வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலம்!!

உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம், நாட்டின் வளங்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இன்று (01.05) காலை வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய மேதின ஊர்வலம் பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்தது, அங்கு பிரதான மேதினக் கூட்டம் இடம்பெற்றது.

இம்முறை மேதினப் பேரணியில் உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலைகளைக் குறை, IMF ஆலோசனைகள்- நிபந்தனைகளால் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசமாக்காதே, வற் (VAT) வரி, மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களின் அதிகரிப்பை உடன்குறை,

அந்நியக் கம்பனிகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகையை உடன் நிறுத்து, தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்கு முறைகளை உடன் நிறுத்து,

தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களின் சுயாட்சி உரிமைகளை வழங்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.

குறித்த பேரணியில் கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர்.

வவுனியாவில் மூன்று தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து!!

வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் மூன்று தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு அவைகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தியமை , வீதியில் போட்டித்தன்மையில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இப் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் இச் செயற்பாடு மக்கள் மத்தியின் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமையுடன் தொடர்ந்தும் பயணிகளின் சுதந்திரமான பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் பேரூந்துகளுக்கு எதிராக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் வவுனியாவில் நோயாளர் காவு வண்டியை வழிமறித்து யானைகள் அட்டகாசம் : காணொளி!!

வவுனியா செட்டிகுளம் ஊடாக மன்னார் செல்லும் பிரதான வீதியில் யானைகள் வீதியை குறுக்கறுத்து அட்டகாசம் செய்கின்றன. பறயனாளங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று (30.04.2024) காலை நிகழ்ந்துள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் வீதியில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் பல மின்கம்பகளை உடைத்து யானைகள் சேதமாக்கியிருந்தன. இந்நிலையில் நேற்று காலை நோயாளர்களை ஏற்றிவந்த நோயாளர் காவு வண்டியையும் வழிமறித்ததுடன் நீண்ட நேரமாக போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளது.

மேலும் இவ்வீதியூடாக பயணிப்பவர்களும் அருகில் உள்ள கிராமவாசிகளும் உயிர் அச்சுறுத்தலுடனேயே எந்நேரமும் காணப்படுகின்றனர். உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

எரிபொருள் விலைகள் குறைப்பு : புதிய விலைப் பட்டியல் இதோ!!

நாடளாவிய ரீதியில் இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள். விலைகள் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது .

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது. 95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.

லங்கா ஒட்டோ டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 377 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகளுக்கு அமைய லங்கா ஐ.ஓ.சியும் தமது எரிபொருள் விலைகளை குறைத்துள்ளது..

வவுனியா நகரில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து மறுசீரமைப்பு!!

வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து நடவடிக்கைகள் மறு சீரமைக்கப்பட்டன.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் போக்குவரத்து பொலிசாரால் இன்று (30.04) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரில் அதிக சனநடமாட்டம் மிக்க பகுதிகளான பசார் வீதியில் இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், பசார் வீதியில் இருந்து பள்ளிவாசல் சந்தி நோக்கி செல்லும் போது 0,2,4,6,8 ஆகிய திகதிகளில் பசார் வீதியின் வலது புறமாகவும், 1,3,5,7,9 ஆகிய திகதிகளில் வீதியின் இடது புறமாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரகாலப் பகுதியில் இதன் முன்னேற்றம் குறித்து அறிந்த பின் ஏனைய நகர வீதிகளையும் மறு சீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

வவுனியாவில் உழைப்பாளர்களுக்கு விடுமுறை வழங்குங்கள் : வர்த்தக சங்கம் கோரிக்கை!!

தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது

அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள் பிரபலமாக மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர்தினம் என்று அறியப்படுகின்றது

இந்த தினத்தில் வவுனியா மாவட்டத்திலிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மே 1ம் திகதி விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த காலங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களை இவ்வருடமும் உலக தொழிலாளர்கள் தினத்தில் உழைப்பால் இந்த உலகத்தினை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் விடுமுறை வழங்கி அவர்களை கௌரவிக்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

உலக அழகி ப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கைப் பெண் நாட்டிற்கு வருகை!!

அமெரிக்காவில் (United States of America) இடம்பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற துஷாரி ஜெயக்கொடி (Thushari Jayakody) நாடு திரும்பியுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை அமெரிக்காவின் நியூயார்க் (New York) நகரில் நடைபெற்ற இந்த உலக அழகிப் போட்டியில் 37 நாடுகள் பங்குபற்றியிருந்தது.

