கனடாவில் இந்திய பெண் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் கணவருடன் வாழ்ந்துவந்த கனடாவில் கேரளப் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண் டோனா சாஜா என்ற 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட இருவரும் எட்டு வருடங்களாக கனடாவில் கணக்காளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம், அவர்கள் வாழ்ந்துவந்த வீடு பூட்டிக் கிடப்பதை கண்டு அயலவர்கள் பொலிஸாாருக்கு தகவலளித்துள்ளனர். இதனையடுத்து, வீட்டுக்குள் நுழைந்த பொலிஸாார் டோனா இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த பெண்ணின் கணவரை காணவில்லை எனவும், ஆகவே, அவரைத் தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மயிலாடுதுறையில் காதலனிடம் சண்டையிட்டுக்கொண்டு காதலி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் 24 வயதான மகன் ஆகாஷ்.
இவர், பூம்புகார் அருகே உள்ள மேலையூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நாகப்பன் என்பவரின் 20 வயதான மகள் சிந்துஜா.
இவர், மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக மாணவி சிந்துஜா சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் நேற்று பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆகாஷ் பழகி வரும் வேறு பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது.
அதனை அடுத்து மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்த சொன்ன சிந்துஜா, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தனது கண் முன்பு காதலி தீக்குளித்ததால் அதிர்ச்சி அடைந்த காதலன் ஆகாஷ் பதறித்துடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றார்.
அப்போது ஆகாஷ் மீதும் தீப்பற்றியது. இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்து கீழே சரிந்துள்ளனர். இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆகாஷ் 60 சதவீத தீ காயங்களும், சிந்துஜா 40 சதவீதம் தீ காயங்களுடன் இருந்த நிலையில் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருவரிடமும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக மயிலாடுதுறையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி திடீரென தீக்குளித்ததும், அவரை காப்பாற்ற முயன்றபோது காதலனும் தீக்காயம் அடைந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளைஞரிடம் நூதன முறையில் பணத்தை பெற்று ஏமாற்றிய பெண் உள்பட மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப நாட்களாகவே வடமாநில கும்பல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திட்டம் போட்டு சதித்திட்டம் தீட்டி கொலை, கொள்ளை மற்றும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதும் பெரும் சவாலாக இருந்து வரும் வருகிறது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண் (வயது 26). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகின்றார். கடந்த சில நாட்களாக அருண் ஆன்லைனில் வேலை தேடி வந்த நிலையில்.கடந்த மாதம் 31ம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது.
அதில் வேலை வாய்ப்பு குறித்து பதிவிட்டிருந்ததால் உடனே அருண் அந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார். அப்போது அந்த லிங்க்கில் தங்களுக்கு வேலை வேண்டும் என்றால் தாங்கள் சொல்லும் டாஸ்க்கை நிறைவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டி இருந்தது.
இதனை நம்பிய அருண் டாஸ்க்கை செய்ய தொடங்கிய போது ஒவ்வொரு டாஸ்க்கும் ஒரு தொகையை செலுத்த வேண்டும் அப்போது தான் டாஸ்க்கின் இறுதி கட்டத்திற்கு செல்ல முடியும் என குறிப்பிட்டிருந்ததால் அருண் லிங்கில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் சிறுக சிறுக 5 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார்.
பின்னர் அதில் குறிப்பிட்டது போல் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண் இது குறித்து கடந்த 31ஆம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அருண் செலுத்திய வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் செல்போன் எண்ணை வைத்து அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடித்த தனிப்படை போலீஸார் அங்கு சென்று பெண் உட்பட மூன்று பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22) விஜய் (24), ஹைதராபாத்தை சேர்ந்த சரஸ்வதி (23) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இந்த மோசடியில் வட மாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாக செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து போலீஸார் மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 15 போலி ஏடிஎம் கார்டு, 3 செல்போன் மற்றும் 15 வங்கி புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் அரும்பாக்கம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாய்க்கடியால் அவதிப்பட்ட சிறுமி முதலில் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாயின் உரிமையாளர், குழந்தைக்காகும் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டார்.
அதன் அடிப்படையில் இருவரும் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரே சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்தார். சிறுமி மே 6ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போலோ மருத்துவர்கள் இன்று பிற்பகல் 2 மணிநேரம் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்தனர்.
அதன் பின்னர் குழந்தை தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. சிறுமிக்கு ராபீஸ் நோய் தாக்குதல் வராமல் பாதுகாக்கப்பட்ட, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரம் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி பூங்காவில் பணிபுரிபவரின் 5 வயது மகளை நாய் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அச்சிறுமி தனியார் மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஆயிரம் விளக்கு மாதிரி பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிபவர் ரகு .
