கனடாவிலிருந்து அதிகமாக வெளியேறும் புலம்பெயர்ந்தோர் : வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!

கனேடிய குடியுரிமை பெற்றும் கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி 2017ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டில் குடியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் ஒரு கூட்டத்தினர் கனடாவை விட்டு அமெரிக்கா, ஹொங்ஹொங் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் குடியேறியுள்ளார்கள்.

கனடாவுடன் ஒன்றிணைந்து வாழும் அளவுக்கு பொருளாதார வசதி, அதாவது வருவாய், இது நம் நாடு என்னும் ஒரு எண்ணத்தைத் தரும் சூழல், இனவெறுப்பின்மை, வாழ வீடு, படித்த படிப்புக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வேலை என்பதுபோன்ற விடயங்கள் கிடைக்கவில்லை என்பதாலேயே குடியுரிமை பெற்றும் புலம்பெயர்ந்தோர் வேறு நாடுகளுக்கு வெளியேறிவருவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக, குடியிருக்க சரியான வீடுகள் கிடைக்காததாலேயே, கனடாவுக்கு வந்து நான்கு அல்லது ஏழு ஆண்டுகளுக்குள், குடியுரிமை பெற்றும் புலம்பெயர்ந்தோர் பலர் கனடாவிலிருந்து வெளியேறுவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மேலும், அப்படி கனடாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் வாழ்வோர், (இவர்கள் Canadian Expats என அழைக்கப்படுகிறார்கள்), இவர்களுக்கு ஒரு புகார் உள்ளது.

அதாவது, தாங்கள் வரி செலுத்தியும், மாகாண தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவ அமைப்பை பயன்படுத்திக்கொள்ள தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர்.

வவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது!!

வவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரு சாரதிகளை நேற்றிரவு (02.05) வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை தடுக்கும் நோக்கில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கில் ஆகிய இரு வாகனங்களின் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் செலுத்திச் சென்ற இரு வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும் : புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்!!

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞரொருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞரின் காதலி மற்றும் குடும்ப உறுப்பினர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பின்னர் காணாமல்போயுள்ள பிரதான சந்தேகநபரின் குடும்பத்தினரை கைது செய்வதற்காக குடும்பத்தினரின் புகைப்படத்தை பொலிஸார் நேற்று (02.05) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

குளியாபிட்டிய, கபலாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சுசிதா ஜயவன்ச என்பவர் கடந்த 10 நாட்களாக காணாமல்போயுள்ள நிலையில், கடைசியாக காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது காதலியின் தந்தை மற்றும் இரண்டு கொத்தனார்களுடன் சேர்ந்து குறித்த இளைஞரை தாக்கியுள்ளமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் குறித்த இளைஞரை பிரதேசத்தில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காதலியின் தந்தை கூறியதாக கைது செய்யப்பட்ட கொத்தனார்கள் இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னர் பிரதான சந்தேகநபரும் அவரது மனைவியும், காணாமல்போன இளைஞனின் காதலியான அவரது மகள் மற்றும் இரண்டு மகன்களும், பிரதான சந்தேகநபரின் சகோதரி மற்றும் அவரது கணவரும் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் பிரதான சந்தேகநபரின் பெற்றோர் மற்றும் மாமனார் குளியாபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

யாழில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறீவரதன் சஞ்சிதன் என்ற வயது 22 வயதுடைய இளைஞனே இன்று அதிகாலை 12.30 மணியளவில், சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் அவரது காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும் அதனையடுத்து 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக இளைஞனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகள் நாளையதினமே நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் பரவும் வைரஸ் : முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை!!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார். மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மனித உடலால் அதிக அளவில் உணரக்கூடிய வெப்பம் நாளை (2024.05.03) காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு.. புதிய விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சற்றுமுன் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக உள்ளது. மேலும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சிலிண்டரின் விலை ரூ.32 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.740 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் சூரியன் : ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இந்த வருடம் வெயில் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் வெயிலின் தாக்கத்தால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் தற்போது கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயல்பான கோடை வெயிலைக் காட்டிலும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில்,

