விளையாட்டு வீரர் ஒருவரின் தந்தைக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார (Kumar Sangakkara) மரியாதையளித்த விதம் சமூக வளைத்தளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சங்கக்காரா தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் கடமையாற்றி வருகிறார்.
சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றியின் பின்பு ராஜஸ்தான் அணியின் துரவ் ஜூவெல்லின் பெற்றோர்கள் தங்கள் மகனைச் சந்திக்க மைதானத்திற்கு வந்தனர்.
அப்போது சங்கக்காரவைப் பார்த்த ஜூவலின் தந்தை சந்தோஷத்தில் சலுட் செய்து தனது அன்பை வெளிப்படுத்துவார்.
இதனை பார்த்த சங்கக்காரா தனது தொப்பியை கழற்றி அவருக்கு மதிப்பு வழங்கும் வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
விளையாட்டை தவிர்த்து சங்கக்காரா ஒரு சிறந்த மனிதர் என பலரும் பதிவு செய்து வருகிறார்கள். இதேவேளை இந்த ஆண்டு ஐ.பி.எல்.போட்டியின் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல் அணி தற்போது வரையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரத்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் வெல்காலயாய – இரத்தோட்டை பகுதியில் நேற்று (29.4.2024) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டில் நேற்று பெய்த கன மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர்.
12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரது சடலங்களும் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம்.
மேலும், இதன்போது எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் அளவில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுதியில் பாரிய உயர்வு பதிவாகியிருந்த நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.
இந்தநிலையில், ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வரும் நிலையில் இந்த மாதமும் எரிபொருளின் விலையில் மக்களுக்கு சாதகமான திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், உலக சந்தையில் எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்திற் கொண்டு இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லொறிகளில் நெல் காெண்டு செல்வதாக கூறி மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் நேற்று (29.04) கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நீண்டகாலமாக இந்த மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும், பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லும் போர்வையில் பக்க வீதிகளை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு லொறிகளில் இருந்த பசுக்களில் பெரும்பாலானவை கருவுற்ற பசுக்கள் என்றும், சில மாடுகள் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் என்றும் பாெலிசார் தெரிவித்தனர்.
வவுனியா மற்றும் முல்லைத்தீவில் மாடு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதும் இதன் மூலம் தெரியவந்துள்ளதாக பாெலிசார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கஹட்டகஸ்திகிலிய, இகிரிகொல்லாவ மற்றும் வெலிசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி தனபால, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் எம்.கே.அழகியவண்ண, உப பொலிஸ் பரிசோதகர் ஜீவண்ண, பொலிஸ் சார்ஜன்ட் (61518) ரன்வல, பொலிஸ் கான்ஸ்டபிள் (78448) வீரசேன, பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி (18129) திஸாநாயக்க ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேரூந்தை செலுத்திய சாரதி ஒருவர் நேற்று (29.04) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேரூந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேரூந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரச மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை கடுமையாக பாதித்துள்ளது. புதிய அரச வேலைவாய்ப்புகளை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
தனியார்துறை நிறுவனங்களும் புதிய வேலைவாய்ப்புக்களுக்கு தொழிலாளர்களை உள்வாங்குவதை பெரும்பாலும் நிறுத்தியுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதிலும் கடும் சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளன.
இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்வது சவாலாக மாறியுள்ள இந்த நேரத்தில் இணையத்தில் நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பதற்கான பலவழிகள் திறந்தே உள்ளன.
இணையத்தில் சம்பாதிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சியுடன் கூடிய கணனிநெறிகளை Tech Masters Campus நிறுவனம் வழங்கி வருகின்றது.
ஆர்வமுள்ள எந்தவொரு இளைஞன் யுவதியும் வீட்டிலிருந்தே இணையத்தில் சம்பாதிப்பதற்கான பயிற்சிநெறிகளை அனுபவமுள்ள விரிவுரையாளர்களால் Tech Masters Campus நிறுவனம் வழங்குகின்றது.