இவரது மனைவி சோனியா மற்றும் ஐந்து வயது மகள் சுதக்ஷா உடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார். பூங்காவில் சோனியாவும் , மகளும் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பகுதியில் வசித்து வரும் புகழேந்தி தான் வளர்க்கும் இரண்டு நாய்களை அழைத்து வந்துள்ளார்.
அவருடைய 2 நாய்களும் சிறுமி சுதக்ஷாவை சுத்துப்போட்டு மாறி மாறி கடிக்கத் தொடங்கின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா நாய்களிடமிருந்து தனது மகளை காப்பாற்ற நினைத்தபோது அவரையும் நாய் கடித்து குதறிவிட்டது.
இதனையடுத்து சிறுமியை போராடி மீட்டு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாயின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர் .
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை வீடு புகுந்து வாலிபர் கழுத்தைத் துண்டித்துப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவிற்குட்பட்ட சோம்வார்பேட்டையில் உள்ள சுர்லாபி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, முத்தாக்கியின் ஒரே மகள் மீனா(14).
இவர் சூர்லப்பிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மட்டும் படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மீனா தேர்ச்சி பெற்றிருந்தார். அவருக்குப் பள்ளியில் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த மகிழ்ச்சியில் வீட்டில் இருந்த மீனாவை ஓம்காரப்பா(30) என்ற வாலிபர் வீடு புகுந்து இழுத்துச் சென்றுள்ளார். பெற்றோர் முன்னிலையில் அவர் மீனாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தலையைத் துண்டித்து வீசியுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குடகு கூடுதல் எஸ்.பி- சுந்தர்ராஜ் விரைந்து சென்று கொலை குறித்து விசாரணை நடத்தினர். இதன்பின் மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சோம்வார்பேட்டை போலீஸார் அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும், தடய அறிவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
மேலும் எதற்காக இக்கொலை நடைபெற்றது என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மைனர் பெண்ணான மீனாவிற்கும், ஓம்காரப்பாவிற்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் மீனாவின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு வயது 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரிய வந்தது.
இதனால், 18 வயது நிரம்பிய பிறகே மீனாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி செய்வதாக மீனாவின் பெற்றோர் உறுதியளித்தனர். இதனால் சமூக நலத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
தனது திருமண நிச்சயதார்த்தம் நின்று போன ஆத்திரத்தில் இருந்த ஓம்காரப்பா, சில மணி நேரங்களிலேயே மீனாவை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாகியுள்ள அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மகிழ்ச்சியில் இருந்த மாணவியை தலையை துண்டித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளியாப்பிட்டியில் கொலை செய்யப்பட்டு காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னனியில் திடுக்குடும் தகவல்கள் வெ:ளியாகியுள்ளன. காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞன் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் காதலியின் தந்தை கூற்றுப்படி, இந்த கொலை மகளுக்காக தந்தையின் பாசத்தினால் நடந்ததாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தை வெளியிட்ட தகவல்படி,
தனது மகளுக்கு 17 வயது எனவும் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், உயிரிழந்த 31 வயதுடைய இளைஞன் அவளை கர்ப்பமாக்கினார் என தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முதலில், அவரைக் கொல்ல நினைக்கவில்லை , தன் மகளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை என்பதால், தன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கில், இது குறித்து ஆலோசிக்க அழைத்து வந்தபோது, தொடர்ந்து மகளை ஏற்க மறுத்ததால், தகராறு ஏற்பட்டு கொலையாக மாறியது என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
யுவதியின் தந்தை நேற்று(10) நீதிமன்றத்தில் ஜாமீன் இழந்து மீண்டும் ரிமாண்ட் சிறைக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்கள் மகள் 52 முறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலும், ஊடகங்கள் ஏன் இதைப் பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பிரச்சனையால் தனது வீடு எரிக்கப்பட்டுள்ளதாகவும், தனது மகளின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் , ஊடகங்களில் தம்மைப் பற்றி பேசுவது மட்டுமன்றி தமது பிரச்சினைகளையும் வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிவிக்கபப்டுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் மாமாவிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞன் கொலைக்குக் காரணமான உண்மை குறித்து முன்னதாகவே தெரியவந்தது.
குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த இளைஞன் இறக்கும் போது 31 வயதுடையவர் என்பதுடன் இளைஞன் முன்னரே திருமணமானவர் எனவும், தற்போது அந்த திருமணத்தை கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே சமயம் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் , அந்தப் பெண்ணும் கருவுற்ற பிறகு கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.