கேரளாவில் திருவனந்தபுரம், பாலக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேல் பதிவாகி உள்ளது.
கடந்த 26ம் தேதி வாக்குப் பதிவின் போது கூட கேரளாவில் பூத் ஏஜென்ட் உட்பட 10 பேர் வெயில் பாதிப்பால் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கடும் வெயில் காரணமாக கேரளத்தில் 3 பேர் இறந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் கட்டிட பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் வெப்பம் காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அதைப் போலவே கோட்டயத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஷமீர் (35) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே நாளில் வெயில் காரணமாக 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவன் வெட்டிக்கொலை : மனைவி தற்கொலை!!

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதி வீடொன்றில நேற்று (02.05.2024) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நபரின் மனைவியான 37 வயது லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அண்மைகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகின்றது.

மனைவியின் சடலம் வவுனியா பொதுவைத்தியசலைக்கு கொண்டுவரப்பட்டு உடன்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கணவனின் சடலம் விசாரனைகளின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரனைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் இருந்து பூமிக்கு கிடைத்த மர்ம சமிக்ஞை!!

விண்வெளியில் இருந்து பூமிக்கு மர்மமான சமிக்ஞை கிடைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

தோராயமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உருவான இந்த சிக்னல், நாசாவின் புதிய விண்கலமான “சைக்கிலிருந்து” வந்துள்ளது. 2023 இல், நாசா ஒரு விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது. ஒரு விண்கலத்தை ‘சைக் 16’ என்ற சிறுகோள் நோக்கி அனுப்பியது.

இது முதன்மையாக உலோகத்தால் ஆனது என்பதுடன் நமது சூரிய குடும்பத்தில் அரிதானது. இந்த சிறுகோள் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பெல்ட்டில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சைக் டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் (டிஎஸ்ஓசி) அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இது விண்வெளியில் பரந்த தொலைவில் லேசர் தகவல்தொடர்புகளை சாத்தியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சைக் முதன்மையாக ரேடியோ அலைவரிசை தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தினாலும், ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் தொழில்நுட்பம் அதன் திறனை நிரூபித்துள்ளது.

அதாவது குறிப்பிடத்தக்க சாதனையாக, லேசர் தகவல்தொடர்பு டெமோ வெற்றிகரமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து பொறியியல் தரவை அனுப்பியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

சாப்பாட்டில் பூச்சிமருந்து கலந்துகொடுத்த பேரன்.. தாத்தா பலி.. தாய் கவலைக்கிடம்!!

நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது . விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளனசிக்கன் ரைஸில் அவரது பேரன் பகவதி தான் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர் பகவதி என்பவர் சமீபத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றார். இந்த உணவைத் தான் தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு சாப்பிட கொடுத்துள்ளார்.

இதனை சாப்பிட்ட பகவதியின் தாத்தா சண்முகநாதன், தாய் நதியாவுக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிக்கன் ரைஸை விநியோகித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

சிக்கன் ரைஸ் உணவை பரிசோதனை செய்ததில் அதில் பூச்சி மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சண்முகம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

தாய் நதியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பகவதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அளித்த வாக்குமூலத்தில் பகவதி கல்லூரி காலத்திலேயே அதிக தவறான பழக்கங்களுக்கு அடிமை ஆகியுள்ளார். இதனை பகவதியின் தாயும், தாத்தாவும் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர்.

இதனால், கோபடைந்த பகவதி தான் வாங்கி வந்த சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து இருவருக்கும் கொடுத்துவிட்டார். பகவதியின் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கற்பிணிப் பெண்ணுக்கு எமனாக மாறிய புகையிரதம்!!

