இலங்கையில் விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி!!

இலங்கையில் நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சகம் (Ministry of Health) இனங்கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு (Ministry of Health) நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் வருடாந்தம் 800 முதல் 1000 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்னும் ஒரு மாதத்திற்குள் 500க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் (Warning signs) பொருத்தப்பட உள்ளன.

எச்சரிக்கை பலகைகளை நிறுவுவதற்கு சேவை வழங்குநர்கள் விநியோகஸ்தர்களை தேர்ந்தெடுக்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் சுகாதார அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இணைய பரிவர்த்தனையில் பெரும் மோசடி : வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்!!

நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலம் இணையத்தில் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடியானது சுமார் ஒரு வார காலமாக இயங்கி வருவதாக பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற (26) நாடாளுமன்ற அமரிவில் கலந்துக்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இணைய பண பரிவர்த்தனை மோசடி மூலம் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தெரியாமல் வேறு கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுகின்றது. பணத்தைப் பெறுவதற்கான சிறிய தொகையைக் கூட பெறாத வகையில் இந்த மோசடி செய்யப்படுகின்றது.

பலாங்கொடையில் ஒருவரின் கணக்கிலிருந்து பதினோரு இலட்சம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நேற்று 25 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் அவர் வங்கிக்குச் சென்று சோதனையிட்டபோது, ​​இணையவழியில் அமைப்பொன்றினால் பணம் களவாடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் இணைய பண பரிவர்த்தனைகள் மூலம் மோசடி இடம்பெறுகின்றது.bஒரே நாளில் சுமார் ஐம்பது, அறுபது கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்து பெரும் மோசடி நடப்பதாகவும் இரண்டு மூன்று நாட்களில் சுமார் ஆயிரம் பேரின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான மோசடி தொடர்பில் மத்திய வங்கிக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கும் அறிவிக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரியாவில் பரிதாபமாக உயிரிழந்த கொழும்பு இளைஞர் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

கொரியாவில் நூல் மற்றும் துணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உடல்நிலை மோசமான நிலையில், கொரியாவின் டேகுவில் உள்ள அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை (28 ஆம் திகதி) சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த இளைஞரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க மதுராந்த வீரரத்னவின் மரணத்தினால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்த தனுஷ்க மதுராந்த வீரரத்னவின் சகோதரர் மேலும் தெரிவிக்கையில்,

நுகேகொடை புனித ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 2001 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தில் உயரிய விருதைப் பெற்றுள்ளார். சாரணர் மற்றும் குத்துச்சண்டையிலும் சிறந்து விளங்கினார்.

மேலும் எங்கள் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள். இறந்தவர் இளைய சகோதரர். நூல் மற்றும் துணி உற்பத்தி நிறுவனத்திற்கு அண்ணன் கொரியாவுக்கு வேலைக்குப் போய் 18 வருடங்கள் ஆகிறது. யாரையும் தொந்தரவு செய்யாமல் சொந்த செலவில் வேலை செய்தவர்.

கடந்த 21 ஆம் திகதி எனது சகோதரர் வழக்கம் போல் பணி முடிந்து தங்குமிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு நெஞ்சு வலிப்பதாக அண்ணன் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

அதன்படி, அவரை கொரியாவில் உள்ள டேகுவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த வைத்தியர்கள் அண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நல்லவனாக இருந்த என் அண்ணனுக்கு நடந்தது கனவு போல உள்ளது.தினமும் கேட்ட குரலை கேட்க முடியவில்லை.

இந்நிலையில், தனுஷ்க மதுராந்தாவின் மரணம் குறித்து கேள்வியுற்ற பாடசாலை நண்பர்கள் நுகேகொடை நாவல வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு திரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம் : தொலைபேசி அழைப்பால் அதிர்ச்சி!!

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் காணாமல் போன சம்பவம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் குளியாபிட்டிய – கபலேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான சுசித ஜயவன்ச என்ற இளைஞன் தொடர்பில் ஆறு நாட்கள் ஆகியும் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

தொலைபேசி அழைப்பு

காணாமல்போனவர் குளியாபிட்டிய பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. இவர் கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாவுல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.

