மர்மமான முறையில் காணாமல் போயுள்ள 15 வயதுச் சிறுவன் : பொலிஸார் விசாரணை!!

பன்னிபிட்டிய ஆராவல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆராவல கொஸ்கஹஹேன பகுதியைச் சேர்ந்த கலன மிஹிரங்க என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தாய் உயிரிழந்ததையடுத்து கலானா தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தாயின் உயிரிழப்பை அடுத்து தனது மகன்(கலன) மனா அழுத்தத்தில் காணப்பட்டதாக அவரின் தந்தை கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 5ஆம் திகதி இரவு, கலனின் தந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதன்படி கலனவின் சகோதரி தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க பக்கத்துவீட்டு பெண்ணுடன் சென்றிருந்த நிலையில் கலன மாத்திரம் வீட்டில் தனித்து இருந்துள்ளார்.

இந்நிலையில் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சகோதரி வீடு திரும்பிய போது கலன வீட்டில் இல்லாத காரணத்தினால் உறவினர்களும் அயலவர்களும் இணைந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கமைய பொலிஸார் சிறுவனை தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழருக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம்!!

சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இவ்வருடம் ஜீலை மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பானது பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் கடந்த புதன்கிழமை கிரீஸில் இருந்து பிரான்ஸை(France) வந்தடைந்துள்ளது.

சர்வதேச ரீதியில் 10000 பேருக்கு ஒலிம்பிக் தீப்பந்தத்தினை ஏந்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் 2023ஆம் ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா பெற்றிருந்தார்.

இந்நிலையில் பரிஸ் ஒலிம்பிக் சுடரை(Olympic torch) இம்முறை அவர் ஏந்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடு வீதியில் கணவனும் மனைவியும் பலியான சோகம்!!

தேனி மாவட்டம் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் நல்லதம்பி (37). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி ரம்யா (30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது.

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் அவர்களது உறவினர்கள் தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு நல்லதம்பியும், அவரது மனைவியும் கம்பத்தில் இருந்து கவுமாரியம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர். அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் நேற்று அதிகாலையில் நல்லதம்பியும், அவரது மனைவியும் ஆட்டோவில் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை நல்லதம்பி ஓட்டினார்.

நேற்று காலை 6 மணியளவில் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி தனியார் பள்ளி அருகே வந்தபோது கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதின. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ரம்யா படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் போலீசார், ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நல்லதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரம்யாவை அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் முருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய முல்லைத்தீவுப் பெண்கள்.. வெளியான பரபரப்புக் காரணம்!!

பிரித்தானியாவுக்கு 17 வயதுடைய சிறுவனை போலி ஆவணங்கள் மூலம் அழைத்து செல்ல முயற்சித்த இரு பெண்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (26-04-2024) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த சிறுவனுடன் பிரித்தானியாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவர்கள் கருமபீடத்துக்கு வந்தபோது, ​​அவர்களின் ஆவணங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட தொழில்நுட்ப சோதனையின் போது அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் குறித்த அதிகாரிகள் சிறுவனை தனியே அழைத்துச் சென்று இவ்விடயம் தொடர்பில் விசாரித்த போது,

இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சிறுவன் கூறியுள்ளதுடன், அவரின் உண்மையான தாய் அப்போதும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் காத்திருப்பதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள், அவரது தாயாரை தேடி கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியினால் தனது குடும்பம் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனால் சிறுவனின் நலன் கருதி இவ்வாறு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் கூறியுள்ளார்.

குறித்த பெண்கள் இருவரும் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்த விசாரணைகளின் போது, பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனின் தகவல்களை வைத்து வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை தயார் செய்து, இலங்கை ஆண் பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு அழைத்து சென்று ஆள் கடத்தல் தொழில் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை அழிவடையும் அபாயத்தில் இலங்கை கடற்பரப்பில் உள்ள பவளப்பாறைகள்!!

கடல் நீரின் வெப்பநிலை இன்னும் ஒரு மாதத்திற்கு நீடித்தால், இலங்கையை சுற்றியுள்ள கடல் பரப்பில் காணப்படும் பவளப்பாறைகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அதிகரித்துவரும் வெப்பமான காலநிலையின் காரணமாக கடல் நீரின் வெப்பநிலை சராசரி அளவை விட அதிகரித்து காணப்படுகின்றது.