கர்ப்பிணி மரணத்திற்கு அபாய சங்கிலி வேலை செய்யாததே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 25) என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், சென்னையில் உள்ள பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர், 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், மேலநீழிதநல்லூருக்கு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவும், அங்கேயே அடுத்த நாள் வளைகாப்பு நடத்துவதற்காகவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, கொல்லம் ரயிலில் சென்ற போது இரவு 8 மணிக்கு வாந்திக்கான அறிகுறி கஸ்தூரிக்கு ஏற்பட்டதால் கை கழுவும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர், உறவினர்கள் ரயிலில் இருந்து இறங்கி, கர்ப்பிணி விழுந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தனர்.

ஆனால், கர்ப்பிணி அங்கு இல்லை. இதையடுத்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு 20 நிமிடம் தாமதமாக வந்தது.

இதையடுத்து, பொலிஸார் கர்ப்பிணியை தேட ஆரம்பித்தனர். உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்துள்ளார்.

இதில் கஸ்தூரி ரயிலில் இருந்து கீழே விழுந்தவுடன் அந்த பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை உறவினர்கள் பிடித்து இழுத்துள்ளனர்.

இதனால், அடுத்த பெட்டிக்கு ஓடிச் சென்று அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அதன்பிறகே ரயில் நின்றுள்ளது. இதற்குள், கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் தள்ளி ரயில் சென்று விட்டது.

உடனடியாக ரயில் நின்றிருந்தால் கஸ்தூரியை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும், ரயிலானது கொல்லம் சென்றுவிட்டதால் பெட்டிகளில் அபாய சங்கிலிகள் வேலை செய்கிறதா என்று பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு மகன் கொடுத்த வியக்க வைக்கும் பரிசு!!

பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு 33 ஆண்டுகள் கழித்து மகன் ஒருவர் கொடுத்த பரிசு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.

பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமான வேலைகளையும் கூட செய்து படிக்க வைக்கிறார்கள்.

அந்தவகையில் தந்தை ஒருவர் 33 வருடங்களாக பெட்டிக்கடை வைத்து தனது மகனை மருத்துவர் ஆக்கியுள்ளார்.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் வசிக்கும் வாஹித் மூமின் என்ற மருத்துவர், தனது தந்தை 33 வருடங்களாக பெட்டிக்கடை வைத்து படிக்க வைத்தது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “எனது அப்பா இன்று முதல் பெட்டிக்கடையில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால், அதற்கு அவர் மனதளவில் தயாராக இல்லை. அவர், 33 வருடங்களாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

அவர் தனது கடின உழைப்பின் காரணமாகவும், பெட்டிக் கடையின் காரணமாகவும் பண நெருக்கடி இல்லாமல், கடன் வாங்காமல் என்னை மருத்துவர் ஆக்கியுள்ளார்.

2 பெருநாள் கொண்டாட்டத்திற்காக வருடத்திற்கு 2 நாட்கள் மட்டும் விடுப்பு கொடுத்து தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை கடையை நடத்தி வந்தார்.

எனது பெற்றோர் எனக்கு கல்வியை கொடுக்கவில்லை என்றால் நானும் பெட்டிக்கடையை தொடர்ந்திருப்பேன். அதனை நவீன முறையில் விரிவுபடுத்தியிருப்பேன்.

பெட்டிக்கடையில் இருந்து எனது அப்பா ஓய்வு பெறுவது சந்தோஷமாக இருக்கிறது. இனி அவர் நேரத்தை உற்சாகமாக செலவிடுவார். அவரது ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

பாம்பு கடித்தவரை கங்கையில் வைத்தால் விஷம் இறங்கிவிடும்… மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!!

கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20 வயது கல்லூரி மாணவர் மோகித் என்பவர் பி.காம் படித்து வந்துள்ளார்.

இவர், கடந்த 26 -ம் திகதி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வாக்களித்து விட்டு வயல்வெளிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது.

பின்னர், மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சரிசெய்ய இயலாது என்று மருத்துவர் கூறியுள்ளார். அப்போது, கங்கை நதியில் மோகித்தின் உடலை வைத்திருந்தால் விஷம் இறங்கிவிடும் என்று உறவினர்கள் தெரிவிக்கவே, இரு நாட்களாக உடலை கயிறு கட்டி கங்கை நதியில் வைத்துள்ளனர்.

