், நயம்புத்தூர் பகுதியில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி காளியம்மாள். தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஜெயபால் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனியாக வசித்து வந்த காளியம்மாள், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனை (வயது 28) சந்தித்தார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பணக்காரர்.

ராமச்சந்திரனுக்கும் காளியம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது, இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கினார்கள். காளியம்மாளுக்கு இது இரண்டாவது திருமணம்.

ராமச்சந்திரனும் காளியம்மாளை விட இளையவர், முதல் திருமணம். இதனால் இந்த திருமணத்திற்கு ராமச்சந்திரனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 29ம் தேதி கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காளியம்மாள் சடலம் வீட்டின் பின்புறம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கொலையை உறுதி செய்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, ​​சம்பவத்தன்று,

காளியம்மாள் வீடு அமைந்துள்ள பகுதியில், கீழ விளாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, ராமச்சந்திராவின் தந்தை கோவையில் பெரிய அளவில் இரும்புக் கடை நடத்தி வருகிறார். அவருக்கும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ராமச்சந்திரனுக்கு விஜயலட்சுமி என்ற சகோதரியும் இருந்தார்.

28 வயதான தனது தம்பி தன்னை விட 10 வயது மூத்த காளியம்மாளை திருமணம் செய்து கொண்டு முதல் கணவனுக்கு பிறந்த குழந்தைகளை கவனித்துக் கொண்டது விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. காளியம்மாளுக்கும் சொத்து போய்விடுமோ என்று ஆவேசமாக இருந்துள்ளார்.

இந்த வேதனையும், ஆத்திரமும் ஒரு கட்டத்தில் காளியம்மாளைக் கொல்லத் திட்டமிட்டது. இதையடுத்து, அவருக்கு அறிமுகமான ஜெயபால், அவரது தோழி கவிதா, நண்பர் விவேக், காலச்செல்வன் ஆகியோருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி அவரைக் கொன்றனர்.

கொலைக்கான முன்பணமாக 70 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு, ஜெயபால் காளியம்மாளின் வீட்டிற்கு நோட்டரி மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளியம்மாள் நாய்கள் மீது பிரியம் கொண்டதால், பல நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

இதையடுத்து, கால்நடை மருத்துவர் வேடமணிந்த ஜெயபால், நாய்களுக்கு ஊசி போட வந்ததாக கூறினார். காளியம்மாள் வளர்ப்பு நாய்களை ஊசி போடுவதற்கு தயார் செய்தபோது, ​​ஜெயபால் காளியம்மாளை கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

மேற்கண்ட சம்பவத்தை வாக்குமூலமாக பதிவு செய்த அதிகாரிகள், ஜெயபால் கொடுத்த தகவலின் பேரில் விஜயலட்சுமி, கவிதா, விவேக், கலையரசன் ஆகியோரையும் கைது செய்தனர்

மே மாதம் வரையில் நீடிக்கவுள்ள வெப்பநிலையுடன் கூடிய வானிலை!!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்பத்துடனான வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் மே மாதம் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் குறைதல், வளிமண்டலத்தில் நீர் ஆவியாதல் அதிகரிப்பு போன்ற ஏதுக்களினால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய மேல் மாகாணம், வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலனறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலான வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

கனடா ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது.

இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவரே ஒருவரே கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இவர் நேற்று வியாழக்கிழமை (14) விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. மேலும் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.