இவ்வாறு கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதனால் இலட்சத்தீவு கடல் (Laccadive Sea) மற்றும் மன்னார் வளைகுடாவில் கடுமையான பவளப்பாறை வெளுப்பு ஏற்படும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகமையின் (NARA) புதிய பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே. அருளானந்தன் இந்நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு குறிப்பிட்டதாவது,

“வெப்பத்தின் அளவு 31 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இரண்டு வாரங்களாக நீடித்து காணப்படுகின்றது. கடல் நீரில் உள்ள பவளப்பாறைகளின் நிலை குறித்து நாரா எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் வெளுப்பு ஏற்படுவதை நிராகரிக்க முடியாது.

“வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியஸுக்கு இடையில் மாறினால், அது பவளப்பாறைகளின் ஆரோக்கியத்திற்கு சாதகமாக காணப்படும்.

இருப்பினும், தற்போதைய அதிகரித்த வெப்பநிலை இன்னும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடித்தால், பவளப்பாறைகள் அழிவடைய கூடும். கடல் வெப்ப அலைகள் அரிதான தீவிர வானிலை நிகழ்வுகளாகும், அவை அசாதாரணமான அதிக கடல் வெப்பநிலையின் நீண்ட காலங்களை உள்ளடக்கியது.

நீரின் வெப்பநிலை சாதாரண அளவை விட உயரும் போது பவளப்பாறைகளில் வெளுப்பு ஏற்படுகிறது. இத்தகைய நிலைமைகளின் கீழ், பவளப்பாறைகள் அவற்றின் திசுக்களில் வாழும் நுண்ணிய பாசிகளை வெளியேற்றுகின்றன.

இதன்போது வெளியயேற்றப்படும் நுண்ணிய பாசிகள் பவளப்பாறைகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் பல வகையான அல்காக்கள் பவளப்பாறைகளுக்குள் நன்மை பயக்குவனவாக காணப்படுகின்றது.

இது பவளப்பாறைகளின் நிறம், ஊட்டச்சத்து மற்றும் அதன் சுண்ணாம்புக் கூட்டை உருவாக்க உதவும் நீர் கலவையில் சிறிய மாற்றங்களை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

கபடி போட்டியில் விளையாட நேபாளம் பயணமாகும் இலங்கை வீராங்கனை பிரியவர்ணா!!

மாலை சந்தை மைக்கல் வியைாட்டுக்கழக வீராங்கனை பிரியவர்ணா இலங்கை அணிக்காக நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாட பயணமாகவுள்ளார்.

கரவெட்டி பிரதேசத்தில் உள்ள மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் வீராங்கனையும், தேசிய கபடி அணி தெரிவில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் இலங்கை கடற்படை அணி வீராங்கனையுமான இ.பிரியவர்ணா நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாட்டுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறு வயது முதல் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்திற்காக மாவட்டம் மாகாணம் தேசிய ரீதியான போட்டிகளில் பல திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பேஷன் நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெண் அணிந்த ஆடை!!

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் மெட்காலா எனும் பேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர் – நடிகைகள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து பலரும் பங்கேற்ற நிலையில், அவர்கள் அணிந்து வந்த ஆடைகள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகினறது.

நிகழ்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வரும் ஐதராபாத்தை சேர்ந்த கோடீஸ்வரரான மேகா கிருஷ்ணாரெட்டியின் மனைவியான சுதா ரெட்டி, ஐவெரி பட்டு கவுன் அணிந்து பங்கேற்றார். அவரது ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சுதா ரெட்டி 180 காரட் வைர நெக்லசை அணிந்திருந்தார். அதில் 25 காரட் இதய வடிவ வைரமும், மேலும் மூன்று 20 காரட் இதய வடிவிலான வைரங்களும் அணிந்திருந்தார்.

இதுதவிர 23 காரட் வைர சாலிடர் மோதிரத்தையும், 20 காரட் வைர சொலிடர் மோதிரத்தையும் அணிந்திருந்தார். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.165 கோடி என கூறப்படுகிறது.

சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.

காலி கோடீஸ்வர பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : 120 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்!!

காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சொத்து எவ்வாறு ஈட்டப்பட்டது குறித்த தகவல்கள் வெளியிடப்படாமை காரணத்தினால், காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெண்ணின் சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட சொத்துக்களின் சந்தைப் பெறுமதி சுமார் 120 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சொத்துக்களில் காலி தடல்ல பிரதேசத்தில் நான்கு மாடி கட்டிடமும் அக்மீமன பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் தேயிலை மற்றும் மிளகு காணியும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.

மேலும் முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் யுவதியின் முடிவால் கதறும் குடும்பம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் மரியதாஸ் கிருபாகினி வயது 26 என்ற இளம் யுவதியை உயிரிழந்தவர் ஆவார் .

நேற்று மாலை தனக்கு தானே தீ மூட்டிய இளம் யுவதி உயிரிழந்துள்ளார். மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு எடுத்து தனக்கு தானே தீ மூட்டி உடலில் தீக்காயங்களுக்கு உள்ளாகி யுவதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனக்கு தானே தீ மூட்டி யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் பணத்திற்காக பெண்களை விற்பனை செய்யும் நிலையம் சுற்றிவளைப்பு!!

கல்கிஸ்ஸ – காசியா மாவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் பெண் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் நிலையமொன்றை குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

ஆயுர்வேத மையம் ஒன்றின் விளம்பரப் பலகைகள் இயங்கி வந்த போதிலும், அந்த இடத்தில் வைத்தியர் எவரும் தங்கவில்லை என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தாங்கள் கொழும்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக வீடுகளுக்கு கூறியதாகவும், இந்த இடத்தில் தங்கி தொழிலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 25 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் பாணந்துறை எல்பிட்டிய, நிட்டம்புவ கடமுலாவ மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இளம் பெண்ணின் மோசமான செயல் : அதிர்ச்சியில் அதிகாரி!!

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தருடன் தகாத உறவு ஒன்றை ஏற்படுத்தி அவரது வீட்டில் உள்ள பொருட்களை திருடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய திருமணமான குறித்த நிர்வாக உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் பின்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இந்த நபரின் வீட்டில் இருந்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் மற்றுமொரு இளைஞருடன் இணைந்து நிர்வாக அதிகாரியின் வீட்டிற்கு ஜன்னல் வழியாக நுழைந்து பொருட்களை திருடியுள்ளார். சம்பவம் தொடர்பில் பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 4 பெரிய கோள்கள்.. விஞ்ஞானிகள் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

தற்போது பூமியை நோக்கி 4 சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது. அப்பல்லோ குழுவின் அனைத்து பகுதிகளும் பூமியின் பாதையில் குறுக்கிடும் சுற்றுப்பாதைகளுக்கு பெயர் பெற்றவை.

இந்தச் செய்தி சில கவலைகளை ஏற்படுத்தும் என்றாலும், ஒவ்வொரு சிறுகோளின் பிரத்தியேகங்களையும் இந்த தொகுப்பில் ஆராய்வோம். அதில் உள்ள அபாயத்தின் அளவை இதிலிருந்து தீர்மானிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் Asteroid 2024 JF உள்ளது. அப்பல்லோ குழுவின் இந்த சிறுகோள், ஒரு சாதாரண 26 அடி அளவை அளவிடுகிறது, மணிக்கு 42,081 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 6 அன்று 21:58 UTC மணிக்கு நிகழும், இது பூமியில் இருந்து 4,75,443 கிலோமீட்டர்களுக்குள் வரும்.

78 அடி உயரத்தில் சற்றுப் பெரிய சிறுகோள் 2024 HE2. மணிக்கு 43,472 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இது மே 6 அன்று 20:16 UTC-க்கு கடந்து செல்லும், ஆனால் பாதுகாப்பான தூரம் 1.2 மில்லியன் கிலோமீட்டர் ஆகும்.

அடுத்து வரவிருக்கும் ஆஸ்டிராய்டு 2024 HL2. 84 அடி அளவு மற்றும் மணிக்கு 48,247 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக நகரும்.

பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 6 அன்று 08:12 UTC-க்கு இருக்கும், இது நமது பூமியில் இருந்து 2.9 மில்லியன் கிலோமீட்டர்களுக்குள் கடந்து செல்லும்.

171 அடி விட்டம் மற்றும் மணிக்கு 90,056 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் அஸ்டெராய்டு 2024 HM2 என்பது கடைசியாக வரும் சிறுகோள்.