அவர் குறித்த வீட்டிற்குச் சென்ற நேரம் முதல் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போவதற்கு முன்னர் சுசித சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரான சிங்கிதி என்ற நபரால், சுசிதவின் நண்பருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

“செவ்வாய்க்கிழமை இரவு 7:58 மணிக்கு எனக்கு போன் செய்தார். அப்பாவாக என் மகளுக்கு நியாயம் செய்தேன். இப்போது அதை பேசி பலனில்லை. அவனை நான் கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” என்றார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு , சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ஆரம்பமாகும் அக்கினி நாள் : சுட்டெரிக்கவுள்ள சூரியன் : மக்களுக்கு எச்சரிக்கை!!

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28, 29, 30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மே மாதம் 12ஆம் திகதி வரை வெப்பநிலை தற்போது உள்ளதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வெப்ப அலைச் சுட்டெண்ணின் (Heatwave Index) ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பகல் பொழுதின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்காலத்தில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு உண்மையான வெப்பநிலையை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இந்துக்களின் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் காண்டாவனம் அல்லது அக்கினி நாள் / அக்கினி நட்சத்திரம் என்பது எதிர்வரும் 04.05.2024 சனிக்கிழமை முதல் 28.05.2024 செவ்வாய்க்கிழமை வரை நிலவும் என குறிப்பிடப்படுகிறது.

(காண்டாவனம் /அக்கினி நாள் /அக்கினி நட்சத்திரம் என்பது பரணி நட்சத்திரத்தின் 3ஆம், 4ஆம் பாதங்களையும் (கால்), கார்த்திகை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களையும், ரோகிணி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தையும் சூரியன் கடக்கும் நாட்களே ஆகும்). கடந்த சில நாட்களாக இரவு பொழுது வளிமண்டல சாரீரப்பதனின் அளவு உயர்வாக உள்ளது.

இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எமது உடல் அசௌகரியமான நிலைமையை உணரும் வாய்ப்புண்டு. தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்க அளவு உயர்வாக உள்ளது.

இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, எமது நீர்ப் பயன்பாட்டினை வினைத்திறனாக மேற்கொள்வது சிறந்தது.

எதிர்வரும் 27, 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் வட மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனினும், இம்மழை அதிகரித்த வெப்பமான வானிலையை தணிக்க போதுமானதல்ல.

எனவே, இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளை தவிர்ப்க்குமாரும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் இக்காலத்தில் , நோயாளர்கள், வயதானவர்கள், விசேட தேவையுடையவர்கள் பகல் பொழுதுகளில் பிரயாணங்களை தவிர்ப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பநிலை தொடர்பில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா (Piratheeparajah Nagamuthu) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28,29,30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் தற்போது உள்ளதை விட வெப்பநிலை உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்ப அலைச் சுட்டெண்ணின் (Heatwave Index) ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும். இந்துக்களின் பஞ்சாங்கத்தின்படி காண்டாவனம் அல்லது அக்கினி நாள் என்பது எதிர்வரும் 04ஆம் திகதி (04.05.2024) முதல் 28ஆம் (28.05.2024) திகதி வரை நிலவும் என குறிப்பிடுகின்றது.

எனினும், கடந்த சில நாட்களாக இரவுப் பொழுது வளிமண்டல சாரீரப்பதனின் அளவு உயர்வாக உள்ளது. இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் எமது உடல் அசௌகரியமான நிலைமையை உணரும் வாய்ப்புண்டு. தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்க அளவு உயர்வாக உள்ளதுடன் இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே எமது நீர்ப் பயன்பாட்டினை வினைத்திறனாக மேற்கொள்வது சிறந்தது.

எதிர்வரும் 27,28,29 மற்றும் 30ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும், இம்மழை அதிகரித்த வெப்பமான வானிலையை தணிக்க போதுமானதல்ல.