அத்துடன், 37 நாடுகளுக்கிடையிலான பெரும் போட்டிக்கு மத்தியில் இலங்கையின் சார்பில் உலக அழகி பட்டத்தை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக துஷாரி ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று பிள்ளைகளின் தாயான நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் இவர், மலேசிய விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான அதிகரிப்பு!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் (Gold pawn) விலை இன்றையதினம் (29.04.2024) 179,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இன்று தங்கத்தின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,460 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,430 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,400 ரூபாவாகவும் காணப்படுகிறது. மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,410 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இளம் தலைமுறைக்காக கிரிக்கெட் மைதானத்தை அமைத்த இலங்கைத் தமிழர்!!

மட்டக்களப்பில் உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்காக கிரிக்கெட் மைதானம் ஒன்றை வசீகரன் புவனசிங்கம் என்பவர் அமைத்துள்ளார். பிரித்தானியாவில் பெற்றோலியம் வியாபார துறையில் உள்ளவர்களில் குறிப்பிட்டு பெயர் சொல்லக்கூடியவர்களில் ஒருவராக இவர் இருக்கிறார்.

தனது மகனுக்கு பிரித்தானியாவில் எந்த அளவிற்கு தரமான கிரிக்கெட் கற்கை பயிற்றுவிக்க படுகிறதோ அதே போன்றதொரு கிரிக்கெட் கற்கை தன் மாவட்டதில் உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்க்காக தனது கடந்த 6 வருடகால வருவாயினை இந்த மைதானத்திற்க்காக செலவு செய்துள்ளார்.

ஆரம்பம் முதலே ஆயிரம் சவால்கள் இருந்தாலும் அவர் சிந்தனைகளும் செயல்களும் மாவட்ட கிரிகெட்டின் நலன் சார்ந்து நேர்மையானதாக இருந்ததாலேயே இது சாத்தியமானது.

18 வயது தான் அக்காவில் திருமண விழாவில் சரிந்து விழுந்து உயிரிழந்த தங்கை!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரியின் திருமண விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சிறுமி ரிம்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை தனது சகோதரியின் ‘ஹல்டி விழாவில்’ (திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு) நடனமாடிக்கொண்டிருந்தார்.

சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ, ரிம்ஷா தனது குடும்ப உறுப்பினர்களுடன் இசையுடன் நடனமாட முயற்சிப்பதைக் காட்டுகிறது.

ஆனால், சில வினாடிகளுக்குப் பிறகு, அவள் மார்பைத் தொட்டு, தனக்கு அருகில் நடனமாடும் சிறுவனின் கையைப் பிடிக்க முயன்றாள், பின்னர் சரிந்து விழுந்தாள். ரிம்ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். திருமண விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முன்னிலையில் நடனமாடிய சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணைக் கொடுமை.. 3 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

சென்னை அடுத்த மதுரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது பாலசுப்பிரமணியன். இவர் சித்தலப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை சில நாட்கள் சிறப்பாக இருந்த நிலையில், கணவரின் சான்றிதழ்களை மகேஸ்வரி ஒரு நாள் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

அதில் அவரது வயது, அவர் கூறியது போல் 29 அல்ல 35 என்பது தெரிய வந்தது. இருவருக்கும் இடையே 10 ஆண்டுகள் வித்தியாசம் இருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதாக மகேஸ்வரி உணர்ந்துள்ளார்.

இது குறித்து கணவரிடம் கேட்டபோது அவர் உரிய பதிலளிக்காமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது அதிக நகைகள் அணியாததை குறிப்பிட்டு பாலசுப்பிரமணியனும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து மகேஸ்வரியை குறை கூறி வந்துள்ளனர்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருமுறை கர்ப்பம் தரித்த போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே கர்ப்பத்தை பாலசுப்ரமணியனும் அவரது குடும்பத்தினரும் கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