இதேவேளை, கொல்லப்பட்ட சுசித் ஜயவன்சவுடன் காதல் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 17 வயதுடைய சிறுமியும் , இரண்டு சிறிய சகோதரர்கள் குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர் .
வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக நேற்று (10.05.2024) மதியம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
நேற்றைய தினம்குறித்த பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெற்றது. இந்நிலையில் அங்கு பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாடத்தின் ஒருபகுதி நிறைவுற்றதுடன் நீண்ட நேரம் இடைவேளை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பரீட்சை மண்டபத்திற்கு வெளியில் ஒன்றுகூடிய இரு பாடசாலைகளை சேர்ந்த ஆண் மாணவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர்.
இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பம் நீடித்ததுடன் போக்குவரத்தும் தடைப்பட்டது. இதனையடுத்து வீதியால் செல்பவர்கள் அங்கு ஒன்று கூடியமையால் குறித்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நேற்றையதினம் (08.05.2024) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் தந்தை வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்த மகள் அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கு மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. மேலும் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார்.
2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும் இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
நோர்வேயில் மர்மமான முறையில் ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான அரசரத்தினம் துஷ்யந்தன் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி ஒஸ்லோவை அண்மித்த பகுதியான Myrdammen பகுதியிலுள்ள வீதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியங்கள் உள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் விசாரணைக் குழுவின் தலைவர் கெட்டில் லண்ட் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றியதினம் உயிரிழந்த யுவதி, காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் கிராமத்தில் வசித்து வந்த யுவதியே உயிரிழந்தார். உயிரிழந்த யுவதி , அயல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் சில காலமாக உறவுமுறையில் இருந்துள்ளார்.
எனினும் அந்த வாலிபர் திடீரென மனம் மாறி வேறு ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கியதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த பெண், இரவில் தனது வீட்டில் தனது உடலில் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகின்றது.
குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, அவர் வீட்டிற்குள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து , கிராம அதிகாரியிடம் தகவல் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழுத்தும் வெய்யிலால் கதவை திறந்துவைத்து தூங்கிய இளம் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். அவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட வெளியே சென்று விடுவதால் இளம்பெண் வீட்டில் மகள்களுடன் இரவில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (07) இரவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது போதை ஆசாமி ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி கூச்சலிட்டால் பெண் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று அந்த நபர் மிரட்டியுள்ளார்.
பின்னர் கத்திமுனையில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஒட முயன்றபோது பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போதை ஆசாமியை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் போதையில் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசியாவில் உயிரிழந்த மஸ்கெலியாவை சேர்ந்த தமிழ் இளைஞனின் சடலம் இன்று இரவு 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மலேசியா கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் (Boiler) குறித்த இளைஞன் மீது விழுந்ததில் படுகாயமடைந்து கோலாலம்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக விராசணைகளை மேற்கொண்டிருந்த அந்நாட்டு பொலிஸார் இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இளைனின் சடலம் இன்று இரவு 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.
இந்நிலையில், இளைஞனின் தந்தையிடம் ஒப்படைக்கப்படவுள்ள சடலம் அவரின் சொந்த ஊரான மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிபிட்டிய ஆராவல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆராவல கொஸ்கஹஹேன பகுதியைச் சேர்ந்த கலன மிஹிரங்க என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தாய் உயிரிழந்ததையடுத்து கலானா தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தாயின் உயிரிழப்பை அடுத்து தனது மகன்(கலன) மனா அழுத்தத்தில் காணப்பட்டதாக அவரின் தந்தை கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 5ஆம் திகதி இரவு, கலனின் தந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதன்படி கலனவின் சகோதரி தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க பக்கத்துவீட்டு பெண்ணுடன் சென்றிருந்த நிலையில் கலன மாத்திரம் வீட்டில் தனித்து இருந்துள்ளார்.
இந்நிலையில் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சகோதரி வீடு திரும்பிய போது கலன வீட்டில் இல்லாத காரணத்தினால் உறவினர்களும் அயலவர்களும் இணைந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கமைய பொலிஸார் சிறுவனை தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இவ்வருடம் ஜீலை மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பானது பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.
ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் கடந்த புதன்கிழமை கிரீஸில் இருந்து பிரான்ஸை(France) வந்தடைந்துள்ளது.
சர்வதேச ரீதியில் 10000 பேருக்கு ஒலிம்பிக் தீப்பந்தத்தினை ஏந்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் 2023ஆம் ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா பெற்றிருந்தார்.
இந்நிலையில் பரிஸ் ஒலிம்பிக் சுடரை(Olympic torch) இம்முறை அவர் ஏந்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.