எனவே, இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளை தவிர்ப்பதுடன் நோயாளர்கள், வயதானவர்கள், விசேட தேவையுடையவர்கள் பகல் பொழுது பிரயாணங்களை தவிர்ப்பது சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது!!

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (26.04) தெரிவித்தனர்.

வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை பெண் ஒருவர் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்ற போது,

குறித்த வீதியில் முகத்தை மூடி துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், குறித்த பெண்ணின் மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில்,

பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்க (37348), திலீப் (61461), திசரட்ட (3419) பொலிஸ் கான்டபிள்களான உபாலி (60945), தயாளன் ( 91792), இரேசா (11643) பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவ் விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிதம்பரபுரம் (வயது 35), மதவுவைத்தகுளம் (வயது 35), சிறிராமபுரம் (வயது 34) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

அபகரிக்கப்பட்ட மூன்று அரைப் பவுண் நகைகள் உருக்கப்பட்ட நிலையில் யாழில் உள்ள நகைகடை ஒன்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. பறித்து செல்லப்பட்ட மோட்டா ர் சைக்கிள் கனகராயன்குளம் பகுதியில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதைவிட இரண்டு பென்ரன் மற்றும் மடிக்கணணிகள் என்பனவும் குறித்த மூவரிடம் இருந்து மேலதிகமாக மீட்கப்பட்டுள்ளது. இவை கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து திருடப்பட்டவை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த மூவரையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் அரிசி வாங்க சென்று வீட்டை இழந்த குடும்பம்!!!

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வகுகவ்பிட்டிய கிராம சேவகர் பிரிவில் நேற்றைய (25) தினம் வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இந்த அனர்த்தில் வீட்டின் சொத்துக்கள் அனைத்தும் சேதமாகி அனைத்தும் இழந்த குடும்பம் நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நேற்றைய தினம் (25) கணவர் வேலைக்கும் மகள் பாடசாலைக்கும் சென்றிருந்த வேளையில் மனைவி அரசாங்கத்தால் வழங்கப்படும் அரிசியினை பெற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார்.

இதன்போது மின்னொழக்கு ஏற்பட்டு வீடு முற்றாக தீக்கிரையாகி உள்ளது. சம்பவம் தொடர்பில் கிராம சேவகருக்கும் கம்பளை உடபளாத்த பிரதேச செயலகத்திற்கும் புஸ்ஸல்லாவ பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்த அண்ணன், தங்கை.. கதவைத் திறக்க முடியாததால் மூச்சுதிணறி பலியான சோகம்!!

சியோன் கோலிவாடாவில் பார்க் அருகே, பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி உள்ளே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனும் அவனது 5வயது சகோதரியும், கார் கதவைத் திறக்க முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “சஜித் முகமது ஷேக் மற்றும் அவரது சகோதரி முஸ்கன் ஷேக் இருவரும் கடந்த ஏப்ரல் 24ம் தேதி புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சியோன் கோலிவாடா, செக்டார் 5, சிஜிஎஸ் காலனியில் உள்ள வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்றுள்ளனர்.

தங்களது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் சாலையில் ஓரத்தில் பழுதடைந்த நிலையில், நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக் கொண்டனர். உள்ளே ஏறியதும் தானாக கதவு சாத்திக்கொண்டது. திரும்ப கதவைத் திறக்க முயற்சித்து முடியாமல் போயிருக்கலாம்.

காரில் இருந்து வெளியே வர அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். அதற்கான வியர்வை மற்றும் போராட்ட அடையாளங்கள் கார் கண்ணாடிகளிலும் கதவிலும் இருந்துள்ள நிலையில், குழந்தைகளின் உடல்கள் சில மணிநேரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டன மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய அரசு அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரியும் குழந்தைகளின் தந்தை மொஹபத் ஷேக் கூறுகையில், “ஜித்தும் முஸ்கானும் அவர்களது தாயார் கூறியதன் பேரில் வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்றனர்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால், தாயார் அவர்களைத் தேடி வெளியே வந்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. என்னை அழைத்ததில் நானும் வீட்டிற்கு வெளியே சென்று குழந்தைகளைத் தேடத் தொடங்கினேன். என்னாலும் அவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில், அவர்களைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