அதிர்ஷ்டவசமாக, மே 6 அன்று 14:49 UTC மணிக்கு 6.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அது கடந்து செல்லும் என்று சொல்லப்படுகிறது.

இந்த சிறுகோள்களின் அளவுகள் மற்றும் வேகம் அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், அவற்றின் நெருங்கிய அணுகுமுறைகள் இன்னும் பூமியிலிருந்து ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ளன.

அவைகளில் ஒன்று 4,75,443 கிலோமீட்டர் தொலைவில் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது சந்திரனுக்கான தூரத்தை விட அதிகம்.

பூமிக்கு அருகில் உள்ள பொருள்களை நாசா உன்னிப்பாகக் கண்காணிக்கிறது, பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வு மையம் (CNEOS) விழிப்புடன் கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ உலகில் சாதனை படைத்த சுவிஸ் மாணவி!!

மருத்துவ உலகில் முதல் முறையாக மனிதனுக்கு நோயை ஏற்படுத்தும் பற்றீரியாவை கொல்லக்கூடிய வைரஸ் ஒன்றை சுவிட்சர்லாந்தினை (Switzerland) சேர்ந்த மாணவியொருவர் கண்டுபிடித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் மன்சென்ஸ்டீன் (Münchenstein) என்னுமிடத்தைச் சேர்ந்த நோரா ஆர்டிகோ (Nora Artico) என்னும் 19 வயதுடைய பாடசாலை மாணவியே இந்த சாதனையை படைத்துள்ளார்.

பற்றீரியா மூலம் பரவும் நோய்களுக்கான மருந்தாக ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஆன்டிபயாட்டிக் என்பது பற்றீரியா என்னும் நோய்க்கிருமிகளை கொல்வதன் மூலமோ அல்லது அவற்றை அதிகரிக்க விடாமல் தடுப்பதன் மூலமோ, நோய்களைக் குணமாக்கும் ஒருவகை மருந்துகள் ஆகும்.

எனினும், இந்த ஆன்டிபயாட்டிக் எனும் மருந்துகளில் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, நம் உடலுக்குள்ளும் தோலின் மீதும், ஏராளம் நன்மை செய்யும் பற்றீரியாக்கள் உள்ளன.

குறிப்பிட்ட நோய்க்காக ஒருவர் இந்த ஆன்டிபயாட்டிக் மருந்தை உட்கொள்ளும்போது, அந்த மருந்து குறிப்பிட்ட நோயை உண்டாக்கும் பற்றீரியாவைக் கொல்வதுடன், மனித உடலுக்கு நன்மை பயக்கும் பற்றீரியாக்களையும் கொன்றுவிடுகிறது.

எனவே, மனிதர்கள் அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதால், வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகள், காலப்போக்கில், அந்த ஆன்டிபயாட்டிக்கையே எதிர்த்து தாக்குப்பிடித்து வாழும் திறனை வளர்த்துக்கொள்கின்றன. அந்த தாக்குப்பிடிக்கும் திறன் drug-resistant என அழைக்கப்படுகிறது.

இந்த drug-resistant பற்றீரியாவில் ஒன்று, மனிதர்களுக்கு ஏதாவது ஒரு நோயை ஏற்படுத்துமானால், அதற்கு மருந்தே கிடையாது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

காரணம், மருந்து கொடுத்தாலும் அந்த பற்றீரியா அழிவடையாது என்பதுடன் மருந்தை எதிர்த்து தாக்குப்பிடித்து மரணம் ஏற்படும் நிலையை உருவாகும் என கூறப்படுகின்றது. இதற்கான தீர்வாகவே சுவிட்சர்லாந்தினை சேர்ந்த மாணவி புதிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

நுண்ணுயிர்களில் பற்றீரியா, வைரஸ், பூஞ்சை என பலவகை உள்ளன. அவற்றில் பற்றீரியாக்களையே கொல்லக்கூடிய பாக்டீரியோபேஜ் (Bacteriophage) என்னும் ஒரு வகை வைரஸையே அவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த பாக்டீரியோபேஜ் (Bacteriophage) என்னும் வைரஸில் சில குறிப்பிட்ட வைரஸ்களை தேர்ந்தெடுத்து, அதை பற்றீரியா தொற்றுக்கு ஆளான நோயாளிகள் உடலில் செலுத்தும்போது, அந்த பாக்டீரியோபேஜ் (Bacteriophage), அந்த நோய்க்கிருமியைக் கொன்றுவிடும்.

