வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

ஹொரண – வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹொரண – வீதியகொட பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டின் பக்கத்துவீட்டு நபர் ஒருவரே இந்த குற்றத்தை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சந்தேகநபர் வீட்டிற்குள் நுழைந்து வெளியேறிய காணொளி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

காணி தகராறு காரணமாக சந்தேகநபர் இவ்வாறு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகநபரின் காணியை 60 இலட்சம் ரூபாவிற்கு சில காலத்திற்கு முன்னர் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை 80 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்ய ஒருவரை சந்தேகநபர் கண்டுபிடித்துள்ளார்.

இதன்படி குறித்த கொள்வனவாளர் காணியை கொள்வனவு செய்வதை உறுதி செய்து காணிக்கு சொந்தமான சந்தேக நபருக்கு 3 இலட்சம் ரூபாவை முன்பணமாக வழங்கியுள்ளார்.

இதன்பின்னர், 80 இலட்சம் ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருந்த நிலத்தை,60 இலட்சம் ரூபாய்க்கு வாங்கப் போவதாக, பக்கத்து உயிரிழந்த பெண் காணியை வாங்கியவரிடம் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான, வாங்குபவர், காணி உரிமையாளரை சந்தித்து, அவர் மீது குற்றம்சாட்டி, நிலத்துக்கான முன்பணத்தை மீளப்பெற்றுள்ளார்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த காணியின் உரிமையாளர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு செ்ன்று தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத்தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பிரிவு விசேட புலனாய்வுப் பிரிவினரும், மொரகஹேன பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் ATM இயந்திரத்தில் பணம் பெறச் சென்று உறங்கிய வர்த்தகருக்கு நேர்ந்த பரிதாபம்!!

கொழும்பு, நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்று மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக உறங்கிய வர்த்தகரின் கைத்தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதுக்க மலகல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் விருந்தொன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அதிகாலை 2.30 மணியளவில் நுகேகொட விஜேராம சந்திக்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஏ.டி.எம் இயந்திரம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று அட்டையை இயந்திரத்தில் காட்டிய பின், பின் குறியீட்டை சரியாக உள்ளிட முடியாததால், அட்டை இயந்திரத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

அட்டை வெளியே வரும் வரை வர்த்தகர் காத்திருந்ததாகவும், தன்னையறியாமல் அங்கேயே உறங்கிவிட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் அதிகாலை 5.30 மணி வரை உறங்கியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண் முழித்து பார்த்த போது தனது 2 கையடக்க தொலைபேசிகளும் காணாமல் போயுள்ளது. வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளும் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய, பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் சீசீடீவி கமராக்களை சோதனையிட்டுள்ளனர். அங்கு இருவர் கையடக்க தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழில் 4000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய்!!

யாழ்ப்பாணத்தில் தேங்காய் ஒன்று நான்காயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யாழில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் விபத்து : ஸ்தலத்தில் இராணுவ வீரர் பலி : பலர் காயம்!!

முல்லைத்தீவு (Mullaithivu) மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (26.04.2024) காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து (Colombo) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கப் வாகனம் திடீரென இயங்காமல் நின்றுள்ளதுடன் எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தடுக்கும் நோக்குடன் சாரதி பார ஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.

இந்நிலையில், கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர். இதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி விகிதம் விநியோகம்!!

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு 10கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்காக அரிசிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி விநியோகிக்கும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களில் உள்ள 2,511,840 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் இடம்பெறுவதுடன் இதற்காக அரசாங்கம் 4,676,474,300 ரூபாவை செலவிட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ அரிசி விகிதம் இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம் : பல்பொருள் அங்காடி!!

“நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் “Vanni Green” இனுடைய பல்பொருள் அங்காடி இன்றைய தினம் (25.04.2024) மாவட்ட செயலாளர் பி. ஏ. சரத்சந்திரவினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

காய்கறிகள், பழவகைகள், சமையலறை உபகரணங்கள், கைவினைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள், தைத்த ஆடைகள் உள்ளிட்ட பல தரப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை நேரடியாக சந்தப்படுத்தும் வாய்ப்பு இவ் அங்காடியின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இன்று (25.04.2024) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1000 மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன்,

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா நகரசபை உபநகரபிதா வீட்டில் திருடப்பட்ட 60 பவுண் நகைகள் வீட்டின் கூரையில் இருந்து மீட்பு!!

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று (25.04) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா அவர்களின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 60 பவுண் நகையும், கடவுச் சீட்டு ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த விசாரணைகளின் போது அவர்களது வீட்டில் இருந்த சீசிரீவி கமராக்களும் காணாமல் போயிருந்தமை தெரியவந்தது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் திருடப்பட்ட குறித்த வீட்டின் கூரைப்பகுதியில் கீழ் சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 60 பவுண் நகைகளும் மீட்டுள்ளதுடன், கடவுச் சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டில் நின்றவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தங்கியிருந்த அவர்களது உறவினர் ஆகியோர் பொலிசாரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நகைகள் மீட்க்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் உள்ளதுடன் அதனை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயம் : தவிக்கும் பெற்றோர்!!

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய 23 வயதான A.S.முஹமட் ரஷாட் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.

கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதும், இதுவரை வீடு வந்து சேரவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய விமான நிலைய CCTV காணொளிகளின் படி கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மாலை 6:35 மணியளவில் வெளியேறி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

அதன் பின்னர் எந்த வாகனத்தில் யாருடன் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் இதுவரைக்கும் இல்லை. இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், அறியத்தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் பிரபல ஆசிரியை உயிரிழப்பால் அதிர்ச்சி!!

யாழில் பல விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கிய விளையாட்டுத்துறை ஆசிரியை ஜெயந்தி ஜெயதரன் இன்று திடீரென உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ஜெயந்தி ஜெயதரன், யாழ் பிரபல பாடசாலைகளின் ஒன்றான யா / மகாஜனக் கல்லூரி மூத்த உடற்கல்வி ஆசிரியரும் உப அதிபருமாமாவார்.

அதேவேளை யாழில் பல பாடசாலைகளில் பல விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கியவர் பெருமை ஜெயந்தி ஜெயதரனையே சாரும்.

இந்நிலையில் ஆசிரியையின் தீடீர் இழப்பு பாடசாலை மாணாக்கர் மத்தியிலும் குடும்பத்தினரிடையேயும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்த பிரதான உள்ளூர் உதவியாளர், நேற்று மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இதன் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை எல்லை முகவர் நிலையம் ஊடாக ஒரு வருட கால விசாரணையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை, 14 வயது சிறுவனை அவரது தந்தையும் மலேசியாவுக்கு அழைத்து சென்ற குறித்த நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக இரகசியமாக கண்கானிக்கப்பட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது. ஆண்டு 17 சிறுவர் கடத்தல் வழக்குகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்பு ஆசிரியர் பொலிஸாரால் கைது!!

முன்னாள் மேலதிக வகுப்பு ஆசிரியரான உபுல் சாந்த சன்னஸ்கல (Upul Shantha Sannasgala) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக்கு அமைய அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவகையில், நுவன் பிரதீப் எனும் நபர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உபுல் சாந்த சன்னஸ்கலவின் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு தான் பத்து லட்சம் ரூபாவை வைப்பிட்டதாகவும், குறித்த பணம் தனக்கு திருப்பித் தரப்படவில்லை என்றும் அவர் யூடியூப் ​சேனல் ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கந்தானை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் அவர் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சன்னஸ்கல இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வெலிசர நீதிமன்றத்தில் முன்னிலை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பெண்கள் பாடசாலை அருகில் விடுதி சுற்றிவளைப்பு : பெண்கள் உட்பட ஐவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று பொலிஸாரால் திடீரென முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (24.4.2024) இரவு யாழ்ப்பாணம் பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விடுதியே இவ்வாறு பொலிஸாரால் நேற்று இரவு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விடுதியில் சமூகப்பிறழ்வில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பெண்களும், விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கியில் கொள்ளையிட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கியொன்றில் பணத்தை கொள்ளையிடன் வந்த சம்பவம், வங்கியின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதனால் தடுக்கப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (24.04) காலை அநுராதபுரம் பொது வர்த்தக நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள அரசாங்க வங்கி ஒன்றின் மேற்கூரையின் ஒரு பகுதியை அகற்றி வங்கிக்குள் புகுந்து பெட்டகத்தை உடைத்து பணத்தை திருடிச் செல்ல கொள்ளையர்கள் முற்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களின் முயற்சி சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதனால் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்கிக் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து ஒருவர் அல்லது பலர் கயிற்றின் உதவியுடன் கீழே இறங்கி பெட்டகத்தை உடைத்தபோது வங்கியின் சமிக்ஞை கட்டைப்பு திடீரென செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் உடைக்கப்பட்ட பெட்டகத்தில் பணம் எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

முதியோர் இல்லத்தில் நடந்த கொடூரம் : ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்திய பெண்!!

முதியோர் இல்லமொன்றின் பெண் ஒருவர் முதியவர் ஒருவரை ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தும் காணொளி வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகளை பேணி காக்கும் பெற்றோகள் அவர்களை வளர்த்து ஆளாக்க பெரும் கஸ்ரப்படுகின்றனர். பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் தம்மை நன்றாக கவனித்து கொள்வார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு எல்லா பெற்றோரிடமுமே உள்ளது.

ஒருகாலத்தில் தாத்தா, பாட்டி, பேரன் பேத்தி , பெற்ரோர்கள் பிள்ளைகள் என இரண்டு மூன்று தலைமுறையே வீடுகளில் கூடி வாழ்ந்தவர்கள் தான் எமது மூதாதையர்கள் .

ஆனால் இன்றைய காலத்தில் பெற்றோர்களை வயதான காலத்தில் பராமரிப்பதை பிள்ளைகள் சுமையாக நினைக்கும் கொடுமையான காலமாக மாறிவிட்டது. அதனால் தானோ என்னவோ முதியோர் பராமரிப்பு இல்லங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளதுடன், வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டும் பல முதியோர் இல்லங்கள் முளைத்துவிட்டன.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாரம் என எண்ணாது எப்படி போற்றி காத்தார்களோ அதேபோல பிள்ளைகளும் தம் பெற்றவர்களை பாரமாக எண்ணி முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாது , அவர்களையும் தமது இல்லத்தில் சேர்த்து மகிழ்ச்சியுடன் வாழ்தலிலேதான் வாழ்வின் முழுமை அடங்கியுள்ளது.

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கான டெண்டர்கள் திறக்கப்பட்டு, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் பார் குறியீடு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினைகள் இருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.