நாம் வழங்கும் பயிற்சிநெறிகளாவன…
Advanced Diploma In Multimedia Production – 3 Months
Diploma In Web Development – 6 Months
WordPress Web Development – 2 Weeks
Professional Certificate In Digital Marketing – 3 Months
Diploma In Software Development – 5 Months
Diploma In Mobile APPS Development – 4 Months
Diploma In Information Technology ( IT) – 3 Months
Diploma In English – 3 Months
கற்கைநெறிகள் தொடர்பான முழுமையான விபரங்களுக்கு அல்லது வழிகாட்டுதல்களுக்கு கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Tech Masters Campus, No 206 1/8 First Floor, Station Road, Vairavapuliyankulam, Vavuniya
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்த உடனேயே கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூர்வ இணைய வானொலியை (NIE Visual Radio) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கோவிட் பேரழிவின் போது பாடசாலைகள் மூடப்பட்டதால் தவறவிட்ட படிப்பு மற்றும் பாடசாலை பரீட்சைகள் அட்டவணையை மீட்டெடுப்பதற்கான திட்டத்தின் படி இம்முறை குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சவாலான பணியை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கும் மிகுந்த அர்ப்பணிப்பு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றையதினம் (29.04.2024) 178,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இன்று தங்கத்தின் பெறுமதி சடுதியாக குறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,380 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,350 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 178,800 ரூபாவாகவும் காணப்படுகிறது. மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,340 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு – நாயாறு கடலில் நீராடச் சென்று மூழ்கிய இருவரில் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு நாயாறு கடலில் 5 பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்றையதினம் (28-04-2024) மாலை நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள்.
இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து, நாயாறு கடற்படையினரின் உதவியுடன் ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,
மற்றைய இளைஞன் கடலில் மூழ்கிய நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், நீரில் மூழ்கியவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது.
மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நீரில் மூழ்கி உயிரிழந்தவராவார்.
இதேவேளை, குறித்த பகுதி நீராடுவதற்கு ஆபத்தான பகுதி என அறிவித்தல் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை விட பிரதேசவாசிகளும் குறித்த கடற்கரைக்கு வருபவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும் அது செவிமடுக்கப்படாமல் தொடர்ந்து உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே நேற்று (28.04.2024) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி உடல் இயலாமை (காய்ச்சல் காரணமாக) அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இன்று உடல் நிலை மோசமாகவே, பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது
பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரணம்… காதலர்களுக்கு தான்.. காதலுக்கு இல்லை என்பது படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. சர்மிளாவின் முடிவைப் பார்த்து இரக்கப்படுவதோ, வருத்தப்படுவதோ இல்லாமல் பலரும், பெத்தவங்களைக் கஷ்டப்படுத்தினா இப்படித் தான் என்று பேசி வருகிறார்கள்.
இன்னொருபுறம், அட… என்ன இருந்தாலும் பொண்ணு தானே… அவ புருஷனை இப்படியா சாதி வெறிப்புடிச்சு வெட்டுவீங்க என்பவர்களும் உண்டு. யார் என்ன பேசினாலும், சந்தோஷமாக சிறகடித்து வாழ வேண்டிய இரண்டு பேர் அநியாயமாக உயிரை இழந்திருக்கின்றனர்.
சென்னை பள்ளிக்கரணையில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்பவர் பிப்ரவரி 24ஆம் தேதி இரவு 8 மணியளவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும், அவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஷர்மிளாவின் உறவினர்கள் பிரவீனை கொடூரமாக படுகொலை செய்ததும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சர்மிளா கடந்த 14ம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்கொலை முயற்சியின் போது, ஷர்மிளா கழுத்தில் நரம்பு பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அதன்பின், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 22ம் தேதி இறந்தார்.