வேறு சில பெண்களுடன் பாலசுப்ரமணியன் பேசி வந்ததும், இருவருக்குமிடையே விரிசலை அதிகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடைபெற்று வந்ததால் தனியாக வீடு கட்டி சென்று விடலாம் என மகேஸ்வரி, பாலசுப்பிரமணியனிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பாலசுப்பிரமணியன், மகேஸ்வரியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று 15 லட்சம் ரூபாய் பணம் பெற்று வந்தால், தனியாக வீடு கட்டலாம் என கூறி அடித்து உதைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும், 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்ததால், மகேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வந்த பாலசுப்பிரமணியன், “இனி உன்னோடு வாழ முடியாது. எனக்கு விடுதலை பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடு” எனக்கூறி சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி கணவர் வந்து சென்ற சிறிது நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 8 மாதங்களேயான நிலையில், அவர் உயிரிழந்ததை அடுத்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசாரும் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாய்.. மூன்று பேரும் நீரில் மூழ்கி பலியான சோகம்!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை அடுத்த பிச்சநந்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (40), பவித்ரா (30). இவர்களுக்கு ரித்திக் (9) என்ற மகனும், நித்திகா ஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில், கோடை விடுமுறைக்கு குழந்தைகள் வீட்டில் இருந்ததால், பவித்ரா தனது குழந்தைகளை தினமும் அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை பவித்ரா தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கினர்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சிறுமி நித்திகா ஸ்ரீ கிணற்றில் பிணமாக மிதந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார், ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் காக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய மதபோதகர்!!

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பொன்மார் ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் விமல் ராஜ். இவர் பொன்மாரில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதகராக இருந்து வருகிறார். 2020ல் மும்பையைச் சேர்ந்த 33 வயது வைசாலியை விமல் ராஜ் திருமணம் செய்தார்.

இருவரும் பொன்மாரில் மலை தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சாரா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. விமல்ராஜ், மனைவி வைசாலி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வைசாலியை, விமல் ராஜ் அடித்து உதைத்தது அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். வைஷாலி வீட்டாருக்கு சந்தேகம் வராமல் இருக்க அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் மனைவியின் உடலை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வைசாலியின் உறவினர்கள் மும்பையில் இருந்து வருவதற்காக அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகலுக்கு பின் வந்த வைசாலியின் உறவினர்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வைசாலி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கணவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை விமல் ராஜ் ஒப்புக்கொண்டார்.

இதன் பேரில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலிடம் பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்.. தோற்றதால் கேலி செய்யப்பட்ட மாணவி உருக்கம்!!

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி, இப்போது அதற்காக வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிராச்சி நிகம் (Prachi Nigam), சமீபத்தில் ஊடகங்களில் மிகவும் பிரபலமாக வலம்வந்த பெயர் இது.

உத்தரபிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது, ​​98.5 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

ஆனால், அவர் எடுத்த மதிப்பெண்ணுக்கு பாராட்டுக்களைப் பெறுவதற்கு பதிலாக, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களையும், கேலி கிண்டல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதற்கு அவள் முகத்தில் இருந்த முடிதான் காரணம்.
பிராச்சி தனது முகத்தில் இருக்கும் முடியால் கடுமையான கேலிகளை சந்திக்க வேண்டியிருந்தது.

அவரது கடின முயற்சியால் கிடைத்த வெற்றியும் கிண்டல்களுக்கு மத்தியில் காணாமல் போனது. இப்போது, ​​அதனால் தான் அனுபவித்த மனக் கஷ்டங்களைப் பற்றி மாணவி பிராச்சி வெளிப்படையாக பேசியுள்ளார். தனக்கு முதல் இடம் கிடைத்திருக்கக்கூடாது என்று வருத்தப்படுவதாக அவர் கூறினார்.

“ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைந்தாலும் பரவாயில்லை. முதலிடம் பெறவில்லை என்றாலும், இரண்டாமிடம் அல்லது எதோ ஒரு இடம் கிடைத்தாலே போதும். அப்படி இருந்திருந்தால் என புகைப்படம் வைரலாகியிருக்காது. நான் சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்டிருக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.

இப்போது “அந்த எதிர்வினைகள் புண்படுத்துகின்றன. ஆனால் சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே சொல்வார்கள். எதையும் தடுக்க முடியாது” என்கிறார் பிராச்சி.

இதனிடையே, சமூக வலைதளங்களில் கடும் ட்ரோல்களுக்கு ஆளான பிராச்சிக்கு ஆதரவாக பலர் முன்வந்துள்ளனர். எக்ஸ் தளத்தில் ஒருவர் “நாம் ஒரு சமூகமாக தோற்றுவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

“அவளுடைய வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் இப்போது மிகவும் வேதனையான நினைவுகளாக மாறிவிட்டது. சமூக ஊடகங்கள் மிகவும் கொடூரமானது” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரில் இவ்வளவு பிரச்சனை உள்ளதா.. அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆய்வு அறிக்கை!!

