18 வயது இளம்பெண் மரணம்… இன்ஸ்டாவில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு உயிரிழந்த சோகம்!!

18 வயசு என்பதெல்லாம் உயிரை இழக்கிற வயசே.. இன்ஸ்டாவுல லைக்ஸ், ஷேர்களுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து பலரும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படி உயிரை இழந்திருக்கிறார் இன்ஸ்டா பிரபலமான 18 வயதான மனிஷா.

உத்தரபிரதேச மாநிலம், லக்னோ மாவட்டம், விகாஸ் நகர் செக்டார் சங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் மனிஷா (வயது 18). இன்ஸ்டாகிராமில் வீடியோ ரீல்களை வெளியிட்டு பிரபலமானவர். சம்பவத்தின் போது, அந்த பெண் லக்னோவில் உள்ள இந்திரா ஏரியில் தண்ணீருக்கு மிக அருகில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.

அவர் தனது காதலி மற்றும் உறவினர்களுடன் இளம் குழந்தைகளுடன் வந்திருந்தார். ஒரு கட்டத்தில் ரீல்களின் ஆர்வத்தில் அந்த பெண் தண்ணீரில் மூழ்கியபோது, தண்ணீரின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்துச் செல்லப்பட்டார்.

அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உதவி கேட்டு அலறினர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் மற்றும் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மீட்பு குழுவினர் தொடர்ந்து பெண்ணை தேடி வருகின்றனர்.

மனிஷா நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மனிஷா தண்ணீரில் மூழ்கும் முன் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மனிஷாவின் உடலைத் தேடி வருகின்றனர்.

வெயிலில் மயங்கி விழுந்து 14 வயது சிறுவன் பலியான சோகம்!!

தமிழகத்தில் ராணிப்பேட்டை அருகே குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் உள்ள டி.சி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (43). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு வெண்ணிலா (40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு அர்ஷன் (14), பரத் (12) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களின் குலதெய்வ கோவில் பக்கத்துக் கிராமமான நத்தம் பகுதியில் உள்ள மலை மீது அமைந்துள்ளது. அங்குள்ள மூங்கில் வாழி அம்மன் கோவில் தான் இவர்களின் குலதெய்வ கோவிலாகும்.

இந்நிலையில் நேர்த்திக்கடன் செலுத்த சத்யா தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு இவர்கள் குடும்பத்துடன் நடந்தே சென்றுள்ளனர்.

அப்போது அதீத வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் மயங்கி விழுந்து உள்ளார். இதையடுத்து பதறிய சத்யா குடும்பத்தினர் அர்ஷனை எழுப்ப முயன்றுள்ளனர்.

இருப்பினும், எவ்வளவு முயன்றும் அர்ஷனை எழுப்ப முடியவில்லை. இதையடுத்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அர்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அர்ஷன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த ரத்தினகிரி போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெயில் காலங்களில் குழந்தைகளையும், முதியவர்களையும் தனியே வெளியே அனுப்பாதீங்க. பருத்தியினால் ஆன ஆடைகளையே அணியுங்க. பகல் 11 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு, அவசியமில்லாத நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்திடுங்க.

காதல் திருமணம்… பெற்றோரும் எதிர்ப்பில்லை.. 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும் தூக்கில் தொங்கிய கொடுமை!!

காதலிச்சவனே புருஷனா அமைஞ்சாலும் எல்லோரும் சந்தோஷமாக எல்லாம் வாழ்ந்துவிடுவதில்லை. காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் மாமியார், மாமனார் கொடுமை எல்லாம் கிடையாது என்கிறார்கள்.

ஆனாலும் காதலர்களாக இருந்த வரை இருந்து வந்த சந்தோஷம், திருமணத்திற்கு பிறகு இருவருக்குமிடையே இல்லை என்கிறார்கள். தொடர்ந்து கணவன், மனைவிக்குள் சண்டை நீடித்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருமஞ்சிறையை சேர்ந்த முத்துக்குமாருக்கும் சந்திராவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. தற்போது சந்திரா திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரியில் படிக்கிறார். அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி தகராறு ஏற்பட்டு சந்திரா ஊத்துக்குளியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கணவர் முத்துக்குமார் தனது மனைவி சந்திராவை கருமஞ்சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாததால், அருகில் இருந்தவர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குன்னத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்!!

கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு கரூரில் இருந்து காரில் சிறுமுகை ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நெசவாளர் காலனி என்ற இடத்தில் பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் சிலர் பயணித்த காரும் முருகனின் காரும் நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா, இவர்களது மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த தம்பதியின் மற்றொரு மகள் நித்திஷா படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நித்திஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நித்திஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்த 4 நபர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பவானிசாகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் கல்லூரி மாணவர்களின் காரும் கடும் சேதம் அடைந்தபோதும், அவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

17 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தா கோட்டையில் வசித்து வரும் 44 வயது பெண் வர்ஷா ஷாகு. இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனையடுத்து ஆஸ்துமாவாக இருக்கலாம் எனக் கருதி அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வேறொரு சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நுரையீரலில் ஏதோ ஒரு சிறிய பொருள் சிக்கியிருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட சிறப்பு பரிசோதனையில் அந்த பெண்ணின் நுரையீரலில் தங்க மூக்குத்தியின் ஒரு பாகம் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது. ரிஜிட் பிராங்கோஸ்கோப்பி என்ற அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அந்த மூக்குத்தியின் சிறிய பாகத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து ‘கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் நான் அணிந்திருந்த மூக்குத்தியின் ஒரு பாகம் உடைந்து காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவே இல்லை.