முக்கியமான விடயம் என்னவென்றால், அந்த நோயாளிக்கு சிகிச்சைக்காக ஆன்டிபயாட்டிக்குகளைக் கொடுத்தால், அந்த ஆன்டிபயாட்டிக்குகள், அந்த நோய்க்கிருமியைக் கொல்வதுடன் கூடவே அந்த நோயாளியின் உடலிலுள்ள நல்ல நுண்ணுயிர்களையும் கொன்றுவிடும்.

ஆனால், இந்த பாக்டீரியோபேஜ் (Bacteriophage) வைரஸோ, நல்ல நுண்ணுயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதுடன் கெட்ட கிருமிகளை மட்டுமே கொல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தகைய ஐந்து பாக்டீரியோபேஜ் (Bacteriophage) வைரஸ்களைக் கண்டுபிடித்த சுவிட்சர்லாந்தினை சேர்ந்த மாணவிக்கு, Swiss Youth Research மற்றும் European Union Contest for Young Scientists என்னும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கைக்கு 3ம் இடம்!!

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, இலங்கையில் வாழும் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் உறங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 60 நாடுகளில் வாழும் மக்களின் சராசரி உறக்கத்தின் அளவை அடிப்படையாக கொண்டு, உலகில் எந்த நாட்டில் மக்கள் ஒரு இரவில் அதிக அளவு உறங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒவ்வொரு இரவும் சராசரியாக எந்த நகரத்தில் மக்கள் அதிகம் உறங்குகிறார்கள் என்பதை கண்டறிய ஐக்கிய இராச்சியத்தின் 40 நகரங்களில் இந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பல்கேரியா (Bulgaria), அங்கோலா (Angola) மற்றும் இலங்கை (Sri lanka) ஆகிய நாடுகள் உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளது.

அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் (UK) நகரங்களின் தரவரிசையில் நார்விச் (Norwich) நகரம் முதலாமிடத்தை பெற்றுள்ளது.

கைபேசியால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு திப்பகொன்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகள் 18 வயது லிகிதா. இவர் படிக்காமல் தினமும் செல்போன் பயன்படுத்தி வந்தார். செல்போன் அதிகம் பாக்கதே… என லிகிதாவை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

பெற்றோர் பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இதுகுறித்து பெற்றோர், லிகிதாவை அழைத்து கண்டித்தனர். அப்போது செல்போனை எடுப்பதை தவிர்க்கும்படி புத்தகத்தை எடுத்து படிக்கும்படியும் கூறியுள்ளனர்.

இதனால் லிகிதா மனமுடைந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. வாக்குப்பதிவு எந்திரங்கள் இதனால் பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது லிகிதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக்கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். லிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்து லிகிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்.. தேடும் பணி தீவிரம்!!

தமிழகத்தில் அடுத்தடுத்து நீர் நிலைகளிலும் கடலிலும் குளிக்கும் இளைஞர்களின் உயிரிழப்புகள் அதிர்ச்சியளிக்கிறது. விடுமுறை தினம் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் கடல், ஏரி போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்கின்றனர்.

இதனால் அவ்வப்போதும் விபத்தும் ஏற்படுகிறது. அந்த வகையில், கன்னியாகுமரியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடலோரப் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் கட்டுமரத்தில் சென்று மீன் பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. கட்டுமரத்தில் மீன் பிடிக்கச் சொல்லும் மக்களும் கள்ளக் கடல் நிகழ்வால் மீன்பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை அடுத்த குண்டுக்கல் துறைமுகத்தில் நேற்று மதியம் பாம்பன் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முஹம்மது முஜாஹித் (20) என்ற வாலிபர் திடீரென கடலின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் கடலில் மூழ்கி தலைமறைவானார்.

இதையடுத்து மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன இளைஞரை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலில் நீந்துவது நல்ல அனுபவமாக இருந்தாலும், இந்த நேரத்தில் இதை தவிர்க்குமாறு எதிராக வானிலை ஆய்வு மையமும், கடல்சார் ஆராய்ச்சி மையமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.