இதற்கிடையில், சர்மிளா எழுதிய தற்கொலை கடிதத்தில், தனது இறப்புக்கு பெற்றோர் துரை, சரளா மற்றும் நரேஷ், தினேஷ் ஆகியோர் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் ஷர்மிளாவின் சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இருவரின் மரணத்திற்கும் நீதி கேட்டு பிரவீனின் குடும்பத்தினர் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஷர்மிளாவின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
பின்னர் பிரவீனின் பெற்றோரிடம் பிரேத பரிசோதனை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஷர்மிளாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இப்படி வாழ வந்த பெண்ணை இழந்துவிட்டோம் என்று பிரவீனின் பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து, பள்ளிக்கரணையில் பிரவீன் உடல் அருகே சர்மிளாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
ஆசை ஆசையாய் காதலித்து சந்தோஷமாக வாழ வேண்டிய இளம் ஜோடிகள் அடுத்தடுத்து மண்ணை விட்டு பிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் ஆணவக் கொலைக்கு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
பஞ்சாப் அதம்பூர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வசித்து வந்தார். இந்நிலையில் அவர் குடியிருப்பின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த ஜோக்சார் போலீசார், நடிகையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கடந்த கால வாட்ஸ்-அப் பதிவுகளும், முகநூல் பதிவுகளும் ரசிகர்களை கலங்கடிக்க செய்து வருகிறது. அம்ரிதா பாண்டே , போஜ்புரி படங்களைத் தவிர, இந்தி படங்களிலும், வெப் சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
பீகார் மாநிலம் பகல்பூர் ஜோக்சர் காவல் நிலையப் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில், ஏப்ரல் 27, சனிக்கிழமை அன்று, அன்னபூர்ணா என்ற அமிர்தா பாண்டே சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
நடிகை அம்ரிதா பாண்டே இறப்பதற்கு சற்று முன்பு வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸும் ரசிகர்களைக் கலங்கடித்துள்ளது. ‘இரண்டு படகுகளில் அவளது வாழ்க்கை இருக்கிறது. எங்கள் படகை மூழ்கடித்து அவளுடைய பாதையை எளிதாக்கினோம்’ என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது குடும்பத்தின் கருத்துப்படி, அம்ரிதா தனது தொழில் குறித்து கவலைப்பட்டதாகவும், மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பட வாய்ப்புகள் குறைய துவங்கியதால் அமிர்தா மனமுடைந்தார் என்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில், மும்பையில் வசிக்கும் சந்திரமணி ஜங்காட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு அனிமேஷன் பொறியாளர்.
அம்ரிதா மன அழுத்தத்தில் இருந்தபோதும், அவர் சமீபத்தில் வெளியான ‘பிரதிஷோத்’ வெப் சீரிஸால் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதம்பூர் ஷிப்காட்டில் அமைந்துள்ள திவ்யதர்மா அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக ஜோக்சார் போலீசாருக்கு ஏப்ரல் 27ஆம் தேதி மாலை தகவல் கிடைத்தது.
கதவை திறந்து பார்த்தபோது நடிகை அம்ரிதா பாண்டே படுக்கையில் உயிரிழந்த நிலையில், பிணமாக கிடந்துள்ளார். போலீசார் குடும்பத்தினரிடம் பேசியபோது, மாலை 3.30 மணியளவில் அமிர்தா பாண்டேவின் சகோதரி அவரது அறைக்கு சென்றது தெரிய வந்தது.
அங்கு தனது சகோதரி தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்தார். எப்படியோ கயிறு அறுக்கப்பட்டு அமிர்தாவை கீழே இறக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பணியாளர்கள் மட்டுமே செல்லக்கூடிய அறையில் தூக்கில்தொங்கியப்படி கேரளப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள அறையில் கடந்த வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். கழுத்தில் தனது துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய இவருக்கு அருகில் பயணம் சிதறிகிடந்துள்ளது.
பணியாளர்கள் மட்டுமே செல்லும் அறையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலை செய்த இந்த பெண்ணின் அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் சடலத்தை அடையாளம் கண்டனர். கோவையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த ரேஷ்மி அவரது கணவருடனான பிரச்சனையால் பெற்றோருடன் வசித்து வந்தார்.
கூடுதல் வீரக்தியை கொடுக்கும் விதமாக, கடந்த மாதம் ரேஷ்மியின் தாய் இறந்திருக்கிறார். இதையடுத்து, ரேஷ்மி கடந்த 24ம் தேதி அவரது வீட்டைவிட்டு வெளியேறினார். ரேஷ்மி காணாமல் போனதையொட்டி குடும்பத்தினர் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வந்தார்கள்.
அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஊழியர்கள் மட்டுமே செல்லக்கூடிய அறையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அறையில் இரும்புக் கட்டில் கைப்பிடியில் துப்பட்டா பயன்படுத்தி தூக்கிட்டு இருக்கிறார் ரேஷ்மி. மொபைல் போன் அல்லது மற்ற எந்த ஆதாரங்களும் அவ்விடத்தில் இல்லை. மேலும், ரேஷ்மியை சுற்றி ரூபாய் நோட்டுக்கள் சிதறி இருந்துள்ளது.