இரவு 10 மணிக்கு போலீசார் வந்து எங்கள் தெருவிலேயே குழந்தைகளை தேடத் தொடங்கினர். இறுதியில், கைவிடப்பட்ட காரில் குழந்தைகள் கிடப்பதைக் கண்டனர், அந்த கார் வீட்டினருகே விளையாட்டு மைதானத்தின் மூலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

பல நாட்களாக உபயோகமின்றி தூசி நிறைந்து மூடப்பட்டு இருந்தது. காரையும் புதர்கள் சூழ்ந்திருந்ததால், யாரும் அதன் அருகே செல்லவில்லை. “போலீசார் டார்ச் லைட் உதவியுடன் உள்ளே எட்டிப்பார்த்தபோது காரில் குழந்தைகள் கிடப்பதைக் கண்டனர்” என கூறினார். குழந்தைகளின் உடைகள் முற்றிலும் வியர்வையில் நனைந்து வாயில் நுரை தள்ளி இருந்தது.

“நாங்கள் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். டாஷ்போர்டு மற்றும் கதவில் உள்ள அடையாளங்களில் இருந்து அவர்கள் காரில் இருந்து அவர்கள் வெளியே வர முயற்சித்தது தெளிவாகத் தெரிந்தது.

சிசிடிவி பதிவுகளில் இருவரும் தாங்களாகவே காரை நோக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர்களுடன் வேறு யாரும் காணப்படவில்லை எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

காதலிக்காக வாங்கிய பர்கரை சாப்பிட்டதால் ஆத்திரம்.. நண்பனை சுட்டுக் கொன்ற காதலன்!!

பாகிஸ்தானில் தனது நண்பரை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் காவல்துறை விசாரணை அறிக்கை மூலம் உண்மை வெளிவந்ததை அடுத்து, பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கொலை சம்பவம் பிப்ரவரி 8 ஆம் தேதி கராச்சியின் பாதுகாப்பு கட்டம் 5 பகுதியில் நடந்தது. இதில் கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் அலி கெரியோ. அவர் ஒரு செஷன்ஸ் நீதிபதியின் மகன்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் பெயர் டேனியல். இவர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) நசீர் அகமது மிர்பாஹரின் மகன் ஆவார். சம்பவத்தன்று டேனியல் தனது காதலி ஷாஜியாவை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அன்று அலி கிரேயோவும் தன் தம்பி அஹ்மருடன் டேனியலின் வீட்டிற்கு வந்தான். அப்போது வீட்டில் இருந்த பர்கரை சாப்பிட எடுத்துள்ளார் அலி கெரியோ. இதனால் ஆத்திரமடைந்த டேனியல், தன் காதலிக்கு ஆர்டர் செய்த பர்கரை சாப்பிடுகிறாயா என்று அலி கீரியோவிடம் கோபமடைந்தார். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த டேனியல், அங்கிருந்த போலீஸ் துப்பாக்கியை எடுத்து அலி கெரியோவை சுட்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அலி கெரியோஉடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, தீவிர விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள், அலி கெரியோவின் மரணத்துக்கு டேனியல் தான் காரணம் என, உயர் போலீஸ் அதிகாரியிடம் விசாரணை அறிக்கை சமர்பித்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள டேனியல் நீதிமன்ற விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் இளம்பெண்.. கதறும் தாய்!!!

சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் கல்ஷாஹித் தானா பகுதியில் கணவர் சித்ரவதை செய்ததாக கூறி பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மும்பையில் இருந்து வந்த பெண்ணின் தாயார் மாதுரி மித்ரா, “முகமது புஜைல் – ஹர்ஷதாவை திருமணம் செய்துகொண்டார். அவரின் பெயரை பாத்திமா என மாற்றி அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறச் செய்துள்ளார்.

மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் ஃபுசைல் டிஃபின் சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஹர்ஷதா ஏற்கனவே திருமணமானவர். அவரது முதல் கணவரை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. பப்ஜியில் சந்தித்த பிறகு ஃபுசைலும் ஹர்ஷதாவும் நெருங்கி பழகினாலும் அவரின் தாய், இவர்களின் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹர்ஷதாவின் தாயாரிடம், ஹர்ஷதா தன்னை அடித்ததாக ஃபுசைல் குற்றம் சாட்டியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு ஃபுசைலும் தனக்கு போன் செய்து, ஹர்ஷதா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தாகவும்,

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியதாக ஹர்ஷதாவின் அம்மா கூறினார். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஹர்ஷதாவின் தாய், மகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அழுது கொண்டே கூறினார்.

இது குறித்து அவரின் தாய், “நான் காட்கோபரில் வசித்து வருகிறேன். என் மகளுக்கு முதல் திருமணம் செய்து சில நாட்களிலேயே விவாகரத்து செய்துவிட்டாள். PUBGல் இருந்த போது ​​ஃபுசைலைக் காதலித்தாள்.

ஆரம்பித்திலேயே இதெல்லாம் ஒத்து வராது எனக் கூறினேன். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. பின்னர் என் மகள் ஃபுசைலை திருமணம் செய்து கொண்டாள் என எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தற்போது தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறிய போது மருத்துவமனையில் தான் மீண்டும் அவளை பார்த்தேன்.

அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

போதையில் மணமேடையில் வரதட்சணை கேட்டு தகராறு செய்த மணமகன்.. மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

வாழ்க்கையில் திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமே விசேஷமான நிகழ்வு. பல வருடங்களாக தங்களது திருமணம் குறித்தும், வரப்போகும் மணமகன் குறித்தும் அவர்கள் கனவுகளைத் தேக்கி வைத்திருக்கின்றனர்.

காலம் முழுவதும் சேர்ந்து வாழப் போகிறவன் பணத்தாசைப் பிடித்தவனாக இருந்தால் எப்படியிருக்கும்? மத்தியப் பிரதேச மாநிலத்தில் செஹூரில் மணமகன் வீட்டார் ரூ.15 லட்சம் வரதட்சணை மற்றும் கார் கேட்டதால், மணப்பெண் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

அதே நேரத்தில் மணமகனும், அவரது நண்பர்களும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமண கொண்டாட்டத்தில் மணமகனும் அவரது உறவினர்களும் மணமகளின் குடும்பத்தினருடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.

மணமகனும் அவரது தரப்பினரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது போதையில், தனக்கு வரதட்சணையாக கார் கொடுக்க வேண்டும் என்று மணமகன் தகராறு செய்திருக்கிறார்.

திருமண சடங்கின் போது, ​​சடங்குகளின் ஒரு பகுதியாக, மணமகளின் குடும்பத்தினர் ரொக்கமாக ரூ.12 லட்சம் கொடுத்தனர். இந்த பணம் பத்தாது ரூ15 லட்சம் ரொக்கமாக தந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என மணமகன் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழ்நிலையில் மணமகள் குடும்பத்தினர் பெரும் குழப்பமும், கவலையும் அடைந்தனர். உடனே மணப்பெண் பெரியா மணமகனின் குடும்பத்தின் பேராசையை தனது குடும்பத்திடம் விளக்கமாக கூறி திருமணம் வேண்டாம் என தைரியமாக முடிவெடுத்தார். இதைத் தொடர்ந்து மணமகனும், அவரது உறவினர்களும் ஆத்திரமடைந்து மணமகளின் தரப்புடன் சண்டையிட்டனர்.

இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சண்டையால் மணமகன் குடும்பத்தில் பலருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு திருமணத்தின் போது குழப்பம் விளைவித்ததாகக் குற்றம்சாட்டி, பிரியா தனது தந்தையுடன் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிவாளால் மனைவியின் தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அடுத்து செய்த விபரீத செயல்!!