அது தற்போது நுரையீரலில் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது” எனக் கூறினார். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ‘அந்த பெண் தூங்கும் போது மூக்குத்தியின் பாகம் உடைந்து வாய் வழியாக நுரையீரலுக்குள் சென்றிருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

கிணற்றிலிருந்து அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட குழந்தை… தாய் அதிரடியாக கைது!!

புத்தளத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – கற்பிட்டி, கந்தகுடாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தையின் சடலம் இன்று (02-04-2024) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கிணற்றிலிருந்து மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்!!

பாணந்துறை கடலில் தத்தளித்து கொண்டிருந்த தாயையும் அவரது மகளையும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.

நேற்று காலை பாணந்துறை கடற்கரையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் புஷ்பகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தனுக ஆகியோர் இந்த அதிரடி செயலை செய்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கும் மகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொல்கசோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 6 வயது சிறுமியும் 38 வயதுடைய அவரது தாயும் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பிள் ஜூஸ் குடித்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பச்சை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது அந்த பாக்கெட்டில் இறுதியாக ஆப்பிளை தவிர்த்து சாப்பிடுவதற்கு பொருத்தமற்ற வேறு பொருள் இருந்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது முகபுத்தகத்தில் இது தொடர்பில் அந்த பெண் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,”ஏப்ரல் 27 அன்று, நாங்கள் கிஸ்ட் பச்சை ஆப்பிள் ஜூஸ் குடித்தோம், இறுதியாக இருந்த பானத்தை ஊற்றும்போது ஏதோ அசாதாரணமானதாக உணர்ந்தேன்.

பிறகு அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க அதை வெட்டி திறந்து பார்த்தேன், அப்போது “பச்சை ஆப்பிளைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று பேக்கில் இருந்ததிலிருந்து இருக்கக்கூடாத ஒன்று இருந்தது.

உடனடியாக புகார் செய்ய அந்த நிறுவனத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பில் வினவினேன்.

இதன்போது எனக்கும் என் சிறிய குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க திங்கள் வரை காத்திருக்கும்படி அவர்கள் என்னை கேட்டுகொண்டனர்.

நான் காத்திருக்கும் அளவுக்கு அன்பாக இருந்தேன், ஆனால் இன்னும் அவர்கள் அழைப்பை ஏற்படுத்தவில்லை. அவர்கள் தங்கள் நுகர்வோரின் வாழ்க்கையை எவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள்.

நான் இன்னும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன் உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம்.”என்று பதிவிட்டுள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அதன்படி இன்றைய தினம் (02.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கம் 24,430 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,380 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,050 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

வவுனியாவில் பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் விபத்து : பொலிஸ் உத்தியோகத்தர் காயம் : ஒருவர் கைது!!

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியுடன் பொலிஸார் உத்தியோகத்தர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளினை செலுத்திச்சென்ற நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பாரவூர்தியின் சாரதியினையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா நெடுங்கேணியில் விபத்து : ஒருவர் காயம்!!

வவுனியா நெடுங்கேணி சந்தியில் இன்று (02.05.2024) காலை குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் வாகனமும் காரும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்

குளிரூட்டப்பட்ட மீன்கள் வாகனமும் காரும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற நெடுங்கேணி போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்

போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலமையிலான பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையினை உக்குளாங்குளம் பகுதியில் முன்னெடுத்திருந்தனர்

இதன் போது 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

கைப்பற்ற போதைப்பொருளின் பெறுமதி கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபா எனவும் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும். சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

மூவாயிரத்து 527 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளது.

இளைஞன் கடத்தல் : விசாரணையில் சிக்கிய காதலியின் பெற்றோர்!!

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய – வெரலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 22 ஆம் திகதி தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் வெலிமட – கெப்பட்டிபொல பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 24 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதான சந்தேகநபர்களான குறித்த இளைஞரின் காதலியின் 72 வயது தந்தையும் 69 வயது தாயாரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் இந்த இளைஞர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞரை கடத்திச்செல்ல பயன்படுத்தியதாக கூறப்படும் NW PK- 0125 என்ற சில்வர் நிற மினி வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அதற்கமைய, 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் கொலை!!

நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்

நாவலப்பிட்டி Monte Cristo தோட்டத்தின் கீழ் பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில் (Stanley Steph Phil) என்ற பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

​​கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம்
இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23 ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, ​​கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.