மேலும், ரேஷ்மி அதிகாரிகள் மட்டுமே செல்லும் அறைக்குள் எப்படி சென்றார் என்பது தெரியவில்லை. மேலும், அங்கிருந்த CCTV காட்சிகளில் அவர் தண்ணீர் பாட்டிலுடன் நள்ளிரவு 1 மணிக்கு நடந்து சென்றது பதிவாகி இருக்கிறது. மேலும், அவர் ரயில்வே நிலையம் வந்தபோது அவரை சுற்றி யாருமே இல்லாததும் CCTV காட்சியில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாது
லண்டனில் தன் இளம் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், பழியை தன் மனைவி மீதே போட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19) என்னும் இளம்பெண். New Sant Nagar என்னுமிடத்தைச் சேந்த சாஹில் ஷர்மா (24) என்பவருக்கும் மேஹாக்குக்கும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி திருமணம் ஆகியுள்ளது.
திருமணமாகி ஐந்தே மாதங்களில் மாணவர் விசாவில் லண்டன் வந்துள்ளார் மேஹாக். பின்னர் பணி விசா பெற்ற அவர், தனது கணவரான சாஹிலுக்கு கணவர் மனைவி விசா ஏற்பாடு செய்து அவரை லண்டனுக்கு வரவழைத்துள்ளார்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 29ஆம் திகதி, பொலிசாரை அழைத்த சாஹில், தான் தன் மனைவியை கத்தியால் குத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
உடனடியாக பொலிசார் அங்கு விரைய, மேஹாக் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவ உதவிக் குழுவினர் ஈடுபட்டும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மேஹாக் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சாஹில், மேஹாக்கை, தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்திவந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சாஹில் இந்தியாவிலிருக்கும்போதே, லன்டனிலிருக்கும் தன் மனைவியை மொபைலில் அழைக்கும்போது, ஒவ்வொரு முறை தான் அழைக்கும்போதும் உடனடியாக அவர் பதிலளிக்கவேண்டுமென வற்புறுத்துவாராம்.
பதிலளிக்காவிட்டால் கணவர் கோபித்துக்கொள்ள, அடிக்கடி மொபைலில் கணவரின் அழைப்புகளுக்கு பதிலளிப்பதால் வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரிகள் எச்சரிக்க, இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துவந்துள்ளார் மேஹாக்.
தன் மனைவி யாருடனோ பேசுவதாக சந்தேகப்படும் சாஹில், மேஹாக் தான் தன்னுடைய தாயுடன் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறினால், அதை நிரூபிக்க ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்ப வற்புறுத்துவாராம்.
பின்னர் தனது கணவரான சாஹிலுக்கு மேஹாக் கணவர் மனைவி விசா ஏற்பாடு செய்து அவரை லண்டனுக்கு வரவழைத்துள்ளார். ஆனால், சாஹில் லண்டன் வந்தபின் மனைவியை அடிக்கத் துவங்கியிருக்கிறார்.
ஒருநாள் சாஹில் மேஹாக்கை மொபைலில் அழைக்க, அவர் பதிலளிக்காமல் இருக்கவே, நீ எனக்கு துரோகம் செய்கிறாய், கடவுள் உன்னைத் தண்டிக்கப்போகிறார் என்றும், நீ இப்போது எந்த ஆணுடன் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும் என்றும், நீ வீட்டுக்கு வா, உன்னை என்ன செய்யப்போகிறேன் என்று பார் என்றும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் சாஹில்.
அவர் சொன்னதுபோலவே, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மேஹாக்கை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார் சாஹில். மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவசர உதவியை அழைத்த சாஹில், அவள் எனக்கு துரோகம் செய்துவிட்டாள், ஆகவே, அவள்தான் அவளுடைய சாவுக்குக் காரணம் என்றும் கூறியுள்ளார். சாஹிலுக்கு, குறைந்தபட்சம் 14 ஆண்டுகளும், 187 நாட்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாவட்டம் வேலூரில் பெண்ணொருவர் குழந்தையின்மையால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் கொசவன்புதூரைச் சேர்ந்தவர் லிஷா (33). இவரது கணவர் பிரதீப் (40) கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அமமுக பொறுப்பாளராக உள்ளார்.
இந்த தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக பிரதீப் மற்றும் லிஷா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தம்பதி இருவரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் லிஷா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் மின்விசிறியில் தூக்கிட்டுக்கொள்ள முயன்றுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து லிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லிஷா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் லிஷாவின் தந்தை தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பொலிஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்று (29.04.2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போதிய அளவு நீர் அருந்துதல்
வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
இதேவேளை மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய அளவு நீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெட்ட வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.