மக்களுக்கு கேன் தண்ணீரை சுவையாக தருவதற்காக தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதிலுள்ள தாதுப்பொருள்கள் வெளியேறிவிடுகின்றது. இதனால் தண்ணீர் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் தாதுபொருட்கள் தடைப்பட்டு பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் சென்னை பல்கழைக்கழகம், அண்ணா பல்கழைக்கழகம், மற்றும் சென்னை IIT-M ஆகிய மூன்று இணைந்து கேன் தண்ணீர் குறித்து ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

பிரபலமான நிறுவனங்களின் கேன் தண்ணீரை ஆராய்ச்சி செய்து இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் விற்கப்படும் கேன் தண்ணீரில் சோடியத்தின் அளவு லிட்டருக்கு 14 மி.கி மட்டுமே இருப்பதாக கண்டறிப்பட்டுள்ளது.

ஆனால் குடிநீரில் லிட்டருக்கு 78 மி.கி இருக்கவேண்டும் என்று தேசிய ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. சோடியத்தின் குறைப்பாட்டால் வயிற்றுப்போக்கு, வாதம், இதயநோய், அட்ரினல் சுரபிகளில் பிரச்சனை ஏற்படும் என மருத்துவ அறிக்கையில் கூறப்படுகின்றது.

அதேபோல் லிட்டருக்கு 188 மி.கி கால்சியம் தேவைப்படுகின்ற நிலையில் கேன் தண்ணீரில் லிட்டருக்கு 3.5 மி.கி கால்சியம் மட்டுமே உள்ளதாக தெரியவந்துள்ளது. கால்சியம் குறைப்பாட்டினால் ஹைப்போ கேல்செமியா, பல் நோய், எலும்புகளில் வலு குறைவு, ஆகிய நோய்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை திவிர லிட்டருக்கு 63 மி.கி மெக்னீசியம் தேவைப்படுகின்ற நிலையில் கேன் தண்ணீரில் லிட்டருக்கு 2 மி.கி மட்டுமே உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.

மெக்னீசியம் குறைப்பாட்டினால் சிறுநீரகத்தில் கற்கல்கள் உருவாகுதல், என்ற பிரச்சனைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சரிகமப” நிகழ்ச்சியில் சாதிக்கும் வேகத்தில் கழிவறையில் 3 நாட்கள் தூங்கிய இலங்கை இளைஞனின் சோகக் கதை!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “சரிகமப” நிகழ்ச்சியில் கலந்து பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்டு ஓடிசனில் தேர்வான இந்திரஜித் எங்கு தங்குவது என்று தெரியாது சென்னை பேரூந்து நிலைய கழிவறையில் தூங்கி அன்றாட கடமைகளை முடித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

“சரிகமப” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பதுளை மாவட்டம் பூனாகலையை சேர்ந்த இந்திரஜித்திற்கு கிடைத்திருக்கும் நிலையில் நேற்று அவர் பாடிய முதல் பாடல் ஒளிபரப்பானது.

பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்ட, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடலை தெரிவு செய்து அவர் பாடியிருந்தார்.

பாடி முடிந்த பிறகு நடுவர்களின் பாராட்டை இந்திரஜித் பெற்று அரங்கத்தினை நெகிழ்ச்சியில் மூழ்க வைத்திருந்தார். பிறகு அவர் எப்படி இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்தார் என்று உருக்கமாக பேசினார்.

உருக வைத்த இந்திரஜித் அதில், நான் இலங்கையில் பதுளை மாவட்டத்தில் இருந்து வருகிறேன். அங்கு ஓட்டல் ஒன்று வேலை செய்து சம்பாதித்த பணத்தில் சென்னை வருவதற்காக டிக்கட்டுகளை பெற்றேன்.

ஓடிசனில் தேர்வான எனக்கு எங்கு தங்குவது என்று தெரியவில்லை. இசை பயணத்தினை தொடர வேண்டும் என்று மூன்று நாட்களாக சென்னை பேரூந்து நிலையத்தில் தங்கி கழிவறையில் தூங்கி அன்றாட கடமைகளை முடித்தேன்.

பிறகு “சரிகமப” மேடையில் எனக்கு வாழ்க்கை வாய்ப்பு கொடுத்துள்ளது. நிச்சயம் வெற்றியுடன் தான் நாடு திரும்புவேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.