ஆலப்புழாவில் மனைவியின் தலையை அரிவாளால் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ள்ள புந்தலாவைச் சேர்ந்தவர் ஷாஜி(60). இவரது மனைவி தீப்தி(50). அவர்களுக்கு ஐந்து மற்றும் ஆறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டது.

வாய்த்தகராறு முற்றிய நிலையில், அடுப்படியில் இருந்த தீப்தியை ஷாஜி அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தீப்தியின் தலை துண்டானது. இதன் பின் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் ஷாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷாஜி வீட்டில் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தீப்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். படுக்கை அறையில் ஷாஜி தற்கொலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து ஷாஜி, தீப்தி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி தீப்தியை, ஷாஜி வெட்டிக்கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மனைவியைக் கொலை செய்து கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது அசிட் வீசிய இளம்பெண்!!

உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீசிய பெண்ணை பிடித்து மணமகனின் வீட்டார் தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ளது சிகிடாவுனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த்(26). இவருக்கு நேற்றுமுன்தினம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமகன் ஊர்வலம் துமாரி கிராமத்தில் நடந்தது.

அப்போது மணமகள் போல ஆடை அணிந்து வந்த ஒரு இளம்பெண், திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து மணமகன் ராகேஷ் பந்த் மீது வீசினார். இதில ராகேஷ் பிந்த் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது அங்கிருந்த மணமகனின் குடும்பத்தினர், அந்த பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரிய வந்தது. ராகேஷ் பிந்தை தான் விரும்பியதாகவும், அவர் வேறு திருமணம் செய்வதை ஏற்க முடியாததால் ஆசிட் வீசியதாகவும் லட்சுமி கூறினார்.

இதையடுத்து அவரை அடித்து, ராகேஷ் பிந்த் குடும்பத்தினர் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து பன்ஸ்டிஹ் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற ராகேஷ் பிந்த், திருமண இடத்திற்கு வந்து மணமகளை திருமணம் செய்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மணமகன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள முல்லைத்தீவு நபர்!!

சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள முன்னாள் போராளி தன் உயரத்தின் காரணமாக பிரபலயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியும், இரு பிள்ளைகளின் தந்தையுமான குணசிங்கம் கசேந்திரன் 07 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர்.

இலங்கையின் மிக உயரமான நபர் தாம் என நம்புவதாக அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். அதோடு தனது உயரம் காரணமாக தாம் எதிர்கொண்ட சூழ்நிலைகள் மற்றும் சமூகத்தில் தனக்கு கிடைத்த எதிர்வினைகள் குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

“நான் உயரமாக இருப்பதால் இங்குள்ள செருப்புகளை பயன்படுத்த முடியாது. அவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். முச்சக்கர வண்டி சாரதியாக இருப்பதால்,சிரமமாக உள்ளது என்கிறார். அதற்குக் காரணம் அவருடைய உயரம்.

இந்த உயரத்தினால் பேருந்துகளில் பயணிக்கும் போது தான் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாவும் அவர் கூறியுள்ளார். பேருந்தில் நிற்க முடியாது, ஆசனத்தில் உட்காருவதும் சிரமமாக இருப்பதாக குணசிங்கம் கசேந்திரன் கூறுகிறார்.

மேலும் தாம் வாழும் பிரதேசங்களில் தனக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் சிங்களப் பிரதேசங்களில் தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார்.

வைத்தியசாலையில் இளம் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி : வைத்தியரின் மோசமான செயல்!!

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் தனது தாயுடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவனின் தங்க நகைகளை வைத்தியர் போல நடித்து ஏமாற்றி திருடிச் னெ்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (25) வியாழக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனின் திருடப்பட்ட தங்க நகைகள் சுமார் 3 இலட்சத்து 82 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுக்கனே குபுகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.

இதன்போது, தன்னை வைத்தியர் எனக் கூறிய நபரொருவர் சிறுவனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்று, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி பையில் போடுமாறு கூறியுள்ளார்.

அதன்பின்னார் வைத்தியசாலையில் உள்ள கதிரையில் சிறுவனை அமரச் செய்து தங்க நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.