பின்னர் , பாம்பு விஷம் உடல் முழுவதும் பரவி மோகித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூட நம்பிக்கையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரத்தில் விபரீதம் 4வது மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவி!!

கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18) என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் கல்வி பயின்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை கல்லூரி விடுதி கட்டிடத்தின் 4-வது மாடிக்குச் சென்ற அவர் திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில், கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் மாணவி பபிஷா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடைபெறுகிறது. மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் இடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

19 வயது இளம் மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. போலீசாருக்கும் போன் செய்து வீட்டிற்கு வரச் சொன்ன கொடூரம்!!

19 வயசு தான்… எத்தனையோ கனவுகளுடன் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு அந்த பெண் புறப்பட்டு சென்றிருப்பார். அத்தனையும் நொடிபொழுதில் நாசமாகி விட்டது. அக்டோபர் 2023ல் லண்டனில் உள்ள க்ராய்டனில் உள்ள வீட்டில் தனது 19 வயது மனைவியைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர் ஒருவருக்கு இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

பெருநகர காவல்துறையின் கூற்றுப்படி, சாஹில் ஷர்மா, 24, அக்டோபர் 29, 2023 அன்று போலீசாரை அழைத்து, தனது 19 வய்துடைய மனைவியான மெஹக்கை க்ராய்டனில் உள்ள ஆஷ் ட்ரீ வேவில் உள்ள தங்களின் வீட்டில் வைத்துக் கொன்றதாக ஷர்மா ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, போலீசாரை வரவழைத்தார். அந்த தொலைபேசியில், தனது மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.

உடனடியாக ஒரு போலீஸ் குழுவினர் அவங்களின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு அதிகாரிகள் மெஹக் சடலமாக கிடந்ததைப் பார்த்தனர். மெஹக் கழுத்தில் கத்தியால் காயம் அடைந்ததாகவும், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அக்டோபர் 31, 2023 அன்று நடத்தப்பட்ட சிறப்புப் பிரேதப் பரிசோதனையில், கழுத்தில் குத்தப்பட்ட காயமே மெஹக்கின் மரணத்திற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி 8 ம் தேதி, கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் மெஹக்கை கொலை செய்ததாக சாஹல் குற்றத்தை ஒப்புக்கொண்டார், ஆனால் கொலைக்கான காரணத்தை அவர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.

ஏப்ரல் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கும் போது, அவர் பரோலுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

இது ஒரு குடும்பத்தை முற்றிலுமாக சீரழித்த சோகமான வழக்கு. தனது மனைவியைக் கொன்றதில், ஷர்மா தனக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக ஒரு அன்பான மகளின் குடும்பத்தை சீரழித்துள்ளார் ” என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

“மெஹக், எதுவும் ஷர்மாவை அவர்களிடம் திரும்பக் கொண்டு வர முடியாது என்பதை நான் அறிந்திருந்தாலும், இந்த தண்டனை அவளது அன்புக்குரியவர்களுக்கு சில விஷயங்களைப் புரிய வைத்திருக்கும் என்று நம்புகிறேன்” என நீதிமன்றத்தில் ஷர்மா கூறினார்.

“எல்லாவற்றையும் விட நான் விரும்பும் ஒன்று என் மகளைத் திரும்பப் பெற வேண்டும், ஆனால் இது சாத்தியமற்றது. எவ்வளவு பிரார்த்தனையோ, பணமோ அல்லது ஆதரவோ அவளை என்னிடம் திரும்பக் கொண்டு வராது. நான் உடைந்து விட்டேன்.

சாஹில் மெஹக்கை மட்டும் கொலை செய்யவில்லை, என்னையும் கொன்று விட்டான்” என்று நீதிமன்றத்தில் கொலைச்செய்யப்பட்ட மெஹக் தந்தை கதறியழுதார்.